Friday, September 19, 2014

எண்ணக் கிறுக்கல்கள் - 1 ( WEEK END SPECIAL -1)


எண்ணக் கிறுக்கல்கள் - 1


கடந்த சனிக்கிழமை வழக்கம்  போல BROWSING செய்து கொண்டிருந்த போது கருவாச்சி காவியம் புத்தகம் பதிவிறக்கக் கிடைத்தது. வைரமுத்து எழுத்து எனக்கு பிடிக்கும் ஆதலால் பதிவிறக்கி படிக்க ஆரம்பித்தேன்.சனி , ஞாயிறு என விடாமல் 290 பக்கத்தையும் இரு மூச்சாக படித்து முடித்துவிட்டேன். ரொம்ப அருமையான புத்தகம்.கிராமத்து வட்டார வழக்கு மொழியில் மிக அற்புதமாக எழுதியிருந்தார் வைரமுத்து. கருவாச்சியைக் கதாநாயகியாக்கி காவியம் படைத்திருந்த ஒரு கிராமத்து மண்வாசனை பொங்க ஒரு அற்புதமான படைப்பாக இதைக் கருதலாம். உண்மையிலேயே படித்து முடித்த போது நம்மையும் நம் கண்களையும் அறியாமலேயே ஒரு துளி கண்ணீராவது நாம் சிந்துவோம். மனசு கணப்பது போன்று தோன்றும்.கஸ்டங்கள் வருவது தான் வாழ்க்கை. ஆனால் கருவாச்சிக்கு கஸ்டமே வாழ்க்கையாகியிருந்தது.. சே !!! சான்ஸே இல்லை.. முடிந்தால் நீங்களும்  படித்துப் பாருங்கள்...இந்த வாரம் 15 ஆம் தேதி அதிகம் எதிர்பார்க்கப்படும் ஐ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. முந்தைய நாளே பாடல்கள் வந்துவிட்டன. ஏ.ஆர் ரகுமான், எனக்குப் பிடித்த சங்கர் ஆகியோருக்காக பாடலை பதிவிறக்கினேன். நன்றாக இருக்கிறது என்றும் சொல்ல முடியவில்லை, நல்லாயில்லை என்றும் சொல்ல முடியாது. பரவாயில்லை ரகம். மெர்சலாயிட்டேன் அனிருத் குரலில் சுமார் ரகம். பூக்களே சற்று ஓய்வெடுங்கள் பாட்டு செம மெலடி, நைஸ் சாங்.

எந்திரன் ஆல்பத்திற்கு பிறகு ரகுமானுக்கு ஆல்பம் மட்டும் தனி ஹிட் கிடைக்கவில்லை. அது இந்த படத்திலும் தொடரும் எனத் தெரிகிறது. கோச்சடையான் பாடல்களும் முதலில் இப்படித்தான் இருந்தது.பின்னர்,படத்தோடு பார்க்கையில் நன்றாகவே இருந்தது. அதைப்போல ஐ பாடல்களும் நன்றாக‌ இருக்கும் என நம்புவோம். அப்புறம் ஐ டீசர், ப்பா சான்ஸே இல்லை ?? சங்கர் பிரம்மாண்டம் செய்திருக்கிறார்... விகரமா இது ?? என்ன உழைப்புடா?? நீங்களும் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

ஐ இசை வெளியீட்டு விழா வழக்கம் போல சொதப்பல் தானாம். காரணம் ஜெயா டிவி. தலைவர் மட்டும் இல்லை என்றால் கதை கந்தலாயிருக்கும். அர்னால்ட் பேசிக் கொண்டிருக்கும் போதே மைக்கை பிடுங்காத குறை தானாம்.பாதியிலே கிளம்பியே விட்டாராம். காலந்தவறாமையை இனியாவது உணரட்டும் தமிழ் சினிமா. என்னைப் பொறுத்தவரை இந்த விழாக்களுக்கெல்லாம் விஜய் டிவிதான். சன் டிவி கூட நன்றாக பண்ணுவார்கள்.தலைவர் எண்ட்ரிக்கு ஸ்டேடியமே அதிருச்சாம். காந்தி ஜெயந்திக்கு ஜெயாடிவியில் தரிசிக்கலாம் என நினைக்கிறேன்.

