Friday, August 22, 2014

கிரிக்கெட்டும் நானும் - 2 ( MY EARLY LIFE WITH CRICKET - 2 )


கிரிக்கெட்டும் நானும் - 2 

முந்தைய பகுதியை படிக்க:  கிரிக்கெட்டும் நானும் - 1( MY EARLY LIFE WITH CRICKET -1)

நான் ஏன் ராகுல் டிராவிடின் வெறியனாக மாறினேன் அந்த 2007 உலக கிரிக்கெட்டுக்குப் பிறகு ????


முதல் மேட்ச் இந்தியாவுக்கும் வங்காள தேசத்துக்கும்.எங்கள் ஊர் கேபிளில் அப்போது 4 சேனல்கள் மட்டுமே தெரியும்.கிரிக்கெட் பார்ப்பதற்காக மாலையில் அவர் வீட்டுக்குச் சென்று இன்று இரவு மறக்காமல் தூர்தசன் சேனல் மாற்றி விடுங்கள் என சொல்லி வந்துவிட்டேன்.மாலை முதல் இன்னிங்க்சும் இரவு அடுத்த இன்னிங்க்சும் நடக்கும்.


Thursday, August 21, 2014

கத்தி திரைப்படத்திற்கு எதிர்ப்பா ? அல்லது விஜய்க்கு எதிர்ப்பா ?


கத்தி திரைப்படத்திற்கு எதிர்ப்பா ? அல்லது விஜய்க்கு எதிர்ப்பா ?

தினந்தோறும் புதுப்புது செய்திகள் இணையங்களிலும், பத்திரிக்கையிலும் கத்தி திரைப்படத்தினைப்பற்றி. மறுபடியும் சினிமா குறித்து எழுத வேண்டாம் என நினைத்தேன். ஆனால் என்னையும் எழுதச்செய்து விட்டனர். கத்தி திரைப்படத்தினை விஜய் ஒப்புக்கொண்டதிலிருந்து இன்று வரை அதற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்து வருவது உண்மை. காரணம் முருகதாஸ் எனும் இயக்குனர், மற்றொன்று விஜய்.ஆனால் போகப் போக அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறேன் பேர்வழி என்று ஊடக வெளிச்சத்திற்கு ஆசைப்பட்டு சிலர் செய்யும் வேலைகள் உண்மையிலேயே கண்டிக்கத்தக்கது. 


எனக்கு விஜய் மீது எப்போதுமே பெரிய அபிப்ராயம் இருந்ததில்லை. இனியும் அப்படித்தான். அதற்காக அவரது எல்லா விசயங்களையும் எதிர்த்துக் கொண்டே இருப்பது என்பது முட்டாள் தனம் தானே. அதைத் தான் இந்த மாணவர் அமைப்பினர் ? செய்து வருகின்றனர்.அவர்களின் எதிர்ப்புக்கான‌ காரணம் லைக்கா எனும் தயாரிப்பு நிறுவனம்.

ஐய்ங்கரன் நிறுவனத்தின் பண நெருக்கடியால் உள்ளே வந்தது தான் இந்த லைக்கா நிறுவனம். அந்த நிறுவனம் நரகன் ராஜபக்ஸேயின் வலது கரம் என சொல்லப்படுகிறது. அது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. அது உண்மையாகவே இருந்தாலும் படத்தினை எதிர்ப்பதற்கு தகுந்த காரணமா ? எனும் ஐயம் எழாமலில்லை.

இவ்வளவு ஆர்வமாக தமிழ் உணர்வு பொங்கும் அவர்கள் மானாட மயிலாட நிகழ்சி லைக்கா ஏற்பாட்டில் இலங்கையில் நடந்த போது எங்கே போனார்கள் ?

இளைய ராஜா இசைநிகழ்சியை நடத்தியதும் இதே லைக்கா நிறுவனம் தான், அப்போது இவர்களின் தமிழுணர்வு எங்கே போனது. எதற்கெல்லாம் தமிழையும் தமிழுணர்வையும் கொண்டுவருவது என்ற வரையரை இல்லாததால் சிலர் இழுத்த இழுப்புக்கெல்லாம் வருவதற்கும் போவதற்கும் தமிழ் என்ன விற்பனைப் பொருளா ?

