Friday, August 22, 2014

கிரிக்கெட்டும் நானும் - 2 ( MY EARLY LIFE WITH CRICKET - 2 )


கிரிக்கெட்டும் நானும் - 2 

முந்தைய பகுதியை படிக்க:  கிரிக்கெட்டும் நானும் - 1( MY EARLY LIFE WITH CRICKET -1)

நான் ஏன் ராகுல் டிராவிடின் வெறியனாக மாறினேன் அந்த 2007 உலக கிரிக்கெட்டுக்குப் பிறகு ????


முதல் மேட்ச் இந்தியாவுக்கும் வங்காள தேசத்துக்கும்.எங்கள் ஊர் கேபிளில் அப்போது 4 சேனல்கள் மட்டுமே தெரியும்.கிரிக்கெட் பார்ப்பதற்காக மாலையில் அவர் வீட்டுக்குச் சென்று இன்று இரவு மறக்காமல் தூர்தசன் சேனல் மாற்றி விடுங்கள் என சொல்லி வந்துவிட்டேன்.மாலை முதல் இன்னிங்க்சும் இரவு அடுத்த இன்னிங்க்சும் நடக்கும்.அவர் என்ன நினைப்பில் இருந்தாரோ கடைசி வரை மாற்றவே இல்லை. மறுபடி அவர் வீட்டுக்கு போய் ஞாபகப் படுத்துவதற்கும் எங்கள் வீட்டில் அனுமதி இல்லை.இன்டர்நெட் என்றால் என்ன என்றே தெரியாத காலகட்டம்.எப்படி இருக்கும் ? இந்தியா ஜெயித்துவிடும் என்ற நம்பிக்கையில் தூங்கச் சென்றுவிட்டேன். மறு நாள் எங்கள் பள்ளி கணித ஆசிரியர் இந்தியா வங்காள தேசத்துடன் தோற்றுவிட்டது எனக் கூறினார்.ரொம்ப வருத்தப்பட்டோம்.


அன்றைய நாள் நியூஸ் பேபரிலும் வராது.இரவு பத்து மணிவரை உள்ள செய்திகள் மட்டும் தான் மறுநாள் பேப்பரில் வரும் .எனவே மறு நாள் பேப்பரில் பார்த்து உறுதிபடுத்திக்கொண்டோம். எங்கள் வீட்டில் வாங்கிய தினகரன் பேப்பரில் மேட்ச் பற்றி எழுதியிருந்த அந்த முதல் வாசகம் இன்றும் என்னால் மறக்கவே முடியாது. அது, " டாஸ் வென்ற இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் கூட்டிக் கழித்துப் பெருக்கி வகுத்து தப்புக்கணக்கை சரியாகப் போட்டார்" என்பது தான்


அடுத்தடுத்த மேட்சில் கட்டாயம் ஜெயிக்க வேண்டும் எனவும் தெரிந்து கொண்டோம்.  அடுத்த மேட்சில் பெர்முடா எனும் குட்டி டீமிடம். அன்று கேபிள் காரர் சரியாக மாற்றி வைத்துவிட்டார் தூர்தசன் சேனலை.சேவக் பார்மில் இல்லை. அவர் ஆடமாட்டார் என பத்திரிக்கைகளில் போட்டிருந்தது. ஆனால் டிராவிட் அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்து ஓப்பனிங்க் இறக்கினார் உத்தப்பா உடன். 

உத்தப்பா அடித்த பந்தை ஸ்லிப்பில் நின்ற ஒரு மலை மனிதர் (108 கிலோ ) விழுந்து ஒற்றை கையால் பிடித்த கேட்ச் இன்றும் என் கண்களை விட்டு மறையவில்லை. போச்சுடா இந்த மேட்சும் என நினைத்த பொது சேவாக் அடி பிளக்க ஆரம்பித்துவிட்டார். ஆரம்பத்தில் அடக்கி வாசித்த கங்குலி போகப் போக அடிக்க ஆரம்பித்துவிட்டார். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு அருமையான சதம் அடித்தார் சேவக் (114). கடைசி நேரத்தில் யுவராஜ் பட்டையை கிளப்பினார். கங்குலி 89, யுவராஜ் 86, சச்சின் 57 என ஸ்கோர் 400 ஐ கடந்தது. 49வது ஓவரில் தான் டிராவிட் இறங்கினார்.


