Thursday, February 25, 2016

ஒரு நாள்


ஒரு நாள்




நள்ளிரவுத் தூக்கம் தூக்கத்துல கனவு

கனவுல அவ வந்தா தூக்கமும் கனவாகும்

கனவு கலைய தூக்கம் தெளிய காலை மணி எட்டாகும்

குளிச்சும் குளிக்காம வந்து

வளிச்சிக்குட்டு நிப்பேன் தலைய ‍ -  பின்னே 

சாப்பிட்டும் சாப்பிடாம காலேஜ் வந்து நின்னா

கண்களும் தேடும் நாலுபுறம் ‍-  அவள‌

க்ளாஸ ஒரு உருட்டு உருட்டி நிமிஷத்துக்கு 

பத்துதரம் உத்து உத்து பார்த்தா

காதோர அழகுமுடி மறச்சு நின்னு ஆடும் 
                      
                      -   கண்ண பாக்க விடாம‌

காத்துல அந்த முடி ஒதுங்குமா ஒதுங்காதானு

எதிர்பார்த்துக் காத்துருந்தா முடிஞ்சுபோகும்  - ஒரு நாளே...!




( நண்பன் காளியின் டைரியிலிருந்து )










7 comments:

  1. இதற்கே ஒரு நாளா......

    ReplyDelete
  2. வணக்கம்
    கற்பனை அற்புதம்... இரசித்தேன் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. ரசனையான பகிர்வு முடி ஒதுங்குமா [[[

    ReplyDelete
  4. ஹஹஹஹ் உங்க நண்பருக்கு ரொம்பவே பொறுமைதான்...ஒருவேளை காதல் என்றால் வந்து விடும் போல...ஆனால் மிகவும் ரசித்தோம்...அந்த வயதைக் கடந்தவர்கள்தானே நாங்களும்...இதே கல்லூரிக் கால நாட்களைக் கடந்தவர்கள் என்ற நிலையில்...

    ReplyDelete
  5. இனி...நண்பரின் டைரியை படிக்கலாம்

    ReplyDelete
  6. அன்பின் சீலன்...

    இன்றைய எனது 'தொடரும் சூப்பர் பதிவர்கள்' என்னும் பதிவில் தங்களைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறேன்.

    நேரம் இருக்கும் போது அந்தப் பக்கமா வந்து பாருங்க.... நன்றி.

    http://vayalaan.blogspot.com/2016/03/blog-post_8.html

    ReplyDelete
  7. நன்றாக இருக்கிறது

    ReplyDelete