Tuesday, October 7, 2014

எனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர்கள் !


எனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர்கள் !


என்னையும் கிரிக்கெட்டையும் பிரிக்க முடியாது தான் போல, நீண்ட நாட்களாக எழுத யோசித்த பதிவு , ஐந்து நாள் பூஜா விடுமுறையில் எந்தப் பதிவும் எழுதவில்லை. விடுமுறை முடிந்து இன்று காலை தான் ஹாஸ்டல் வந்தேன். வந்த களைப்பில் காலை காலேஜுக்கு கட் அடித்தாகிவிட்டது. நல்லதொரு தூக்கம் போட்டு எழுந்ததும் வலைப்பக்கம் வந்தேன்.பதிவுகள் குவிந்திருந்தன. அவற்றை படித்து பின்னூட்டம் இட்டதும் இந்த பதிவை எழுத ஆரம்பித்திருக்கிறேன், இதுவும் ஒரு இரண்டு, மூன்று பதிவாக வெளியிடத்தான் திட்டம். ஏனென்றால் நம்க்குத்தான் நிறைய பேரை பிடிக்குமே....முதலிலிருந்து போகாமல் கடைசியிலிருந்து போகலாம் என நினைக்கிறேன்.
சாந்தகுமாரன் ஸ்ரீசாந்த்  :2 வருடம் முன்பு இந்தப் பதிவை எழுதியிருந்தால், எனக்கு பிடித்த வீரர்களில் இவரும் ஒருவராக கண்டிப்பாக‌ இருந்திருப்பார் ..ஆனால் விதி யாரை விட்டுவைக்கிறது. பணத்தாசை  இவரின் திறமையை விலை பேசி, யார் இவர் மீது நம்பிக்கை வைத்து இந்திய அணியில் தேர்ந்தெடுத்தாரோ, யார் இவரை ஒருவரும் கண்டு கொள்ளாத போது தன்னுடைய ஐபிஎல் அணிக்கு தேர்ந்தெடுத்து மறு வாழ்வு கொடுத்தாரோ, இன்றும் பல பேருக்கு வாழ்க்கை அளித்துக் கொண்டிருக்கிறாரோ அவருக்கே துரோகம் செய்யத் தூண்டிவிட்டிருக்கிறது. ஆம் இவரின் மீது முழு நம்பிக்கை வைத்து அணியில் தேர்ந்தெடுத்த  டிராவிட்டுக்கே துரோகம் செய்ய எப்படித்தான் மனசு வந்ததோ.இவரின் கிரிக்கெட் துரோகம் இவருடைய திறமை வாழ்க்கையையே விழுங்கி பெரிய தண்டனை கொடுத்துவிட்டது.எனவே இனி அதையே பேசி பிரயோஜனமில்லை.

இவரை எப்படி எனக்கு பிடித்தது ?? இவரை பொதுவாக முன்கோபி என்பர்.
அந்த கோபம் தான் என்னை கவர்ந்தது, எனக் கூறுவேன்.இவரை முதலில் பார்த்தது டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுடனான லீக் மேட்சில்.கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவை. மிஸ்பா நின்றார்.மிகுந்த தன்னம்பிக்கையோடு கடைசி ஓவரை இந்த‌  ஸ்ரீசாந்த்  தான் போட்டார்.முதல் 4 பந்தில் அட்டகாசமான ஒரு பவுண்டரி உட்பட 8ரன் எடுக்கப்பட்டுவிட்டது..அந்த நேரத்
தில் கூட மனம் தளராமல் மிஸ்பாவை கோபத்துடன் பார்த்து ஒரு முரை முரைப்பார் பாருங்கள், சே  !! என்னே தைரியம் அவருக்கு.அடுத்த இரு பந்தில் 1 ரன் மட்டுமே கொடுத்து மிஸ்பாவையும் ரன் அவுட் செய்து விடுவார்.அன்றிலிருந்து அவரை எனக்கு பிடிக்க ஆரம்பித்தது என்று சொல்லலாம்.


அதன் பிற‌கு செமி பைனலில் அதிரடி ஆஸ்திரேலிய அணியின் ஹெய்டனையும் கில்லியையும் அனாசியமக போல்டாக்கியது,எல்லோரும் பயப்படும் சைமன்ட்சை வம்புக்கு இழுத்தது,என சொல்லிக்கொன்டே போகலாம். அப்புறம் தென்னாப்பிரிக்காவுடனான ஒரு டெஸ்ட் போட்டியில் நெல் பந்தில் சிக்ஸர் அடித்துவிட்டு ஏதோ சதம் அடித்ததைப் போல மைதானத்தை வலம் வந்தது, அதை இந்திய அணியினர் பெவிலியனில் இருந்து பார்த்து விழுந்து விழுந்து சிரித்தது ,இன்னும் நினைவில் இருக்கிறது.


