Friday, September 5, 2014

ஆசிரியர் தினம்


ஆசிரியர் தினம்

ஏணியென மாணவரை ஏற்றிவிட்டு தாம் 
கீழே இருப்பாரே இதுவன்றோ புதுமை அந்த‌
மேனி நலம் பாராத மேதையரைப் பாடாமல்
மேடைதனில் இருக்கிறதா க‌விதை !
சமுதாயக் கோட்டைக்குச் சரித்திரத்துக் கதவுகளாய்ச்
சார்ந்திருப்பது ஆசிரியர் கூட்டம் அது 
அமுதான கவிகாட்டும் அந்தி வண்ண‌
பூந்தோட்டம்.

தம் குருதி எண்ணெயிட்டு தம் நரம்பைத்
திரியாக்கி தருகின்றார் அறிவொளியை நாளும் 
இங்கே இம்மையிலே வழிகாட்டி இருளோட்டும் அவரிலையேல்
எந்தவிதம் மனிதகுலம் வாழும்

கவிப்பேரரசு வைரமுத்து இவ்வாறு கூறியிருப்பது அத்துனையும் நூற்றுக்கு நூறு உண்மை.இந்த உலகத்திலேயே மிகவும் கடினமான பணி எது எனக்கேட்டால் பலர் ராணுவப்பணி என்பார்கள். இல்லை ஆசிரியப்பணிதான். வருடா வருடம் ஒரே பாடத்தை மீண்டும் மீண்டும் நடத்தி சென்ற ஆண்டு சொன்னதைவிட அதிக தகவல்கள் கற்றுக்கொடுக்க வேண்டும் என மெனக்கெட்டு நாள் முழுதும் தொண்டை வற்ற பாடம் நடத்தி அப்பப்பா ,எவ்வளவு கடினம் என்பதை ஒரு ஆசிரியரின் கடைசி பாடவேளையைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

சிறுவயதில் நம் ஒவ்வொருவருக்கும் கதாநாயகனாக கதாநாயகியாக விளங்கியது, இன்னும் விளங்கிக்கொண்டிருப்பது ஆசிரியர்கள் தான். அத்தகைய ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்த நல்லாசிரியராக விளங்கிய முன்னாள் குடியரசுத்தலைவர் ராதாகிருஸ்ணன் அவர்கள் தன் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக அறிவித்து நாம் வருடா வருடம் கொண்டாடி வருகின்றோம்.
உண்மையிலேயே ஆசிரியர்கள் தன்னிடம் படித்த, படிக்கும் மாணவர்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும் போது அடையும் மகிழ்ச்சியைவிட, தன்னிடம் படித்த ஒரு மாணவன் நல்ல நிலையில் இல்லை என்று தெரிந்ததும் அடையும் வருத்தமே அதிகமாக இருக்கும்.இது நூற்றுக்கு நூறு உண்மை.

ஒரு நல்ல மாணவனைப் பார்த்து இவன் என் மாணவன் என்று சொல்லி அவர்கள் அடையும் சந்தோசத்தை,பெருமையை விவரிக்க வார்த்தைகள் போதாது.

இப்படி நமக்காக நம்மையும் அவர்கள் பிள்ளைகளாக நினைத்து கற்றுத்தரும் அவர்களுக்கு நாம் அளிக்கப் போகும் பரிசு பணமோ, பொருளோ, புகழோ இல்லை. என்றாவது அவர்களைப் பார்க்கும் போது, உதட்டோரத்தில் சிறு புன்னகையோடு சார், நான் ஒங்க ஸ்டூடண்ட், டீச்சர் நான் ஒங்க பையன், மேடம் நான் உங்கள்ட தான் படித்தேன் எனச் சொலவதைத் தவிர அவர்களுக்கு வேறு எந்த பரிசும் ஈடாகாது. ஆம அந்த சிறு புன்னகையுடன் கூடிய விசாரிப்பு தான் நம்முடைய ஆசிரியர்கள் விரும்பும் மிகப்பெரிய கைம்மாறு.