பி.கு: இந்திய வரலாற்றில் ஒரே நாளில் அதிகம் பேர் பார்த்து ரசித்த வீடியோ ஐ டீசர் தானாம். ஒரே நாளில் 20 லட்சம் பார்வைகள்.இதற்கு முன் தலைவரின் கோச்சடையான் ஒரே நாளில் 18 லட்சம் பார்வைகள். என்னுடைய கணிப்பு ஐ படம் எந்திரன் ரெக்கார்டுகளை முறியடித்துவிடும் என நினைக்கிறேன்.பொறுத்திருந்து பார்ப்போம்..


கத்தி இசை  வெளியீடும் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே 18 ஆம் தேதி நடந்து முடிந்துவிட்டது.விழாவில் விஜய் கொஞ்சம் பொடிவைத்து பேசியிருக்கிறார். தமிழன், துரோகியும் இல்லை விரோதியும் இல்லை என,சரி அது அவரோட தனிப்பட்ட விசயம். எப்படியோ படம் ஐ படத்தோடு தீபாவளிக்கு வெளியாவது உறுதியாகிவிட்டது.கத்தி பாடல் பதிவிறக்க விருப்பம் இல்லை. பார்ப்போம் ஐ யா இல்லை கத்தியா என??????


ஞாயிற்று கிழமை வானவராயன் வல்லவராயன் படத்திற்கு போனோம். ம.கா.பா ஆனந்துக்காக. முதல் படம் மாதிரியே தெரியவில்லை. செமயா நடித்திருக்கிறார். சின்னத்திரை போல‌ சினிமாவிலும் ஜெயித்துவிடுவார் என்றே சொல்லலாம்.படமும் பரவாயில்லை, நன்றாகவே இருந்தது. ஒரு முறை பார்க்கலாம்.இந்த வாரம படம் எதுவும் இன்ட்ரெஸ்டாக இல்லை. அரண்மனை நன்றாக இருந்தால் போகலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறோம்.உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சி தான் ஜெயிக்கும் என நினைக்கிறேன். இங்கே திருநெல்வேலியில் பா.ஜ.க மேயர் வேட்பாளரையே வாபஸ் வாங்கச் செய்து அதிமுக வில் சேர வைத்துவிட்டனர். கஸ்டமாக இருந்தது? ஒரு நாள் லீவு போச்சே என்று....????கோவையில் வேட்பாளருக்கு அடி உதை என நாளிதழில் படித்தேன். அரசியல்ல அதுவும் அதிமுக அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என நண்பன் அடித்த‌ கமெண்ட் நியாபகத்திற்கு வருகிறது.ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாக வேண்டியது. மீண்டும் ஒரு புதிய மனு தாக்கல் செய்து 27க்கு தள்ளிவைத்தாயிற்று. அதுவும் விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தலாம்... ஈழத்தாய்க்கு விடுதலைப்புலிகள் அச்சுறுத்தலாம், பட்டம் கொடுத்தவங்கள............????எப்படியும் இதிலிருந்து வெளிவந்துவிடுவார் ஜெ என நினைக்கிறேன்.

ஒரே வாரத்தில் மூன்று பணியிட,பணி மாற்றங்களை சந்தித்த சகாயம் IAS தலைமையில் சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த குழுவுக்கு எதிராக தமிழக அரசே மேல்முறையீடு செய்துள்ள அவலமும் நடந்தேறியிருக்கிறது. எங்காவது இது போன்ற கொடுமை நடக்குமா தெரியவில்லை. ஒரே வாசகம் லஞ்சம் தவிர் ! நெஞ்சம் நிமிருக்கு இவ்வளவு அலைக்கழிப்புகளா....?????

