எங்கள் பல்கலைக்கழக சுதந்திர தின விழாவில் கொடிகாத்த குமரன் நிலைக்காட்சியில் நான் பேசியவை இதோ உங்களுக்காக !!
Sunday, August 17, 2014
கொடிகாத்த குமரன்
எங்கள் பல்கலைக்கழக சுதந்திர தின விழாவில் கொடிகாத்த குமரன் நிலைக்காட்சியில் நான் பேசியவை இதோ உங்களுக்காக !!
Wednesday, August 13, 2014
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் அவசியமும் முக்கியத்துவமும் !
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் அவசியமும் முக்கியத்துவமும் !
இன்றைய சூழ்நிலையில் பெரு நகரங்கள் , சிறு நகரங்கள், கிராமம் என்ற வேறுபாடுகள் எதுவும் இல்லாமல் திரும்பும் திசை எங்கும் வாகனங்கள் வந்துவிட்டன.அனைத்துமே பெட்ரோல், டீசல் போன்ற புதுப்பிக்க இயலாத ஆற்றல்களை பயன்படுத்துபவை தான்.வாரமொரு முறை பெட்ரோல் டீசல் விலை உயர்வதும் அதன் விளைவாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வதும் மக்கள் திண்டாடுவதும் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன.எனக்குத் தெரிந்து ஒரு லிட்டர் பெட்ரோல் 50 ரூபாய்க்கு விற்றிருக்கிறது.ஆனால் இன்று ?
Saturday, August 2, 2014
ஆட்சி மாறியது ! ஆனால் காட்சி மாறவில்லை !
ஆட்சி மாறியது ! ஆனால் காட்சி மாறவில்லை !
இந்த புது மொழி யாருக்குப் பொருந்துகிறதோ இன்றைய நரேந்திர மோடி அரசுக்கு மிகவும் பொருந்தும்.சரி ஆட்சிக்கு வந்து 2 மாதங்களுக்குள்ளாகவே ஒரு அரசைப்பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம் என பார்த்தால், 2 மாதமல்ல இரண்டு வருடங்களானாலும் மாறாது என்பது தெரிந்துவிட்டது.இனி எப்போது விமர்சித்தால் என்ன ? ஆபத்பாண்டவனாக நினைத்து வாக்களித்த மக்கள் இன்று ஆபத்து வராமல் பார்த்துக் கொள்ள பழகி விட்டதைப் போன்று தெரிகிறது.
Monday, July 14, 2014
பொறியியல் மோகமும் மாணவர்களின் எதிர்காலமும் !
பொறியியல் மோகமும் மாணவர்களின் எதிர்காலமும் !
12 ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்த உடனேயே மாணவர்கள் மற்றும் பெற்றோரின் ஒரே எண்ணம் ஏதாவது ஒரு பொறியில் கல்லூரியில் சேரவேண்டும் என்பதே .சேர்ந்து விட்டால் நமது எதிர்காலம் முன்னேறி விடாதா என்ற ஆதங்கம் ! பாவம் அவர்களை என்ன செய்வது. ஒரு வருடத்தில் சராசரியாக தமிழ் நாட்டில் மட்டும் 2.3 லட்சம் மாணவர்கள் பொறியியல் பட்டதாரிகளாக வெளியேறுகின்றனர். முதுகலைப் பொறியியல் ஒரு 50000 என்று வைத்துக் கொண்டாலும் ஏறத்தாழ மூன்று லட்சம் பேர். அவர்களில் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கிறது என்று நினைக்கின்றீர்கள் ? வெறும் 60 லிரிந்து 80 ஆயிரம் பேருக்கு மட்டும் தான் ! எஞிசியவர்களின் கனவு ?
Monday, July 7, 2014
அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்
அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்
இந்தப் பதிவின் மூலம் யார் மனதையும் புண்படுத்துவடு என் நோக்கமல்ல. உண்மைகள் சில நேரங்களில் புண்படுத்தலாம். அதற்கு கம்பெனி பொறுப்பல்ல.