முதல் ஐபிஎல்லில் ஹர்பஜனிடம் அரை வாங்கி மைதானத்தில் தேம்பித் தேம்பி அழுத குழந்தையான ஸ்ரீசாந்த்  நம்ம டோனியின் ராசியான ப்ளேயரும் கூட‌, டி20 உலக இறுதிப் போட்டியில் இவர் பிடித்த கேட்சை மறக்க முடியுமா, அப்புறம் 50 ஓவர் உலக போட்டியின் பைனலில் ரன்களை வாரி வழங்கியதை மறக்கத்தான் முடியுமா..... நல்ல ப்ளேயர் ஆனால் நல்ல மனிதராக திகழாமல் போய்விட்டார். எனக்கு என்ன வருத்தம் என்றால் டிராவிட்டுக்கே, இவர் துரோகம் செய்ய எப்படித்தான் நினைத்திருப்பாரோ. இப்போது இவர் மீது வெறுப்பு இருந்தாலும் கடந்த கால கிரிக்கெட்டை நான் அசைபோட்டுப் பார்க்கும் போதெல்லாம் இவருடைய நினைவும், அந்த சிறு புன்னகையும் வராமல் இல்லை. அது மட்டும் தான் இவரை நினைவு கூறவும் காரணம்.

அஜீத் அகர்கர்:உலகிலேயே என்னை மிகவும் கவர்ந்த வேகப்பந்து வீச்சாளர் இவர்தான்.மலிங்கா போடுவதை யார்க்கர் என்கிறோம்,இவருடைய யார்க்கரை மறந்து விட்டோம்.கங்குலி,டிராவிட் காலத்தில் இவர் தான் லாஸ்ட் ஓவர் போடுவார்.குறைந்த ஆட்டத்தில் 50 விக்கெட் ,குறைந்த  பந்தில் 50 ரன், சிறந்த ஸ்டிரைக் ரேட் கொண்ட பவுலர்,என இந்திய அளவிலும், குறைந்த ஆட்டத்தில் 50 விக்கெட் என உலக அளவிலும்[இப்போது மென்டிஸ்] பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.நம்ம டோனி கேப்டன் ஆனவுடன் காணாமல் போய்விட்டார்.இப்போது ரிட்டையர்டும் ஆகிவிட்டார்.

இன்று ஜாகீர்கானை புகழும் ஊடகங்கள், ரசிகர்கள் இவரை ஏறத்தாழ மறந்தே போய்விட்டனர் என்று கூடச் சொல்லலாம். இவரால் இந்தியா ஜெயித்த ஆட்ட்ங்களை ஜாகீர்கானுடன் ஒப்பிட்டுக் கூட பார்க்க முடியாது. 180 ஆட்டங்களில் 290 விக்கெட் வீழ்த்தியவரை விட 235 ஆட்டத்தில் வெறும் 250 விக்கெட் வீழ்த்திய ஜாகீர்கான் ஹீரோவாக சித்தரிக்கப்ப‌டுவது என்னால் ஏற்றுக் கொள்ளமுடியாததாக இன்றும் இருக்கிறது. மறக்க முடியுமா இவருடைய 95 ரன்னை. ஜாகீர்கானை நான் குறைவாக மதிக்கவில்லை, அவரும் திறமையானவர் தான், ஆனால் இவரை முற்றிலும் புறக்கணிப்பது நியாயம் கிடையாது என்பது தான் என் எண்ணம்.லிஸ்ட் தொடரும்...
பதிவு குறித்து உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளலாமே!!!

19 comments:

 1. வணக்கம்
  விலா வாரியான தகவல் பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. உடனடி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்...

   Delete
 2. ninga entha year padikkuringa?

  ReplyDelete
  Replies
  1. B.E geo informatics THIRD year... keep visiting my blog...

   Delete
 3. ம்ம்ம்ம்ம் நாங்க கிரிக்கெட் எல்லாம் பார்ப்பது குறைந்துவிட்டது. இப்ப பாக்கறது ஜஸ்ட் லைக் தட்.....அதுவும் இந்த மேட்ச் ஃபிக்ஸிங்க் எல்லாம் வந்த பிறகு பார்க்கும் ஆர்வம் குறைந்துவிட்டது.

  தங்கள் எழுதிய விதம், அலசல் நன்றாக உள்ளது!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஐயா, முன்னர் போல் இல்லை இப்போதைய கிரிக்கெட், நானும் பார்ப்பதைக் குறைத்துக் கொண்டேன்... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா...

   Delete
 4. pala match fixing natakkuthuda, enna, sreesanth mattikitaan, mathavungka maattala... ajith agarkar is one of the unsung hero da, aduthu nee yara pathi ellam ezhutha porannu enakku theriyum, thayavu seythu dravid paththi ezuthatha...

