தி இந்து தமிழ் நாளிதழும் ஒரு வருடமும்
ஒரு நாள் எதார்த்தமாக எங்கள் பல்கலைக்கழக நூலகத்தில் தி இந்து தமிழ் நாளிதழை படிக்க நேர்ந்தது. (அறிமுகமான சமீபம்). படித்து முடித்தவுடன் மற்ற தினசரிகளைப் படிக்கும் போது ஏற்படும் ஒரு உணர்வு ஏற்படவில்லை. அசாதாரணமான ஒரு உணர்வு தோன்றியது. ஆம் மற்ற தினசரிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்ததால் முதல் முறை படித்தவுடனேயே அதன் மீது ஒரு ஈர்ப்பு வந்தது நிஜம்.உடனே விடுதியிலும் அந்த நாளிதழை வரவழைக்க பெருமுயற்சி எடுத்து ஒருமாத போராட்டத்திற்கு பின் வெற்றிகரமாக வரவழைத்தும் விட்டோம்.அதிலிருந்து தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன் .மிகைப்படுத்தவில்லை உண்மையாகவே மற்ற தினசரிகளிலிருந்து தி இந்து தமிழ் வேறுபட்டதாகவே எனக்கு தோன்றுகிறது.
தினசரிகளுக்கே உரிய அனைத்து வரைமுறைகளையும் உடைத்துக் கொண்டு வெளியே வந்து அதில் வெற்றியும் காண்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை தானே??தமிழ் தினசரிகளுக்கே உரிய சில குறைபாடுகள் இதற்கும் பொருந்தினாலும், நாம் எதிர்பார்க்கும் விசயங்களில் நடுநிலைத்தன்மையோடு நடந்து கொள்வது உண்மையிலேயே பெரிய விசயம் தான்.செய்திகளுடன் சில இணைப்பாக வெளிவரும் மற்ற தினசரிகளுக்கு மத்தியில் இணைப்புகளுடன் சில செய்திகளாக வருவதுதான் இதனுடைய வெற்றி ரகசியம்.ஒவ்வொரு நாளும் வண்ணமயமான இணைப்புகளோடு வெளிவந்து வாசகர் வட்டத்தைப் பெருக்கிக் கொண்டதோடு தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தையும் உருவாக்கியிருப்பது இதனுடைய வளர்சிக்கு காரணங்களுள் ஒன்றெனக் கூறலாம்.
தி இந்து தமிழ் நாழிதழின் சிறப்பு என்றால் அது நடுப்பக்கம் தான்.அற்புதமான பல அரிய தகவல்களோடு அலங்கரிக்கப்படும் நடுப்பக்கத்தின் ரசினாகவே மாறிவிட்டேன் நான்.நாளிதழ் வாங்கியவுடன் தலைப்புச் செய்தியைப் பார்க்கும் பழக்கம் போய் நடுப்பக்கத்தைப் பார்க்கும் பழக்கம் எனக்கு வந்துவிட்டது என்று கூடச் சொல்லலாம். விடுமுறை நாட்களில் இன்னும் சிறப்பாக இருக்கும். ஒவ்வொரு நாளும் சிறந்த எழுத்தாளர்களால் நிரப்பப்படும் பக்கமாக நடுப்பக்கத்தை தாராளமாகக் கூறலாம்.கலை, இலக்கியம் ,விளையாட்டு, அறிவியல் என அனைத்தையும் தரும் இடம் தி இந்து தமிழின் நடுப்பக்கமாகத் தான் இருக்க முடியும். இதழாளர் சமஸ் எழுதும் நிலம்,நீர்,காற்று எனும் தொடர் மிகவும் நன்றாக இருக்கும். இப்போது தான் நீர் பகுதி முடிந்து நிலம் நோக்கிய பயணம் தொடரவிருக்கிறது.
நீர் பகுதியில் மீனவர்களைப் பற்றியும், அவர்களின் வாழ்க்கையைப் பற்றியும் ஓரளவேனும் தெரிந்து கொள்ள வைத்தது இந்த பதிவுகள் தான்.கடலோடிகள் எனும் அழகிய தமிழ் சொல்லையும் இங்குதான் நான் முதன்முதலில் அறிந்து கொண்டேன். கடலோடிகளின் பிரச்சனைகளை அவர்களின் குரலிலேயே பதிய வைத்து ஒரு நீரோட்டத்துக்கே உரிய தெளிவை ஏற்படுத்திவிட்டார் திரு.சமஸ். படிக்காதவர்கள் அவருடைய வலைப்பக்கத்தில் படித்துப் பாருங்கள்.
