எண்ணக் கிறுக்கல்கள் - 3
சென்ற வாரம் பூஜா விடுமுறை என்பதால் புதன் கிழமையே காலேஜ் கட் அடித்துவிட்டு ஊருக்கு கிளம்பிவிட்டேன்.அங்கே போனதும் இன்னொரு ஆச்சர்ய தகவல் கிடைத்தது. பக்ரித் தள்ளிப் போனதை முன்னிட்டு திங்களும் லீவ் என்று`! திடீரென்று ஜெயலலிதாவுக்கு விசுவாசத்தைக் காட்டுகிறேன் என்று தனியார் பொறியியல் கல்லூரிகள் செவ்வாயும் விடுமுறை அறிவிப்பு வெளியிட, அடடா வடை போச்சே ( என்னுடையது அண்ணா பல்கலை ஆயிற்றே )என்று கிளம்பிவந்தேன். ஒரு குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டவற்கு இவ்வளவு ஆதரவா ?? இல்லை வற்புறுத்தப்படுகிறார்களா ? என்பது ஊரறிந்த ரகசியம். கோர்டுக்கு போன பின், பின்வாங்கிய அவர்கள் கல்லூரி, பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் என்று அறிவித்துவிட்டனர்.
காலேஜில் ப்ராக்டிக்கல் நெருங்கிவிட்டதால் ரெக்கார்டு எழுதவே நேரம் சரியாக இருக்கிறது. அதனால் இந்த வாரம் முழுதும் நொ ரெஸ்ட் ஒன்லி வொர்க் ஆகிவிட்டது. அடுத்த வாரம் எல்லா ப்ராக்டிகல்ஸும் முடிந்து மகிழ்வோடு தீபாவளி விடுமுறைக்கு செல்ல காத்துக் கொண்டிருக்கிறேன். எனவே பதிவுலகிலும் கொஞ்சம் ஆக்டிவ் கம்மிதான்.
அம்மாவுக்கு? ஜாமீன் மறுக்கப்பட்டது தான் இந்த வார ஹாட் டாபிக். அரசுத் தரப்பு வழக்கறிஞர் நிபந்தணை ஜாமீனுக்கு மறுப்பு தெரிவிக்காத போதும் நீதிமன்றம் ஜாமீன் மறுத்திருக்கிறது. ஊழல் ஒரு மனித உரிமை மீறல் என்று குட்டு வைத்ததுடன், தீர்ப்பை நிறுத்திவைக்கும் பேச்சுக்கே இடமில்லை என மனுக்களை நிராகரித்துவிட்டது. அடுத்த வாய்ப்பு , கடைசி வாய்ப்பு உச்ச நீதிமன்றம் தான் என நினைக்கிறேன். பார்ப்போம் அங்கே என்ன நடக்கிறது என்று. ஜாமீன் தீர்ப்பு வருவதற்கு முன்னரே அனைத்து ஊடகங்களும் ஜாமீன் கிடைத்துவிட்டதாக செய்தி வெளியிட்டன. இதற்கு காரணம் செய்தியை முந்திச் சொல்ல வேண்டும் என்ற அவசரம் தான், அதற்காக தீர்ப்பை வாசித்து முடிப்பதற்குள்ளாகவா??? உங்க கடமை உணர்ச்சியைக் கண்டு நான் வியக்கேன்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் எப்போதும் இல்லாத அளவிற்கு குறைந்த பதக்கங்களை வாங்கியிருக்கிறது இந்தியா. ஆராயப்பட வேண்டிய விசயம். வெறும் 5 கோடி மக்கள் தொகை கொண்ட தென் கொரியா ( போட்டியை நடந்த்திய நாடு) 76 தங்கப் பதக்கங்களை குவித்திருக்கிறது.120 கோடி மக்கள் தொகை கொண்ட நாம் மொத்தமாகவே அந்த எண்ணிக்கையைத் தொடமுடியவில்லை. இத்தனைக்கும் ஆசியாவின் மூன்றாவது பெரிய நாடு இந்தியா. உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டியது எவ்வளவு இன்றியமையாதது என்பதை இனியாவது உணர்வார்களா நம் ஆட்சியாளர்கள் ? பதக்கம் வெல்பவர்களுக்கு பரிசுத்தொகை கொடுக்கும் அரசுகள், அவர்களுக்கு நல்ல ஒரு வேலைவாய்ப்பைக் கொடுத்துவிட்டு உட்கட்டமைப்பை மேம்படுத்த தொகையை செலவிடலாம். ஒரு தங்கப் பதக்கத்திற்கு ஒரு கோடியெல்லாம் ரொம்ப ஓவர்.இன்னொரு நல்ல விசயம் நமது தேசிய விளையாட்டான ஹாக்கியில் நம் வீரர்கள் தங்கத்தை தட்டியிருக்கிறார்கள், அதுவும் நீண்ட நாட்களுக்குப் பிறகு. இதன் மூலம் ஒலிம்பிக்கில் நேரடியாக கலந்து கொள்ளும் வாய்ப்பும் பெற்றிருக்கிறது இந்திய ஹாக்கி ஆடவர் அணி (தகுதிச்சுற்றில்லாமல்) (மூன்று ஒலிம்பிக்கிற்கு பிறகு)
கத்தி திரைப்படம் தீபாவளிக்கு வெளிவருவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. நான் பெரிதும் எதிர்பார்த்த ஐ தீபாவளி வெளியீடு இல்லை என்பதும் ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.இதன் மூலம் போட்டி கத்தி படத்திற்கும் விசாலின் பூஜை படத்திற்கும் தான் என்பது முடிவாகிவிட்டது. என்னுடைய சாய்ஸ் பூஜைக்குத் தான்.
