Thursday, September 18, 2014

புவித்தகவலியல்-GEO INFORMATICS


புவித்தகவலியல்-GEO INFORMATICS

நான் படிக்கும் பொறியியல் படிப்பு குறித்து எழுதிய முந்தைய பதிவின் தொடர்ச்சி தான் இது. முந்தைய பதிவு....


http://pudhukaiseelan.blogspot.com/2014/09/be-geo-informatics-engineering.html

புவித்தகவலியல் (GEO INFORMATICS) என்பது பூமியைப் பற்றிய தகவல்களை சேமித்து உபயோகப்படுத்துவது என்பதாகும்.அவ்வாறு சேமிக்கும் தகவல்களை எந்த முறைகளைப் பயன்படுத்தி சேமிக்கலாம், எந்த முறைகளைப் பயன்படுத்தி உபயோகிக்கலாம் என்பதைப்பற்றி படிக்கும் பொறியியல் தான் புவித்தகவலியல் பொறியியல்(GEO INFORMATICS ENGINEERING) ஆகும்.இன்று சாதாரண குடிமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ள ஜி.பி.எஸ் (GLOBAL POSITIONING SYSTEM)எனப்படும் குளோபல் பொஸீஸனிங் சிஸ்டம் அதாவது புவியிடங்காட்டி முறை என்பது இந்த புவித்தகவலியலின் ஒரு பயன்பாடு தான்.(பார்த்தவுடன் புரியும் வகையில் எளிமையான படங்களே கொடுக்கப்பட்டுள்ளது)





புவித்தகவல்களை எவ்வாறு பெறலாம் ?


அடிப்படையாக நாம் படித்த நில வரைபடங்கள் (MAPS), போட்டோகிராமெட்ரி(PHOTOGRAMMETRY) எனப்படும் புகைப்படங்களியல் ( சீரான உயரத்தில் பறந்து பூமியின் மேற்பரப்பை புகைப்படம் எடுப்பது),சர்வேயிங்(SURVEYING) எனப்படும் நிலஅளவியல், எல்லோரும் நன்கறிந்த செயற்கைகோள் தகவல் தொழில்நுட்பம்(SATELITE TECHNOLOGY), ரிமோட் சென்ஸிங்(REMOTE SENSING) எனப்படும் தொலை உணர்வு , கார்ட்டோகிராபி (CARTOGRAPHY) எனப்படும் வரைபடவியல், ஜியாகரபிக் இன்பர்மேசன் சிஸ்டம்(GEOGRAPHIC INFORMATION SYSTEM -GIS) எனப்படும் புவித்தகவல்கள் போன்ற பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி  பெறலாம்.



போட்டோகிராமெட்ரி(PHOTOGRAMMETRY) :


பூமியிலிருந்து குறிப்பிட்ட உயரத்தில் ஏர்கிராப்ட்(AIRCRAFT) உதவியுடன் பறந்து புகைப்படங்கள் எடுத்து எடுக்கப்பட்ட இடங்களின் தகவல்களைப் பெறுவது. உதாரணமாக ஒரு இடத்தின் கட்டிடங்கள், நீர்நிலைகள்,சாலைகள், ரயில்வே, ரோடுவே போன்ற தகவல்கலைப் பெறலாம். இரண்டு தொடர்சியான போட்டோகிராமெட்ரிக் புகைப்படத்தை வைத்து அந்த இடத்தின் முப்பரிமாண(3  DIMENSION  தோற்றத்தை ஸ்டீரியோஸ்கோப்(STEREOSCOPE) எனப்படும் கருவியைப் பயன்படுத்தி பெறமுடியும்.முதல் புகைப்படத்திற்கும் இரண்டாவது புகைப்படத்திற்கும் இடங்கள் குறந்தபட்சம் 60 % பொருந்த வேண்டும். அதாவது முதல் படத்திலிருக்கும் தகவல்கள் அனைத்தும் இரண்டாவது படத்தில் 60 % இருக்க வேண்டும்.(OVERLAPPING) இப்படி இருந்தால் தான் முப்பரிமாண அமைப்பை பெறமுடியும்.இது தான் அடிப்படைத் தத்துவம்.





