Wednesday, September 24, 2014

மங்கல்யான் ! கனவு நனவானது !!!!


மங்கல்யான் ! கனவு நனவானது !!!!


உலக வல்லரசுகளே உற்றுக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு மிகப்பெரிய கனவை நம் விஞ்ஞானிகள் நனவாக்கியதுடன் , அந்த வல்லரசுகளை எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்கச் செய்துவிட்டார்கள். இந்தியன் என்பதற்கான பெருமை இப்போது இன்னும் ஒருபடி மேலே ஏறிப் போய்விட்டது, மற்ற நாட்டவர்களுக்கு மத்தியில். என்னடா, ஒரு செயற்கைக் கோள் வெற்றிக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா ? என நீங்கள் நினைத்தால் அது தவறு.ஆம் இது சாதாரண திட்டம் கிடையாது. சந்திரயான் திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட கருவிகளில் பெரும்பாலானவை வேற்று நாடுகளைச் சேர்ந்தது. ஆனால் மங்கல்யானில் பயன்படுத்தப்பட்டவை அனைத்தும் நமது உழைப்பு, நமது கண்டுபிடிப்பு. இதுவரை உலக நாடுகளில் நிகழ்ந்த 51 செவ்வாய்க் கோள் பயண முயற்சிகளில் 21 பயணங்கள்தான் வெற்றி அடைந்துள்ளன.ஆனால் நாம் முதல் முயற்சியிலேயே வெற்றியடந்திருக்கிறோம் இதிலிருந்தே இந்த வெற்றி எவ்வளவு முக்கியமானது என உணர்ந்து கொள்ளலாம்.ஒரு வேளை இது தோல்வியடைந்திருந்தால் இழப்பு 450 கோடி பணம் மட்டுமல்ல , உலக நாடுகள் நம் விண்வெளித் துறையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் இழந்திருப்போம்...






மாலை நேர மேற்குவானில் செம்பிளம்பாக மின்னிக் கொண்டு பல பெண்களின் வாழ்க்கையை இருட்டாகச் செய்த செவ்வாய் கிரகம் இனி நம‌து கணினித் திரையில் ஆராய்சி செய்யப்பட இருக்கிறது.விந்தையாக இல்லை !! 


இது ஒன்றும் மிகப்பெரும் ஆராய்சித் திட்டமல்ல. அமெரிக்காவின் கியூரியாசிட்டி திட்டத்துடன் ஒப்பிடும் போது மிக மிக சாதாரணமானது தான். ஆனால் அவ்ர்களைப் போல தோல்வியடைந்து வெற்றி பெறவில்லை. முதல் முயற்சியிலேயே வென்றிருக்கிறோம், அதுவும் அவர்களுடைய பட்ஜெட்டில் வெறும் 25% பணத்தைக் கொண்டு.அப்படியானால் இது சாதனைதானே!!!இதன் மூலம் மற்ற சிறிய நாடுகள் தங்களுடைய செயற்கைக் கோள்களை ஏவித்தர நம்மைக் கேட்கும் நிலை ஏற்படும். 


இப்போதைய நிலைப்படி செவ்வாய் கிரகத்திலிருந்து 365 கி.மீ தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இன்னும் இரண்டொரு நாளில் கிரகத்தை சுற்றிவந்து அதன் புகைப்படங்களை அனுப்ப ஆரம்பிக்கும். 6 மாத காலம் இவ்வாறு சுற்றிவந்து தகவல்களை அளிக்கும்.இந்த செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு உலக அளவில் இந்தியாவும் இடம்பெற்றுவிட்டது, அமெரிக்கா, ரசியா, ஐரோப்பிய யூனிய‌னுக்கு பிறகு நாம் தான். அதுவும் முதல் முயற்சியிலேயே வெற்றி.ஆனால் மங்கல்யான் செயல்பாடுகளைக் கண்காணிக்க நாம் நாசாவையே அதாவது அமெரிக்காவையே சார்ந்திருக்க வேண்டிய நிலைமை உள்ளது. அதுவும் வெகு சீக்கிரம் மாறும் என நம்புவோம். 


விண்வெளித்துறையில் நமக்குப் பெரும் சவாலை அளித்துவரும் சீனா கூட செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் முதல் முயற்சியில் தோல்வி அடைந்தது. ஆனால் நாம் வெற்றி பெற்றுவிட்டோம், அதனால் இந்த வெற்றி ஆசிய பிராந்தியத்தில் மிக முக்கியமாகப் பார்க்கப்படும், பேசப்படும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதுவரை ரசியாவின் துணையோடு விண்வெளியில் சாதித்த நாம் கிரையோஜெனிக் தொழில்நுட்பம் மற்றும் இந்த‌ மங்கல்யான் வெற்றிக்குப் பிறகு தனித்தும் வெற்றி பெற முடியும் என நிரூபித்திருக்கிறோம். ஒரு வேளை நாளையும் முயற்சி செய்தால் அமெரிக்காவின் உதவி இல்லாமலும் வெற்றி பெறக்கூடும்.அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை.இதன் மூலம் இந்தியாவின் விண்வெளித் தொழில்நுட்ப தற்சார்பை உலகம் தெரிந்து கொண்டிருக்கும். அது பல விண்வெளித் திட்டங்களை நமது நாட்டின் பால் ஈர்க்கும் வல்லமை கொண்டதாக‌ இல்லாவிட்டாலும், ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக கண்டிப்பாக அமையும். 