சனிக்கிழமை நடந்த விஜய் விருது வழங்கும் விழாவில் பேசிய அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் எனக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் தேவையில்லை, தளபதி பட்டமே போதும் என்று சொல்லியிருக்கிறார். அத்டோடு நிற்காமல் வாங்கும் கிரீடம் எவ்வளவு கணமாக இருந்தாலும் தலை கணமாக இருக்கக் கூடாதாம். அடேங்கப்பா இத குமுதம் பட்டம் குடுக்கும் போதே சொல்லீருந்தா நீங்க எங்கேயோ போயிருப்பீங்க.
சரி விசயத்திற்கு வருவோம். இப்போது படவுலகில் மிகப்பெரிய டாக் அடுத்த சூப்பர் ஸ்டார் பற்றித்தான். குமுதம் கொளுத்திப்போட்ட சீனி வெடி இன்று சரவெடியாக பற்றி எறிகிறது கோடம்பாக்கத்தில். முதலில் இந்த சர்வேயை மேற்கொண்டதே தவறு. எங்கே அடுத்த சூப்பர் ஸ்டார் போல அடுத்த புரட்சித் தலைவர், அடுத்த நடிகர் திலகம் , அடுத்த மக்கள் திலகம் போன்ற சர்வேக்களை நடத்துங்கள் பார்க்கலாம். முடியவே முடியாது . காரணம் பயம், அந்த பயம் ரஜினியிடம் அவர்களுக்கு இல்லை. இவர் ஒன்றும் சொல்ல மாட்டார், இவர் ரசிகர்களும் கொஞ்ச நாள் கத்திவிட்டு அடங்கி விடுவார்கள் என்ற எண்ணம்.
பட்டங்கள் போட்டுக்கொள்வது என்பது தமிழ் சினிமாவில் காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறை. முதலில் மக்களாக தந்ததும், பின் பட அதிபர்கள் தந்து மக்கள் ஏற்றுக் கொண்டதும், பிறகு பட அதிபர்கள் மட்டுமே தந்ததும், இப்போது நடிகர்களே போட்டுக் கொள்வதுமென பட்டம் என்பது இன்றியமையாததாகிவிட்டது. கலைவாணர், மக்கள் திலகம், நடிகர் திலகம் போன்றவை மக்கள் தந்த பட்டங்கள். சூப்பர் ஸ்டார் பட்டம் பட அதிபர் தந்து மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பட்டம். காதல் மன்னன், உலக நாயகன் , இளைய தளபதி, அல்டிமேட் ஸ்டார் போண்றவை பட அதிபர்கள் தந்த பட்டங்கள். வேறு வழி இல்லாமல் மக்களிடம் திணிக்கப்பட்டது. புரட்சிக் கலைஞர், புரட்சித் தமிழன், சின்னத் தளபதி போன்றவை அவர்களாகவே போட்டுக்கொண்டது. பட்டங்களே போடாமல் ஜெயித்தவர்களும் இருக்கின்றனர்.
இதில் எல்லாம் பிரச்சனை இல்லை. இங்கு அடுத்த எனும் பதம் தான் பிரச்சனை. ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு பட்டம் உச்சமாக விளங்கியிருக்கிறது. பட்டம் அல்ல பட்டத்துக்குரியவர்களால் பட்டம் உச்சமாக விளங்கி வருகிறது. 1955 முதல் 1975 கள் வரை மக்கள்திலகம் என்ற பட்டம் புரட்சித்தலைவர் எனும் நடிகரால் உச்ச அந்தஸ்தில் இருந்தது. 1975 முதல்
1979 முடிய நடிகர் திலகம் எனும் பட்டம் அதற்குரிய நடிகராலும், அதற்குப்பிறகு முதல் இன்று வரை சூப்பர் ஸ்டார் எனும் பட்டம் அதற்குரிய நடிகரால் உச்சத்தில் உள்ளது.
இந்த அடிப்படைகள் கூட புரியாத அல்லது புரியாமல் நடிக்கும் ஒரு நன்கறியப்பட்ட ஊடகம் வேண்டுமென்றே , ஒரு புயலைக் கிளப்பி தன் விற்பனையை உயர்த்த திட்டமிட்டு அரங்கேற்றிய நாடகம் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் எனும் பட்டம். சரி எந்த விதத்தில் விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றது. அதற்கும் காரணம் இருக்கிறது. அஜீத்துக்கு கொடுத்தால் அவர் எப்போதுமே ஒரே சூப்பர் ஸ்டார் என் தலைவர் தான் என்று கூறிவிட்டு வாங்காமல் ஒதுங்கி விடுவார். பின் பத்திரிக்கைக்கு அவமானமாகிவிடும். இருக்கவே இருக்கார் நம்ம விஜய் என அவருக்கு தந்துவிட்டார்கள். இது தான் உண்மை.
