Monday, September 29, 2014

மாறுமா அரசியல்???


மாறுமா அரசியல்???


யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆம் இத்தனை நாள் முதல்வராய் வலம் வந்த  ஜெயலலிதா இன்று முன்னாள் முதல்வராக‌!!   18 ஆண்டுகாலம் வாய்தா வாங்கி, வாய்தா வாங்கி கடைசியில் இவ்வளவு கடுமையான நீதிபதியிடம் வந்து மாட்டிக் கொண்டார். 66 கோடி சொத்துக் குவிப்பு வழக்கில் 100 கோடி அபராதத்துடன் 4 ஆண்டு சிறைக்கும் உத்தரவிட்டு பரபரப்பு தீர்ப்பளித்து இந்தியாவே திரும்பிப் பார்க்கச் செயத‌ நீதிபதியாகிவிட்டார்   நீதியரசர்.திரு மைக்கேல் டி குன்ஹாஅவர்கள்.ஆனால் இதில் என்ன வேடிக்கை என்றால் ஊழல் வழக்கில் குற்றச்சாட்டப்பட்டு சிறை சென்றிருக்கும் முன்னால் முதல்வருக்கு ஆதரவு அதிகரித்திருப்பது தான். இதற்கு அவரின் இந்த மூன்றாண்டு கால ஆட்சி தான் காரணம். 
சென்ற ஆட்சிகாலங்களை விட மிகச் சிறப்பாக தமிழகத்தை கொண்டு சென்றார். அம்மா உணவகம் எல்லாம் நாடே திரும்பிப் பார்த்த திட்டங்கள்.ஆனால் அதற்குரிய பரிசாக அடுத்த ஆட்சி கிடைக்க வாய்ப்பிருந்த நேரத்தில் இப்படி ஒரு தீர்ப்பு, அவர் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்.இன்னொன்று அவருடைய சிறை தீர்ப்பு மக்கள் மத்தியில் அனுதாபத்தை ஏற்படுத்தியது உண்மைதான். ஆனால் ரத்தத்தின் ரத்தங்கள் அதை கெடுத்துவிட்டனர். அனுதாப அலையை அதிருப்தி அலையாக மாற்றிவிட்டனர். இரண்டு நாள் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் அளவுக்கு,இன்னும் சில இடங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பாத நிலை.


இப்படிப்பட்ட சூழ்நிலையில் புது அமைச்சரவை முதலமைச்சர் திரு. ஓபிஎஸ் தலைமையில் இன்று பதவி ஏற்றிருக்கிறது.கர்நாடக உயர் நீதி மன்றத்தில் தீர்ப்புக்கு தடைகோரியும்,ஜாமீன் கேட்டும் மேல்முறையீடு செய்திருக்கிறார்கள்  ஜெ வக்கீலகள், வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.இதில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி ஆஜராவர் என்றும்  தெரிகிறது.ஜாமீன் கிடைத்துவிடுவது எளிது தான்,ஆனால் தீர்ப்புக்கே தடை கோருவது !! நடக்குமா எனத் தெரியவில்லை.அது நடக்காதபட்சத்தில் 10 வருடம் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்துவிடுவார் முன்னாள் முதல்வர்.குறைந்தபட்சம் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும்வரையாவது பொறுத்திருந்துதான் ஆக வேண்டும். இன்னொன்றும் சொல்கிறார்கள், இது வரை குன்ஹா தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் கூட தோற்றதில்லையாம்.பார்ப்போம் அம்மாவின் ராசியை.இந்த சூழலில்  தமிழகத்தின் அரசியல் நிலவரம் மாறக்கூடிய நல்ல சந்தர்ப்பம் உருவாகியிருக்கிறது என்றே கூறலாம்.தலைமை இல்லாமல் ஆளப்போகும் ஆளுங்கட்சி என்னதான் முயற்சித்தாலும் அம்மா அளவுக்கு ஆட்சிபுரிய முடியாது. எனவே அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் நிலையில் இருந்த ஆளும் கட்சி இனி மிகக் கடுமையாக போராடினாலும் கடினம் தான். இந்தப்பக்கம் திமுக. சொல்லவே வேண்டாம். ஸ்பெக்டரம் எனும் ஊழலை இன்னும் மறக்கவில்லை மக்கள். எப்படிச் சொல்கிறேன் என்றால் , அம்மா தீர்ப்பில், இதுக்கே இவ்ளோ தண்டனைன்னா, ஒரு லட்சம் கோடிக்கு.......!!!??? என இன்னும் நினைவில் வைத்திருக்கின்றனர்,அது தான் நாடாளுமன்றத் தேர்தலிலேயே எதிரொளித்தது. இந்த தீர்ப்பை அரசியலாக்க முயற்சி செய்தால் ஸ்பெக்ட்ரம் ஊழல் கிளம்பிவிடும் என்று தெரிந்து தான் தீர்ப்பு குறித்து ஒரு கருத்தும் கூறாமல் இருக்கிறது திமுக.எத்தனை பேருடன் கூட்டணி வைத்தாலும் அவர்கள் ஆட்சியைப் பிடிப்பதும் கடினமே.இப்போது தான் கேப்டனுக்கு பிராகசமான வாய்ப்பு. சென்ற முறை திரு.ஓபிஎஸ் முதல்வராக இருந்த போது சட்டப்பேரவையை கூட்ட வாய்ப்பில்லாமல் இருந்தது. இம்முறை இரண்டு பட்ஜெட் தாக்கல் செய்தாக வேண்டும்.எனவே சட்டமன்றத்தில் கேப்டன் கலந்து கொண்டு மக்கள் பிரச்சனைகளை பேசி மக்கள் மத்தியில் பேசப்படுபவராக மாற வேண்டும்.அதே நேரத்தில் பா.ஜ.க கூட்டணியைவிட்டும் வெளிவந்து விடக்கூடாது. அது தான் அவருக்கு பாதுகாப்பு.இன்னொரு விதத்தில் பா.ஜ.க வும் இந்த நிலைமைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அதற்கும் வலுவான துணை தேவை. இப்போதுள்ள சூழலில் வைகோவும் ,ராமதாசும் கலைஞர் பக்கம் சாய்வதற்கு அதிக வ்வ்ய்ப்புள்ளது. நேற்று ஆளுநரைச் சந்தித்த நமது கேப்டன் மின்சாரப் பற்றாக்குறை குறித்து பேசினாராம், வெளங்கீறும், இப்போதான் அவருக்கான வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது,அதை அவரே கெடுத்துக் கொள்வார் போல. பொறுத்திருந்து பார்ப்போம், மாறுகிறாரா என்று.வலுவான மூன்றாவது அணி அமைத்து 2016 பேரவைத் தேர்தலை சந்திக்க பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது,,,,பா.ஜ.கவின் நீண்ட நாள் ஆசையான சூப்பர் ஸ்டார் ரஜினி மீது அனைவரின் கண்ணும் திரும்பும், ஒரு வேளை ரஜினி....................???????((அடுத்த பதிவில்))

