Friday, May 19, 2017

என்ன பெரிய ரஜினி





என்ன பெரிய ரஜினி, ரஜினின்னு துள்ற‌ என பலர் நினைக்கக்கூடும்... ஏனென்றால்...
.
.
நேற்றைய பேட்டியை உன்னிப்பாய் கவனித்திருந்தால் புரியும்.. நேற்றையதை மட்டுமல்ல தலைவரின் ஒவ்வொரு பேச்சுகளுமே இதயத்திலிருந்து வருபவை.. திட்டமிட்டு இதை பேச வேண்டும் என்று பேச முயற்சிக்கமாட்டார்.. நேற்று பேசிக்கொண்டு இருக்கும் போது இத்தனை வருடமாக ஏன் ரசிகர்களை சந்திக்கவில்லை என்பதற்கு பதில் சொல்லும் போது முன்னாடி பட வெற்றி விழாக்களில் சந்திப்பேன்.. இப்போது அந்த வாய்ப்பு அமையவில்லை.. எந்திரன் நன்றாக போனது இருந்தும் அதற்கான வெற்றி விழாவை தயாரிப்பு நிறுவனம் நடத்த முன்வரவில்லை, கபாலி நன்றாக போனது அதற்கு நடத்தமுடியாமல் போய்விட்டது... இத்தோடு முடித்துக் கொண்டிருக்கலாம்.... ஆனால் கோச்சடையான்,லிங்கா சரியாக போகவில்லை என்பதையும் சொன்னார்.. இன்றைய தேதியில் எந்த முண்ணனி நடிகரும் சொல்லத்தயங்கும் இடம் இது தான்.. படம் சூரமொக்கையாக தோற்றிருந்தாலும், மேடையில் வந்து நின்றுகொண்டு ஜெயித்திருக்க வேன்டிய படம் என சமாளிக்கத்தான் பார்ப்பார்கள்... ஆனால் ரஜினி. அப்படியல்ல...!