சரி கொடுத்துவிட்டார்கள். அதற்கு எந்த வகையில் தகுதியானவர் விஜய் ?
1975 ல் சினிமாவில் அறிமுகமான ரஜினி சிகரட்டை தூக்கிப் போட்டு பிடிப்பதினாலும், முடியை ஸ்டைலாக கோதுவதினாலும், பஞ்ச் வசனங்கள் பேசுவதினாலும் மட்டும் சூப்பர் ஸ்டாராகிவிடவில்லை.எல்லாம் கடின உழைப்பு ! தன்னம்பிக்கை ! விடா முயற்சி ! ஜெயிக்க வேண்டும் என்ற வெறி ! எல்லாவற்றுக்கும் மேல் , மக்கள் செல்வாக்கு !
இவற்றில் ஒன்றாவது விஜய்க்கு இருக்கிறதா ? ரஜினியுடன் ஒப்பிட எந்த வகையிலாவது தகுதி உடையவரா ?
சூப்பர் ஸ்டார் இதுவரை 27 வெள்ளிவிழா திரைப்படங்கள் தந்தவர். அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறிக்கொள்பவர் 7 வெள்ளி விழாபடமாவது தந்திருக்கிறாரா ?
சரி இப்போது படங்கள் ஓடும் நாட்களில் வெற்றி இல்லை. கலெக்ஸனில் தான் உள்ளது என்று வைத்துக் கொள்வோம். எத்தனை படங்களில் கலெக்ஸனை அள்ளி எடுத்து தயாரிப்பாளருக்கு கொடுத்துக்கொண்டிருக்கிறார். ஒரு வெற்றி என்றால் ஒன்பது தோல்வி !
எத்தனை தயாரிப்பாளர்கள் விஜயை நம்பி நூறு கோடி பட்ஜெட்டில் படமெடுக்க தயாராக இருக்கின்றனர் !
ரஜினி நடித்த முள்ளும் மலரும் போன்ற ஒரு திரைப்படம், திரைப்படம் கூட வேண்டாம் ஒரு சீனிலாவது நடிக்க முடியுமா ?
ரஜினியால் நான் நஸ்டமடைந்தேன் என ஒரு தயாரிப்பாளராவது சொல்லியிருக்கிறார்களா ?
இந்தியாவைத் தாண்டி விஜய்க்கு என வெளிநாட்டில் ஒரு மார்க்கெட் இருக்கிறதா ?
விஜய் தொண்ணூறுகளில் அறிமுகமானார். 1990ல் வெளியான அண்ணாமலை படத்தின் ரெக்கார்டுகளை எஜமான் முந்தியது. எஜமானை வீரா முந்தியது. வீராவை பாட்ஸா முந்தியது. பாட்ஸாவை முத்துவும் முத்துவை அருணாசலமும், அதை படையப்பாவும் , படையப்பாவை சந்திரமுகியும், சந்திரமுகியை சிவாஜியும் , சிவாஜியை எந்திரனும் முந்திவருகிறது. எந்திரனை கோச்சடையானால் கூட முந்தமுடியவில்லை. அதற்கு அடுத்த இடம் தான். 90களில் மட்டுமல்ல, அவர் உச்ச நட்சத்திரமானதிலிருந்தே இது தான் நடந்து வருகிறது .
இதில் எங்காவது விஜய் படங்கள் ரஜினி படங்களின் வசூலில் பாதியை தொட்டிருக்கிறதா ?
இல்லை வேறு நடிகர்கள் படங்கள் தான் சாதித்து இருக்கின்றனவா?
மேற்கண்டவற்றுள் எதுவுமே இல்லை ! ஆனால் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற அலப்பறை வேறு ?