  ReplyDelete
  Replies
  1. yes you are correct Britto, famous players were also do the match fixing... it will destroy the real cricket fans .. and other thing you said, about Agarkar is fact. the sad thing is many of my favorite cricket players, all are unsung heroes... why da dravid is real hero da, அவர பத்தி எழுதாம எப்படி... உனக்கிட்ட சொன்னதெல்லாம் இங்க சொல்லப்போறேன்.. அவ்ளோதான்.. உனக்கு அவர பிடிக்காது, ஆனா எனக்கு பிடிக்குமே !!!:):):)

   Delete
 5. கிரிக்கெட் வீரர்களைப் பற்றிய உங்கள் தொடருக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா...

   Delete
 6. என்ன ஜெயசீலன், பதிவை படித்த பின் "எனக்கு பிடிக்காத கிரிகெட் வீரர்கள்" என்றும் தலைப்பு வைத்து இருக்கலாம் போல இருக்கே..?

  ReplyDelete
  Replies
  1. இவுங்கள பிடிக்காதோ சாருக்கு, ?? வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்...

   Delete
 7. எனக்கும் இவர்களைப் பிடிக்கும் என்றாலும் டிராவிட், கங்குலி, தெண்டுல்கருக்குப் பிறகு எந்த மாட்சாக இருந்தாலும் விரும்பிப் பார்க்கும் வீரர் சுரேஷ் ரெய்னா.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சார், அவர்கள் ரிட்டையர்ட் ஆன உடனேயே நானும் முன்னர் போல லயித்து மேட்ச் பார்ப்பதையெல்லாம் விட்டுவிட்டேன், ரெய்னா சூப்பர் ப்ளேயர் சார்.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்...

   Delete
 8. உங்களை மாதிரி நானும் ஒரு காலத்தில் கிரிக்கெட் பையித்தியமாக இருந்ததுண்டு. இந்தியா ஆடும் ஒவ்வொரு ஆட்ட முடிவிலும், அந்த ஆட்டத்தின் புள்ளிவிவரங்களை டைரியில் எழுதிவைத்து, நண்பர்களிடம் "statistics man" என்ற பெயருடன் வலம் வந்த காலங்கள் அவை.
  இப்போது முற்றிலுமாக குறைத்துவிட்டேன். பார்போம் காலம் உங்களுக்கு எவ்வாறு பதில் கூறுகிறது என்று.

  தொடருங்கள். தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. உங்களைப் போலவே நானும், டிராவிட் ஆடிய நாட்களில் அவருடைய ஒவ்வொரு மேட்ச் ஸ்டாட்டிஸ்டிக்ஸ் எழுத தனி நோட்டே போட்டிருந்தேன், எப்ப அவரு போனாரோ அதோட குறைஞ்சு போச்சு, இப்போ சும்மா யாரு ஜெயிக்கிறாங்கன்னு பார்க்கிறதோட சரி...வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்..

   Delete
 9. எடுத்த உடனே ஸ்ரீசாந்த் தா? நான் டிராவிட் டா தான் இருக்கும்னு நினைச்சேன்:))) jpl நடத்தபோறீங்க , கலக்குங்க சகோ!

  ReplyDelete
  Replies
  1. ரிவர்சிலிருந்து எழுதுவதால் டிராவிட் பற்றி கடைசியாகத் தான் எழுத உள்ளேன் சகோ, இப்போ ஸ்ரீ சாந்த் பிடிக்காது,முன்னாடி பிடித்த‌வர்.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ..

   Delete
 10. கிரிக்கெட் அதிகப் பரிச்சயமில்லை நண்பரே...!
  என் பள்ளிப்பருவத்தில் இப்பொழுது போலவே மாணவர்களைப் பித்துப்பிடித்து அலைய வைத்த விளையாட்டு அது!
  விளையாட்டை நண்பர்கள் ரசிக்கும் போது அதில் எனக்கு ஏற்படுகின்ற சந்தேகங்களைக் கேட்டதற்காக விசித்திர ஜந்துவாகப் பார்க்கப்பட்டிருக்கிறேன்.
  உங்கள் பதிவை முழுவதுமாகப் படிக்கக் காரணம் படிக்கத்தூண்டும் விதத்தில் அமைந்திருக்கும் உங்களின் சரளமான நடை...!
  இன்றை தமிழிலக்கிய வகுப்பறைகளில் பாடம் கேட்கும் ( பாடம் சொல்லும் ????!!!) பலர்க்கும் கைவராத நடை !
  உங்களுக்குக் கைவருகிறது!
  இந்தத் தமிழால் நிச்சயம் நீங்கள் பேசப்படுவீர்கள்!
  நன்றி

  ReplyDelete