இந்த நன்னாளில் என்னுடைய ஆசிரியர்களை நினைத்துப்பார்க்கிறேன். ஜிங்கிள் பெல்ஸ் நர்சரி அண்ட் பிரைமரி ஸ்கூல், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 
அரசு உயர்நிலைப்பள்ளியில்  தூய மரியன்னை மேல் நிலைப்பள்ளியில்  இப்போது கல்லூரியில் உள்ள பல ஆசிரியர்கள் என என்னை செதுக்கியவர்களை நினைத்துப்பார்க்கிறேன்.

அந்த காலங்கள் எல்லாம் திரும்பாதா என நினைத்துப்பார்க்கிறேன், அனைத்து ஆசிரியர்களுக்கும் என் மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


அப்புறம் வாழ்த்துக்களா ? இல்லை வாழ்த்துகளா ? இன்று என் கல்லூரியில் பெரிய போராகிவிட்டது. போர்டில் எழுதும் போது நான் மற்றும் என் நண்பர்கள் (மாணவர்கள்) "க்" வராது என்றோம், மாணவிகள் 'க்' வரும் என்றனர். கடைசியில் க் போட்டுதான் எழுதினார்கள் அது வேறு விசயம். யாராவது தெரிந்தவர்கள் விளக்கினால் நன்றாக இருக்கும்.... நெட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக போட்டிருக்கிறார்கள்....வாழ்த்து(க்)களுடன் உங்கள் சீலன் !

8 comments:

 1. இன்னிக்கு காலேஜ்ல பேசுனத அப்பிடியே பதிவா போட்டாச்சா, ம்ம் சூப்பர். செம டச்சிங்க் போஸ்டு தான் சீலன். அந்த வாழ்த்துக்கள் மேட்டரெல்லம் நமக்கு அலர்ஜி. தமிழ் செகண்ட் பேப்பர் ஐயாம் வெரி வீக் ??? ஆனா எனக்குத் டெரிந்து வாழ்த்துக்கள் தான் சரின்னு நெனக்குறேன். அப்புறம் நான் சார்லம் கிடையாது. நான்னும் பொறியியல் மூன்றாம் ஆண்டுதான் படிக்குறேன், அதுவும்??

  ReplyDelete
  Replies
  1. டேய் காண்டுபிடிச்சிட்டேன் , நீ யாருன்னு நீ ஜான் பிரிட்டோ ( சசிகனி ) தான, அடப்பாவி, எங்கடா இருக்க, எப்டி இருக்க, ப்ளாகெல்லாம் வச்சுருக்கியா, போஸ்ட் போடுறதில்ல போல, ஸ்கூல்ல படீக்கும் போதே நான் எது சொன்னாலும் எதிர்த்து பேசுவ இப்ப என்ன பாராட்டெல்லாம். நீ எப்போதுமே என்ன கலாய்க்குறததான் பிடிக்கும்,, தொடர்ந்து வா, உன் மொபைல் நம்பர் அனுப்பி வை....என்னோட ஜிமெயில்க்கு:thamizseelan@gmail.com ஒன்ட பேசனும். நான் கூட யருன்னு நெனச்சேன், உன் ப்ளாக் வந்தப்புரம் தான் தெரியுது, சசிகனிய‌ மறக்காம அது பேர்லயே ப்ளாக், தில்லான ஆள்தாண்டா நீ.ஆமாண்டா காலேஜ்ல பேசுனதுதான்....

   Delete
 2. அட! நான் எழுத நினைத்ததை அப்படியே எழுதிருகிங்க சகோ:))
  நிலவன் அண்ணா எனக்கு அன்பளித்த "தவறின்றி த் தமிழில் எழுதுவோம்" நூலில் வாழ்த்துகள் தான் சரி என படித்திருக்கிறேன். பொண்ணுங்க வழக்கம் போல நினைச்சதை சாதிச்சுடாங்க போல:))

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோதரி. அப்புறம் , விடுவார்களா, சரி இதற்கு மேல் விவாதிக்க வேண்டாம் என விட்டுவிட்டேன். தெளியவைத்தமைக்கு மிக நன்றி சகோ. வருகைக்கும் கருத்துக்கும் கூட....

   Delete
 3. வணக்கம்
  மிகச் சிறப்பாகசொல்லியுள்ளீர்கள் இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.. தொடர்ந்து வருகை தர‌ வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.....

   Delete
 4. ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.. தொடர்ந்து வருகை தர‌ வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.....

   Delete