சரி இன்று ரஜினியை எதிர்க்கும் எதிர்ப்பது போல நடிக்கும் விஜய் ஆரம்ப காலங்களிலிருந்து இப்படித்தானா ? என்றால் இல்லை !
இளைய தளபதி என்ற பட்டமே இதற்குச் சான்று. ஒவ்வொரு படங்களிலும் தலைவர் ரசிகன், ஒவ்வொரு விழாக்களிலும் தலைவர் புராணம், ஒவ்வொரு பேட்டியிலும் தலைவர் புகழ் என மிகத்தீவிர ரஜினி ரசிகராகவே இருந்தார். இடையில் என்ன மாயமோ ?அண்ணாமலை தம்பி இங்கு ஆட வந்தேண்டா என்று பாடியவர் புரட்சித்தலைவர் ரசிகராகிவிட்டார். இல்லை ரசிகராக மாற்றப்பட்டார். அவர் மனதளவில் இன்றும் ரஜினி ரசிகர் தான் என்பதற்கு 2010ல் நடந்த இயக்குனர் சங்க விழா சாட்சி.
நேற்று சங்கர் இயக்கிய படங்களிலேயே இந்தியன் படம் தான் அவருக்குப் பிடித்த திரைப்படமாம். இதை சிவாஜி வெளியான போது மறந்துவிட்டார். ஏனென்றால் அப்போது சங்கர் இந்தியன் படம் எடுத்திருக்கவில்லை !! அவருக்கு எந்தப் படம் வேண்டுமானாலும் பிடித்துவிட்டு போகட்டும். எந்த நடிகரையும் பிடித்துவிட்டு போகட்டும் எதற்காக சூப்பர் ஸ்டாரை வைத்து வியாபாரம் பார்க்க துடிக்கிறார் ?
மக்கள் விரும்பும் நாயகனாகிவிட்டால், அடுத்த தலைமுறையில் இவர் பட்டமே உச்ச நட்சத்திரமாகிவிடப்போகிறது. அதை விடுத்து இப்போது செய்யும் நடவடிக்கையில் மக்களிடம் பெயர்தான் கெடுகிறது.
இந்த நேரத்தில் ஒரு அறிக்கை விடுத்திருக்கிறார் தல. என்றைக்குமே சூப்பர் ஸ்டார் தலைவர் மட்டும் தான். வீணாக சண்டை போட வேண்டாம் . அவர் துரோணாச்சாரியார் , நான் ஏகலைவனாக இருக்கவே ஆசைப்படுகிறேன். இவ்வாறு கூறிய தல எங்கே, அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் எங்கே !
அவர் விஜயைப் போல மாற மாட்டார். அன்றும் இன்றும் என்றும் தலைவர் ரசிகர் தான்.
இவ்வளவு ஏன் பட்டமே போட்டுக்கொள்ளாமல் 25 வெள்ளி விழா திரைப்படங்களை மோகன் கொடுக்கவில்லையா ? முரளி வெற்றிபெறவில்லையா ? இன்றும் தனுஸ் முதல் விஜய் சேதுபதிவரை எத்தனை பேர் இருக்கின்றனர் ?
அதெல்லாம் தெரியாது. அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்தவுடனேயே பல்லை இளித்துக்கொண்டு வாங்கிவிட்டு அறிக்கை வெளியிட்டு புலகாங்கிதம் அடைய வேண்டியது.
தலைவர் எனும் நாமத்தை தலைவா எனும் திரைப்பட பெயரால் பறிக்க முயன்று தோற்ற கூட்டம், இன்று சூப்பர் ஸ்டாரை சூறையாட எண்ணுகிறது ! இவ்வுலகில் கடைசி ரஜினி ரசிகன் இருக்கும் வரை அது உங்களால் முடியாது.
கூகுளிலும் சரி உலகிலும் சரி தலைவர் என்றால் அது இருவர் தான். ஒருவர் என் தேசியத்தலைவர் பிரபாகரன். இன்னொருவர் என் கலையுலக தலைவர் சூப்பர் ஸ்டார்.( வேண்டுமானால் சர்ச் செய்து பார்த்துக் கொள்ளுங்கள் )
உங்களுக்கெல்லாம் மறந்து போயிருக்கலாம். விடுதலை புலிகள் கடுப்பாட்டில் ஈழம் இருந்த போது தணிக்கை இல்லாமல் அங்கு வெளியாகும் திரைப்படங்கள் தலைவர் படங்கள் மட்டுமே !!!
