Sunday, May 21, 2017

ரஜினி அரசியல்

ரஜினி அரசியல்



ரஜினியின் அரசியல் அறிவிப்பும் அதன் எதிர்வினைகளுமே இந்த வாரம் முழுதும் பிரதான பேசு பொருள்... ரஜினி அரசியலுக்கு வந்தால் அவரின் நிறை குறை என்னவாக இருக்க முடியும் என்பதே இந்த பதிவின் நோக்கம்.. நாட்டுக்கு இப்போ ரொம்ப முக்கியம் என்று நினைப்பவர்கள் தயவு செய்து கிளம்பிவிடுங்கள்....

முதலில் ப்ளஸ்கள்...




1) உலகில் மிகப்பெரிய ரசிகர் மன்ற கட்டமைப்பு ரஜினியுடையது. 96க்கு பின்பு ரசிகர் மன்ற பதிவை நிறுத்திவிட்டார்கள். அந்த சமயத்திலேயே கிட்டத்தட்ட 50000 ரசிகர் மன்றங்களும் அமைப்பு ரீதியாக மட்டுமே 25 லட்சம் ரசிகர்களும் செயல்பட்ட மிகப்பெரிய இயக்கம். இன்றைக்கு அதில் பாதியை கணக்காக எடுத்தாலும் குறைந்தபட்சம் 10 லட்சம் பேர் ரசிகர் மன்றத்தில் செயல் நிலையில் இருப்பவர்கள். ரஜினி தொடர்ந்து சினிமாவில் வெற்றிபெறுவதற்கும், இன்றும் முதலிடத்தில் இருப்பதற்கும் இது தான் பெரிய ப்ளஸ் பாயின்ட்... எனவே ரஜினி அரசியலுக்கு வந்து ஒரு மாநாட்டை கூட்டினால் இதுவரை நடைபெற்ற அனைத்து மாநாடுகளைவிடவும் அதிக கூட்டம் வரும்.. எவ்வித கள உழைப்புகளும் இல்லாமலேயே அசால்ட்டாக 20 லட்சம் ரசிகர்கள் வாக்குகளை வெல்லமுடியும். 2006ல் விஜயகாந்த் பெற்ற வாக்குகளை எளிதாக பெற முடியும்.. சரியான களப்பணியாற்றினால் விஜயகாந்த் வாங்கிய வாக்குகளின் இருமடங்கை எளிதாக பெறமுடியும். 40லட்சம் வாக்குகள் (குறைந்தபட்சமாக).

2)இரு பெரும் ஆளுமைகள் இருக்கும் போதே விஜயகாந்த் 27 லட்சம் ஓட்டுகளினை பெற்றார். இப்போது ஒரு கட்சி போட்டிக்கு இல்லை.ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கம் இருபிரிவாக இருக்கிறது. ஒருங்கினைக்கும் பலம் கொண்ட ஆளுமை இல்லை. பன்னீர் தலைமையில் ஒன்றுபட்டாலும் கூட இந்த ஒன்றரைக் கோடி தொண்டர்களை தக்கவைக்க முடியாது. குறைந்தபட்சம் 70 லட்சம் ஓட்டுகள் பெறலாம்.. மிதி 70 லட்சம்  வாக்குகள் எக்காரணம் கொண்டும் திமுகவுக்கு விழாது. அதில் குறைந்தபட்ச வாக்குகளை ரஜினி பெறுவார் எனக்கொண்டாலும் 30 லட்சம் வாக்குகளை பெறுவார். ஆக முன் கிடைத்த வாக்குகளை சேர்த்தால் 70 லட்சம் வாக்குகள்...


3) திமுகவுக்கு இருக்கும் ஒன்றரைக் கோடி வாக்குகள் அப்படியே விழும்... அதில் ஓட்டை விழ வாய்ப்பில்லை. எனவே திமுக எதிர் ரஜினி என்ற நிலை தான் ஏற்படும். இங்கிருந்து ரஜினிக்கு வாக்குகள் விழ வாய்ப்பில்லை.


4)மீதமிருப்பவை அல்லு சில்லு கட்சிகள். பா.ம.க தலை கீழாக நின்று தண்ணி குடித்தாலும் 15 லட்சம் வாக்குகளை தாண்ட முடியாது. விஜயகாந்தின் நிலையான வாக்கு வங்கியென 7% கொண்டாலும் அது ஒரு 20 லட்சம். புதிதாக வளர்ந்திருக்கும் நாம் தமிழர் ரஜினிக்கெதிராக கடுமையாக களப்பணியாற்றினால் ஏற்கன்வே எடுத்த 5 லட்சம் வாக்குகளை டபுளாக்க முடியும்.அவ்வளவுதான் அவுங்க கெப்பாசிட்டி.மீதமிருக்கும் இரு தேசிய கட்சிகள் மற்றும் பிற எல்லாம் சேர்த்து ஒரு 20 லட்சம் எனக் கொள்ளலாம். நடுநிலை வாக்குகள் 50 லட்சம் என்முடித்தால் மொத்தமாக 4 கோடி.