தி இந்து தமிழ் நாளிதழின் இன்னொரு சிறப்பு இணைப்பு மலர்களைக் கூறலாம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு இணைப்புடன் வெளிவரும் ஒரே தமிழ் தினசரி இதுவாத்தான் இருக்கும்.அதிலும் மாயாபஜார், பெண்கள் உலகம்,இந்து டாக்கீஸ் , இளைஞர் ஸ்பெசல் உள்ளிட்டவை மிகவும் அருமையாக இருக்கும். வாசகர்களுக்குரிய மரியாதையை தருவதிலும் தி இந்து தமிழ் தனித்தே நிற்கிறது. நமது குரலிலேயே பகிர்ந்து கொள்ளும் வசதி கூட வந்துவிட்டது. உங்கள் குரல் மூலம் நமது பகுதி பிரச்சனைகள் குறித்தும் பதிவு செய்யலாம்.ஒரு ஒரு பக்கத்திற்கும் மேலே கூட தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.செய்திகளை விரிவாக தருவது போல தகவல்களை விரிவாக தருவது தான் ஆச்சரியமான ஒன்று.இப்போது ஒவ்வொரு நாளும் ஒரு பிரபலங்கள் எழுதும் புதிய பகுதி அறிமுகமாயிருக்கிறது.தங்கர்பச்சான்,கிரேசி மோகன் தொடர்கள் அற்புதமாக போகிறது.
எல்லாமே சிறப்பு தான எனப் பார்த்தால் எதுவுமே இவ்வுலகில் முழுமையாக சிறப்பாக இருக்க முடியாது, அவ்வகையில் இதற்கும் சில குறைபாடுகள் உண்டு. அரசியலில் ஆளுங்கட்சி சார்பாகவே இருக்கிறது என்பது என் கருத்து. தலையங்கமும் அவ்வளவு ஒரு பலமானதாக தெரியவில்லை. (என்னைப் பொறுத்தவரை தலையங்கம் என்றால் தினமணி தான்). அதே போல தி.மு.க பற்றி நேர்மறையான பதிவுகள் வருவது குறைவு தான்.இன்னொன்று தேவையில்லாத அல்லது அதிகம் விரும்பாதவைகளுக்கு அளவுக்கதிகமான முக்கியத்துவம். ஆன்மீக சிறப்பு மலர் முழுதும் அதற்காகவே தான். நான்கு பக்கங்கள் முழுதும் அதே!! அதே போல சொந்தவீடு மலரும் அப்படித்தான்.நிறைகளோடு ஒப்பிடும் போது குறைகள் அவ்வளவாக இல்லை. எனவே மற்ற தினசரிகளுக்கு மாற்றாக கண்டிப்பாக தி இந்து தமிழ் நாளிதழை வரவேற்கலாம். இந்த ஒரு வருடத்திலேயே இப்படி என்றால் இனி வரும் காலங்களிலும் கண்டிப்பாக மேன்மையுறும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது........
பதிவு குறித்தும் தி இந்து தமிழ் நாளிதழ் குறித்தும் உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளலாமே....

தி இந்து நாளிதழை நாங்களும் வாங்குகிறோம்! உண்மைதான் தமிழ் இதழ்களில் இந்த இதழ் வித்தியாசமாக உள்ளது. குறிப்பாக நீங்கள் சொல்வது போல நடுப்பக்கம் மிகச்சிறப்பு! இணைப்புக்களும் சிறப்பான ஒன்று! நல்லதொரு நாளிதழாக மிளிர்வது நிச்சயம்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteசரியாகச் சொன்னீர்கள் சார், நல்லதொரு நாளிதழாக மிளிரும்.. விரைவான வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்...
Deleteநானெல்லாம் பேப்பர் படிக்குறதே பெரிய விசயம், நீ இவ்ளோ டீடெயிலா எழுதிருக்க,, சூப்பர்.. தொடர்ந்து எழுது டா..
