Friday, September 26, 2014

எண்ணக் கிறுக்கல்கள் - 2 ( WEEK END SPECIAL-2)


எண்ணக் கிறுக்கல்கள் - 2இந்த வாரம் முழுதும் எங்கள் பல்கலைக்கழக அலகுத் தேர்வு நடைபெற்றது, அதனால் டீட்டெயிலான பதிவு எதுவும் எழுத முடியவில்லை.வரும் வாரத்தில் பூஜா விடுமுறை வேறு வருகிறது? பார்ப்போம் ...சென்ற வாரம் நான் எழுதிய கிறுக்கல்கள் பதிவுக்கு நல்ல வரவேற்பு இருந்தது, அதனால் இனி வாரா வாரம் தொடரலாம் என நினைக்கிறேன்....சென்ற வாரம் கருவாச்சி காவியம் படித்ததிலிருந்து வைரமுத்து எழுத்துகள் என்னை ரொம்பவே ஈர்த்துவிட்டன, அதனால் அவருடைய சாகித்ய அகாடெமி பரிசுபெற்ற ஒரு புத்தகமான கள்ளிக்காட்டு இதிகாசத்தை நெட்டில் தேடினேன், மின்னூலாக கிடைத்ததது,அத்துடன் பல அரிய மின்னூல்களும் கிடைத்தது. இந்த பூஜா ஹாலிடேஸில் கள்ளிக்காட்டு இதிகாசத்தை படிக்கலாம் என திட்டம்.ஈகரை தளத்தில் ஏகப்பட்ட மின்னூலகள் குவிந்துகிடக்கின்றன. வேண்டியவர்கள் இலவசமாகவே தரவிறக்கிக் கொள்ளலாம்.((என்னன்னே தெரியல மத்த புக்கெல்லாம் படிக்க தோணுது, ஆனா இந்த சப்ஜெக்ட் புக்க மட்டும் படிக்கவே தோண மாட்டேங்குது)).


நாளை தான் தமிழக முதலமைச்சரின் அரசியல் எதிர்காலம் நிர்ணயிக்கப்படப் போகும் நாளென ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.நான் பதிவெழுத ஆரம்பிக்கும் வரையில் எந்த வாய்தாவும்??!! வைக்கவில்லை, நாளைய தீர்ப்பில் மூன்று வாய்ப்புகள் இருக்கின்றன என இந்தியா டுடேவில் போட்டிருந்தார்கள்.ஒன்று அவர் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்று கூறி விடுதலை செய்வது.இரண்டு, இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனை மற்றும் அபராதம் விதிப்பது,மூன்றாவது இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைதண்டனை அளிப்பது.இதில் முதல் வாய்ப்பு நடந்தால் அடுத்த தேர்தலிலும் அவரே ஜெயித்து முதல்வராகிவிடுவார். இரண்டாவது வாய்ப்பு நடந்தால் முதல்வர் பதவி பறிபோகும், ஜாமீன் வாங்கிவிடுவார், ஆனால் அரசியல் வாய்ப்பு கடினமாகிவிடும். கடைசி வாய்ப்பு நடந்தால் முதல்வர் பதவி பறிக்கப்பட்டு நேரே அங்கிருந்து சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவார், இது நடக்கும் பட்சத்தில் அவருடைய அரசியல் எதிர்காலம் கேள்விக்குறிதான். ஆனால் எனக்கென்னவோ முதல் வாய்ப்புக்குத் தான் அதிகம் வாய்ப்பிருப்பதாக எண்ணுகிறேன். பார்ப்போம் என்ன நடக்கப் போகிறது என?????/


