Sunday, August 17, 2014

கொடிகாத்த குமரன்


எங்கள் பல்கலைக்கழக சுதந்திர தின விழாவில் கொடிகாத்த குமரன் நிலைக்காட்சியில் நான் பேசியவை இதோ உங்களுக்காக !!மனமுவந்து உயிர்கொடுத்து மக்கள் துயர் துடைக்க மானத்துடன் போராடிய மணிக்கொடி வீரன் ! உயிர் துறப்பேன் உற்ற தாய்த்திரு நாட்டின் கொடி துறக்க மாட்டேன் என்று முழங்கிய கொள்கை வீரன் ! வீரத்தின் விளை நிலமாகத்திகழும் கொங்குநாட்டில் பிறந்த வீரத்தமிழன் ! 

வெள்ளையரின் அடிக்கு பயந்து அடிமைகளாக வாழ்ந்த சிலருக்கு மத்தியில் தாய்த்திரு நாட்டின் கொடிக்கும் பணிந்து உயிர் நீத்த உன்னத வீரன் ! அவன் தான் திருப்பூரில் பிறந்த கொடி காத்த குமரன்.


இந்தக் கொடி நேருஜி பிடித்தகொடி , இந்தக்கொடி பஞ்சாப் சிங்கம் பிடித்த கொடி என இவர் பேசிய அந்த கடைசி வார்த்தைகள் இன்றும் நம் காதுகளோரம் ஒலித்துக் கொண்டிருக்கிறதே அது தான் அவருக்குக் கிடைத்த உண்மையான புகழ்மாலை ! 

28 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து மறைந்த அவரைப்பற்றி இந்த இருபத்து ஓராம் நூற்றாண்டில் மட்டுமல்ல , இன்னும் எத்தனை நூற்றாண்டுகளானாலும் பேசிக்கொண்டே இருக்கலாம்.எளிமையான நெசவாளர் குடும்பத்தில் நூற்கப்பட்ட பூமாலை இந்த குமாரசாமி .அடிமைப் பட்டுக் கிடந்த பாரத தேசத்தின் அடிமை விலங்கை உடைத்தெறிய கையிலே கொடியிடனும் உள்ளத்தில் உறுதியுடனும் நீ வலம் வந்த அந்த சென்னிமலை வீதிகள் உன் தியாகத்தை இன்றும் நின்று பேசும் ! 

ஒரு அடி விழுந்தாலே ஒட நினைக்கும் நாம் சொல்லும் வந்தே மதரத்திற்கும் ஒவ்வொரு அடியிலும் ஊருதியுடன் நீ சொல்லிய வந்தே மாதரத்திற்கும் ஓராயிரம் வித்தியாசங்கள் வார்த்தைகளில் மட்டுமல்ல ஸ்பரிசத்திலும் கூடத்தான் ! 

அடிபட்டுக் கீழே விழுந்தவுடன் உன் மீது பூட்ஸ் காலால் விளையாடிய அந்த ஆங்கிலேயரை நினைக்கும் போது ரத்தம் கொதிக்கிறது, !!

மண்டை பிளந்து செங்குருதி தெறித்த போதும் 
மயக்கமடைந்து மண்ணில் வீழ்ந்த போதும் 
மணிக்கொடி விடாத அந்த மன உறுதியை 
இன்றைய இளைஞர்களுக்கு இரந்து செல்ல வேண்டுகிறோம் !!உன்னால் அடைந்த சுதந்திரம் உன்னத சுதந்திரம் ! அனால் இன்றும் உன் மக்களுல் பலர் ஒட்டிய வயிறோடும், ஒன்றிய தேகத்தோடும், ஒரு வேளைக்க் அஞ்சியோடும் உறங்கச் செல்கின்றனர் !! அவர்களின் வறுமை போக்கி உலக அரங்கில் உன் நாட்டை தலை நிமிர்த்தப்ப் போகும் அந்த நாள் வெகு தூரத்திலில்லை !!இன்று தேசியக்கொடியிலிருந்து கீழே விழும் மலர்கள் அனைத்தும் அன்று உன் போன்ற தியாகிகளின் மனைவிகள் கூந்தலிலிருந்து விழுந்தவை தான் !!

இதை நாம் உணர்ந்து நாம் தலை நிமிர்வதும் நம் நாட்டை தலை நிமிரச் செய்வதும் தான் இவர் போல இன்னுயிர் ஈந்த ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் நாம் செய்யும் நன்றிக் கடனாக இருக்க முடியும் !!

வாழ்க தமிழ் !    வளரக பாரதம் !   வந்தே மாதரம் !


உங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் ! 

உங்கள் சீலன் !!

7 comments:

 1. அருமை...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா ! தொடர்ந்து வருகை தர வேண்டும் !

   Delete
 2. சுதந்திர தின உரை வீச்சு அருமை சகோ! உங்களை போன்ற இளைஞர்கள் இப்படி பேசுகையில் நாட்டின் நம்பிகை துளிர்கிறது சகோ! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரி. தொடர்ந்து வருகை தர வேண்டும் !!

   Delete
 3. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி ! தொடர்ந்து வருகை தர வேண்டும் ! நமது பிளாக்கில் தொடர்ந்து போஸ்ட் போடலாமே ! ( நீ என்ன செய்ற என கேட்பது எனக்கு தெரிகிறது , எங்க நம்ம பிளாகையே மெயின்டெயின் பண்ண முடியல, இதுல காலேஜ் பிளாக் வேறயா ? தயவு செய்து என்னை இதற்கு மாட்டிவிட்டுவிடாதீர்கள் )

  ReplyDelete
 4. அருமையான பேச்சு தொடருங்கள் .வாழ்த்துகள்...சகோ

  ReplyDelete