பிழைக்கவும் ரஜினி பழிக்கவும் ரஜினியா???
என்ன சொல்லிவிட்டார் ? 20 வருடமாக சொல்வதைத் தான் சொல்லிவிட்டார்.. அதற்கு இந்த அளவு கேவலமாக விமர்சனங்களை வைக்க என்ன அவசியம் இருக்கிறது. நான் யாரைப் பற்றி சொல்கிறேன் என்று இந்நேரம் புரிந்திருக்கும். ஆம் ரஜினி. என்ன பாவம் செய்தாறோ அவர் வாயிலிருந்து உதிரும் ஒவ்வொரு வார்த்தையும் அரசியலாகிவிடுகிறது. கடந்த ஞாயிறன்று நடந்த லிங்கா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசியவை தான் பலத்த அரசியலுக்கு விவாதத்துக்கு உரியதாகியிருக்கிறது. அவர் ஒன்றும் தானாக முன்வந்து அரசியல் பேசவில்லை. சேரன்,அமீர், வைரமுத்து,விஜய குமார் போன்ற திரைஉலகப் பிரபலங்கள் பேசியதற்கு பதில் அளித்தார் அவ்வளவுதான். ஒரு வேளை அவர் பதிலளிக்காமல் போயிருந்தால் அதையும் செய்தியாக்கி அவரை விமர்சிக்காமல் இருந்திருப்பார்களா என்றால் இல்லை என்பது தான் விடை. ஆம் அவர்களுக்குத் தேவை ரஜினியை விமர்சித்து தங்கள் பிரப்ல்யத்தையும் டீஆர்பி ரேட்டிங்கையும் அரசியலில் தங்கள் இருப்பையும் மீடியாக்களின் கவனத்தையும் பெறவேண்டும் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் . இது தான் அவர்களுக்கான தேவை.
சரி விழாவில் என்ன நடந்தது என்பதை பார்த்துவிட்டு அவர்களுக்கான் என் பதில்களை தர விரும்புகிறேன். விழாவில் பேசிய அனைவரும் ரஜினியின் நலம் விரும்பிகள் என்பதைத் தாண்டி ரஜினியின் தீவிர ரசிகர்கள். ஒரு சராசரி ரஜினி ரசிகன் மேடையில் பேசியிருந்தால் என்ன பேசியிருப்பானோ அதைத் தான் சேரனும்,அமீரும்,விஜயகுமாரும் பேசினார்கள். அமீர் , தலைவர் என்று ஒருவரை நான் ஏற்றுக்கொண்டது உங்களை மட்டு தான், நீங்கள் தமிழகத்தின் அடுத்த முதல்வராக வேண்டும் என்று கூறியதும் எழுந்த ஆரவாரமும் கைதட்டல் விசில் சத்தமு அடங்க சரியாக இரண்டரை நிமிடம் தேவைப்பட்டது. ஆம் அது என்னுடைய ஆசைமட்டுமல்ல, இங்கிருக்கும் 2000 பேரின் ஆசை மட்டுமல்ல தமிழர்கள் அத்தனை பேருடைய ஆசைகளும் தான். நீங்கள் பார்க்காத விமர்சனங்கள் இல்லை, இனியும் உங்களை விமர்சிக்காமல் இருக்கப்ப்போவதும் இல்லை. அதையெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் ஒரு அறிவிப்பு மட்டும் வெளிவிடுங்கள் நாங்கள் அனைவரும் அப்படியே உங்கள் பின்னால் வந்துவிடுகிறோம். என்று டைரக்டர் அமீராக அல்ல ஒரு ரசிகனாக பேசினார். சேரன் காந்தி காமராஜருக்கு பிறகு நாங்கள் உங்கள் மீது தான் நம்பிக்கை வைத்திருக்கிறோம், என அவரும் தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தினார்.