சர்வேயிங் (SURVEYING) :


நாம் பார்த்த,படித்த அளவியலை  உபயோகப்படுத்தி நிலத்திலிருந்து தகவல்களைப் பெறுவது தான் நிலஅளவியல்.இது குறுகிய பயன்பாட்டைக் கொண்டிருக்கும். அதாவது சிறிய பரப்பைப் பற்றிய தகவல்களை மட்டுமே பெறமுடியும். சாலை அமைக்கும் போது மேற்கொள்ளும் அளவைகள், கட்டுமானப் பணிகளின் போது மேற்கொள்ளும் அளவைகள், நீர்நிலைகளில் மேற்கொள்ளப்படும் அளவைகள், ரயில்வே அளவைகள் போன்றவற்றைக் கூறலாம். இது சில அடிப்படை உபகரணங்களைப் பயன்படுத்தி செய்யப்படும். இப்போது பல நவீன உபகரணங்கள் வந்துவிட்டது. தியோடலைட்(THEODOLITE), டோட்டல் ஸ்டேசன்(TOTAL STATION),லெவலிங் ஸ்டாப்(LEVELER),ஈ.டி.எம்(ELECTRONIC DIDTANCE MEASURMENT - EDM), இப்போது ஜி.பி.எஸ்(G.P.S) கூட பயன்படுத்தப்படுகிறது.இதில் பல வகைகள் உள்ளன.







கார்ட்டோகிராபி(CARTOGRAPHY):

பூமி வரைபடங்களை உருவாக்கி அதைப் பயன்படுத்தி தகவல்களைப் பெறுவது. இது மேப் (MAP)உருவாக்க என்னென்ன மேற்கொள்ளப்படவேண்டுமோ அவற்றைப் பயன்படுத்த வேண்டும்(CREATION OF MAP). சர்வேயிங்(SURVEYING) தான் இதனுடைய அடிப்படை. ஒரு வரைப்டத்தின் சிறப்பியல்புகளான ஸ்கேல்(SCALE),பரப்பளவு(AREA), மேப்பின் பயன்பாடு(MAP FEATURES) ( அது எவ்வகையிலான மேப்) போன்றவற்றைச் சார்ந்தது.அட்ச ரேகை, தீர்க்கரேகை,,(LATITUDE),(LONGITUDE), ஈக்குவேட்டார் (EQUATOR)போன்றவற்றைப் பயன்படுத்தி தகவல்களைப் பெறுவது.







ரிமோட் சென்சிங்க்(REMOTE SENSING): 


ஒரு இடத்தைப்பற்றிய அல்லது பொருளைப் பற்றிய அனைத்து தகவல்களையும் அவற்றுடன் நேரடித் தொடர்பில்லாமல்(WITH OUT PHYSICAL CONTACT) பெறுவது தான் ரிமோட் சென்சிங் எனப்படும் தொலை உணர்வு ஆகும். இது எவ்வாறெனில் சூரிய ஒளிக்கற்றைகளையோ,லேசர் கற்றைகளையோ, மைக்ரோ அலைகளையோ, ரேடியோ அலைகளையோ பயன்படுத்தி பெறப்படுகிறது.அதாவது அவற்றை கருவியிலிருந்து அனுப்பி பட்டு எதிரொளித்து வருவதன் மூலம் தகவல்களைப் பெறமுடியும்.இதுவும் செயற்கை கோளின் ஒரு பயன்பாடு ஆகும்.





                                    



(அடுத்த பதிவில் செயற்கை கோள்களைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வோம்.)





சந்தேகங்கள் இருப்பின் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தலாம்





                                                                                          உங்கள் சீலன்..





உங்கள்  கருத்துகளான ஊக்கம் தான் என் எழுத்துகளின் ஆக்கம். எனவே உங்கள் கருத்துகளை மறக்காமல் பகிர வேண்டுகிறேன்

10 comments:

  1. விரிவான விளக்கங்கள்! எளிமையாக எல்லோருக்கும் புரியும் வகையில் அமைந்தது சிறப்பு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உடனடி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார், தொடர்ந்து வருகை தர வேண்டும்

      Delete
  2. அவ்ளோ பயன்படுத்துறோம் ஆனால் அந்த படிப்பை பத்தி தெரியாமலே இருந்திருக்கோமே!!! சூப்பர் சகோ! வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. thanks sago, keep visiting my blog sago..

      Delete
  3. அருமையா விளக்குகிறீர்கள்...
    தொடருங்கள்... தொடர்கிறோம்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்,கண்டிப்பாக தொடர்கிறேன்,தொடர்ந்து வருகை தர வேண்டும் சார்....

      Delete
  4. சிறந்த திறனாய்வுப் பார்வை
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்,தொடர்கிறேன் சார்.. தொடர்ந்து வருகை தர வேண்டும் சார்...

      Delete
  5. எளிமையான படத்தோட சூப்பரா விளக்கீருக்க டா, அப்புறம் remote sensing பத்தி சரியா புரியல‌.. மத்தபடி சூப்பர். இந்த gps பத்த்யும் தெளிவா சொல்லீரு..


    ReplyDelete
    Replies
    1. its okay da, i will post a post separately for remote sensing and gps .i think, it will clear your doubts.. keep in touch da..

      Delete