பின் குறிப்பு:நாளை திரையுலகினர் சார்பாக உண்ணாவிரதப் போராட்டமாம். அம்மா என்ன தியாகம் செய்தா?? ( அய்யய்யோ ஓவரா பேசிட்டமோ??) ஜெயிலுக்கு சென்றிருக்கிறார்கள். பாருங்கள், நாளைக்கு அம்மா மேல் உள்ள விசுவாசத்தைக் காட்டுகிறேன் என்று நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்து ஓவர் ஆக்ட் செய்து நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக போகிறார்கள்.
பதிவு குறித்து உங்கள் கருத்துகளை மறக்காமல் பகிர வேண்டுகிறேன்.

12 comments:

 1. நல்ல தீர்ப்பு சொல்ல 18 வருடங்களா ? நல்லதொரு அலசல் பதிவு,
  எமது புதிய பதிவு My India By Devakottaiyan


  ReplyDelete
  Replies
  1. தேவைப்பட்டிருக்கிறதே!! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜீ...

   Delete
 2. சிறந்த திறனாய்வுப் பார்வை
  தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி சார், வருகைக்கும் கருத்துரைக்கும்...

   Delete
 3. சின்னப்பையன் செமையா அரசியல் பேசுராரு!!!!

  ReplyDelete
  Replies
  1. ஏதோ கொஞ்சம் ஆர்வம் ஐயா!! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா...

   Delete
 4. நன்றாக அலசி ஆரய்ந்திருக்கிறீர்கள். பார்த்து இப்படியெல்லாம் நீங்கள் எழுதிருப்பதை அதிமுகவினர் படித்தால், உங்கள் நிலமை-???

  ReplyDelete
  Replies
  1. உண்மையை சொல்வதற்கு எதற்காக சார் பயப்பட வேண்டும்??, நான் என்ன இல்லாததையா சொல்லி இருக்கிறேன்??... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்...

   Delete
 5. Podra ivan mela oru avathuru vazhakka😊😊😊 super post, Rajni arasiyalukku vanthuduvaar Pola than theriyuthu intha vatti, parpom, makkal ???

  ReplyDelete
 6. politics pesura, pathuda.... but delay justice da...

  ReplyDelete
 7. அரசியல் பேசும் அழகான பகிர்வு சீலன்.

  ReplyDelete