ஏதோ முதலிலிருந்தே இதே நிறுவனம் படத்தினை த‌யாரித்திருந்தாலும் அப்போது இந்த படத்தினை ஒப்புக்கொள்ள கூடாது என முருகதாஸையும் விஜயையும் எதிர்த்து போராட்டம் நடத்தியிருக்கலாம். அவர்களை அறியாமலேயே அது திரைப்படத்திற்குள் வந்துவிட்டது.இல்லை படத்தில் தமிழர் எதிரான நிலைப்பாடு ஏதும் இருந்தால் கண்டிப்பாக படம் வெளிவராமல் போராடுவதற்கு நியாயம் இருக்கிறது.

எப்போது விஸ்வரூபம் திரைப்படம் எதிர்க்கப்பட்டு அந்த முயற்சி வெற்றியும் அடைந்ததோ அன்றிலிருந்து எதிர்ப்பாளர்கள் எனும் போர்வையில் ஊடக வெளிச்சத்தினை பெறுவதற்கான குறுக்கு வழியாக திரைப்படங்களை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். புலிப்பார்வை எனும் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் வைக்கப்படிருந்ததால் அதை எதிர்ப்பதில் குறைந்தபட்ச நியாயமாவது இருக்கிறது. 

லாபகரமான சினிமாத் தொழிலில் ஈடுபடுபவர்கள் கத்தி எனும் ஒரு திரைப்படத்தினை கைவிடுவதால் ஏற்படப்போகும் பின்விளைவுகள் என்னவாக இருக்கப்போகிறது. விஜய் ஒரு படத்தினை இழப்பார், தயாரிப்பு நிறுவனம் காசை இழக்கும் வேறு ஏதாவது நல்ல விசயங்கள் நடந்துவிடப்போகிறதா ?

தினம் தினம் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவன் விடுதலை அடையப்போகிறானா? இல்லை தமிழீழம் தான் மலர்ந்துவிடப்போகிறதா ? இது எதற்கும் சிரத்தை எடுத்துப் போராடாத அமைப்பினர் இந்த திரைப்ப்டத்தினை மட்டும் எதிர்த்துப் போராடுவதில் ஏன் இவ்வளவு சுரத்தை எடுக்க வேண்டும் ? ஒருவேளை இவர்களின் எதிர்ப்பால் படம் கைவிடப்பட்டால் , நாளை எடுக்கப்படும் ஒவ்வொரு சினிமாவையும் ஒவ்வொரு அமைப்பினர் தடை செய்யச் சொல்லி போராட்டம் நடத்துவார்கள், அவை எல்லாமே தடை செய்யப்படுமா ?

இதில் விஜய் தரப்பில் தப்பு இல்லாமலில்லை. லைக்கா நிறுவனத்தைப் பற்றி தெரிந்த உடனேயே அதை நீக்கிவிட்டு வேறு தயாரிப்பு நிறுவனத்தை சேர்த்திருக்கலாம். சண்டியர் எனும் பெயர் கமல்ஹாசனால் பயன்படுத்தப்பட்ட போது வந்த கிருஷ்ணசாமிகள் இன்று யாரோ ஒரு பெயர் தெரியாத நடிகர் பயன்படுத்திய போது எங்கே போனார்கள்.எனவே இவர்கள் கத்தியையோ லைக்கா எனும் நிறுவனத்தையோ எதிர்க்கவில்லை ! விஜயை எதிர்க்கிறார்கள் ! எதிர்ப்பது போல காட்டிக் கொண்டு அவரையும் பெரிய ஆள் ஆக்குகிறார்கள் , தாங்களும் பெரிய ஆள் அகிக்கொள்கிறார்கள். 

ஒரு திரைப்படத்தினை தடையிடவும் , வெளியிடவும் அரசுக்குத் தான் உரிமை உள்ளதே தவிர எந்த ஒரு தனி மனிதனின் விருப்பு வெறுப்புக்கும் உரிமையில்லை. அது நானாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி !!