சாம்பியன்ஸ் லீக் டி20 ல் யாரும் எதிர்பார்க்காத சென்னை கோப்பையைத் தட்டியது. எனக்குப் பிடித்த பஞ்சாப் செமி பைனலில் மோசமாக தோற்றுப் போனது.சென்னை செமி பைனலுக்கு வந்ததே மற்ற அணியால் தான் (லாகூர் லயன்ஸ்) , அதனால் விடக்கூடாது என கோப்பையை வென்றேவிட்டனர். பைனலில் ரெய்னாவின் ஆட்டம் செம தூள். இதில் காம்பீர் சில தவறுகளையும் செயதார். ரெய்னா ஸ்பின் பந்தில் நிலைத்துவிட்டால் அப்புறம் அதோகதி தான். ஆனாலும் தொடர்ந்து ஸ்பின்னர்களுக்கே வாய்ப்புக் கொடுத்தார். அவர் அனாசயமாக சிக்ஸர் மழை பொழிந்தார். தோனி மீண்டும் ஒரு முறை தன்னுடைய சுயநலத்தை காட்டிவிட்டார். ஜெயிக்க போறொம் என்று தெரிந்ததுமே தான் ஒரு பெஸ்ட் பினிசர் எனக் காட்ட ஆர்டரை மாற்றி முன்னாலேயே இறங்கி பேர் வாங்கிக் கொண்டார். This kind of things will not help to prove as a best finisher. this will increase the anger of audience on Dhoni...எப்போதான் புரிந்து கொள்ளப் போறாரோ??
படித்ததில் பிடித்தது...
ஒரு கணவனுக்கு தன் மனைவி ராணியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு தந்தைக்கும் தன்னுடைய மகள்கள் இளவரசிகள் தான்......
சுட்டது பேஸ்புக்க்கில்...
இந்த வாரம் போல வரும் வாரமும் இனிமையாக அமைய வாழ்த்துகளுடன் உங்கள் சீலன்...
ஒவ்வொரு வாரமும் கலக்குறீங்க சகோ! இந்த status எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு:) சீக்கிரம், நல்ல படியா ப்ராக்டிகளை முடிங்க:) வாழ்த்துகள்!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ , திருத்திவிட்டேன் சகோ.. நம்ம இங்க்லிஷ் எப்போதுமே இப்டித்தான்... ( நண்பன் போட்ட ஸ்டேட்டஸ் தான் , ரசித்ததற்கு நன்றி )
Deleteஉங்க ஊருல்லா அதான்!
Deleteஅம்மாவைப் பற்றிய அந்த மஞ்சள் வரிகள் உண்மைய்ச் சொல்லுகின்றதோ!
ReplyDeleteபடித்ததில் பிடித்தது எங்களுக்கும் பிடித்தது!
சுட்டது நன்றாகச் சுட்டுருக்கின்றீர்கள்!
நறி ஐயா... வருகைக்கும் கருத்துக்கும்...
Deleteகத்தி கத்தி அம்மாவை பற்றி பேசியபின் கத்தி படத்திற்கு வந்தீர்கள். அது சரி, இவ்வளவு நிறம் எதற்கு? சில நிறங்களை படிப்பதே கடினமாக இருந்தது. கருப்பு எழுத்தில் போட்டு சுட்டி காட்டவேண்டியதை சிவப்பில் போட்டால் நன்றாக இருக்கும் என்பதே என் அபிப்ராயம். நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி சார், வருகிக்கும் கருத்துக்கும் .. இதோ மாற்றி விட்டேன்...
Deleteதாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்.
ReplyDeleteஇந்த வார ஸ்பெஷல் கலக்கல் தான்.
நன்றாக ப்ராக்ட்டிகல்ஸ் முடித்துவிட்டு தீபாவளியை என்ஜாய் பண்ணுங்கள்.