இரண்டு நிகழ்சிகழை மட்டும் நினைவு கூற விரும்புகிறேன். 2007 சிவாஜி வெளியாகியிருந்த சமயம். திரைப்படமே பார்க்காத இந்நாள் முதல்வர் அன்றைய முன்னால் முதல்வர் அத்திரைப்படத்தை தோழியோடு அமர்ந்து பார்த்துவிட்டு படம் அருமை என பத்திரிக்கை பேட்டியளித்துவிட்டு செல்கிறார்.படம் வெற்றியடைகிறது. வெள்ளி விழாவில் முதல்வர் அமர்ந்திருக்கிற விழாவில் அவர் பெயரைச் சொல்லி பாராட்டியதற்கு நன்றி தெரிவித்து பேசியவர் தலைவர்.
அதேபோல 2013ல் எம்.எஸ்.வி பாராட்டு விழாவில் இன்றைய முதல்வர் விழாவில் என் ஆருயிர் நண்பர் என முன்னாள் முதல்வரின் பெயர் சொல்லி வாழ்த்தினார் எம் தலைவர்.
இப்படிப்பட்ட எம் தலைவர் எங்கே அடுத்த சூப்பர் ஸ்டார் எனச் சொல்லும் இவர் எங்கே !ஒன்று மட்டும் தான்,
இவ்வுலகிற்கு ஒரே சூரியன் ! அதுபோல
ஒரே சூப்பர் ஸ்டார் எம் தலைவன் மட்டுமே !
அடுத்த சூப்பர் ஸ்டார் எல்லாம் மின்னி மறையும் மின்மினிப் பூச்சிகள் !
மின்மினிப்பூச்சிகள் வெளிச்சம் தரலாம் .
என்றைக்கும் சூரியனாகிவிட முடியாது....
புரிந்தவர்களுக்கு தெரியும் யார் சூப்பர் ஸ்டார், யார் தலைவர் என்றெல்லாம் !
வாசித்த கண்களுக்கு நன்றிகள் !
கருத்திடப் போகும் விரல்களுக்கும் நன்றிகள் !!
நன்றிகளுடன் உங்கள் சீலன் !
Thursday, June 19, 2014
தமிழ் மெல்ல இனி சாகும்......
தமிழ் மெல்ல இனி சாகும்......
சரியாகத்தான் கணித்துள்ளான் பாட்டுப் புலவன் பாரதி. ஆம் தமிழ் மெல்ல அல்ல வேகமாகவே செத்துக்கொண்டு வருகிறது. வடமொழிக்கலப்பிலிருந்த நம் தாய்மொழியை காப்பாற்றிக்கொடுத்துச் சென்ற தமிழறிஞர்கள் திரும்பிவந்து எங்கே எங்களுடைய தனித்தமிழ் என்று கேட்டால் நாம் என்ன பதில் சொல்லப் போகிறோம்? தாய் மொழி எழுதப்படிக்கத் தெரியாத ஆங்கிலேயரையும், ஜெர்மானியரையும், போர்ச்சுக்கீசியரையும், சீனர்களையும் உங்களால் காட்ட முடியுமா? ஆனால் தமிழ் எழுதப்படிக்கத் தெரியாத பச்சைத் தமிழர்களை என்னால் காட்டமுடியும் !! எவ்வளவு வேதனையான உண்மை இது தெரியுமா....
ஒருவன் எப்பேற்பட்ட அறிஞனாகவும், கலைஞனாகவும், பன்மொழிப்புலவனாகவும் இருந்தாலும் ஏதாவது ஒரு விசயத்தைப்பற்றி சிந்திக்கும் போது தாய் மொழியில் மட்டும் தான் சிந்திக்க இயலும். இது உளவியல்பூர்வமான உண்மை. அப்படி சிந்திப்பதால் தான் சீனரும், ஜப்பானியரும் ,ரஸ்யர்களும் அமெரிக்காவிற்கு போட்டியாக உள்ளன.