இறுதியில் பேசிய ரஜினி வழக்கமான் பேச்சுகளுக்குப் பிறகு, அவர்களுக்கான பதிலை அளிக்க வேண்டியிருந்தது. அவர், அமீர், சேரன், விஜயகுமார் போன்றவர்கள் அரசியல் பேசியதால் நான் பதில் சொல்ல வேண்டும். பதில் சொல்லவில்லை என்றால் திமிர் பிடித்தவன் தலைக்கணம் பிடித்தவன் என்று சொல்வார்கள். அரசியல் என்றால் என்ன, அதனுடைய ஆழம் என்ன , அங்கு எப்படிப் போகவேண்டும் என்பதெல்லாம் எனக்கு நன்றாக தெரியும். அப்படிப் போனால் அங்கு நாம் நினைத்ததை எல்லாம் செய்ய முடியுமா என்ற தயக்கம் எனக்கிருக்கிறது. அரசியலை நினைத்து பயப்படவில்லை. தயங்குகிறேன் அவ்வளவுதான். ஒரு சூழ்னிலை தான் என்னை இங்கு கொண்டுவந்திருக்கிறது, அதே சூழ்னிலை தான் என்னை அங்கும் கொண்டுபோக வேண்டும்...என்னடா இவன் இதையே சொல்றான் அடப் போய்யா என்று சொல்வார்கள், ஆனால் அது தான் உண்மை என்று பேசினார்.
இது தான் ஊடகங்களுக்கும் நடுநிலை என்ற போர்வையில் திரியும் சில மனிதர்களுக்கும் பெரிய தீனியாக அமைந்துவிட்டது. தந்தி டிவி விவாதத்தில் பங்கேற்ற மனுஸ்யப்புத்திரன் ரஜினிக்கு என்ன தகுதி இருக்கிறது எனப் பொங்கி எழுகிறார். தமிழர்களுடைய எந்தப் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்துள்ளார் என்று சொன்னதும் நிகழ்சி நடத்திய பாண்டேவுக்கே கோபம் வந்துவிட்டது. அவர் குரல் கொடுக்காத பெரிய பிரச்சனை எது என திருப்பி கேட்டார், அதற்கு மனுஸ் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் ஒருநாள் உண்ணாவிரதத்தை தவிர என்ன செய்தார் அவர் என்று கேட்டதும் பாண்டே கோபத்தின் உச்சிக்கே சென்று இங்குள்ள அரசியல் கட்சிகள் எல்லாம் உண்ணாவிரதம் இருந்து தற்கொலை செய்து கொண்டார்களோ எனப் பதிலடி கொடுத்தாரே பார்க்கலாம், அவர் முகத்தில் ஈ ஆடவில்லை. சரியான பதிலடி தான். இந்தக் கேள்வியை எல்லாம் கேட்பதற்கு முன்னர் அவர் ஒரு சாதாரண நடிகர் என்பதை ஒருநிமிடம் யோசித்துவிட்டு கேட்க வேண்டும். அப்படியிருந்தும் அவர் பெரியளவிலான பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறார்.
ஒரு ஆட்சியில் இருந்த அதிருப்தியையும், மக்கள் விரோதப் போக்கையும் ஆளுங்கட்சி அமைச்சரை மேடையில் வைத்துக் கொண்டே கண்டித்த நடிகரை இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தில் யாரையாவது உங்களால் காட்ட முடியுமா? தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்ற வசனத்தை தமிழக மக்கள் மறந்துவிடுவார்களா.? த.மா.கா தொடங்கிய பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய மூப்பனாரிடம் உங்கள் கட்சியின் தலைவர் யார் என்று கேட்ட போது சூப்பர் ஸ்டார் ரஜினி என்று போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறியதை எந்த ஊடகவியலாளராவது மறுக்க முடியுமா ? ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய பிறகு இரு மாநில உறவில் விரிசல் வரக்கூடாது என்பதற்காக திரை மறைவில் அவர் எடுத்த ரிஸ்கை யாராவது மறுத்துவிட முடியுமா? காவிரிப் பிரச்சனையில் அர்த்தமற்ற கரண்ட் மறியல நடத்தச் சென்ற பாரதிராஜாவை வெளிப்படையாக விமர்சித்து சென்னையிலே தன்னந்தனியாக உண்ணாவிரதம் இருந்து ஒட்டுமொத்த திரையுலகையும் தன் பக்கம் திருப்பியதுடன் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவு தன் பலத்தை நிரூபித்து நதிநீர் இணைப்புக்கு ஒரு கோடி தருவதாக உறுதியளித்ததை மறக்க முடியுமா? ராஜபக்சேவையும் அவர் ராணுவத்தையும் பார்த்து ஆம்பிளைங்களா நீங்க என பொது மேடையில் பகிரங்கமாக விமர்சித்த வேறு ஒரு நடிகரைக் கூட வேண்டாம் அரசியல்வாதியை காட்டமுடியுமா ? தன்னுடைய படத்திற்கு தொந்தரவு என்றதும் ஊரைக்கூட்டி ஒப்பாரி வைக்காமல், முதல்வர் காலில் விழ கொடநாடு வரை சென்று திரும்பிவராமல் தன்னந்தனியாக சமாளித்த வேறு ஒரு நடிகரை காட்ட முடியுமா? இவ்வளவு ஏன் சீக்கிரம் வந்துடுவேன் ராஜாக்களா என அவர் உடைந்த குரல் கேட்டு தமிழகம் முழுவதும் பக்தியில் மூழகியதை மறக்கத்தான் முடியுமா? இன்றும் பக்தியில் மூழ்கி இருக்கிறது அது எவ்வாறு என்று நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
இன்னொன்று சொல்கிறார்கள். அதைக் கேட்டால் சிரிப்புத் தான் வருகிறது.`படம் வெளி வரும்போது மட்டும் இவ்வாறு அரசியல் பேசி தன்னுடைய வியாபரத்தை பெருக்கிக் கொள்ளும் சீப் பப்ளிசிட்டியாம், பப்ளிசிட்டி செய்து படத்தை ஓட்டும் நிலையிலா ரஜினி இருக்கிறார். அவரே ஒரு பெரிய விளம்பர ப்ராண்டாகிவிட்ட பிறகு அவருக்கு விளமரம் தேவைப்படும் என்று சொல்வதைவிட கீழ்த்தரமான விளம்பரம் இருக்க முடியாது. சரி விளம்பரத்திற்காக அரசியல் பேசுகிறார் என்றால், தமிழகத்தில் மட்டுமா படம் ஓடுகிறது. ஆந்திர்ரவிலும், கர்நாடகாவிலும், கேரளாவிலும், வட இந்தியாவிலும் , ஆஸ்திரேலியாவிலும்,அமெரிக்காவிலும் ஏன் ஜப்பானில் கூட படம் ஓடுவதற்கு இந்த அரசியல் பேச்சு தான் காரணம் என்று சொன்னால் சொல்பவருக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என்று அர்த்தம். அப்படியே பார்த்தாலும் சந்திரமுகி படம் வரும்போது எந்த அரசியல் பேசினார் ?, குசேலன் வந்தபோது என்ன அரசியல் பேசினார்? சிவாஜி வந்த போது என்ன அரசியல் பேசினார்? எந்திரன் வந்த போது என்ன அரசியல் கருத்த்களை தெரிவித்தார்? கோச்சடையான் வந்த போது என்ன பாலிட்டிக்ஸ் பேசினார்? இனியும் படம் ஓடுவதற்காகத் தான் அரசியல் பேசுகிறார் என்று சொல்பவர்களைப் பார்க்கும் போது பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.
