ரஜினி ஏன் அரசியலுக்கு வரக்கூடாது ?
ஜெயலலிதா சிறைக்கு போனாலும் போனார், இங்கே தமிழகத்தில் பல கேள்விகளும், ஊகங்களும் உலாவந்த வண்ணம் இருக்கின்றன. இந்த ஊடகங்களுக்கும் வேறு வேலையே இல்லாதது போல செயல்படுவதைப் பார்க்கும் போது வெறுப்புத்தான் வருகிறது. ஒரு நபர் தன்னுடைய கருத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தெரிவிக்காத நிலையில் தாங்களாகவே கற்பனை செய்து கொண்டு கதை கட்டுவதில் இந்த ஊடகங்கள் அனைத்தும் கை தேர்ந்தவையாக இருக்கின்றன. கடந்த சில நாட்களாக நாளிதழ்களைப் படித்துவருபவர்களுக்கு நான் யாரைப் பற்றி சொல்ல வருகிறேன் எனத் தெளிவாகப் புரிந்திருக்கும். ஆம் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுடைய அரசியல் குறித்து தான்.
இன்றைய தி இந்து தமிழ் நாளிதள் வாசகர் கருத்துக் கணிப்பில் கேட்கப்பட்டுள்ள கேள்வி, ரஜினிக்கு உகந்தது எது ? 1)தனிக் கட்சி தொடங்குவது 2) பா.ஜ.க வில் சேர்வது 3) அரசியல் வேண்டாம் என்பது தான். இதற்கு ரசிகர்களின் பதில் எவ்வாறு இருக்கிறது என்று பார்த்தால், தனிக் கட்சி தொடங்கலாம் என 20 % பேரும், கட்சியில் சேரலாம் என 22% பேரும் அரசியல் ஏண்டாம் என 60% பேரும் சொல்லியிருக்கிறார்கள்.எனக்கு என்ன சந்தேகம் என்றால் இதையெல்லாம் கேட்க இப்போது அவசியம் என்ன அவசியம் வந்துவிட்டது. ஒரு வேளை ரஜினி அரசியலில் இறங்கப் போகிறேன் என்று ஏதும் வெளிப்படையாகவோ, அல்லது குறிப்பாகவோ சொல்லியிருக்கிறாரா என்றால் இல்லை . பின்னர் ஏன் ரஜினியின் அரசியல் குறித்து அவருடைய ரசிகர்களை விட அதிக ஆர்வம் இந்த ஊடகங்களுக்கு.
இன்னும் சிலர் அவர் அரசியலிலே இறங்கவே இல்லை, அதற்குள்ளாக அவர் என்ன தமிழரா ? அவர் எந்த போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றிருக்கிறார்? மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்திருக்கிறாரா? என்றெல்லாம் கேட்க ஆரம்பித்துவிட்டனர். இதில் ஒரு படி மேலே போய் இந்த உதயகுமார் போன்ற ஆட்கள் அவருக்கு கடிதம் எழுதுகிறேன் என்று தங்கள் முகப் புத்தகத்தில் பகிர்ந்து தங்களை உயர்த்திக் கொள்ளும் வேலைகளிலும் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். சரி இதற்கெல்லாம் ரஜினி என்ன பதில் சொல்வார் என்று பார்த்தால் வழக்கம் போல புன்னகை தான். இன்னும் சில ஊடகங்கள் ரஜினி ரசிகர் மன்றத்தினரிடம் கருத்து கேட்ட்வருகிறாராம். தனிக் கட்சி தொடங்கலாமா இல்லை பா.ஜ.கவில் சேரலாமா என்று. அது அவருடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால் அவர் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்ல இவர்கள் யார்.
அவர் கன்னடர் என்கின்ற வாதம் எவ்வளவு அபத்தமானது. இதற்கு முன்னால் தமிழகத்தை ஆண்டவர்கள் எல்லோரும் பச்சைத் தமிழர்களா ? அதுவும் அவர் அரசியலுக்கு வரும் முன்பாகவே இவ்வளவு எதிர்ப்பு என்றால் அவர் வந்தால் அவ்வளவு தான். இதில் மற்றவர்கள் எப்படியும் நினைத்துவிட்டு போகட்டும், பொது மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். தி இந்து தமிழ் நாள்தழின் கருத்து கணிப்பில் கூட 40 % மக்கள் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்றுதான் வாக்களித்திருக்கிறார்கள். அதே போல 1 மாதத்திற்கு முன்னர், தந்தி டிவி நடத்திய வாக்கெடுப்பிலும் 55% மக்கள் அரசியலுக்கு அவர் தேவை என்று தான் வாக்களித்திருக்கின்றனர். இதிலிருந்து நாம் தெளிவான முடிவெடுக்க முடியாது என்றாலும் இதை நாம் புறக்கணித்துவிடவும் முடியாது. ஏனென்றால் அவர் எந்த தெளிவான முடிவும் எடுக்கும் முன்பே இத்தகைய நிலை என்றால் ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்து தமிழகம் முழுவதும் ஒரு ரவுண்ட் வந்தார் என்றால் இந்த நிலை இதை விட அதிகரிக்குமே தவிர குறையாது என்பது என் எண்ணம்.
