Friday, May 13, 2016

அடுத்த ஆட்சி...? திமுக..? அதிமுக..? கேப்டன்..? சீமான்..?

தொடர்ச்சி...


என் கணிப்பின் படி  கண்டிப்பாக வெல்ல இருக்கும் வேட்பாளர்கள்...


1.மா.சுப்பிரமணியம் திமுக 

2.சிவசங்கர் திமுக‌

3.சக்கரபாணி திமுக‌

4.ஐ.பி திமுக‌

5.செங்கோட்டையன் அதிமுக‌

6.தங்கம் தென்னரசு திமுக‌

7.அப்பாவு திமுக‌

8.சி.ஆர்.சரஸ்வதி அதிமுக ( அக்காவோட ஸ்பீச்சுக்கு நான் அடிமை மக்கழே)

9.பூங்கோதை ஆலடி அருணா திமுக‌

10.கிருஸ்ணசாமி புதிய தமிழகம்

11.ஜிவாஹிருல்லா ம.ம.க‌

12.தனியரசு அதிமுக‌

13.அன்புமணி பா.ம.க‌

14.ஆஸ்டின் திமுக‌

15.துரைமுருகன் திமுக‌

16.மா பாண்டியராஜன் அதிமுக‌


என்னுடைய தொகுதியான திருமயத்தில் திமுக வேட்பாளர் ரகுபதி 15,000 வாக்குகளுக்கும் மேலான வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். 

என் பகுதிகளில்,


1.புதுக்கோட்டை அதிமுக ( முரசு வேட்பாள்ரின் வாக்கு பிரிப்பால் பெரியண்ணன் அரசு வெல்வது கடினம் )


2.விராலிமலை திமுக (அமைச்சர் விஜய பாஸ்கர் கடும் போட்டி )


3.கந்தர்வகோட்டை அதிமுக‌


4.ஆலங்குடி திமுக 


5.அறந்தாங்கி கடும் போட்டி


6.காரைக்குடி அதிமுக‌


7.திருப்பத்தூர் திமுக (வீடியோ வந்த பின் க‌டும் போட்டி)



தமிழகத்தில் கடும் இழுபறி நிலவும்  தொகுதிகள்,


1.திருச்செந்தூர்

2.திருவாடணை

3.கோவை தெற்கு

4.உளுந்தூர்பேட்டை

5.கடலூர்

6.மேட்டூர்

7.தளி

8.விருகம்பாக்கம்

9.செஞ்சி

10.விழுப்புரம்

11.திருக்கோவிலூர்

12.சிவகங்கை

மொத்தத்தில் என்னுடை கணிப்பின் படி அடுத்து திமுக ஆட்சி அமைக்கிறது. தொகுதிகளின் படி,


திமுக கூட்டணி 120  - 130


அதிமுக கூட்டணி 90 - 100


தேமுதிக,ம.ந.கூ,த.மா.கா 5‍ - 9


பா.ம.க  2‍ - 4


பா.ஜ.க 1- 2


நா.த.க 0- 1


என் கணிப்புகள் - 1

நாளையில இருந்து கருத்துக் கணிப்பு வெளியிட தடையாம்...அதனாலா எல்லாரும் முண்டியடிச்சுக்கிட்டு கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிடுறாங்க. எனக்கு அரசியல்ல சின்ன வயசில இருந்தே ஆர்வம் அதிகம். 2004 நாடாளுமன்றத் தேர்தல்ல இருந்து தேர்தல் முடிவன்னைக்கு நான்  டீவி முன்னாடி தான் கெடப்பேன்.சின்ன வயசுலயே அரசியல் ஆர்வம் வர முக்கிய காரணம் அப்பா. வாரம் தவறாம எல்லா அரசியல் புலனாய்வு இதழ்களையும் வாங்கிட்டு வந்து குடுத்து படிக்க சொல்லுவாறு. (பெரும்பாலும் நக்கீரன் ) எங்க தாத்தா வீட்ல தலைகீழ். பக்கா ஏ.டி.எம்.கே. எம்ஜிஆர் புராணம், அதிமுக சாதனை வரலாறுன்னு கேட்டு கேட்டு தெரிஞ்சுக்குவேன். அப்புறம் நம்ம மிரட்டுநிலை ஹை ஸ்கூல். பசங்களோட மதியம் பக்கத்துல உள்ள டீக்கடைக்கு போய் எல்லா பேப்பரையும் அலசி ஆராய்வோம். எட்டாவது வந்ததுக்கு அப்புறம் ப்ரேயர் நடத்துனதும் அதுல செய்திகள் வாசிச்சதும் நானே. அதுனாலயும் இருக்கலாம். அப்ப வாசிச்சதுல இன்னைக்கும் மறக்காம இருக்க தலைப்பு செய்திகள்ல ஒன்னு," திருமங்கலம் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் லதா அதியமான் 40000 ஓட்டு வித்தியாச்த்தில் அபார வெற்றி".இப்ப ஏன் இதெல்லாம் சொல்றேன்னா, நானும் கருத்துக்கணிப்பு வெளியிடப் போறேன்... ;)