தகுந்த ஒரு அறிவிப்பை வெளியிடாத போதே இப்படிக் கொதிப்பதற்கு காரணம் என்ன? பயம், ஆம் ! ஒரு வேலை வந்து விடுவாரோ என்ற பயம் மட்டும் தான் காரணம். அவர் வரக்கூடாது, வரக்கூடது என்று கூவும் நடுநிலைவாதிகள்? அவர் வரவில்லை என்றால் மட்டும் யாருக்கு ஓட்டுப் போட்டு அடுத்த முதலமைச்சர் ஆக்கிவிடப் போகிறார்கள். மிஞ்சி மிஞ்சி போனால் இதே தமிழினத் தலிவர்? கருணாநிதி இல்லை ஊழலலை ஒழிக்கப் போகும் ஜெயலலிதா, இவர்களைத் தானே? ஒவ்வொரு முறையும் அவரைப் பார்க்கும் போதெல்லாம் ஊடகங்கள் வைக்கும் முதல் கேள்வி நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா? என்பது தான், இனிமேல் அவரைப் பார்க்கும் போது அடுத்த படம் என்ன என்று கேட்டுப் பாருங்கள் , அப்போதும் அவர் நான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் என்று சொன்னால் கழுவிக் கழுவி ஊற்றுங்கள். அதை விடுத்து பதிலைத் தெரிந்து கொண்டு கேள்வியைக் கேட்டுவிட்டு அந்த நாள் முழுவதும் பரபரப்பை தனது ஊடகத்தில் காட்டிக் கொண்டு வேசம் போட வேறு நாட்டில் பல விசயங்கள் நடந்து கொண்டிருக்கிறது..... மக்களுக்கு தெரியாத பல விசயங்கள் இருக்கின்றன அதைப் புரிய வையுங்கள். நேற்றும் கூட அவர் பேசியது எதார்த்தம் தான் என 50 சத மக்கள் வாக்களித்ததையும், போன மாதம் அவருடைய அரசியல் தேவை தமிழ்நாட்டுக்கு கட்டாயம் தேவை தான் என 60 சத மக்கள் வாக்களித்ததையும் திரும்ப திரும்ப பொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். மனுஸ்யபுத்திரன் , உதய குமார், ஞானி போன்ற எழுத்தாளர்களும் சமூகப் போராளிகளும் தங்களுடைய பணிகளில் கவனத்தை செலுத்துங்கள். ரஜினி தான் தேவை என்றால் ரஜினியை விமர்சிக்கும் இயக்கம் ஆரம்பித்து தமிழ்நாடு முழுதும் தீவிர பிரச்சாரம் செய்து மக்கள் மத்தியில் பிரபலமாகிக் கொள்ளுங்கள்.
தலைவர் ரஜினி அரசியலுக்கு வராவிட்டாலும் அவர் இல்லாமல் தமிழ்நாடு அரசியல் இயங்கப் போவது இல்லை என்பதும் அவர் (நேரடியாகவோ மறைமுகமாகவோ) இல்லாமல் 2016 சட்டமன்றத் தேர்தல் இல்லை என்பதும் 100 சதம் உறுதியாகிவிட்டது. அவருடைய எண்ணம், ஒரு ரஜினி ரசிகனான எனக்கு புரியாமலில்லை. அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் தலைவருக்கு இருக்கிறது, வந்தால் ஜெயிக்க முடியுமா என்ற தயக்கமும் இருக்கிறது. வந்தால் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருக்கிறது அது தான் அவருடைய தயக்கத்திற்கான ஒரே காரணம்.ஒருவேளை அவர் வர வேண்டும் என்று முடிவெடுத்தால் அடுத்த வருட டிசம்பர் வரை தான் காலக் கெடு,அதற்கு பின்னர் அவரே நினைத்தாலும் அரசியலுக்கு வர முடியாது, அப்படி வந்தாலும் அதை நான் சொல்ல விரும்பவில்லை. வயது முதிர்ந்த ஒரு இயக்கத்தின் தலைவர், தலைவரே இல்லாத ஒரு இயக்கம், இதைப் பயன்படுத்தி காலூன்ற நினைக்கும் ஒரு தேசிய இயக்கம், புதிதாக களம் கண்டிருக்கும் ஒரு இயக்கம், தகுந்த சூழலில் இறங்காமல் சூடுபடூக் கொண்ட ஒரு இயக்கம், இது தான் தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழ்நிலை. இதைவிட தகுந்த சூழல் இனி தலைவரே நினைத்தாலும் அமையாது. ரஜினி ரசியலுக்கு வருவதைவிட எளிமையான விசயம் வந்த பிறகு இரு பிரதான கட்சிகளுக்கு எதிரான அணியை அமைப்பது.