இன்னொன்றையும் சொல்வார்கள் தன்னுடைய படம் வெளிவரும் போது தான் இது போன்ற ஸ்டண்ட் அடிப்பார் ரஜினி என்று. இது எவ்வளவு கீழ்த்தரமான வாதம். என்னமோ அவரா வந்து ஊடகங்களை அழைத்து வாங்க வாங்க, நான் அரசியலுக்கு வருவது என் கையில் இல்லை அது ஆண்டவன் கையில் என்று பேட்டி கொடுப்பது போல இருக்கிறது. இப்படி சொல்ல அவர் என்ன மூளை இல்லாதவரா. அவர் ஊடகங்களைச் சந்திப்பதே அரிதானது. அப்படி சந்திக்கும் போதெல்லாம் நீங்கள் எப்போது அரசியலுக்கு வருவீர்கள் என்று கேட்பது ஊடகங்கள் தானே தவிர, ரஜினி அல்ல. இங்கு பல படங்கள் ரஜினியைக் காட்டி ஓடும் போது அவருக்கு இந்த கீழ்த்தரமான பப்ளிசிட்டி அவசியம் தானா. அவருக்கு படம் நடிக்க வேண்டிய அவசியமே இல்லாத போது, இப்படி ஸ்டண்ட் அடித்து படம் ஓடவைக்க என்ன அவசியம் வந்துவிட்டது.நடித்து சம்பாதிக்கிறார். இதில் என்ன தப்பு இருக்கிறது என்று தெரியவில்லை.அவருக்கு பணம் தான் முக்கியம் என்றால் வருடத்திற்கு மூன்று படங்கள் நடித்து சம்பாதிக்க முடியும் ஆனால் அப்படி செய்யவில்லை. காரணம் உங்களுக்கே தெரியும்.
மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்காதவரெல்லாம் அரசியலுக்கு வரக் கூடாதாம். அவர் ஒரு நடிகர் என்பதை மனதில் நினைத்துக் கொண்டு இந்த கேள்வியைக் கேட்டுவிட முடியுமா? அப்படியிருந்தும் பெரும்பாலான நேரங்களில் தன்னுடைய கருத்துகளை தைரியமாக
வெளிப்படுத்தியிருக்கிறார். இவரளவுக்கு பொது பிரச்சனையில் குரல் கொடுத்த வேறு பெரிய நடிகர்களை உங்களால் காட்ட முடியுமா ? ஒரு ஆட்சியில் இருந்த அதிருப்தியை யாருக்கும் பயப்படாமல் எடுத்துரைத்தவர் ரஜினி மட்டும் தான்.தனக்கு ஒரு பிரச்சனை வரும்போது ஊரைக்கூட்டி ஒப்பாரி வைத்தோ, இல்லை ஓடிப்போய் முதலவர் காலில் விழுந்தோ காரியம் சாதிக்க நினைத்தது கிடையாது. தனியாகவே சமாளித்தார் அதிலிருந்து மீண்டும் வந்தார். அரசியல் இயக்கத்தில் இருந்து கொண்டே எத்தனையோ பேர் மக்கள் பிரச்சனைகளை பேசுவதில்லை என்பதையும் மறுத்துவிட முடியுமா ??
ஒருவர் அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே இவ்வளவு எதிர்ப்பு வருகிறது. அவர் கட்சி ஆரம்பித்த பின்னர் அவருடைய கொள்கைகளை விமர்சிப்பதை விடுத்து தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது நியாயம் தானா எனவும் யோசித்துப் பார்க்க வேண்டும். அவர் தமிழ்ப்பெண்ணை திருமணம் புரிந்து தமிழர்களுக்கே தன் பிள்ளைகளையும் மணமுடித்து தமிழராகவே மாறிவிட்ட பிறகு அவரை கன்னடர் என்று சொல்வது நியாயம் தானா என்பதையும் யோசிக்க வேண்டும். அவர் தன்னை கன்னடராக எங்காவது, இல்லை எந்த நிகழ்சியிலாவது சொல்லியிருக்கிறாரா? தன்னுடைய படம் உலக அளவில் பேசப்படும் போதெல்லாம் இது எனக்குக் கிடைத்த பெருமையல்ல ஒட்டுமொத்த தமிழருக்கும் கிடைத்த பெருமை என்று தான் சொல்லியிருக்கிறார்.
