Wednesday, November 25, 2015

ஃபேஸ்புக் கவிதைகள்-1


முகப்புத்தகத்தில் நான் எழுதியவைகள்....! ( கிறுக்கியவைகள் ) 


உண்மைதானே....?



1. நாம் நினைப்பவர்கள் எப்பொழுதாவது நம்மை 

நினைப்பவர்களாகஇருப்பார்களா என 

யோசிக்காமல் இருக்கமுடிவதில்லை.......!








2. நாம் கேட்கும் கேள்விகளுக்கு ஒற்றை 

வார்த்தையில் பதில் வரும் போதே தெரிந்து 

கொள்ளலாம், நம்மை தவிர்க்க நினைக்கிறார்கள்

 என்று.....!



3.வாழ்க்கையின் மிகப்பெரிய கொடுமை நாமே 

கற்பனை செய்து கொண்டு இன்னொருவர் மேல்

 அளவு கடந்த அன்பை வைப்பது..........!




4. எத்தனை பெரிய சோகம் வந்தாலும் அதன் சுவடே

 தெரியாமல் சிரித்து மறைப்பதில் ஆண்களை விட

 பெண்கள் கை தேர்ந்தவர்கள்....!



5.ஏதேனும் ஒரு நட்பை தெரிந்தே தவிர்க்கையில், 

கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விடுவோமாயின் 

அவ்விடம் நட்பு நீர்த்துப் போனது என அர்த்தம்....!



                                                                         கிறுக்குவேன்......


                                                                  






5 comments:

  1. கவிதை முயற்சி அருமை சகோ!!

    ReplyDelete
  2. ரசித்தேன் நண்பரே மீண்டும் தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  3. முயற்சிக்கு வாழ்த்துகள். கருத்து நன்று.

    ReplyDelete