ஏன் தயக்கம் ஓப்பனாகவே சொல்லிவிடுகிறேன். ரஜினி வந்தால் திமுக அதிமுக கட்சிகளுக்கு எதிரான அணியை பலமாக அமைக்க முடியும். பா.ஜ.க கட்சி முதல்வர் கனவு காணவில்லை கட்சியை காலூன்ற வைக்க வேண்டும் அவ்வளவுதான். அதே போல ஜி.கே வாசன் ரஜினியை முதல்வராக ஏற்றுக் கொள்ள ஒருபோதும் தயங்கமாட்டார். வைகோவை சமாதானப்படுத்தி விடலாம். விஜயகாந்தும் ராமதாசும் தான். பா.ம.க வராது. விஜயகாந்த் கேள்விக்குறி தான்.ரஜினி , ஜிகே வாசன்,பா.ஜ.க,வைகோ இந்தக் கூட்டணி அமைந்தால் ஆட்சியைக் கைப்பற்ற அத்தனை சாத்தியக் கூறுகளும் இருக்கின்றன. திமுக அதிமுகவின் விமர்சனங்களையும் முறியடித்துவிடலாம். கூட்டணி இல்லாமல் தனியாக நின்று ரஜினி ஜெயிப்பாரா ? என்றால் இல்லை என்பது தான் விடை. ஆனால் பலத்த சக்தியாக உருவெடுப்பார். ஆக மொத்தத்தில் தனிக்கட்சியுடன் தலைவர் வந்து தகுந்த கூட்டணியுடன் தேர்தலை சந்திக்க இதைவிட பெரிய சந்தர்ப்பம் இனி அமையாது. எந்த விதமான பிரதிபலனுக்காகவும் எதிர்பார்க்காமல் இத்தனை ஆண்டுகாலம் பொறுத்திருந்த நாம் தலைவரின் அடுத்த பிறந்த நாள் வரை பொறுத்திருக்க மாட்டோமா என்ன?
ஒருவேளை தலைவர் அரசியலுக்கு வரவில்லை என்றால் இன்னும் மகிழ்சி அடைவேன். யாருடைய இழி பழிக்கும் ஆளாகாமல் கடைசி வரை சூப்பர் ஸ்டாராகவே இருப்பது எவ்வளவு பெருமை. ஆனால் எது நடந்தாலும் நான் ரஜினி ரசிகன் என்பதை மட்டும் மாற்றிவிட முடியாது.என்னைப் போலவே தான் எல்லா தலைவரின் ரசிகர்களும் என்று உறுதியாக நம்புகிறேன்........
தயக்கம் போதும் தலைவா, தகுந்த நேரம் இது தான், தயங்காமல் முடிவெடு, நாங்கள் இருக்கிறோம்... உன்னை அவ்வளவு எளிதில் தோற்க விடமாட்டோம்.......
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன...
நல்ல பகிர்வு...
ReplyDeleteரொம்ப நாளாச்சு பகிர்வு போட்டு...
வலைச்சரத்தில் சொல்லியிருந்தேன்...
வணக்கம்
ReplyDeleteஎல்லாம் நல்ல படியாக நடக்கும்.. சில காலம் காத்திருப்போம் நல்ல விரிவாக எடுத்துரைத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசியவை தான் பலத்த அரசியலுக்கு விவாதத்துக்கு உரியதாகியிருக்கிறது. அவர் ஒன்றும் தானாக முன்வந்து அரசியல் பேசவில்லை. சேரன்,அமீர், வைரமுத்து,விஜய குமார் போன்ற திரைஉலகப் பிரபலங்கள் பேசியதற்கு பதில் அளித்தார் அவ்வளவுதான்.
ReplyDeleteஇனிமேல் அவரைப் பார்க்கும் போது அடுத்த படம் என்ன என்று கேட்டுப் பாருங்கள் ,
ஒருவேளை தலைவர் அரசியலுக்கு வரவில்லை என்றால் இன்னும் மகிழ்சி அடைவேன்.யாருடைய இழி பழிக்கும் ஆளாகாமல் கடைசி வரை சூப்பர் ஸ்டாராகவே இருப்பது எவ்வளவு பெருமை
அப்படி வந்தால் ,அவ்வளவு எளிதில் தோற்க விடமாட்டோம்.......
எது நடந்தாலும் நான் ரஜினி ரசிகன் என்பதை மட்டும் மாற்றிவிட முடியாது.