தன்னுடைய சினிமா செல்வாக்கை வைத்து மட்டும் ஆட்சியைப் பிடித்துவிட முடியும் என்று நினைப்பதற்கு அவரும் முட்டாளில்லை தமிழக மக்களும் முட்டாள் இல்லை. அவருடைய நடவடிக்கைகளைப் பார்த்து தான் அவருடைய ரசிகர்களே ஓட்டுப் போடும் நிலை வந்துவிட்டது. சரி அவர் அரசியலுக்கு வரவில்லை. அப்போது யாரை மக்கள் தேர்ந்தெடுத்துவிடுவார்கள். மிஞ்சி மிஞ்சிப் போனால் இதே கலைஞர் இல்லை இதே ஓபிஎஸ் இவ்வளவு தானே. விஜயகாந்த் அரசியலுக்கு வந்தபோது இருந்த மக்கள் ஆதரவு இப்போது இல்லாததற்கான காரணம் அவருடைய செயல்பாடுகள். ஒரு வேளை அவரைப் போலவே ரஜினியும் இருந்தால் அவரையும் மக்கள் புறக்கணிக்க ரொம்ப நாள் ஆகாது. இன்னொன்று, ரஜினி அரசியலுக்கு வந்தால் பிற அரசியல் வாதிகளைப் போல இருக்க மாட்டார் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. இது அவரை பல காலம் பார்த்து வரும் தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். 1996 ல் ஆட்சி தேடி வந்ததையே தவிர்த்தவர் அவர் என்பதையும் மக்கள் மறக்கவில்லை.
என்னை பொறுத்தவரை தலைவர் அடுத்த வருட ஆரம்பத்தில் கட்சி ஆரம்பித்து, தன் கொள்கைகளை தெளிவாக வகுத்து தமிழகம் முழுதும் வலம் வந்து தேவையான கூட்டணியை சேர்த்துக் கொண்டு தேர்தலைச் சந்திக்க வேண்டும். ஒரு வேளை மக்கள் அவரைப் புறக்கணித்தால் மனமுவந்து ஏற்றுக் கொண்டு பொதுவாழ்வில் இருந்து ஓய்வு பெற்றுவிட வேண்டும். ஒருவேளை அவர் அரசியலுக்கு வரவில்லை என்றால் அதையும்விட அதிகம் மகிழ்சியடைவேன். யாரிடமும் இழிபழிக்கு ஆளாகாமல் கடைசிவரை சூப்பர் ஸ்டாராக இருப்பது எவ்வளவு பெருமை. இந்த முறை அவர் அரசியலுக்கு வராவிட்டாலும் அவரை அரசியல் விடாது அல்லது அரசியல்வாதிகள் விடமாட்டார்கள் என்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது..... மாற்றம் கொண்டுவந்த தலைவரின் தொண்டனா இல்லை என்றும் மாறாத சூப்பர் ஸ்டார் ரசிகனா என்ற கேள்விகளுக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்..... பதில் எதுவாகினும் ஏற்றுக் கொள்வேன் என்றாலும் இரண்டாவது நடந்தால் ரொம்ப மகிழ்சியடைவேன்.....
நல்லவுங்களுக்கெல்லாம் அரசியல் சரிவராது தலைவா... வந்தால் உங்களையும் கெட்டவராக்கிவிடுவார்கள்... முடிவு உங்கள் கையில்,,என்ன முடிவெடுத்தாலும்
என்றும் உங்கள் ரசிகன் சீலன்....
மாற்றுக்கருத்துகள் தாராளமாக வரவேற்கப்படுகின்றன...
நல்ல கட்டுரை...
ReplyDeleteஅரசியலுக்கு வருவேன் என சொன்ன போது வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்... இப்போ... இந்த நிலமையில் அவரது அரசியல் வாழ்வுக்கு அடிப்போடாமல் என்றும் மக்கள் மனதில் சூப்பர் ஸ்டாரகவே இருப்பதே நலம்...
சரியாகச் சொன்னீர்கள் சார், அப்போது வந்திருந்தால் இன்றைக்கும் அவரே முதல்வராக இருந்திருப்பார்... இனிமேல் வந்தால் பெயர் போய்விடும்... பார்ப்போம் எந்த முடிவெடுத்தாலும் சரியாகத்தான் இருக்கும்.. இருக்க வேண்டும்..
Deleteenna thambi over react ah theriyuthu.... rajni vanthamattum maarva pothu.. poda, poi padikkura vazhiya paru.. summa rajni,dravid nu kittu... dai summa comedy kku than sonnen ....:) :) :) nalla post.. thelivana sinthanai... rajni varuvarnuthan pesikurangka...parpom..
ReplyDeleteகாமெடிக்கு சொல்றேன்னு சொல்லி உண்மையை சொல்லீட்ட டா, டேய் டேய்.... சரி சரி பார்ப்போம்...
Deletesuper post thalivare...
ReplyDeletedai mano....:) :) :)
Deleteஅருமையான கட்டுரை..
ReplyDeleteமுதல் வருகைக்கும் முதல் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.. தொடர்ந்து வருகை தர வேண்டும்..
Delete