Thursday, August 21, 2014

கத்தி திரைப்படத்திற்கு எதிர்ப்பா ? அல்லது விஜய்க்கு எதிர்ப்பா ?


கத்தி திரைப்படத்திற்கு எதிர்ப்பா ? அல்லது விஜய்க்கு எதிர்ப்பா ?

தினந்தோறும் புதுப்புது செய்திகள் இணையங்களிலும், பத்திரிக்கையிலும் கத்தி திரைப்படத்தினைப்பற்றி. மறுபடியும் சினிமா குறித்து எழுத வேண்டாம் என நினைத்தேன். ஆனால் என்னையும் எழுதச்செய்து விட்டனர். கத்தி திரைப்படத்தினை விஜய் ஒப்புக்கொண்டதிலிருந்து இன்று வரை அதற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்து வருவது உண்மை. காரணம் முருகதாஸ் எனும் இயக்குனர், மற்றொன்று விஜய்.ஆனால் போகப் போக அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறேன் பேர்வழி என்று ஊடக வெளிச்சத்திற்கு ஆசைப்பட்டு சிலர் செய்யும் வேலைகள் உண்மையிலேயே கண்டிக்கத்தக்கது. 


எனக்கு விஜய் மீது எப்போதுமே பெரிய அபிப்ராயம் இருந்ததில்லை. இனியும் அப்படித்தான். அதற்காக அவரது எல்லா விசயங்களையும் எதிர்த்துக் கொண்டே இருப்பது என்பது முட்டாள் தனம் தானே. அதைத் தான் இந்த மாணவர் அமைப்பினர் ? செய்து வருகின்றனர்.அவர்களின் எதிர்ப்புக்கான‌ காரணம் லைக்கா எனும் தயாரிப்பு நிறுவனம்.

ஐய்ங்கரன் நிறுவனத்தின் பண நெருக்கடியால் உள்ளே வந்தது தான் இந்த லைக்கா நிறுவனம். அந்த நிறுவனம் நரகன் ராஜபக்ஸேயின் வலது கரம் என சொல்லப்படுகிறது. அது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. அது உண்மையாகவே இருந்தாலும் படத்தினை எதிர்ப்பதற்கு தகுந்த காரணமா ? எனும் ஐயம் எழாமலில்லை.

இவ்வளவு ஆர்வமாக தமிழ் உணர்வு பொங்கும் அவர்கள் மானாட மயிலாட நிகழ்சி லைக்கா ஏற்பாட்டில் இலங்கையில் நடந்த போது எங்கே போனார்கள் ?

இளைய ராஜா இசைநிகழ்சியை நடத்தியதும் இதே லைக்கா நிறுவனம் தான், அப்போது இவர்களின் தமிழுணர்வு எங்கே போனது. எதற்கெல்லாம் தமிழையும் தமிழுணர்வையும் கொண்டுவருவது என்ற வரையரை இல்லாததால் சிலர் இழுத்த இழுப்புக்கெல்லாம் வருவதற்கும் போவதற்கும் தமிழ் என்ன விற்பனைப் பொருளா ?

ஏதோ முதலிலிருந்தே இதே நிறுவனம் படத்தினை த‌யாரித்திருந்தாலும் அப்போது இந்த படத்தினை ஒப்புக்கொள்ள கூடாது என முருகதாஸையும் விஜயையும் எதிர்த்து போராட்டம் நடத்தியிருக்கலாம். அவர்களை அறியாமலேயே அது திரைப்படத்திற்குள் வந்துவிட்டது.இல்லை படத்தில் தமிழர் எதிரான நிலைப்பாடு ஏதும் இருந்தால் கண்டிப்பாக படம் வெளிவராமல் போராடுவதற்கு நியாயம் இருக்கிறது.

எப்போது விஸ்வரூபம் திரைப்படம் எதிர்க்கப்பட்டு அந்த முயற்சி வெற்றியும் அடைந்ததோ அன்றிலிருந்து எதிர்ப்பாளர்கள் எனும் போர்வையில் ஊடக வெளிச்சத்தினை பெறுவதற்கான குறுக்கு வழியாக திரைப்படங்களை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். புலிப்பார்வை எனும் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் வைக்கப்படிருந்ததால் அதை எதிர்ப்பதில் குறைந்தபட்ச நியாயமாவது இருக்கிறது. 