ஆட்டத்தின் கடைசிப் பந்தில் அருமையான சிக்ஸர் பறக்கவிட்டு என்னை திக்குமுக்காட செய்துவிட்டார். 50 ஓவரில் 413 ரன். கண்டிப்பாக பெர்முடா ஜெயிக்காது எனத் தெரிந்துவிட்டது. எனவே மகிழ்சியுடன் தூங்கச் சென்ரேன்.காலை எழுந்த போது இந்தியா 256 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றிருந்தது. எனக்கு பிடித்த அகர்கர் 3 விக்கெட், கும்ளே 3 விக்கெட்.


நம்பிக்கை அதிகரித்தது. அடுத்து இலங்கையுடன் ஜெயித்துவிடலாம் என நாங்கள் எல்லோரும் நம்பினோம். ஏனென்றால் உலகக் கோப்பைக்கு சற்று முன்னர் தான் இலங்கையை 2‍ - 1 என நாம் வீழ்த்தியிருந்தோம்.உலகக் கோப்பை நமக்குத் தான் என பள்ளி முழுக்க ஒரே பேச்சுதான். 

முதலில் ஆடிய இலங்கை தட்டுத் தடுமாறி 256 ரன் அடித்திருந்தது. என் அம்மாவிடம் கெஞ்சி கூத்தாடி இரண்டாவது இன்னிங்க்ஸ் இந்தியா ஜெயிக்கும் என   பார்க்க அனுமதி வாங்கிவிட்டேன்.வழக்கம் போல சேவாக் உத்தப்பா ஓப்பனிங்க். இந்த ஆட்டத்தில் இருவரும் நன்றாக ஆடினர். 50 ரன்னை கடந்தது இந்திய அணி. அப்போது உத்தப்பா அடித்த பந்தை வாஸ்  (chaminda )பறந்து அற்புதமாக கேட்ச் செய்வார்.ஆனாலும் இந்த விக்கெட்டால் ஒன்றும் ஆகப்போவது இல்லை என நினைத்தேன். அடுத்து கங்குலி அடித்த பந்தை முரளிதரன் முன்புறமாக ஓடிச் சென்று அநாசயமாக கேட்ச் பிடிப்பார். அப்போதும் கூட எனக்கு பயம் வரவில்லை.


அடுத்து சச்சின் டக் அவுட். லைட்டாக பயம் எட்டிப்பார்த்தது. அந்த காலகட்டத்தின் பெரிய அதிரடி வீரர் டோனி ஹெல்மட் அணியாமல் களத்திற்குள் நுழைந்தார். எட்டிப் பார்த்த பயம் ஓடிவிட்டது. ஏனெனில் அப்போது டோனி மேல் அவ்வளவு நம்பிக்கை. ( இப்போதும் தான் ) அதுவும் இலங்கை என்றால் அவர் பின்னி பெடலெடுத்துவிடுவார் . மறக்க முடியுமா அவர் ஆடிய சாரி ருத்ர தாண்டவமாடிய 183 ஐ. அந்த மேட்ச் பார்த்ததிலிருந்து கிரிக்கெட்டே பார்க்காத என் அம்மாவும் சித்தியும் கூட அவருக்கு ரசிகனாகிவிட்டனர். எனவே இன்றும் ஒரு வழி பன்னி விடுவார் என நினைத்தேன்..................வந்த முதல் பந்திலேயே LBW ஆகி ஏமாற்றிப்போனார். அவரை குறை சொல்ல முடியாது. முரளியின் டர்னிங்க் பாயின்ட் ( WHAT A TURN ) அப்படி.எனக்கும் இந்திய அணியைப் போல பதற்றம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்தது. ஆனால் என் ஹீரோ டிராவிட் தான் தடுப்பு சுவராயிற்றே !! எப்படியும் காப்பாற்றி விடுவார் என தன்னம்பிக்கை. நினைத்ததைப் போலவே நடந்தது. டிராவிட்டும் சேவாக்கும் பொறுமையாகவும் நிதானமாகவும் ஆடினர். இந்த நேரத்தில் தான் வியூகம் வகுத்தார் ஜெயவர்தனா. முரளியின் ஸ்பின்னுக்கு அதுவரை ஸ்லிப் நிறுத்தாத அவர் திடீரென இரண்டு ஸ்லிப் நிறுத்தினார். ( டிராவிட்டின் கட்டையும் ஒரு காரணம் )

நேர்த்தியான பந்தை ஜெயவர்தனேவிடமே ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து சேவாக் வெளியேறினார். 44 என நினைக்கிறேன். அன்றிலிருந்து எனக்கு ஜெயவர்தனேவை பிடிக்காமல் போனது.இந்தியா ஜெயித்தால் உண்டியலில் காசு என, கடவுளிடம் வேண்டவே ஆரம்பித்துவிட்டேன். ஒரே ஆளாக டிராவிட் களத்தில் போராடினார். பந்து குறையக் குறைய டென்சன் எகிறியது.டிராவிட்டின் உடலில் சேட்டையே இல்லை.கிட்டத்தட்ட வியர்வையில் குளித்திருந்தார்.மறுபடி ஜெயவர்தனே வியூகம் வகுத்தார். ஸ்டமினா இல்லாத டிராவிட்டுக்கு யாக்கர் வீசினால் ஸ்டம்ப் எகிறும் என சரியாக கணித்து மலிங்காவை பந்து வீச அழைத்தார். 