5)யார் ஒன்றைரை கோடி வாக்குக்கு மேல் பெறுகிறாரோ அவரே வெல்வார். இதில் ரஜினி அமைக்கப்போகும் கூட்டணி மிக முக்கியம். பஜகவோடு சேர்ந்தால் கிடைக்கும் 70 லட்சம் வாக்கு அதிகம் உயர வாய்ப்பில்லை. மோடியின் தொடர்சியான பிரச்சாரம் இருந்தாலும் இதைக் காரணம் காட்டியே ரஜினி எதிர்ப்பு வாதிகள் ஒன்றாகிவிட அதிக வாய்ப்பாகிவிடும். எப்படியாகினும் பிஜெபி என முடிவு செய்தால் 1 கோடி வாக்கு பெற்று ரஜினி வலுவான எதிர்க்கட்சி தலைவராகத்தான் ஆக முடியும். திமுக,காங்கிரஸ்,கம்யூனிஸ்ட்,விசிக சேர்ந்து எட்ஜ் பெற்றுவிடவே வாய்ப்பு அதிகம்.


6)ஒரு வேளை பிஜெபி வேண்டாம் என முடிவு செய்து காங்கிரஸ்,த.மா.கா, விடுதலை சிறுத்தைகள்,கம்யூனிஸ்டுகள் என்ற கூட்டணி வைத்தால் 120லிருந்து 140 இடங்கள் பெற்று முதல்வராகும் வாய்ப்பு பிரகாசம்.. அப்படி நடந்தால் திமுக ஒரு அணியாகவும், பிஜெபி,பா.ம.க,அதிமுக கூட்டணி வைத்து ஒரு அணியாகவும் போட்டியிட்டு இரண்டாவது இடத்துக்கு பலமான போட்டி நிகழ்ந்து  ரஜினிக்கு இன்னும் கூடுதல் எட்ஜ் கிடைக்க வாய்ப்பு அதிகம்.




7) இது எதுவும்  நடக்காமல் தனியாகவே வந்தால். இது நடக்க மிகவும் வாய்ப்பு குறைவே. அரசியல் ரஜினி எதிர் ஆண்டி ரஜினி என மாறும். அதை களத்தில் தீவிரமாக எதிர் கொண்டால் மிகப்பெறும் வரலாற்று வெற்றியடைய முடியும். தனியாக வந்து களப்பணியும் ஆற்றாமல் சும்மா இப்போது போல பேசிக் கொண்டிருந்தால் ரஜினி அரசியல் அவ்வளவுதான்.

8) ரஜினி வருகையால் பெருத்த அடி வாங்கப்போவது விஜயகாந்த் தான். பாவம் ஒரு கட்டத்தில் 40 லட்சம் வாக்கு வாங்கியவர் 5 லட்சம் பெறுவதற்கே கஸ்டப்படவேண்டும். கிட்டத்தட்ட கட்சியை கலைக்கும் நிலை கூட வரலாம். அடுத்த அடி அதிமுகவுக்கு. நான் கணித்திருப்பதே குறைந்த பட்சம் ரஜினிக்கும் அதிகபட்சம் எதிராகவும் தான் கணித்திருக்கின்றேன்.. ஒரு வேளை களப்பணியில் ரஜினி ஜெவை புகழ்ந்தோ, அவர் ஆட்சியின் சிலவற்றை தொட்டோ, இல்லை அவருடைய நட்பின் தனிப்பட்டமுறையில் சிலாகித்தோ பேசினால் அடி இன்னும் பலமாகும் அதிமுகவுக்கு. ஒன்றரைக் கோடி கொன்ட இயக்கம் அரைக்கோடியை தக்கவைக்கவே படு போராட்டமாகிவிடும்.



9) ரஜினி என்றைக்கும் வட மாவட்டத்தில் படு ஸ்ட்ராங். பா.ம.க அதிகமாக அன்றைக்கு பயந்தது ரஜினியின் இந்த அளவு செல்வாக்கைக் கண்டு தான். விஜயகாந்த் அரசியலுக்கு வந்து பா.ம.கவுக்கு எவ்வளவு பெரிய அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தாரோ அதைவிட பெரிய அதிர்ச்சி பா.ம.கவுக்கு கிடைக்கும்.

10) ரஜினியால் லாபம் பெறப்போகும் ஒரே கட்சி நாம் தமிழர் தான். தன் வாக்கு வங்கியை இவரை தமிழன் இல்லை என்று சொல்லியே 5% வரை உயர்த்துவதற்குக் கூட வாய்ப்பிருக்கிறது.....


11) மொத்தத்தில் தாமதம் இன்றி வரும் செப்டம்பருக்குள் கட்சி தொடங்கி அதிமுக ஆட்சியை கவிழ்த்து 6 மாதம் மக்களோடு பயணித்தால் இன்னும் இரண்டு தேர்தல்களுக்கு அசைக்க முடியாத சக்தியாய் திகழ முடியும்.... ஆனால் இவையெல்லாம் எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்....



No comments:

Post a Comment