லாபகரமான சினிமாத் தொழிலில் ஈடுபடுபவர்கள் கத்தி எனும் ஒரு திரைப்படத்தினை கைவிடுவதால் ஏற்படப்போகும் பின்விளைவுகள் என்னவாக இருக்கப்போகிறது. விஜய் ஒரு படத்தினை இழப்பார், தயாரிப்பு நிறுவனம் காசை இழக்கும் வேறு ஏதாவது நல்ல விசயங்கள் நடந்துவிடப்போகிறதா ?

தினம் தினம் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவன் விடுதலை அடையப்போகிறானா? இல்லை தமிழீழம் தான் மலர்ந்துவிடப்போகிறதா ? இது எதற்கும் சிரத்தை எடுத்துப் போராடாத அமைப்பினர் இந்த திரைப்ப்டத்தினை மட்டும் எதிர்த்துப் போராடுவதில் ஏன் இவ்வளவு சுரத்தை எடுக்க வேண்டும் ? ஒருவேளை இவர்களின் எதிர்ப்பால் படம் கைவிடப்பட்டால் , நாளை எடுக்கப்படும் ஒவ்வொரு சினிமாவையும் ஒவ்வொரு அமைப்பினர் தடை செய்யச் சொல்லி போராட்டம் நடத்துவார்கள், அவை எல்லாமே தடை செய்யப்படுமா ?

இதில் விஜய் தரப்பில் தப்பு இல்லாமலில்லை. லைக்கா நிறுவனத்தைப் பற்றி தெரிந்த உடனேயே அதை நீக்கிவிட்டு வேறு தயாரிப்பு நிறுவனத்தை சேர்த்திருக்கலாம். சண்டியர் எனும் பெயர் கமல்ஹாசனால் பயன்படுத்தப்பட்ட போது வந்த கிருஷ்ணசாமிகள் இன்று யாரோ ஒரு பெயர் தெரியாத நடிகர் பயன்படுத்திய போது எங்கே போனார்கள்.எனவே இவர்கள் கத்தியையோ லைக்கா எனும் நிறுவனத்தையோ எதிர்க்கவில்லை ! விஜயை எதிர்க்கிறார்கள் ! எதிர்ப்பது போல காட்டிக் கொண்டு அவரையும் பெரிய ஆள் ஆக்குகிறார்கள் , தாங்களும் பெரிய ஆள் அகிக்கொள்கிறார்கள். 

ஒரு திரைப்படத்தினை தடையிடவும் , வெளியிடவும் அரசுக்குத் தான் உரிமை உள்ளதே தவிர எந்த ஒரு தனி மனிதனின் விருப்பு வெறுப்புக்கும் உரிமையில்லை. அது நானாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி !!

பின்குறிப்பு: லைக்கா நிறுவனம் நரன் ராஜபக்ஷேவின் ஆதரவு நிறுவனம் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. எனவே அந்நிறுவனத்தினை நான் ஒருபோதும் ஆதரிக்க மாட்டேன். ஆனால் கேவலம் ஒரு திரைப்படத்தினை எதிர்ப்பதில் காட்டும் அக்கறையையும் ஆற்றலையும் இலங்கை தமிழரின் நலனுக்கு காட்டவேண்டும், தமிழ் மீனவர்களின் பாதுகாப்புக்கு காட்ட வேண்டும்,தமிழ் மக்களின் வளர்சிக்கு காட்ட வேண்டும் என்பது தான் என் எண்ணமும் ஆசையும். மிஞ்சி மிஞ்சிப் போனால் அந்த திரைப்படத்தினால் அந்நிறுவன்ம் ஒரு 20 கோடி லாபமடையும். அவ்வளவு தான்.  அந்த திரைப்படம் வராவிட்டாலும் கூட வேறு வழிகளிலும், தொழில்களிலும்  லாபமடையாமல் இருக்கப் போவதில்லை. ஆனால் எதிர்க்கப்படும் சூழல் நாளை ஒவ்வொரு படத்திற்கும் வரும், சுதந்திரமாக படம் எடுக்கும் சூழல் மறையும், ஊடக வெளிச்சத்திற்கு ஆசைப் படுபவர்களின் கூடாரமாக திரைப்படத் தடுப்பாளர் சங்கங்கள் மாறும். நியாமான போராட்டங்களும் மறையும்,