கடந்த எம்.பி எலக்சன்ல தான் முதல் முறையா வாக்களிச்சேன். அப்சொல்யூட்லி திமுகவுக்கு தான். இந்த முறை யாருக்குன்றத கடைசியா சொல்றேன். கடந்த தேர்தலுக்கு நான் கணிச்சது டோட்டலா அவுட். கன்னியாகுமரி,புதுச்சேரி அப்புறம் என்னோட தொகுதியான சிவகங்கை தவிர மத்த எதுவும் நடக்கல. அதுனால என்ன..?  கணிப்பு விடாம இருந்துருவனா... ஆனானப்பட்ட நக்கீரனே போனதடவை(2011) திமுக 180 தொகுதில ஜெயிக்கும்னு சொல்லிட்டு இன்னிக்கு மறுபடி கணிப்பு சொல்ல வரல...?சரி நம்ம கணிப்புலகிற்குள் நுழையலாம்.

கருத்துக் கணிப்புகள் நடக்கும்னு நம்பவே முடியாது. ஒரு சில விதிவிலக்கு இருக்கலாம். எனக்குத் தெரிஞ்சு இது வரைக்கும் சோடை போகாத ஒரே கருத்துக் கணிப்பு டாக்டர்.ராஜநாயகம் (லயோலா) கருத்துக் கணிப்பு மட்டும் தான். 2006ல திமுகன்னார், அதே நடந்தது. 2011ல அதிமுகன்னாரு அதே தான் நடந்தது. இபோ திரும்ப திமுகங்குறாரு. பாப்போம்.என்னைப் பொறுத்த வரை 2006ல் திமுக ஜெயிச்சதுக்கு காரணம் திமுக தேர்தல் அறிக்கை. 2011ல அதிமுக ஜெயிச்சதுக்கு காரணம் 2ஜி வெறுப்பு. அதே போல 2016ல திமுக ஜெயிச்சதுன்னா அதுக்கான காரணமும் திமுகவோட தேர்தல் அறிக்கையாத்தான் இருக்கும். காரணம் ரொம்ப சிம்பிள்.அது, ஜெயலலிதா. ஆம், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இந்த 5 ஆண்டு ஆட்சி போல நடக்க சான்சே இல்ல. அப்டி இருந்தும் இவ்ளொ வோட்டு அள்றதுக்கும், இவ்ளோ கான்பிடண்ட்டா அதிமுக  இருக்கறுத்துக்கும் முக்கிய காரணம் ஜெ,ஜெ,ஜெ மட்டுமே. இது தமிழகத்தோட டிசைன்.



சென்ற முறை இளைஞர்களின் முழு ஆதரவு மோடிக்கு என்று சொன்னேன்,அப்படியே இருந்தது. இம்முறையும் பாஜகவுக்கு இளைஞர்களிடம் ஆதரவு இருக்கிறது என்று சொன்னால் நம்பவே முடியாது. ஆனால் அது தான் நிதர்சனம். ஆனால் கடந்த முறை அளவுக்கு இல்லை. அப்போ அந்த ஓட்ட பிரிக்குறது யாரு...? நீங்கள் கற்பனையே செய்ய முடியாத நபர். ஆம் சீமான். நாம் தமிழர் கட்சிக்கு இளைஞரகளிடம் அதீத ஆதரவு. அதற்கு அடுத்த இடத்தில் நம்ம கேப்டன். பின்பு பிஜெபி, அதற்குப் பின்னரே திமுக அதிமுக. 