.
.
இப்பவெல்லாம் என்ன மாஸ்.. 1996 தேர்தல் சமயத்துல ரஜினியே முதல்வர் என்றால் மறுப்பதற்கு ஆள் இல்லை.. கலைஞர் கூட ஆம் என்றிருப்பார்.. அந்த சமயத்துல கூட சுயநலமா அரசியலுக்கு வரத தவிர்த்தவர் ரஜினி... இன்னொன்று அதே சமயத்துல அவர் தமிழன் இல்லைன்ற சர்ச்சை பலமா இருந்துச்சு.. பேட்டில கேட்டாங்க... தமிழகத்தை ஒரு தமிழன் தான் ஆள வேண்டும்னு சொல்றாங்களே? அப்டின்னு....யோசிக்காம சொன்னார்.. வரவேற்கிறேன்.. தமிழகத்தை ஒரு பிராமினோ,தேவரோ,செட்டியாரோ ஆள்வது தான் தப்பு... தமிழன் ஆள்வது சரி.. என்னைப் பொறுத்தவரை தமிழ்பேசும் எல்லாருமே தமிழர்கள் தான்னு..
.
.
நான் பலமுறை சொன்ன விசயம் தான்.. ஜெயலலிதா என்பவரின் கடைசி ஆட்சியை பார்த்த 90களின் இளைஞன் தான் நானும்.. ஆனால் அவரின் முந்தைய இரு ஆட்சிகளை பற்றி நிறைய தெரிந்தவன்.. முதல் ஆட்சிகால ஜெ என்றால் இன்னமும் கூட‌ பலர் நடுங்குவார்கள்.. எப்படியென்றால் அவரை எதிர்த்து கேள்வி கேட்கக்கூட யாரும் இல்லை தமிழகத்தில் அந்த அளவு பயம்.... ஆனால் ரஜினி செய்தது அவரின் சினிமா தொழிலையே முடக்கும் செயல்... பாட்சா வெற்றி விழா கதையல்ல இது.. இது பலருக்கும் தெரிந்திருக்காது... ஜெவை மேடையில் வைத்துக்கொண்டே தவறு செய்கிறீர்கள் என எச்சரித்த ஒரே நபர் ரஜினி... அதுக்கப்புறம் தான் அந்த ஆண்டவனே காப்பாற்ற முடியாது மேட்டரெல்லாம்...
.
.
சர் இப்போது ரஜினி அரசியலுக்கு வருவது பற்றிய என்னுடைய பார்வை என்ன என்று கேட்டால் ஓப்பனாக சொல்ல வேண்டும் என்றால் பயமாக இருக்கிறது... அவர் தோற்றுவிடுவாரோ என்றல்ல.. அவரின் உடல் நிலை அதற்கு ஒத்துழைக்குமா என்று தான் பயம்.... எம்.ஜி.ஆர் கூட சில தோல்விப்படங்கள் கொடுத்ததால் தான் அரசியலில் முழுமூச்சாக இறங்கினார்.. இறங்கிய பின் சில வெற்றிப்படங்கள் கொடுத்தார் என்றாலும் நம்பர் 1 என்ற இடத்தை இழந்த பின்பு தான்... ஆனால் இந்த 67 வயதிலும் நம்பர் 1 என்ற இடத்தில் இருக்கிறார் ரஜினி... ஏன் இன்னும் இரண்டு படங்களும் கைவசம் இருக்கிறது... இன்னும் சூப்பர் ஸ்டார்.. 650 கோடி கடந்த வியாபாரம்... அரசியல் என்று வந்தால் அது சினிமா போல எளிதானதா எனத் தெரியவில்லை.... எப்படியோ தலைவர் என்ன‌ முடிவெடுத்தாலும் நலமே...
.
.
அப்புறம் இந்த திடீர் தமிழர்களுக்கு ரொம்ப நாளாவே ரஜினி மேல காண்டு... அதுலயும் நம்ம சீமான் அண்ணனின் தம்பிகளுக்கு... அவர்களிடம் ஒன்றை மட்டும் சொல்கிறேன்... பிறப்பால் ரஜினி தமிழராக இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் அந்த மராட்டிக்காரனை காண்பதற்காகவே தமிழ்கற்ற தேசங்கள் ஏராளம்... ஒரே ஒரு வெளி நாட்டுக்காரன கூட்டிட்டும் வது ஒங்க அண்ணன தமிழ் கத்துக் கொடுக்க சொல்லுங்க தொம்பிகளா... அப்புறம் ரஜினி பத்தி பேசுங்க... சினிமாக்காரன் நாட்டை ஆளக்கூடாது.. ஒங்க அண்ணன் யாரு இஸ்ரேல் பிரதமரோ.... சமூக அக்கறையில் ரஜினியின் பங்கு என்ன, கொள்கை என்ன... இதே கேள்விய உங்க அண்ணன் பூஜாவ வச்சு வாழ்த்துகள் படம் எடுத்துகிட்டு இருக்கும் போது கேட்டிருந்தால் இப்போது கேட்பதில் நியாயம் இருக்கிறது... நல்லது தமிழகத்தை தமிழன் தானே ஆளனும்னு ஆசைப்பட்டிங்க.. இப்போ ஆண்டுகிட்டு இருக்கவற் சுத்தமான கொங்குத்தமிழன்... அப்புறம் இன்னமும் ஏன் கட்சி நடத்திக்கிட்டு கலைச்சுவுட்ற வேண்டியது தானே... பேச ஆரம்பிச்சா பேசிக்கிட்டே இருப்பேன்... ரஜினிய விமர்சனம் பண்ணுங்க..தப்பில்லை.. நியாயமா பண்ணுங்க... அதவிட்டுட்டு தனிப்பட்ட முறையில் விமர்சிச்சா அதுக்கான எதிர்வினை இன்னும் பலமா இருக்கும்.....

No comments:

Post a Comment