10 comments:

 1. இல்லை சகோ! வணிகம் செய்ய வந்த வெள்ளையனுக்கு அடிமைப்பட்ட தேசம் இது! மற்றொரு முறை எந்த வியாபாரியும் ( அந்நிய வியாபாரி!?) நம்மை ஆண்டுவிட கூடாது என எச்சரிக்கையாய் இருப்பது தப்பல்லவே? என்னாலும் இதை ஏற்கமுடியவில்லை. அப்படியென்ன அவர்களோடு வியாபாரம் முக்கியம் நமக்கு? விட்ட பேசிக்கிட்டே போவேன், என்ன வேணா சொல்லுங்க லைக்கா தயாரிப்பில் படம் எடுப்பவர்கள் இலங்கையில் ரீலீஸ் பண்ணட்டும் எனக்கு ஒன்னும் கவலையில்லை, ஆனா தமிழ்நாட்டில் என்று வரும் போது என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்தும் நியாயம் தான் சகோ ! ஆனாலும் இனி வியபாரத்தின் பெயரால் நம்மிடம் வாலாட்ட நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க நாம் பழைய அகிம்சை தமிழர்கள் அல்லரே ! அப்படிப் பார்த்தால் நாம் ஒரு அந்நியப் பொருட்கள் கூட பயன்படுத்தக்கூடாது சகோ !! ஆனால் நாம் உபயோகிப்பவைகளில் 90% அந்நிய பொருட்கள் தான். லைக்காவை எதிர்ப்பதில் தப்பில்லை. அதன் பெயரால் விஜயை எதிர்ப்பதும் தப்பில்லை. ஊடக வெளிச்சம் தேட முயல்வது தப்புதானே சகோ ! மனதில் தோன்றியதை பட்டென கூறியதற்கு நன்றி சகோ !!!

   Delete
 2. honesty post seelan,

  ReplyDelete
 3. மாற்று கருத்துக்கு மதிப்பு கொடுப்பவர்களுக்கு தான் உண்மையாக கருத்திட்ட முடியும் இல்லையா சகோ:))
  **யாராக இருந்தாலும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க நாம் பழைய அகிம்சை தமிழர்கள் அல்லரே**
  இப்போ இப்போ கூடங்குளத்தில் என்ன சாதிச்சுட்டோம்? கமாடிடி மார்க்கெட்டில் என்ன செஞ்சிட்டோம்? நம்ம ஊரில் முதலிலே குறள் கொடுத்தால் தான் நமக்கு அடிகொஞ்சம் கம்மியாகவாவது விழும்! இது தான் நிதர்சம்:( மின்சார அரசியல் என்றொரு புத்தகம். படித்து பாருங்கள். நிறம் கிடைக்கையில் வினவு தளம் பாருங்கள். நாம் போராட எவ்ளோ விஷயம் இருக்குனு தெரியும். தம்பி தானேனு மனசுல பட்டத்தை சொல்லீட்டேன். யோசிச்சு பாருங்க சகோ:))
  **நாம் உபயோகிப்பவைகளில் 90% அந்நிய பொருட்கள் தான்.** உலக மயமாக்களின் பின்விளைவு சகோ:( அதனால் நசிந்த உள்ளூர் குடிசை தொழில்கள் தான் எத்தனை? முயன்று பாருங்க 90% என்பது 40% மாகவாவது குறையும்:)