உலகிலேயே அதிக பரிசுத்தொகை கொண்ட கிரிக்கெட் டூரான‌  சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிகளின் தகுதிச்சுற்றிலேயே வெளியேறிப்போனது இந்தியாவின் மும்பை இந்தியன்ஸ்.ரோகித் சர்மா விளையாடாததால் பொல்லார்டை கேப்டனாக்கினர். கேப்டன் எவ்வாறு இருக்க கூடாதோ அவ்வாறு நடந்து கொண்டார் அவர்.  ஹர்பஜனை கேப்டனாக்கியிருக்கலாம். அவரின் தலைமையில் தான் ஒரு சாம்பியன்ஸ் கோப்பையையும் வென்றது மும்பை.

எல்லோருக்கும் பிடித்த சென்னை அணியும் முதல் ஆட்டத்தில் கொல்கத்தாவுடன் தோற்றுப் போனது. எனக்குப் பிடித்த பஞ்சாப் அணி வெற்றியுடன் ஆட்டத்தை துவக்கியிருப்பது மகிழ்சி அளிக்கிறது. அதுவும் எனக்குப் பிடித்த ஜார்ஜ் பெய்லியே ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துவைத்தது கூடுதல் சந்தோசம். டிராவிட்டுக்கு பிறகு எனக்கு மிகவும் பிடித்த கேப்டன்,,, கூல் பெய்லி தான். செமயா வழிநடத்துவார். இதில் என்ன சிறப்பு என்றால் அவர் நேற்று ஜெயித்த அணியும் அவருடைய அணிதான். ஆஸ்ட்ரேலிய BIG BASH ல்  அவர் கேப்டனாக இருந்து இரண்டாம் இடம் பெற்றுத்தந்த அணி.இந்த முறையும் ஏதாவது ஒரு இந்திய அணி கோபையை வென்றால் மகிழ்ச்சி, எனக்குப் பிடித்த பஞ்சாப்பே வென்றால் ரொம்ப சந்தோசபடுவேன்.போன முறை என் ஹீரோ டிராவிட் அணி பைனலில் தோற்றுப்போன வருத்தம், இன்னும் இருக்கிறது.....


இந்தவார காமெடி: 

உ.பி:   தலைவரே சொத்து குவிப்பு தீர்ப்பு மட்டும் வரட்டும் ,அப்புறம் நீங்க தான் தமிழ் நாட்டின் நிரந்தர சி.எம் !!!

தலைவர்: அட போப்பா, சொத்துக் குவிப்பு தீர்ப்பு வற்றதுக்கு முன்னாடி ஸ்பெக்
ட்ரம் வழக்கோட‌ தீர்ப்பு வந்திரும் போலிருக்கு??????????????????


இந்த வார ஹைக்கூ:

எல்லாக் கடவுள்களுக்கும் பிள்ளைகள் இருக்கின்றார்களோ இல்லையோ... ??

ஆனால் எல்லா பிள்ளைகளுக்கும் கடவுள்கள் இருக்கின்றார்கள் !

‪#‎அம்மா‬ #அப்பாவாரவிடுமுறை சிறப்பாக அமைய வாழ்த்துகளுடன் 

                                                                        
                                                                                                               உங்கள் சீலன்...உங்கள்  கருத்துகளான ஊக்கம் தான் என் எழுத்துகளின் ஆக்கம். எனவே உங்கள் கருத்துகளை மறக்காமல் பகிர வேண்டுகிறேன்

26 comments:

 1. சுவையான பகிர்வு! சினிமா பாடல்களிலும் படங்களிலும் முன்பு போல ஆர்வம் இல்லை! ஆளுங்கட்சிதான் இடைத்தேர்தல்களில் ஜெயிக்கும்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. விரைவான வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார், உங்களையே நானும் வழி மொழிகிறேன்...

   Delete
 2. ப்பா, எல்லாம் கலந்து கட்டி அடிச்சுருக்கியே டா, கத்தி பாட்டு சூப்பர் டா, ஏன் download பண்ணல.. இந்த clt20 cup சென்னை தான் எடுக்கும், கொல்கத்தா வோட ஜஸ்ட் மிஸ்ஸாயிருச்சு... post is really mixed one and nice கலக்கு...