உங்களுக்கெல்லாம் ஒன்று தெரியுமா ? அமெரிக்காவில் ஐ போன் வெளியான மறு நாளே அதே தொழில்னுட்பத்துடன் அந்த விலையைவிட 10 மடங்கு குறைவான விலையில் சைனாவில் வெளிவந்துவிடும். இதற்குக் காரணம் அவர்களின் சிந்திக்கும் ஆற்றல். ஆனால் இங்கே நமது இந்தியாவில் ம்கூம், முடியவே முடியாது. அப்படியானால் இந்தியர்களின் சிந்திக்கும் ஆற்றல் குறைவானதா? இல்லவே இல்லை, மொழி !! மொழி ஒன்றுதான் காரணம்.
கடந்த இருபது வருடத்தில் தமிழகத்திலிருந்து கண்டறியப்பட்டு வெளியான உற்பத்திப் பொருட்கள் ஒன்றையாவது உங்களால் காட்டமுடியுமா கிரைண்டரைத்தவிர?? முடியாது! ஏனெனில் நாம் தான் ஆங்கிலத்தை மொத்த குத்தகைக்கு வாங்கிவிட்டோமே, பிறகெப்படி முடியும்...... இந்தியாவில் வேறு எந்த மானிலத்திலாவது தாய் மொழியையே படிக்காமல் ஆராய்ச்சிப் பட்டம் பெறமுடியுமா? ஆனால் தமிழ்நாட்டில் முடியும் !!!
வருடத்திற்கு 3 லட்சம் ஐடி இஞ்சினியர் வெளியே வரும் தமிழ்நாட்டில் கோவை
சென்னையைத்தவிர ஐடி நகரங்களைக்காட்ட முடியுமா? ஆங்கிலம் ஒரு மொழியாகப் பார்க்கப்பட்ட காலம் போய், அது ஒரு கௌரவமாகப் பார்க்கப்படும் காலம் வந்துவிட்டது. நான்கு பேர் மத்தியில் தமிழில் பேசினால் அவமானமாகப் பார்க்கப்படும் காலம் வந்துவிட்டது. ஏன் ஆங்கிலத்தை எந்த இடத்திலும் காணமுடியாத சீனாவும் ,ஜப்பானும்,ரஸ்யாவும், பிராண்ஸும் ,போர்ச்சுக்கல்லும்,ஜெர்மனியும் இன்று உலக வல்லரசுகளாகத் திகழவில்லையா? வளர்சி என்பது மொழியில் கிடையாது, மக்களிடம் தான் உள்ளது.
சரி இனிமேல் ஆங்கிலம் இல்லாமல் இந்தியாவில் முடியாது, அதற்காக தாய் மொழியை அப்படியே விட்டுவிடலாமா? பேருந்தில் பயணச்சீட்டு தாருங்கள் என்று கேட்பது எவ்வளவு அந்நியமாகத் தெரிகிறதோ, அதேபோல் நாளை இங்கே வா, உன் பெயர் என்ன? என்பன போன்ற சாதாரண வாக்கியங்கள் கூட அந்நியமாகத் தெரியாது என்பதில் என்ன நிச்சயம் இருக்கிறது.?? இன்று தமிழ் நீடித்திருக்க ஓரளவு காரணம் அச்சில் இருப்பதால் தான். அதிலும் சில பத்திரிக்கைகளில் ஒற்றுப்பிழை, வார்த்தைப்பிழை, ஆங்கிலக் கலப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது.
ஐக்கிய மொழி ஆய்வு நிறுவனம் இன்னும் 100 வருடங்களில் அழிந்துவிடும் மொழிகள் குறித்த ஆய்வில் தமிழ் மொழியும் முதலில் இடம்பெற்றதும், பின்னர் சில பல அரசியல் காரணங்களால் நீக்கப் பட்டதும் உங்களுக்கு நினைவிருக்கலாம். இப்படியே போனால் தமிழ் மொழியும் நம் பண்பாடு கலாச்சாரம் போல புத்தகங்களிலும், ஓலைகளிலும் இன்னும் சொல்லப் போனால் அருங்காட்சியகங்களிலும் மட்டும் காணக்கூடிய அவல நிலை ஏற்பட்டுவிடுமோ என்று பயமாக இருக்கிறது.