நேற்று சந்திரயான் விண்ணில் பறந்து நிலவில் பாரதக் கொடி பதித்தது, சந்தோசமடைந்தோம்...

இன்று மங்கல்யான் செவ்வாயில் நம் கொடிநாட்டியிருக்கிறது மகிழ்சியடைகிறோம்....


நாளை சூரியனிலும் நம் ஆதித்யா வெற்றி பெறும் அதுவரை முயற்சிசெய்வோம்...


இந்த நேரத்தில் சிலர் இந்தியாவில் உணவுக்கே அள்ளாடும் பலர் இருக்கும் போது இது தேவையா எனப் பதிவு செய்வதைப் பார்க்கிறேன், அவ்ர்களுக்கு ஒரு பதிலை நினைவுகூற விரும்புகிறேன்.


""“முன்னேறி வரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்!  இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம்.  வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை !  ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங் களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம் !  தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்வதாய் எண்ணி அழுத்த மான உறுதியுடன் இருக்கிறோம் !”

‍‍   டாக்டர் விக்ரம் சாராபாய். இந்திய விண்வெளி ஆய்வுப் பிதா (1919-1971)




ஒரு புவித்தகவலியல் (GEO INFORMATICS) மாணவனாக எனக்கு இந்த வெற்றி பெருமை என்றால், ஒரு இந்தியனாக நம் ஒவ்வொருவருக்குமே பெருமைதான். வாருங்கள் வாழ்த்துவோம் இஸ்ரோவை.......

                              
                                                                                      வாழ்த்துகளுடன் உங்கள் சீலன்...



 பதிவு குறித்து உங்கள் கருத்துகளை மறக்காமல் பதிவு செய்ய வேண்டுகிறேன்...



                                   





19 comments:

  1. வணக்கம்

    தங்களின் தகவலை படித்த போது மிக்க மகிழ்ச்சியடைந்தேன்... இன்னும் பல மடங்கு வளர்ச்சி பெற எனது வாழ்த்துக்கள்... தெற்காசிய நாடுகளின் தந்தை இந்தியாதான்...... அதற்கு கீழ்தான் மற்ற நாடுகள்... பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் உடனடி வருகைக்கும் மிக்க நன்றி சார்...

      Delete
  2. இந்திய விண்வெளிப் பயணத்தில் இது ஒரு முக்கியமான மைல்கல் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை! இந்தியாவின் சாதனைகள் மேலும் தொடர வாழ்த்துக்கள்! விரிவான தகவல் பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார், விண்வெளியில் ஒரு மைல்கல், விரைவான‌ வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்...

      Delete
  3. வாழ்த்துகள் சகோ!! முதலில் நான் கொஞ்சம் இந்த விசயத்தில் தெளிவாகிக்கிறேன்:)

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக சகோ, நீங்கள் இது குறித்து நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்....வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ...

      Delete
  4. mm nice post da, naan mom project oda details solluvanu nenachen, nee melottama mutichita , paravalla.. but nice one, keep it up..

    ReplyDelete
    Replies
    1. i think also da, ana apdi potta pathivu puriyama maarirumonnu payanthen, ana unnoda point than correct, naan atha pathi innum detail ah ezhuthirukkanum.. kk next technological posts, i never do it again...thanks for your kind info, keep visiting my blog...

      Delete
  5. nice post jeya.... as a indian citizen, we are really proud about it's success...

    ReplyDelete
    Replies
    1. yes mano really proud moment... thanks for your comments...

      Delete
  6. இந்திய விஞ்ஞானிகளைப் பாராட்டுவோம்

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஐயா!! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா...

      Delete
  7. இந்தியனாக பிறந்ததுக்கு பெருமை படுவோம் நண்பரே.
    தங்களின் இந்த பதிவின் மூலம் நிறைய செய்திகளை தெரிந்து கொள்ள முடிந்தது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார், தொடர்ந்து வருகை தர வேண்டும்....

      Delete
  8. நல்ல தகவல்கள் நண்பரே... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜீ, வருகைக்கும் கருத்துக்கும்...

      Delete
  9. நிச்சயமாக அருமையான பதிவு நண்பரே!
    நாளிதழ்களில் பட்ஜெட் பெருமிதங்களும் அண்டை நாட்டாரின் பொறாமை வாழ்த்துகளும் கண்பட்ட நிலையில் கூடுதல் செய்திகள் அறிய விரும்பினேன்.
    நல்ல கட்டுரையும், நாட்டுப்பற்றுணர்வும்...!
    எழுதுங்கள் !
    தொடர்கிறேன்!
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார், முதல் வருகைக்கும் கருத்துக்கும், தொடர்ந்து வருகை தர வேண்டும் ....

      Delete
  10. மங்கல்யான் செயற்கைக்கோள் தற்போதய நிலவரம் வீடியோ : http://youtu.be/F0wljrHK9ks

    ReplyDelete