Tuesday, July 24, 2012

மறைக்கப்பட்ட சூரியன்

என்னுடைய முதல் பதிவு ராகுல் டிராவிட் பற்றி இருக்க வேண்டும் என விரும்பினேன்.அத்ற்க்காகத்தான் இந்தப் பதிவு.ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்றார் கவியரசு கண்ணதாசன்.ஆனால் டிராவிட் விசயத்தில் இது பொய்த்தது.டிராவிட்டின் சாதனைகள் அனைத்தும் மறக்கப்பட்டது.இல்லை மறக்கடிக்கப்பட்டது என்றே கூறலாம்.ஒரு உண்மை வீரனான டிராவிட்டின் பல சாதானைகளுக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதே கசப்பான உண்மை.இதற்க்கு பல உதாரணங்கள் கூரலாம். இந்த துரதிஸ்டம் இவர் அறிமுகம் ஆன ஆட்டத்திலிருந்தே தொடங்கியது. அந்த ஆட்டத்தில் இவர் 95 ரன்கள் விளாசினார் .ஆனால் அதே ஆட்டத்தில் கங்குலி சதம் அடித்து அசத்தியதால் அவரே அதிகம் பாராட்டப்பட்டார்.  1999 உலகக் கோப்பை ஆட்டத்தில் இவரும் கங்குலியும் சேர்ந்து உலக சாதனை படைத்தனர்.அந்த ஆட்டத்தில் டிராவிட் 123 பந்துகளில் 145 ரன்கள் விலாசினார்.அதே ஆட்டத்தில் கங்குலி 183 ரன்கள் குவித்தார்.எனவே டிராவிட்டுடய சாதனை மற‌க்கப்பட்டது.இதுவரை நடந்த உலககோப்பை போட்டிகளில் இந்திய விக்கெட் கீப்பர் ஒருவரின் அதிக ரன் அதுதான்.அடுத்ததாக இவரும் சச்சினும் சேர்ந்து இவரும் கங்குலியும் செய்த உலக சாதனையை முறியடித்தனர் . அதில் டிராவிட் 153 ரன்கள் அடித்தார்.அதே ஆட்டத்தில் சச்சின் 186* குவித்ததால் அவரின் சாதனை அமுஙிப்போனது.இது போல பல உதாரணங்களை கூறிக்கொண்டே போகலாம்.கேப்டன் சதனைகள்;
இவர் 2003 ஆம் ஆண்டில் இந்தியா உலகக்கோப்பை ரன்னர் ஆனபோது அணியின் துனைத்தலைவராயிருந்தார்.அப்பொதிலிருந்து இவரின் தலமைப்பண்பு கங்கூலியால் அவ்வப்போது சோதிக்கப்பட்டது.அதன் பின் 2005ல் அணியின் தலைவராக உயர்ந்தார்.இந்திய அணியின் மிக அதிக வெற்றி சதவீதம் இவருடையது தான்.இச்சாதனை பின்னர் 2011ல் தோனியால் முறியடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இவருடைய கேப்டன் சாதனைகளில் முக்கியமானது தொடர்ந்து அதிக ஆட்டம் வெற்றி,தொடர்ந்து அதிக ஆட்டம் இரண்டாவதாக ஆடி வெற்றி,தெனாப்பிரிக்க நாட்டில் டெஸ்ட் தொடர் வெற்றி,இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடர் வெற்றி,வெஸ்டின்டீஸில் தொடர் வெற்றீ,இலங்கையுடன் 5/0 ஒருநள் தொடர் வெற்றி,பாகிஸ்தான் மண்னில் ஒருநாள் தொடர் வெற்றி எனக்கூறலாம்.மேற்க்குறிப்பிட்டவற்றில் வெஸ்டின்டீஸ் இலங்கை சாதனைகள் மற்றும் தொடர் ஒருநாள் வெற்றி ஆகியவை மட்டும் தோனியால் முறியடிக்கப்பட்டது. மற்றவை இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது.துரதிஸ்டங்கள்;

                            இவர் தற்காலிக கேப்டனாயிருந்தபோது சச்சின் 194*ல் டிக்ளேர் செய்தார்.அது கங்குலியின் வேலை என்பது அனைவரும் அறிந்தாலும் இவர்மீது குற்றம் சாட்டப்பட்டது.சொந்த மண்ணில் பாகிஸ்தானுடன் தொடரை இழந்தது,ரவிசாஸ்திரியுடனான சிறு பிணக்கு போன்ற சில சர்ச்சைகளில் மட்டுமே சிக்கினார்.ஆனால் 2007 உலகக்கோப்பை தொடர் தோல்விதான் இவர் செய்த மிகப்பெரிய தவறு.ஆனாலு கேப்டன் பதவியில் தொடர்ந்து இங்கிலாந்து தொடரையும் வெல்லவே செஇதார்.இவர் செய்த மற்றொரு தவறு சிறப்பான நேரத்தில் கேப்டன் பதவியய் துரந்ததோடு மட்டுமல்லமல் சேவாக்கை கேப்டன் பதவிக்கு பரிந்துரைக்காமல் தோனியை கேப்டனாக்கியது.