பின்குறிப்பு: லைக்கா நிறுவனம் நரன் ராஜபக்ஷேவின் ஆதரவு நிறுவனம் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. எனவே அந்நிறுவனத்தினை நான் ஒருபோதும் ஆதரிக்க மாட்டேன். ஆனால் கேவலம் ஒரு திரைப்படத்தினை எதிர்ப்பதில் காட்டும் அக்கறையையும் ஆற்றலையும் இலங்கை தமிழரின் நலனுக்கு காட்டவேண்டும், தமிழ் மீனவர்களின் பாதுகாப்புக்கு காட்ட வேண்டும்,தமிழ் மக்களின் வளர்சிக்கு காட்ட வேண்டும் என்பது தான் என் எண்ணமும் ஆசையும். மிஞ்சி மிஞ்சிப் போனால் அந்த திரைப்படத்தினால் அந்நிறுவன்ம் ஒரு 20 கோடி லாபமடையும். அவ்வளவு தான்.  அந்த திரைப்படம் வராவிட்டாலும் கூட வேறு வழிகளிலும், தொழில்களிலும்  லாபமடையாமல் இருக்கப் போவதில்லை. ஆனால் எதிர்க்கப்படும் சூழல் நாளை ஒவ்வொரு படத்திற்கும் வரும், சுதந்திரமாக படம் எடுக்கும் சூழல் மறையும், ஊடக வெளிச்சத்திற்கு ஆசைப் படுபவர்களின் கூடாரமாக திரைப்படத் தடுப்பாளர் சங்கங்கள் மாறும். நியாமான போராட்டங்களும் மறையும்,

Wednesday, August 20, 2014

கிரிக்கெட்டும் நானும் - MY EARLY LIFE WITH CRICKET


கிரிக்கெட்டும் நானும்

இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு விசயத்தின் மீது அதிக ஆர்வம் இருக்கும். அது எந்த துறையாக இருந்தாலும் சரி.சிலர் பொத்தாம் பொதுவாக எல்லாமும் பிடிக்கும் என சொன்னாலும் அவர்கள் அறியாமலேயே சிலவற்றின் மீது நல்ல அபிப்ராயம் இருக்கும்.அந்த வகையில் எனக்கு பிடித்த ஒன்று கிரிக்கெட். அது என்னில் எப்படி வந்தது இன்று எவ்வாறு இருக்கிறது என தேட முயற்சிப்பது தான் இந்த பதிவு. சற்று நீண்டு விட்டதால் பகுதிகளாக தரலாம் என நினைக்கின்றேன்.கிரிக்கெட்டின் தோற்றத்தினைப் பற்றியோ ரெக்கார்டுகளையோ தர விரும்பவில்லை. அது பல வலைகளில் கொட்டிக் கிடக்கின்றன.எனவே கிரிக்கெட்  மீதான என் ரசனைகளை பதிவு செய்யவே விரும்புகிறேன். இனி பதிவுக்குள் போகலாம். 


Sunday, August 17, 2014

கொடிகாத்த குமரன்


எங்கள் பல்கலைக்கழக சுதந்திர தின விழாவில் கொடிகாத்த குமரன் நிலைக்காட்சியில் நான் பேசியவை இதோ உங்களுக்காக !!


Wednesday, August 13, 2014

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் அவசியமும் முக்கியத்துவமும் !


புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் அவசியமும் முக்கியத்துவமும் !


இன்றைய சூழ்நிலையில் பெரு நகரங்கள் , சிறு நகரங்கள், கிராமம் என்ற வேறுபாடுகள் எதுவும் இல்லாமல் திரும்பும் திசை எங்கும் வாகனங்கள் வந்துவிட்டன.அனைத்துமே பெட்ரோல், டீசல் போன்ற புதுப்பிக்க இயலாத ஆற்றல்களை பயன்படுத்துபவை தான்.வாரமொரு முறை பெட்ரோல் டீசல் விலை உயர்வதும் அதன் விளைவாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வதும் மக்கள் திண்டாடுவதும் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன.எனக்குத் தெரிந்து ஒரு லிட்டர் பெட்ரோல் 50 ரூபாய்க்கு விற்றிருக்கிறது.ஆனால் இன்று ? 

Saturday, August 2, 2014

ஆட்சி மாறியது ! ஆனால் காட்சி மாறவில்லை !


ஆட்சி மாறியது ! ஆனால் காட்சி மாறவில்லை !


இந்த புது மொழி யாருக்குப் பொருந்துகிறதோ இன்றைய நரேந்திர மோடி அரசுக்கு மிகவும் பொருந்தும்.சரி ஆட்சிக்கு வந்து 2 மாதங்களுக்குள்ளாகவே ஒரு அரசைப்பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம் என பார்த்தால், 2 மாதமல்ல இரண்டு வருடங்களானாலும் மாறாது என்பது தெரிந்துவிட்டது.இனி எப்போது விமர்சித்தால் என்ன ? ஆபத்பாண்டவனாக நினைத்து வாக்களித்த மக்கள் இன்று ஆபத்து வராமல் பார்த்துக் கொள்ள பழகி விட்டதைப் போன்று தெரிகிறது.