எங்கே சில நாட்களாக ஆளை காணவில்லை. விரிவான பதிவு. பின்னூட்டத்தில் எதுவும் சொல்லும்படியான நிலையில் நானில்லை. அவர் பாணியிலே சொல்ல வேண்டும் என்றால்..
ReplyDelete"ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்" கதை தான் தமிழகத்தின் கதை. அனால் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் மோடி அவர்கள் ஒரு சந்தர்ப்பவாதி. அதில் சந்தேகம் இருந்தால் திரு அத்வானியை விசாரிக்கவும்.
வெண்ணிறாடை மூர்த்தி பாணியில் சொல்லி வைக்கின்றேன்.. " ஜாக்ரதை"
அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் தலைவருக்கு இருக்கிறது, வந்தால் ஜெயிக்க முடியுமா என்ற தயக்கமும் இருக்கிறது. வந்தால் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருக்கிறது அது தான் அவருடைய தயக்கத்திற்கான ஒரே காரணம்.//
ReplyDeleteமிக மிகச் சரியே! அவர் கூட்டணி வைப்பது பற்றி நீங்கள் அலசியிருப்பதும் கரெக்ட். எல்லாமே சரிதான். மிகவும் அழகான பதிவு. ஆனால் பாருங்கள் தலைவர் மிகவும் நேர்மையானவராக இருப்பதால் இந்தச் சீழ் பிடித்த அரசியல் களம் அவருக்கு ஒத்துவருமா என்பதுதான் கவலையாக இருக்கின்றது சீலன். இறுதியில் சொன்னீர்கள் பாருங்கள்...
//ஒருவேளை தலைவர் அரசியலுக்கு வரவில்லை என்றால் இன்னும் மகிழ்சி அடைவேன்.யாருடைய இழி பழிக்கும் ஆளாகாமல் கடைசி வரை சூப்பர் ஸ்டாராகவே இருப்பது எவ்வளவு பெருமை//
ட்ரூ ட்ரூ!!!
Super boss... Sema... :) Vaazhthukkal...
ReplyDelete20 வருடமாக அரசியல் பிரவேசத்தை பற்றி
ReplyDelete1) பேசி மட்டும் வருகிறார்
2) தெளிவாக முழுமையாக பேசுவதில்லை
3) பல்வேறு முறை பல பேர் இதை பற்றி குறை கூறியும், தன்னை கொஞ்சமும் மாற்றிக்கொள்ளவில்லை.
அதே சமயம் ரஜினி அரசியலுக்கு வராததாலோ அல்லது மேற்சொன்ன விஷயங்களை செய்வதாலோ நாட்டுக்கு எந்த நஷ்டமும் வந்துவிடவில்லை. எனவே அவர் மேல் தேவையற்ற கோபத்தை கொட்டி கருத்து சொல்வது, சென்டிமெண்டலாக கடிதம் எழுதுவது தேவையற்றது. அவரை கேவலப்படுத்துவது போல் பொருள் வருவதுபோல் கருத்து வெளிப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.
ஆனால் அரசியல்வாதி, சினிமா மற்றும் ஸ்போர்ட்ஸ் பிரபலங்களை, அவர்களின் செய்கைகளை வைத்து ஓட்டு ஓட்டு என செமயாக ஓட்டுவது தவரில்லை. எல்லை மீறாமல் அதை தாராளமாக செய்யலாம். அதுவும், 20 வருடங்களாக இன்னும் அதே கொசுவத்திசுருளை சுருட்டிக்கொண்டு இருக்கும் ரஜினியை, மரண ஓட்டு ஓட்டுவது தப்பே இல்லை. சொன்னதுபோல், எல்லை மீறாமல்!
அட்டகாசமான பதிவு-அர்த்தமில்லாமல் கேள்வி எழுப்பும் சிலருக்கு நல்ல சூடு-நன்றி கலந்த பாராட்டுக்கள்-நா.ரஜினிராமச்சந்திரன்
ReplyDeleteதேர்வுகள் முடிந்து விட்டதா?
ReplyDeleteபதிவுகளைத் தொடரலாமே ?
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருகும் எங்கள் இனிய மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅன்புடனும், நட்புடனும்
துளசிதரன், கீதா