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை சகோதரி. கூடங்குளத்தில் முடியவில்லை. ஆனால் இனி வேறு புதிய அணு உலை தமிழகத்தில் ( கூடங்குளம் தவிர்த்து ) தொடங்கப்பட மாட்டாது என அறிவிக்க வைத்தது சாதனைதானே ! 90 % 40 % ஆனால் சந்தோசப்படுவது நாம் தான். இல்லை எனச் சொல்லவில்லை. அதற்காக முயற்சி எடுப்பது எத்தனை பேர். நான் பயன்படுத்த வேண்டாம் எனச் சொல்லவில்லை. அதில் தீயதைத் தான் பயன்படுத்த வேண்டாம் என்கிறேன். கத்தி படம் தீமையைச் சொன்னால், அதை எதிர்ப்பது சரி. படமே வெளியாவதற்கு முன்னால் அதை எதிர்ப்பது எந்த வகையில் நியாயம். இல்லை இதற்கு முன் அந்த லைக்கா நிறுவனம் நிகழ்சி நடத்திய போது இவர்கள் எங்கே போனார்கள் ??? இன்று எதிர்ப்பதற்கு ஒரே காரணம் publicity மட்டும் தான் சகோ !!!

   Delete
  2. விஜய்க்கு எதிர்ப்பு தெரிவித்து தன்னை பிரபலபட்டுத்திகிராங்கங்கன்னு சொல்லவறீங்க. ரைட் விடுங்க, பேச ஆரம்பிச்சா பேசிக்கிட்டே இருப்பேன்:)

   Delete
  3. சூப்பர் சகோ !! கண்டிப்பாக அதைத் தவிர வேறு பெரிய காரணங்கள் ஏதும் இல்லை !!!

   Delete
 4. சுபாஸ்கரன் ஒரு துரோகி ஜெயசீலன் !!! அவனுக்கு ஆதரவாக பதிவா ?? இது வன்மையாக கண்டிக்கத்தக்கது....

  ReplyDelete
 5. நீங்களாவது விஜய்க்கு ஆதரவாக பதிவு எழுதினீர்களே ? சந்தோசம், எங்கே இந்தியாவிலிருந்து இலங்கை சென்று தொழில் புரியும் முதலாளிகளை தடுத்து நிறுத்த சொல்லுங்கள் பார்ப்போம்... ஒன்னும் முடியாது, சும்மா வெட்டி சீன் போட்டு ஊர ஏமாத்த வேண்டியது, ஏன் அப்புறம் பல நிகழ்சிகளை லைக்கா நிறுவனம் நடத்தியபோது பேசாம இருந்தாங்க, அப்பொ குதிச்சிருக்க்லாமே போராட்டத்துல.. பப்ளிசிட்டி பைத்தியங்களுக்கு கத்தியும் எதிரி தான், விஜயும் எதிரி தான். லைக்காவை விட கெட்டது பண்ணுன எத்தனையோ பேர் இங்க வந்து தொழில் பண்ணலயா?? அந்த ராஜபக்சேவையே சிவப்பு கம்பளம் விரிச்சு வரவேத்தவுங்க தானே..சும்மா எவண் கெடப்பான் ஏறி மேயலாம்னு... இந்த சின்ன விசயத்துல கவனம் செலுத்துறத விட்டுட்டு உண்மையாவே இலங்கை தமிழ் மக்களுக்கு நல்லது செய்யனும்னு நெனச்சா வேற பல வழிகள் இருக்கே, ஐநா கமிசௌக்கு விசா குடுக்காத இந்திய கவ்ர்மென்ட எதுத்து போராடுங்க, மீனவப் பிரச்சனை பற்றி போராடுங்க, விசாரணை கமிசன் கேட்டு போராடுங்க, அகதிகளுக்கு பிரச்சனை இருக்குறத பத்தி போராடுங்க, அத விட்டுட்டு ஒரு படத்துக்கு ஏன் இவ்ளோ மெனக்கெடுறீங்க... சூப்பர் சீலன், நீ கலக்கு.... நடுநிலையான பதிவு தான்.

  ReplyDelete
 6. //இவ்வளவு ஆர்வமாக தமிழ் உணர்வு பொங்கும் அவர்கள் மானாட மயிலாட நிகழ்சி லைக்கா ஏற்பாட்டில் இலங்கையில் நடந்த போது எங்கே போனார்கள் ?//
  நல்ல பதிவு நியமான கேள்வி..

  ReplyDelete