போன வாரம் வெள்ளிக் கிழமை திடீரென்று முடிவெடுத்து அரண்மனை திரைப்படத்திற்கு SECOND SHOW ( NELLAI_PERINBAVILAS) போனோம். முதல் நாள் என்பதால் நல்ல கூட்டம். படம் எனக்குப் பிடித்திருந்தது. வழக்கமான கதை ,சந்தானம் காமெடி, ரொம்ப நாள் கழிச்சு அருமை. பேய்க்கிட்ட அடிவாங்குற சீனில் தியேட்டரே அதிர்ந்தது.இன்னும் அவர் ரெட்டை அர்த்த மற்றும் ஆணாதிக்க வசனங்களை விடுவதாக இல்லை. ஆனால் அதற்கும் கூட தியேட்டரில் சிரிப்பலை எழுவது சகிக்க முடியவில்லை.படம் பார்த்து முடித்து விடுதிக்கு , படத்தைப் பற்றி பேசி சிரித்து கொண்டு நடந்து வருகையில் ரவுண்ட்ஸில் இருந்த போலீசாரிடம் மாட்டிக் கொண்டோம்.என்னங்கடா கூட்டமா போய்ட்டு வற்றீங்க?( நாங்கள் 15 பேர்) என நிறுத்தினார்கள். எடுங்கடா ஐடி கார்ட,ஐடி இல்லாதவனெல்லாம் ஜீப்ல ஏறு என அதட்டவும்,சிலர் மட்டுமே கொண்டு வந்திருந்தனர், நானுட்பட பலர் கொண்டுவரவில்லை. எனக்கு உடம்பெல்லாம் வியர்த்துவிட்டது, பெயர் ஊர் விசாரித்து அண்ணா யுனிவர்சிட்டி என்றோம். என்னங்கடா கதை விடுறீங்க, உங்கள பார்த்தா அண்ணா யுனிவர்சிட்டி மாதிரியே தெரிலயே என்றதும் எல்லோரும், எங்களுக்கே டவுட்டாத்தான் இருக்கு என  சிரித்துவிட்டோம். என்னங்கடா சிரிப்பு?என ஐடி வாங்கிப் பார்த்துவிட்டு, சத்தம் போடாமல் போகணும் என அனுப்பிவிட்டனர்.மறக்க முடியாத இரவு......


மங்கல்யான் வெற்றிகரமாக செவ்வாயை அடைந்துவிட்டது பெருமையான விசயம். இதைப்பற்றி ஒரு பதிவு போட்டிருக்கிறேன். கூடுதல் தகவல்களுடன் இன்னொரு பதிவு போடும் ஐடியா உள்ளது. 

இந்த வாரம் SEMINAR கிளாசில் நான் எடுக்க வேண்டி இருந்தது. ஒன்னும் PREPARE பண்ணாம போய் எடுத்தேன், கையெல்லாம் நடுங்கியதைப் பார்த்து கிளாசே சிரித்தது.. என்னடா பேச்சுப்போட்டிக்கு மெட்ராஸெல்லாம் போயிருக்க, நம்ம தமிழ்மன்றத்துல புகுந்து விளாடுவ இன்னைக்கு இப்டி கை நடுங்குதே என நண்பர்கள் கலாய் ,,கலாய் என கலாய்த்துவிட்டனர் . அது தமிழ்!! இது இங்கிலீஸ்ல ?? என உள்ளுக்குள் நினைத்துக் கொண்டேன். இதுல என்ன காமெடின்னா, நான் கிளாஸ் எடுத்துட்டு கீழே எறங்கப் போனேன், அப்போ ஆசிரியர் ஸ்டூடன்ட்ஸ‌ பாத்து யாராவது ஜெயசீலன் கிட்ட டவுட் கேளுங்கண்ணு சொல்லீட்டாங்க, எனக்கு கால், கையெல்லாம் நடுங்குது,யாருமே  கேக்கல, திடீர்னு அவுங்களே ஒரு பேர் சொல்லி டவுட் கேக்கச் சொன்னாங்க, நான் டவுட் க்ளியர் பண்ணப் போற மாதிரி தலைய‌ தலைய ஆட்டிட்டு போர்டு பக்கத்துல போய், நல்ல கேள்வி,அருமையான ட்வுட், இதுக்கு நம்ம மேடமே பதில் சொல்லுவாங்கண்ணு ஆசிரியரை கைகாட்டிவிட்டு ஓடிப்போய் இடத்தில் அமர்ந்து கொண்டேன். கிளாசே விழுந்து விழுந்து சிரித்தது.


இந்த வார ஹைக்கூ:

சொல்லி வெற்றிபெறும் காதல்களின் எண்ணிக்கையை விட சொல்லாமல் தோற்றுப் போகும் காதல்களின் எண்ணிக்கை அதிகமானது........