அந்த நிலையைத் தடுக்க வேண்டும் என்றால், அது நம் கையில் தான் உள்ளது என்று பொய் சொல்லமாட்டேன்.னம் கையிலும் ஓரளவு உள்ளது. இருப்பினும் அது முழுக்க முழுக்க அரசாங்கத்தின் கையில் தான் உள்ளது. எங்கே முதலமைச்சரே, பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் முக்கிய கூட்டங்களிலும் ஆங்கிலத்தில் தான் பேசுகிறார் ! என்று நீங்கள் நினைப்பதையும் உணர முடிகிறது. இருந்தாலும் அரசாங்கம் மனது வைக்காவிட்டால் தமிழ் மெல்ல இனி சாகும் எனும் காலம் போய், தமிழ் செத்துக்கொண்டிருக்கிறது என்ற காலம் வந்துவிடும்.
உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளலாமே!!!!!
உங்கள் சீலன்...
Monday, June 16, 2014
நீயா நானாவும் என் கேள்விகளும் !!
நீயா நானாவும் என் கேள்விகளும் !!
முன்குறிப்பு ; நீண்ட நாட்களாக பதிவுலகிற்கு வரமுடியாமல் போய்விட்டது. காரணம் தேர்வுகளும் விடுமுறைகளும் தான். இனிமேல் எப்போதும் போல் வாரத்திற்கு மூன்று பதிவுகளாவது எழுதிவிட முயற்ச்சிக்கிறேன்.
நேற்றைய நீயா நானா விஜய் டிவி நிகழ்ச்சியில் மீண்டுமொருமுறை அழகான தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. கூட்டுக் குடும்பத்தை விரும்பும் தாய்மார்களையும் , தனிக்குடும்பம் தான் என்னுடைய தேர்வு என்ற இளம் பெண்களுக்குமான விவாதமாக அமைந்திருந்தது. வந்திருந்தவர்கள் அனைவருமே பெண்கள் தான். வழக்கம் போல கோபியின் தொகுப்பு நச் என்றிருந்தது.
தனிக்குடித்தனம் தான் என் தேர்வு என்ற பக்கம் இருந்த பெண்கள், கூட்டுக் குடும்பத்தை மிகவும் எதிர்த்தனர். கூட்டம், கும்பல், வடித்துக்க் கொட்டுதல் என்ற அளவிற்கு சென்று விட்டது. ஆனால் தாய்மார்கள் தரப்பில் ஒரே காரணம் தான். எங்கே பையனை நம்மிடமிருந்து பிரித்து அவர்களுடைய தாய் வீட்டோடு ஒட்டிவிடுவார்களோ என்பது மட்டும் தான். அதற்கு இளம்பெண்கள் அளித்த பதில் எனக்கு மிகவும் ஆச்சரியமானதாக இருந்தத
பெண்கள் அவர்களுடைய தாய் வீட்டை பிரிந்து வருவதை ஏற்றுக்கொள்ளும் இத்தமிழ்ச் சமூகம் , ஆண்கள் அவ்வாறு செய்வதை மட்டும் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது என்பது தான் அது. நியாயம் தானே? , இது ஒரு ஆணாதிக்க தமிழ்ச்சமூகத்தினைத்தானே காட்டுவதாக உள்ளது, என்று கூட எண்ணத்தோன்றுகிறது. ஆம் ஆணாதிக்கமே தான்.
கடைசியில் கோபிநாத், ஒரு உணர்வுப்பூர்வமான கேள்வியாக," உங்கள் மகன் உங்களைப் பிரிந்து சென்றால் உங்கள் மனநிலை என்ன ?"என தாய்மார்களிடத்தில் வைத்த போது அவர்கள் உண்மையாகவே அழுதுவிட்டனர்.அதைப்பார்த்த நமக்கும் அதே மனநிலைதான். ஒரு பெண் கணவன் இல்லாமல் கூட காலத்தைக் கடத்திவிடலாம் ஆனால் மகன் இல்லாமல் முடியாது என்ற அளவிற்கு வருத்தப்பட்டுவிட்டனர். அதைப் பார்த்திருந்தால் நீங்களும் நானும் கூட வருத்தப்பட்டிருப்போம். ஏன் எதிரணி பெண்கள் கூட வருந்திவிட்டனர்.