  ReplyDelete
  Replies
  1. எதுக்கு 30 mb வேஸ்ட் பண்ணவா.. போடா,!!!! பார்ப்போம் எது ஜெயிக்குதுன்னு, வருகைக்கும் கருத்துக்கும் thanks டா...

   Delete
 3. நல்ல ஒரு அவியலைச் சுவைத்தது போல இருந்தது! நல்ல்ல்ல்லா கலக்குங்க! ரசித்தோம்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கம் நன்றி சார்...

   Delete
 4. வணக்கம்

  சிறந்ததிறனாய்வு... நகைச்சுவை சிறு கவிதை எல்லாம் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கம் நன்றி சார்...

   Delete
 5. தங்களுடன் உரையாடியது போலவே இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்தும் நன்றி ஜீ...

   Delete
 6. அருமையான அறுசுவை விருந்து. எல்லாவற்றையும் ரசித்தேன். ஆனால் அந்த கருணை கிழங்கு தான் அதிகம் வேகவைத்தால் மிகவும் குலைந்து கொழ கொழ என்று இருந்தது. அது மட்டும் இல்லாமல் சற்று முத்திய கிழங்கு போல் உள்ளது. உப்பு வேற ஜாஸ்தி. இதில் பரிமாறுபவர்கள், இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று அதை மட்டும் போட்டு கொண்டே இருந்தார்கள். அருகில் இருந்த சிலர் அதை மருந்து போல் உண்டாலும், நான் மட்டும் வேண்டாம் என்று விட்டு விட்டேன். மற்றவைகள் எல்லாம் சூப்பர்.
  கருணை கிழங்கு என்று நான் குறிப்பிட்டது... கிரிகெட்டை தான்.

  www.visuawesome.com

  ReplyDelete
  Replies
  1. சாருக்கு கிரிக்கெட் பிடிக்காதோ ??? வருகைக்கும் வெளிப்படையான கருத்துக்கும் நன்றி சார், இது போல சொல்வது தான் எனக்கு பிடிக்கும். தொடர்ந்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை தயங்காமல் கூறுங்கள்....

   Delete
  2. சூ மு. : என்னைவிட கிரிக்கட்டை ரசித்தவனும் இல்லை.
   சூ . பி. : என்னை விட கிரிகெட்டை வெருத்தவனும் இல்லை.

   சூ = சூதாட்டம்.

   Delete
  3. you are correct sir, but the only entertainment is cricket for me...

   Delete
 7. Replies
  1. வருகைக்கும் கருத்தும் நன்றி ஐயா...

   Delete
 8. ஒரு புதிய கம்போ பதிவு:)) அருமையான தொடக்கம் சகோ:)) ஹைக்கூ , காமெடி எல்லாம் சூப்பர்!! கருவாச்சி அவ்ளோ கஷ்டபாடு வளர்த்த பிள்ளையை நினைத்தால் முடிவு எனக்கு மிகுந்த வருத்தத்தை தந்தது:((
  அடுத்த வீக் end ட்ரீட் உண்டு தானே:)

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ, கண்டிப்பா வாரா வாரம் முயற்சிக்கிறேன்.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ...

   Delete
 9. அரசியல், சினிமா, விளையாட்டு என கலந்து கட்டி ஆடிய பகிர்வு...
  அருமை சீலன்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சார், வருகைக்கும் கருத்துக்கும்...

   Delete
 10. நல்ல தொகுப்பு
  வாழ்த்துக்கள்
  ஒரு வாக்கியம் ஒரே வாரம் மூன்று பதவிகள் ...
  ஆழ்ந்த பார்வை ஜெய்
  தொடர்க

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு நன்றிகள் சார், தொடர்ந்து வருகை தர வேண்டும் சார்...

   Delete
 11. நல்ல பகிர்வு,நல்ல தகவல்கள்.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

  ReplyDelete