நான் ஏன் இஞ்சினியரிங் (B.E GEO INFORMATICS ENGINEERING ) சேர்ந்தேன் ?
என்னுடைய PROFILE பார்த்தவர்களுல் சிலர் நான் படித்துக் கொண்டிருக்கும் GEO INFORMATICS ENGINEERING என்பது எதைப்பற்றியது எனக் கேட்டனர்.அதனால் என்னுடைய பொறியியல் படிப்பைப் பற்றி விரிவாகவும் முடிந்த அளவு தமிழிலும் எழுத முயற்சி செய்கிறேன் !! அதற்கு முன்னால் நான் ஏன் இந்த படிப்பில் சேர்ந்தேன் ? எப்படிச் சேர்ந்தேன் ? என்பதையும் சொல்லிவிட்டு அடுத்த பதிவில் அதைப் பற்றி விரிவாக எழுதுகிறேன்.
நான் ப்ளஸ் டூ படிக்கும் போதே இஞ்சினியரிங் சேரக்கூடாது என நினைத்திருந்தேன். நல்லா படிக்கலைனாலும் ஏதோ படிப்பேன் என்பதால் BSC AGRI, VEDNARY SCIENCE என்ற ரேஞ்சில் கனவு கண்டேன். நாம நினைக்குறதுதான் எதுவும் நடக்காதே. ஆவலோடு ரிசல்டைப் பார்த்தேன் HEART ATTACK ஏ வந்துவிடும் போல் இருந்தது. 1000 மார்க் தான் வந்தது.வேதியலில் வெறும் 97 மார்க் மட்டும் தான் போட்டிருந்தது.ஏதோ தவறு நடந்திருப்பதை உணர்ந்தேன். உடனே வேதியியல் பேப்பர் காப்பி வாங்கிப் பார்த்தேன். 168 என்றிருந்தது.
இந்த வருடம் நம்ம ஊரு பையன் ஒருத்தனுக்கு கணிதத்தில் 40 மார்க் விடுபட்டிருந்ததே அதுபோல எனக்கு 71 மார்க் விடுபட்டிருந்தது.பல தடவை சென்னைக்கு அலைந்து திரிந்து மிகவும் சிரமப்பட்டு கடைசியில் 1071 மார்க் வாங்கினேன். அதற்குள்ளாக வேளாண்மைப் படிப்புகளுக்கான கலந்தாய்வு முடிந்து போயிருந்தது. இப்போது போல வழக்குப் போடுமளவிற்கு பின்புலமும் இல்லை , வழிகாட்டிகளும் இல்லை. நம்ம விதி அவ்ளோதான் இனி இஞ்சினியரிங் தான்னு மனச தேத்திக்கிட்டேன்.அப்புறம் இப்போது போல அப்பொது நெட், தகவல் தொழில்நுட்பம் பற்றியெல்லாம் எனக்கு தெரிந்திருக்கவில்லை.
இஞ்சினியரிங் தான்னு முடிவாயிருச்சு. எத படிக்கலாம்னு யோசிச்சேன். ஏன்னா வீட்ல நான் சொல்றது தான். ( அவ்ளோ பவரான்னு கேக்காதிங்க,வீட்ல யாரும் படிக்கல அதான் )இன்னொன்னு தனியார் காலேஜ்ல சேரக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். ( 4 வருசத்துக்கு 5 லட்சம், லோன் கூட 2 லட்சம் தான் ). 180 கட் ஆஃப் மார்க் னால நெறயா அரசுக் கல்லூரிகள்ல CORE SUBJECTS (CIVIL,MECHANICAL,ECE,EEE,CSE ) இருந்துச்சு.ஆனா நான் யாருக்கும் தெரியாத படிப்பா படிக்க்னும்னு நெனச்சேன். அப்படி யோசிச்சப்ப BIO MEDICAL, PETROL CHEMICAL, PHARMACEUTICAL, GEO INFORMATICS போன்றவை இருந்தன. அதில் பயோ மெடிக்கல் தனியாரில் இருந்ததால் அதை எடுக்கவில்லை. ( நல்ல வேளை எடுக்கலை, எடுத்துருந்தா அவ்ளோ தான், ஏன்னா அது ஈசிஇ டிப்பார்ட்மென்டாம் !!! )இந்த கெமிஸ்ட்ரியால தான் என் கனவே போச்சு அதுனால அத எடுக்கக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்.
கடைசில GEO INFORMATICS தான் மிச்சம். அது சென்னை அண்ணா யுனிவர்சிட்டியிலும், திருநெல்வேலி அண்ணா யுனிவர்சிட்டியிலும் தான் இருந்துச்சு. எனக்கு திருநெல்வேலி கிடைச்சது.அதுனால அதயே எடுத்துட்டேன். ஆனா இங்க வற வரைக்கும் இந்த படிப்போட பேர தவிர வேற ஒன்னும் தெரியாது.எதுவும் தெரியாம எடுத்துட்டு LOAN கேட்டு BANK ல போயி நின்னப்ப, அங்க மேனேஜர் மேலையும் கீழையும் பார்த்தார். எந்த காலேஜ் ன்னு கேட்டார். நான் ANNA UNIVERSITY என்றதும் உடனே லோன் சாங்க்ஸன் பண்ணி கொடுத்திட்டாங்க, ஒரு கேள்வியும் கேக்கல.