அனால் இது நமது சமூகப்பண்பாட்டின் சிக்கலான உணர்வு முடிச்சு என்பதை சற்றே ஆழ்ந்து நோக்கினால் புரிந்து கொள்ளலாம். ஆம், காலம் காலமாக ஆணாதிக்க சமூகத்தின் வெளிப்பாட்டிலிருந்து வெளிவர முடியாத ஒரு சூழலை நமது சமூக அமைப்பு ஏற்படுத்திவிட்டது என்று தான் கூறவேண்டும். இதை வைத்துப் பாருங்கள், அப்படியானால் பெண்பிள்ளைகள் பெற்றவர்களின் எதிர்காலம் ? தங்களது முயற்சியினால் எல்லாவற்றையும் தனது மகளுக்காகச் செய்துவிட்டு, எவ்வித பிரதி பலனையும் எதிர்பார்க்கக்கூடாது என்பதாகத்தானே நமது சமூகச்சூழ்நிலை இருந்து வருகிறது. இது உண்மையில் சரியா என்பதை யோசித்தால் நமக்குக் கிடைக்கும் விடை ?????????
உண்மையிலேயே ஒரு பெண்ணின் சுதந்திரம் திருமணத்திற்குப் பிறகு பறிக்கப்படுவதும், ஆணின் சுதந்திரம் அதிகரிப்பதும் தானே காலம் காலமாக நடந்துவருகிறது. என்ன இருந்தாலும் பெண்பிள்ளைகளிடத்திலிருந்து உதவி கேட்பது என்பது எந்த ஒரு பெற்றோருக்கும் இழினிலையாகத்தானே பார்க்கப்பட்டு வருகிறது இன்றுவரை. ஒரு பெண் கணவனைவிட மகனை நம்புவதைப்போல ஏன் மகளை நம்பமுடியவில்லை. இருவருமே தனது பிள்ளைகள் தானே? விடை ஒன்றுதான் ஆணாதிக்கம் !!
ஒரு பெண் திருமணத்திற்குப் பிறகு கணவன் வீட்டில் வாழ்வது சரி என்றால், ஒரு ஆண் திருமணத்திற்குப் பிறகு மனைவி வீட்டில் சென்று வாழ்வது மட்டும் ஏன் தவறாக இருக்கிறது.
தீர்வு ஒன்றுதான், ஒரு ஆண் தனது திருமணத்திற்குப் பின் தாய் தந்தையை நன்றாகப் பார்த்துக்கொள்வது எவ்வளவு சரியோ, அதேபோல ஒரு பெண் திருமணத்திற்குப் பிறகு அவளுடைய தாய் தந்தையை பார்த்துக்கொள்வதையும் ஏற்றுக்கொள்ளும் மன நிலை எல்லோரிடத்திலும் வர வேண்டும். வருவதற்கு கொஞ்சம் காலம் ஆகலாம். ஆனால் வருவதை தடுக்கக் கூடாது என்பது தான் என் எண்ணம்.
அந்த மாற்றத்தின் முதல் படியாகத்தான் நான் தனிக்குடித்தனத்தைப் பார்க்கிறேன். என்றாலும் கூட அதை ஏற்றுக்கொள்ள என் மனது மறுப்பதும் நிஜம். நானும் ஒரு ஆண் என்பதாலோ என்னவோ தெரியவில்லை. எனக்கு வரப்போகும் மனைவி அவளது பெற்றோரைவிட்டு வருவதைப் போல என்னால் எனது பெற்றோரைவிட்டு போக முடியுமா என்றால் , கண்டிப்பாக முடியாது என்பது தான் விடை. ஆனால் என்னுடைய மகன் எங்களைவிட்டுப் போகும் போது அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையை அடைந்துவிடுவேன் என்று கண்டிப்பாக நம்புகிறேன்.
உண்மையிலேயே நேற்றைய நீயா நானா பல கேள்விகளை என்னுள் ஏற்படுத்திச் சென்றுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். பதில்களைத் தேட முயற்சிக்கிறேன்............
பதிவு குறித்து மறக்காமல் உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
நன்றி!
உங்கள் சீலன் !
Subscribe to:
Posts (Atom)