Thursday, September 4, 2014

யார் இந்த சுப்பிரமணிய சாமி ??


யார் இந்த சுப்பிரமணிய சாமி ??


போன ஆட்சியில் நாராயண சாமி, இந்த ஆட்சியில் இந்த சுப்பிரமணிய சாமி ! நா.சாமி யாவது பரவாயில்லை, சும்மா சாதா கருத்துகளைக் கூறி இணையதளங்களில் திட்டு வாங்குவார், ஆனால் இந்த சு. சாமி பண்ற அலும்புகள் தாங்க முடியல. 
என்னமோ இவர்தான் இந்தியாவின் அறிவிக்கப்படாத வெளியுறவு மந்திரி என்பது போல் பேட்டி கொடுப்பதும் , இலங்கைக்கு பறப்பதும், நரன் ராஜபக்சேவுக்கு அறிவுரை சொல்வதுமென கேவலத்தனமான கேனத்தனமான பல கீழ்த்தர வேலைகளை செய்து கொண்டு வருகிறார் . அதுவும் இந்த ஆட்சியில் தானா எனப் பார்த்தால் எல்லா ஆட்சியிலுமே அப்படித்தான். ஆனால் அப்போதெல்லாம் இவர் வாய்க்கு வந்ததை எல்லாம் உளறுவார் என நினைப்பேன். 

ஆனால் இப்போது திமிறும் ஆணவமும் கொண்டு மத்திய அர்சசுக்கு தெரிந்து தான் இலங்கை சென்றேன், கருட்தும் சொன்னேன் என இவர் கூறும் போது சிரிப்புத்தான் வந்தது முதலில். ஆனால் தமிழகத்தை தவிர வேறு எந்த பா.ஜ.க வும் இவருக்கு எதிராக ஒரு கண்டண அறிக்கை கூட விடவில்லை.


அதை விடுத்து இவருக்கு இஜட் ப்ளஸ் பதுகாப்பு அளித்து உத்தரவிட்டிருக்கிறது நம்பிக்கை நட்சத்த்திர மோடி அரசு.கேட்டால் இவர் அகில இந்திய பாரதிய ஜனதா செயற்குழு உறுப்பினராம். நான் தான் படகைப் பிடித்துக் கொண்டு மீனவர்களை விடுவிக்க நரன் ராஜபக்சேவிடம் சொன்னேன், என இந்தியாவின் அயலுறவுத் துறை மந்திரி போல பதிலளிக்கிறார். உண்மையான அயலுறவு மந்திரி இதைக் கண்டித்து அறிக்கை கூட விடவில்லை. இவர் இப்போது தான் இப்படியா இல்லை எப்போதுமே இப்படியா? யார் இந்த சு.சா ?


சிறந்த பொருளாதார மேதை ? ஆன சு.சாமி இந்தியப்பொருளாதாரத்தை அமெரிக்காவுக்கு அடகு வைக்க முக்கிய காரணமாக இருந்தவர்.

ராஜீவ் கொலைக் குற்றத்தில் பலரால் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருப்பவர், ஆனால் இவரை சி.பி.ஐ விசாரிக்கவில்லை.

வாஜ்பாய் அரசு கவிழ ஜெயலலிதாவின் டீ விருந்துக்கு காரணமானவர்.

ஒரே ஒரு உறுப்பினர் கொண்ட ஜனதா கட்சியின் நிறுவனர். அந்த ஒரு நல்லவர் யார் எனக் கேட்கக் கூடாது.???

மிக உயர்ந்த அமைச்சகமான நீதி மற்றும் சட்ட துறை அமைச்சராக சந்திரசேகர ராவ் மந்திரிசபையில் இருந்தவர்.

இன்றைய சொத்துகுவிப்பு வழக்கிற்காக ஆளுநரை சந்தித்து முதலில் முறையிட்டு வழக்கு தொடர்ந்தவர்.


எல்லாவற்றுக்கும் மேலாக நான் சொல்லப் போவது கேட்டால் மிகவும் ஆச்சரியப்படுவீர்கள், ஆம் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்து எம்பி ஆனவர்.


ராஜ்யசபாஉறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.