படித்ததில் பிடித்தது:

மகன்களைப் பெற்ற அம்மாக்களுக்கு மட்டுமே தெரியும் கடைக்குப் போகச் சொல்லி கொடுத்த பணத்தில் மீதி சில்லறை வராதென்று....


இந்த வார ட்வீட்::

* மக்களுக்கு என் சொந்தப் பணத்தில் சேவை செய்யப் போகிறேன்
                                                                                                           -சச்சின் டெண்டுல்கர்

                                                                                          
மக்கள்: மொதல்ல உங்க எம்.பி தொகுதிக்கு அரசாங்கம் கொடுத்த பணத்த செலவு பண்ணுங்க...

*மக்கள் சம்மதித்தால் ஊழலை ஒழிக்க சபதம் எடுப்பேன்.
                                                                                                  -சண்டிகர் கூட்டத்தில் மோடி
                                   

பா.ஜ.க தொண்டன்: தலைவரே தேர்தல் முடிஞ்சு நாலு மாசம் ஆச்சு, இப்போ நீங்கதான் பிரதமர்????அனைவருக்கும் வார விடுமுறை மகிழ்சியாக அமைய வாழ்த்துகள்....


உங்கள் சீலன்.பதிவு குறித்த உங்கள் கருத்துகளை மறக்காமல் பகிர வேண்டுகிறேன்....22 comments:

 1. கிறுக்கல்கள் அருமை...
  தொடருங்கள்...
  செமினார் ... படிக்கும் போது செமினார் என்றாலே அன்னைக்கு வகுப்பு பக்கமே போறது கிடையாது....

  ReplyDelete
  Replies
  1. நானும் லீவ் போட்டுவிடலாம் என்றுதான் யோசித்தேன் சார், அன்னைக்குன்னு பார்த்து இன்டர்ணல் டெஸ்ட் வேற வழியே இல்லாம மாட்டிக்கிட்டேன், வருகைக்கும் கருத்துக்க்ம் மிக்க நன்றி சார்...

   Delete
 2. அப்போ செமினார்ல செம காமெடி போல..உங்க ஹாஸ்டல்ல செகண்ட் சோவுக்கு போகலாம், இங்க காம்பவுண்ட் தாண்டித் தான் போக‌ணும், ஹா ஹா ஹா, அரண்மனை படம் நல்லாவா இருந்துச்சு, சந்திரமுகி,காஞ்சனா எல்லத்தையும் மிக்ஸ் பண்ணமாதிரி இருந்துச்சு, நீ நல்லா இருக்குன்னு சொல்ற, ???நீயாவது சப்ஜெக்ட் புக்க படிக்காம மத்த புக்க படிக்குற நான் அது கூட பண்றதில்ல.....( பெரிய கமெண்டா போடச் சொன்ன இல்ல போட்டாச்சு போட்டாச்சு)

  ReplyDelete
  Replies
  1. அடப்பாவிகளா..

   Delete
  2. ஹஹாஹஹஹ்

   நாங்க ரொம்ப சின்ன புள்ளைங்களாகிட்டோம்....ரொம்பவே ரசிக்கிறோம் இளசுகளை!

   Delete
 3. டேய் ஜெயா கமெண்ட் போடச் சொன்ன போட்டுட்டோம்...பிரிட்டோவும் போட்டுட்டான், போதுமா...இல்ல இன்னும் வேணுமா..

  ReplyDelete
  Replies
  1. டேய் போஸ்ட் பத்தி கமெண்ட் போடச் சொன்னா, ஃபேஸ்புக்ல தான்னு பார்த்தா இங்கயுமா, சரி சரி எல்லா போஸ்டுக்கும் இது போல ரெண்டு பேரும் கமெண்ட் போட்ருங்க... :) :) :) :) :)

   Delete
 4. ((என்னன்னே தெரியல மத்த புக்கெல்லாம் படிக்க தோணுது, ஆனா இந்த சப்ஜெக்ட் புக்க மட்டும் படிக்கவே தோண மாட்டேங்குது)).****
  எங்களுக்கே டவுட்டாத்தான் இருக்கு என சிரித்துவிட்டோம். ****
  இதுக்கு நம்ம மேடமே பதில் சொல்லுவாங்கண்ணு ஆசிரியரை கைகாட்டிவிட்டு ஓடிப்போய் இடத்தில் அமர்ந்து கொண்டேன்.***** செம செம:)))) சூப்பர் சகோ!! நாளுக்கு நாள் கலக்குறீங்களே!!!! வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சகோ..