ஆக முதல் முறை வாக்காளர்கள்/இளைஞர்கள் ஆதரவு,


1.சீமான்
2.கேப்டனின் ம.ந.கூ (அதுவும் முரசுக்கு மட்டுமே)
3.பி.ஜெ.பி
4.திமுக‌
5.அதிமுக‌

என் கணிப்பின் படி ஜெயிக்க இருக்கும் ஸ்டார் வேட்பாளர்கள்....


1.ஜெயலலிதா‍ ஆர்.கே.நகர் (வாக்கு வித்தியாசம் இடைத்தேர்தலைக் காட்டிலும் வெகுவாக குறையும்)


2.கலைஞர்‍ - திருவாரூர்


3.ஸ்டாலின் - கொளத்தூர் ( வாக்கு வித்தியாசம் குறைவாக)


4.வசந்த குமார் (காங்கிரஸ்)

5.ஓபிஎஸ் - போடி  அதிமுக‌

இதுக்கும் மேல கண்டிப்பா ஜெயிபாங்கண்ணு சொல்ற ஸ்டார் வேட்பாளர்கள் இல்லை.

எனக்குப் பிடித்த கண்டிப்பாக சட்டமன்றம் செல்ல வேண்டும் என நான் நினைக்கும் வேட்பாளர்கள்....


1.சீமான்- கடலூர் (வெற்றி பெறுவது கடினம், ஆனால் அதையும் மீறி வென்றால் மிக்க மகிழ்ச்சி. தோல்வி அடைந்தாலும் 30000 வாக்குக்கு மேல் வாங்குவார்)


2.திருமா- காட்டுமன்னார்கோவில் ( ம.ந.கூ ஒரே நம்பிக்கை ,கடும் போட்டி , ஆனாலும் வென்றுவிடுவார் எனும் நம்பிக்கை இருக்கிறது)


3.கேப்டன் -  உளுந்தூர்பேட்டை ( வரும் செய்தியெல்லாம் பாத்தா ஒன்னும் சொல்றதுக்கில்ல)


4.வானதி - கோவை ( கடும் போட்டி )


5.ஆளுர் ஷானாவாஸ் - குன்னம் ( கடும் போட்டி)


6.தமிழிசை - விருகம்பாக்கம் (வெல்வது கடினம் )


7.அன்பில் மகேஷ் - திமுக ( வெற்றி)

8.வி.சி.சந்திர குமார் ம.தே.மு.தி.க 


தொடர்ச்சி நாளை...

Tuesday, May 10, 2016

நுழைவுத்தேர்வு

நுழைவுத்தேர்வு வைத்து தான் மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்ற இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் அதற்கு ஆட்சேபிக்காத மத்திய அரசின் நிலைப்பாடுகளிலும் எனக்கு உடன்பாடு இல்லை. அதிலும் தமிழகம் போன்ற பதினோறாம் வகுப்புகளே பெரும்பாலும் நடத்தப்படாமல் 12ஆம் வகுப்பை நேரடியாக நடத்தி மாணவர்களை மதிப்பெண் இயந்திரங்களாக வைத்திருக்கும் நமக்கு இது பொருந்துமா என்பதையும் பார்க்க வேண்டும். சிபிஎஸ்இ தரத்திலான நுழைவுத்தேர்வு நடத்தப்படும் போது அதை எழுதும் மாணவர்களின் கல்வித்தரமும் அப்படியே இருக்க வேண்டும். நுழைவுத்தேர்வுக்கென தனி சிறப்பு வகுப்புகள் செல்லும் மேட்டிமைத்தன அல்லது பணக்கார மாணவர்களுக்கு இது மிகவும் உபயோகமானதாக இருக்கும். கிராமப்புற ஏழை நடுத்தர மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு குறித்த ஐயப்பாடுகளே இன்னும் முழுமையாக தீர்ந்தபாடில்லை எனும்போது நுழைவுத்தேர்வு எழுதினால் தான் மருத்துவர் கனவு சாத்தியம் என்பது எப்படி நியாயமாக இருக்க முடியும்..?