                               


இவரை ஆரம்பத்தில் மெதுவாக ஆடுகிறார் என்றனர் .ஆனால் இவர்தான் இந்தியாவின் அதிவேக அரை சதம் அடித்தவர்களில் 2ஆவத் இடம் .நம்ப முடிகிறதா? 22 பந்தில் 50 ரன்கள். 63 பந்தில் 94 ரன் ,இவர் ஆடிய ஒரே டி20 போட்டியில் ஹாட்ரிக் சிக்ஸர்,(கன்குலி,சச்சின் கூட அடித்ததில்லை)இவருடைய ஸ்டிரைக் ரேட் ஒருநாள் போட்டியில் 72.ஐ.பி.எல்லில் 119,என்பது குறிப்பிடத்தக்கது.ஆனானப்பட்ட கங்குலிக்கும் சச்சினுக்கும் கூட ஐபிஎலில் இவரை விடக்குறைவு தான்.


இவ்வாறு பல்வேறு விததிலும் உயர்ந்த டிரவிட் எனும் சூரியன் எவ்வித அங்கீகாரங்கலும் பெறாமலேயே அஸ்தம்பித்துவிட்டது.என்னுடைய மனக்குறை என்னவென்றால் 2011ல் இவர் ஒருதினப்போட்டியில் ஓய்வு பெற்றபோது கூட இவரால் கேப்டனாக்கப்பட்ட தோனி ஒன்றுமே செய்ய வில்லை.ஆனால் இவருடைய கேப்டன்சிப்பை விமர்சித்த கங்குலியை தோளில் தூக்கி மைதானத்தை வலம் வந்தார்.கும்ளே கையால் தொடர் கோப்பையை வாங்க வைத்தார்.இதுபோல சச்சினயும் பெருமைபடுத்தப்போவது உறுதி.ஆனால் டிராவிட்?பிறசாதனைகள்;

           


              இரண்டுவிதப்போட்டியிலும் 10000 கடந்தவர்,உலகில் அதிக பந்துகளை எதிர்கொண்டவர்,இந்தியா சார்பில் அதிக அரைசதம் அடித்தவர்,(இப்போது சச்சின்)இந்தியா சார்பில் அதிக இரட்டை சதம் அடித்தவர்5(இப்போது சேவாக்,சச்சின்),அதிக டெஸ்ட் ரன்களில் உலக அளவில் 3வது இந்தியாவில் 2ஆவது,அதிக கேட்ச்,wisden cricketer ,உலக லெவன் ஆசிய லெவன் அணித்தலைமை,2004 icc player ofhe year ,best test plaயெர்,ராஜிவ் காந்தி கேல்ரத்னா விருது,பத்மபூஷன்,போன்றவைகளை பிரபலங்களின் பார்வையில்;

கங்குலி;டிராவிட்டை துனை கேப்டனாகப் பெற்றது என் பாக்கியம்

சச்சின்;இனி டிராவிட்டை டிரஸ்ஸிங் ரூமிலும் மைதானத்திலும் ரொம்ப மிஸ் பன்னுவேன்

கவாஸ்கர்;டிராவிட் இடத்தை நிரப்புவது கடினம்

கபில்;உண்மை வீரன்

கும்ளே;டிராவிட்டுடன் விளையாடியது மகிழ்வான தருனங்கள்

லட்சுமன்;சிறந்த வீரரின் சாதனைகளை நினைத்துப்பார்க்கிறேன்

உலக முதன்மை கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் இவரின் ஓய்வுக்கு மட்டும் தான் கருத்து சொன்னார்கள்.என் 10 வருட கிரிக்கெட் அனுபவத்தில்,(கங்குலிக்கு சில பேருட்ன் வாய்க்க தகறாரு இருந்ததால் பெரும்பாலானோர் அவரை புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது)

இந்தியாவின் மதம் கிரிக்கெட் என்றால்,கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் என்றால்,
இவற்றை பாதுகாக்கும் சுவர் டிராவிட் தான்.அவர் என்று ஓய்வை அறிவித்தாரோ அன்றிலிருந்து இந்திய‌ கிரிக்கெட் பார்க்கவில்லை.இனியும் அப்படித்தான்.ipl தவிர.அதுவும் இந்த சூரியன் ஆடும் வரை மட்டுமே


சிலவற்றை விட்டிருந்தாலும் சிறு பிழைகள் இருந்தாலும் முதல் பதிவு என்பதால் மன்னிக்கவும் .அடுத்த பதிவுகளில் தவறுகள் இல்லாமல் சந்திப்போம்