ReplyDeletethanks da, nee english paper mattum thana patippa????!!!!
Deletesuper about the hindu tamil..
ReplyDeletethanks sir.. keep visiting my blog sir..
Deleteஎன்னாது... தி ஹிந்து தமிழில் வந்து உள்ளாதா? நல்ல செய்தி தான். வளரும் வயட்டிஹில், ஒன்றரை கிலோ மீட்டர் பொது நூலகத்தை நோக்கி ஓடி போய் ஹிந்து ஆங்கில செய்தி தாளை எடுத்து கடைசி பக்கத்தை திருப்பி, அதற்க்கு முன் பக்கம் உள்ள விளையாட்டு செய்தியை படித்தபின் தான், நாளே ஆரம்பிக்கும். அந்த காலத்தில் தான் சூதாட்டம் விளையாட்டில் வரவில்லையே.
ReplyDeleteமிகச்சரியாகச் சொன்னீர்கள் சார், இன்றைக்கும் ஹிந்து நாளிதழில் விளையாட்டுச் செய்திகளில் அதே சுவை இருக்கிறது. ஆனால் விளையாட்டுகள் தான்???? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்...
Deleteஉங்களுக்கு ரொம்ப பிடிச்ச ஒரு விஷயத்தை பத்தி எழுதிருக்கீங்க:) நானும் கூட ஆன்லைன் ல ஹிந்து தமிழ் படிக்கிறேன்:) நன்றி சகோ!
ReplyDeleteநன்றி சகோ, ஆமாம் நாளிதழ் அப்படியே ஆன்லைனிலும் இருப்பது சிறப்பான ஒன்று.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ ...
Deleteவணக்கம்
ReplyDeleteசரியாக சொன்னீர்கள்... வருங்காலத்தில் வித்தியாசமான வளச்சியாக இருக்கும்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆமாம் சார், வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்...
Deleteநல்லதொரு செய்தி
ReplyDeleteநன்றி ஜீ, வருகைக்கும் கருத்துரைக்கும்...
Deleteஅருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்...
ReplyDeleteமிக்க நன்றி சார், வருகைக்கும் கருத்துக்கும் ...
Deleteநன்று சொன்னீர்கள் நண்பரே
ReplyDeleteமிக்க நன்றி ஐயா..
Deleteபல புதிய தளங்களை இந்து நாளிதழ் திறந்திருக்கிறது என்பது உண்மை
ReplyDeleteஅருமையா எழுதுகிறீர்
கலக்குங்க.. தொடர்க
ஆமாம் சார், பல புதிய தளங்களை மற்ற தின்சரிகள் தொட நினைக்காத தளங்களை தொட்டிருக்கிறது தி இந்து தமிழ் நாளிதழ், நன்றி சார்..
Deleteவணக்கம் !
ReplyDeleteவலைச்சர அறிமுகத்திற்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் !
சிறப்பான தங்கள் ஆக்கங்களைத் தொடருங்கள் மென் மேலும்
தங்கள் ஆக்கங்கள் சிறந்து விளங்கட்டும் .
http://blogintamil.blogspot.ch/2014/09/SocietalAwareness.html
இந்து தமிழ்ப்பத்திரிக்கையின் தொடக்க முயற்சியில் பல சிறுபத்திரிக்கைப் படைப்பாளிகளைத் தேர்ந்து இணைத்துக் கொண்டது.
ReplyDeleteபடைப்பாளிகளாக மட்டுமல்லாமல் பத்திரிக்கைஆசிரியர்களாகவும் பரிணமித்த அவர்களுள் பலர்தான் தமிழ் இந்துவை நம்மைப் போன்றவர்கள் விரும்பிடக் காரணம் .
நல்ல பதிவும் பகிர்வும்!
வாழ்த்துகள்!!!
சிறந்த திறனாய்வுப் பகிர்வு
ReplyDeleteதொடருங்கள்
இப்பொழுது தான் தொடர ஆரம்பித்துள்ளேன்.
ReplyDeleteநேரம் கிடைக்கும்போது தங்களின் பழைய பதிவுகளையும் படிக்கிறேன்.