திட்டக்குழு உறுப்பினர்,பொருளாதார உடன்படிக்கை குறித்து ஐநாவிலும் உரையாற்றிய‌ கூடிய ஒரு அறிவாளி.

அவாளை பிடிக்கும், இவாளை பிடிக்கும் ஆனால்  தமிழ் என்றாலோ தமிழர் என்றாலோ, ஈழம் என்றாலோ, பிரபாகரன் என்றாலோ சுத்தமாக `பிடிக்காது.
`
தேசிய இணைப்பு மொழியாக சமஸ்கிருததை அறிவிக்க சொன்னவர்.இன்னும் பல அறிவிக்க சொல்லி கேடிருக்கிறார், இனியும் கேட்பார். என்ன, முன்னால் கோமாளித்தனம் என நினைத்தோம் இப்போது தான் புரிகிறது ராஜ தந்திரம் என்று. 

ஆனால் இவரின் கோமாளித்தனமான பல கருத்துகளுக்கும் பெரிய அளவிலான எதிர்ப்பை சம்பாதிக்காதவர், அதற்கு காரணம் பலருடைய குற்றங்களை இவர் தகுந்த ஆதாரத்துடன் வைத்திருக்கிறார் எனச் சொல்லப்படுகிறது.

மொத்தத்தில் இப்போது பேஸ்புக்கில் சரியான காமெடி பீஸ்  இவர்தான்.

இணை அமைச்சர் நாராயணசாமியிடம் இவரின் கருத்து குறித்து கேட்ட போது யார் இந்த சுப்பிரமணிய சாமி எனக் கேட்டார்.இதையே தான் தமிழக பாஜ தலைவர் தமிழிசையும், இன்னபிறரும் கேட்டனர்.

சு.சாமியிடம் இது குறித்து கேட்டபோது என்னைச்சொல்ல அவாள் யார், நான் மத்திய அரசுக்கு கட்டுப்ப்பட்டவன் என தெனாவட்டான பதிலைக் கூறினார்.

அதைத் தான் இன்று தமிழ்நாடே கேட்கிறது, 

யார் இந்த சுப்பிரமணிய சாமி ??? என்று

நாளை இந்தியாவே கேட்கும் ,

யார் இந்த சுப்பிரமணியன் சாமி???  என்று....


மாற்றுக் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன....

உங்கள் சீலன்...

4 comments:

 1. ஒன்னு சொல்லட்டுமா சகா. நம்ம நாட்டு பொருளாதார மேதை அரசியல்வாதிகளை கண்டாலே காண்டாகுது ://
  ஆன ஒன்னு தன்னோட பொருளாதாரத்தை மட்டும் அருமையை கையாள்வார்கள். என்னமோ போங்க. உங்க தமிழ் உணர்வை காட்டும் பதிவு:)

  ReplyDelete
  Replies
  1. உண்மை சகோ !! தங்கள் பொருளாதாரம் தான் நாட்டின் பொருளாதாரம் என தவறாக எண்ணிவிட்டார்கள் போல, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி....

   Delete
 2. என்னது மதுரைல நின்னு தேர்தல்ல ஜெயிச்சாரா, அய்யோ அய்யோ என்ன கருமமோ, இதுவரை கேள்விப்படாத தகவல் சீலன். நல்ல பதிவு தான். ஆனால் அவருடைய பார்ப்பனிய வெறியையும் கிழித்திருக்கலாம், விட்டுவிட்டீர்கள், அவாள் இவாள் என மைல்ட் அட்டாக்கெல்லாம் இவருக்கு பத்தாது. எவருக்கு 45 போலிசார் புடைசூழ பாதுகாப்பு வேறு, என்ன கறுமமோ.... கலக்குறீங்க சீலன், ரொம்ப நாளா காணோமேன்னு பாத்தேன், தொடருங்கள்...

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் பிரிட்டோ சார், மதுரை எக்ஸ் எம்பி???? நீங்கள் கூறுவதும் உண்மைதான். ரொம்ம்பவே மைல்ட் ஆகத்தான் விமர்சித்திருக்கிறேன் இந்த பார்ப்பனிய வெறியரை.....இன்னும் கேவலமாகத் திட்டுவேன், பொது இடமாகிவிட்டதே?? தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார், தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டுகிறேன்....

   Delete