ஸ்டமினா இல்லாமல் ஆமை போல் ஓடிவந்த டிராவிட் மலிங்காவை எப்படி சமாளிக்க போகிறார் என உறை நிலைக்குச் சென்றுவிட்டேன்.அந்த ஓவரில் தான் டிராவிடின் வெறியனாக மாறிப் போனேன்.அசால்டாக அவரின் அதி வேகப் பந்துகளை பவுண்டரிக்கு பறக்க விட்டு அரை சதம் கடந்தார். 4 பவுண்டரிகள் என 22 ரன்கள் அந்த ஓவரில் மட்டும். என்னுள் ஒரு புரட்சியையே ஏற்படுத்திய ஓவர் அந்த ஓவர். என் உள்ளம் முழுவதும் டிராவிட் இடம்பெற்ற தருணம் அந்த தருணம். அவரின் உயரம் அளவில்லாது உயர்ந்த அந்த அழகான நேரம் என் உள்ளத்தில் இன்றுவரை டிராவிட் பெயரை சொல்லிக் கொண்டே இருக்கிறது. இனியும் சொல்லும்.

அடுத்த சில ஓவரில் டீ பிரேக். புதுப் பொலிவுடன் டிராவிட் களத்தில். எனக்கு நம்பிக்கை பிறந்தது. ஜெயசூர்யா பவுலிங்க் போட வந்தார். அழகான சொடுக்கு பால் ஆஃப் சைடில் தூக்கி அடித்தார். சிக்சரை நோக்கி பறந்து போனது, எனக்கு சந்தோசம் தாங்கவில்லை, ஆனால் அப்போது தான் அந்த சம்பவம் நடந்தது...............தொடரும்....


உங்கள் கருத்துகளும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன....


உங்கள் சீலன்... அடுத்த பகுதியில் சந்திப்போம் !!

7 comments:

 1. 2007 உலக கோப்பை இலங்கை ஆட்டத்தில் சச்சினின் டக் அவுட் என்னால் மறக்க முடியாது! மேட்ச் முடிந்த மறுநாள் கண்டபடி அவர் ஆட்டத்தை திட்டித் தீர்த்தோம்!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சார், ரொம்ப கோவம் வந்தது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார். தொடர வேண்டும்..

   Delete
 2. ""என்னுள் ஒரு புரட்சியையே ஏற்படுத்திய ஓவர் அந்த ஓவர். என் உள்ளம் முழுவதும் டிராவிட் இடம்பெற்ற தருணம் அந்த தருணம். அவரின் உயரம் அளவில்லாது உயர்ந்த அந்த அழகான நேரம் என் உள்ளத்தில் இன்றுவரை டிராவிட் பெயரை சொல்லிக் கொண்டே இருக்கிறது. இனியும் சொல்லும்."""

  ஓ இதுல இருந்து தான் ட்ராவிட் ரசிகனா!!!

  ReplyDelete
 3. அருமையான ஒரு பகிர்வு.
  மேட்ச் பார்த்துக் கொண்டிருப்பது போல ஒரு பிரமை...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா !! தொடர வேண்டும் .....

   Delete
 4. உங்களுடைய வலைப்பக்கம் மிகவும் அருமை ஜெயசீலன் !! இனிமேல் தொடருவேன் ! உங்களைப் போலவே நானும் ராகுல் டிராவிட் வெறியன் தான், அவரை google il தேடப்போய் தான் உங்கள் தளம் அறிந்தேன்..... அந்த வோர்ல்ட் க்ப் மேட்சை நேரில் பார்த்தடு போன்ற உணர்வு, அருமையான எழுத்து நடை, சூப்பர்....

  ReplyDelete
 5. வணக்கம் ...
  பால்ய பழைய நினைவுகளில் மூழ்கி அதைப் பதிவிடுவது ஒரு சுகம்.
  படிப்பவர்களுக்கும் சுகமே..
  ரொம்ப நல்லா கீது நைனா ...

  ReplyDelete