முதன் முதலா ஹாஸ்டல்ல தங்கி ப்டிக்கணும். அப்புறம் இங்கிலிஸ் மீடியம் வேற. ( தமிழ் மீடியத்துல படிச்சே ஒன்னும் புரியல இதுல இங்கிலீசு வேற ), புது வாழ்க்கை,புது படிப்பு . ரொம்ப பயந்தேன். ஆனா இப்போ ப்ரீ பைனல் இயர் வந்தாச்சு. நல்ல வேளை இந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் பக்கம் என்னோட நெனப்பே போகல, இப்போ என் ப்ரண்ட்ஸ் படுற கஸ்டத்த பாக்கும் போது அப்டித்தான் தோணுது. தமிழ் மீடியம் படிச்சவங்க ரொம்ப ஹார்ட் வொர்க் பண்ணனும். இப்போ கொஞ்சம் கொஞ்சமா என் படிப்ப நான் கத்துகிட்டு வர்றேன். அடுத்த பதிவில் அதை டீட்டெயிலா சொல்றேன்....
உங்கள் சீலன்...
உங்கள் கருத்துகளான ஊக்கமே என் எழுத்துகளின் ஆக்கம் ! எனவே உங்கள் கருத்துகளை மறக்காமல் பதிவு செய்ய வேண்டுகிறேன்....
தங்களின் அடுத்த பதிவு பலருக்கும் உபயோகமாக இருக்குமென நம்புகிறேன் நண்பரே....
ReplyDeleteஉடனடி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜீ, கண்டிப்பாக எல்லோருக்கும் பயன்படும்படி எழுத முயற்சிக்கிறேன், தொடர்ந்து வருகை தர வேண்டும் ஜீ....
Deleteஎன்னாது... 71 மார்க் கம்மியா போட்டு இருந்தாங்களா...? அட பாவிகளா.. ஒரு வேலை எனக்கும் இந்த மாதிரி தான் ஆகி இருக்குமோ? ஆனாலும் நான் உங்களை மாதிரி விசாரிக்காம... போட மார்கே போதும்னு கிளம்பி வந்துட்டேன்... நல்ல பதிவு.. வாழ்த்துக்கள். நான் ஏன் -எப்படி கணக்கு பிள்ளை ஆனேன் என்பதை இங்கே படியுங்க...
ReplyDeletehttp://vishcornelius.blogspot.com/2014/08/blog-post_15.html
www.visuawesome.com
விரைவான வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார், ஆமா சார், நானும் அப்படி இருந்துருக்க வேண்டியவன், ஆனா அநியாயத்துக்கு கெமிஸ்ட்ரில வெறும் 97 போட்டுருந்துச்சு, ப்ராக்க்டிகல் மட்டுமே 50 மார்க், அதான் டவுட்டுல அப்லை பண்ணிட்டேன்..அந்த பதிவை படித்துவிட்டேன். தொடர்ந்து வருகைதர வேண்டும் சார்..
Deleteநானுமே இதென்ன படிப்பு என்று யோசித்து, சரி சின்ன மூளையை குழப்புவானேன் என்று விட்டுவிட்டேன். சகோ இந்த பதிவு ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு. இதை தொடர்வது சந்தோசம். இந்த நடையில் தெரியும் தெளிவில் நிஜமா சொல்றேன் " என் சகோதரன் முன்னேறிஇருக்கிறான் என்று பெருமையா நினைத்துக்கொண்டேன். ஒரு சின்ன செடி துளிர்த்து வளருவதை பார்ப்பதே அலாதி இல்லையா சகோ. அப்படி இருக்கு உங்க எழுத்தை பார்க்கும் போது. இன்னும் பல உயரங்களை என் சகோ தொட வாழ்த்துக்கள்:)
ReplyDeleteஉங்கள் போன்றவர்களின் ஊக்கம் தானே என்னைத் தொடர்ந்து எழுதச்செய்வதே !! மனமார்ந்த நன்றி சகோ !!
Deleteநல்ல பகிர்வு...
ReplyDeleteதொடருங்கள்...
thankyou sir, keep visiting my blog sir...
Deleteகேட்டது நான் மட்டும் இல்லையா அப்போ ?? 1000 மார்க் வாங்கிட்டு எனக்கு போன் பண்ணி வருத்தப்பட்டது இன்னும் நியாபகம் இருக்குடா, iam waiting to know your subject....
ReplyDeleteஅடக் கொடுமையே 71 மார்க் கொறைச்சுப் போட்டு இருக்காங்க! கல்வித்துறை தூங்கி வழிந்து உங்க எதிர்காலத்தையே பாதிச்சிருச்சே! தொடருங்கள்!
ReplyDeleteஅன்பு நண்பரே தங்களுக்கு ஒரு விருது வழங்கப்பட்டுள்ளது
ReplyDeletehttp://www.malartharu.org/2014/09/versatile-blogger-award.html#more