   Delete
 5. Replies

  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜீ...

   Delete
 6. சுவையான பல்சுவை பகிர்வு! நன்றி!

  ReplyDelete
  Replies

  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்

   Delete
 7. அருமை
  அருமை
  //அனைவருக்கும் வார விடுமுறை மகிழ்சியாக அமைய வாழ்த்துகள்....//
  எங்களுக்கு ஏது நண்பரே விடுமுறை


  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா...

   Delete
 8. அருமையான பதிவு
  தொடருங்கள்

  எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)
  http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html
  படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக சார், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்...

   Delete
 9. //எங்களுக்கே டவுட்டாத்தான் இருக்கு என சிரித்துவிட்டோம். என்னங்கடா சிரிப்பு?என ஐடி வாங்கிப் பார்த்துவிட்டு, சத்தம் போடாமல் போகணும் என அனுப்பிவிட்டனர்.மறக்க முடியாத இரவு......//
  ஹ ஹா ஹா ....

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்..

   Delete
 10. சப்ஜெக்ட் புக்க மட்டும் படிக்கவே தோணமாட்டேங்குது! ஹஹாஹ் அதுதான் கல்லூரிக் காலம்.....நாங்களும் அப்படி வந்தவர்கள்தானே! நாங்களும் கலைகளில் விளையாடிவர்கள் அப்போது! ஆனா சப்ஜெக்ட்டையும் தொட்டுடுவோம்....நீங்களும் கொஞ்சம் அதையும் கைல வைச்சுக்கங்க தம்பி! (ஆசிரியன் இல்ல அதான்! அஹஹஹ)
  முதலமைச்சருக்கு மூணாவதுனு முடிவாகிடுச்சே! எப்படி நீங்க முதல் நு அனுமானிச்சீங்க?!!
  ஹாஹஹாஹஹ்ஹஹ்....ரொமப்வே சிரிச்சோம் உங்க டவுட்....பாத்து தம்பி! இப்பலாம் மாணவர்களை போலீஸ் ரொம்பவே நோண்டுதுங்க,,,,கவனமா இருங்க தம்பி!
  செமினார் ரசித்தோம் தங்கள் சமயோசித அறிவைக் கண்டு!!!
  ஹைக்கூ 100% உண்மை!!!! இன்னும் % உண்டுன்னா சேத்துக்கங்க!
  எங்க காலத்துல அம்மாக்கள் வேறப்பா.....நாங்க ஒழுங்கா கொண்டு கொடுத்துடுவோம்னு முழு நம்பிக்கை!
  கீற்றுக்கள் செம!


  ReplyDelete
  Replies

  1. கண்டிப்பாக ஐயா, படிச்சுத்தானே ஆகனும்!!??:),அவங்களோட அதிகாரத்த வச்சு வெளில வந்துடுவாங்கன்னு நெனச்சேன் ஆனா கடைசில நீதியே ஜெயித்துவிட்டது, பார்ப்போம் இன்னும் மேல்முறையீடு எல்லாம் இருக்கிறது,ஆமாம் ஐயா மாணவர்களை மட்டுமல்ல இரவில் எல்லாரையுமே ரொம்ப விசாரிக்கிறார்கள்,இன்றைக்கு பையன்கள் காசு கொடுத்தால் தான் கடைக்கே கிளம்புகிறார்கள்( நானுட்பட) . விரிவான கருத்துக்கு மிக்க நன்றி ஐயா, தொடர்து வருகை தர வேண்டும்...

   Delete
 11. கிறுக்கல்கள் அருமை சீலன். பாடம் தவிர மற்றவை தான் பிடிக்கும் எல்லோருக்கும். என்ன செய்வது..படிக்கனுமே. நன்றாக ரசித்துப் படித்தேன் பா..

  ReplyDelete