Sunday, September 14, 2014

எனக்கு விருதா ??


எனக்கு விருதா ??






இன்று எனக்கு ஒரு மகிழ்வான அதிர்ச்சி காத்திருந்தது. எனக்கும் ஒரு விருது அளித்திருக்கிறார் திரு.மது சார்....

வலையுலகில் சேர்ந்து இன்னும் ஒரு வருடம் கூட நிறைவடையவில்லை. மற்ற பெரிய பெரிய வலைப்பதிவர்களுக்கு மத்தியில் ஒரு சிறுவனான எனக்கும் விருதளித்து பெருமைப்படுத்தியிருக்கும் திரு. மது சாருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.




 வலைப்பக்கம் பற்றி கேள்விப்பட்டு 2012 ஆம் ஆண்டு வலைப்பக்கம் உருவாக்கி ஒரு கட்டுரை இட்டேன். ஆனால்  ரெஸ்பான்ஸ் இல்லை.அப்போ அப்போ எட்டிப் பார்ப்பேன் . அப்போது ஒரு நாள்  முத்துநிலவன் ஐயா கமெண்ட் அளித்து சில அறிவுரைகள் வழங்கினார். அதிலிருந்து எனக்கு ஆர்வம் வந்தது. அப்போது 2014 .வலையுலகின் முதல் அங்கீகாரமாக நான் நினைத்தது இதைத்தான். கொஞ்சாம் ப்ளாக் பற்றி தெரிந்து கொண்டு பதிவுகள் எழுத ஆரம்பித்தேன். பெரிய முன்னேற்றம் இல்லை என்றாலும் சிலரின் ஊக்க மொழிகள் கிடைத்தது. அந்த கமெண்ட் வந்திருக்கவில்லை என்றால் இன்றைக்கும் எட்டி எட்டி பார்த்துக்கொண்டுதான் இருந்திருப்பேன்.அதனால் முத்து நிலவன் ஐயாவுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய‌ இரண்டாவது அங்கீகாரமாக நான் நினைத்தது சகோதரி மைதிலி  அவர்கள் என்னுடைய வலைப்பக்கத்தை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதைத் தான். அதன் பிறகு தான் என்னுடைய வலையும் கொஞ்சம் அறிமுகமானது மற்றவர்களுக்கு.அதற்காக சகோதரி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இப்போது திரு.மது சார்  அளித்திருக்கும் அங்கீகாரம் பெரியது. அதற்கு நான் தகுதி ஆனவனா என நினைத்துப் பார்க்கிறேன். இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம். இனிமேலாவது விருதுக்கு தகுதியாகும் பொருட்டு என்னை, என் எழுத்தை வளர்த்துக்கொள்ள‌ முயற்சிக்கின்றேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் சார். அதற்காக திரு.மது சாருக்கும் மனமார்ந்த‌ நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.


விருது பெறுகின்றவர்களுக்கு சில விதிமுறைகள் வைத்திருக்கிறார்கள்.விருது அளிப்பவர்கள் குறித்தும், நம்மைப் பற்றியும் எழுதவேண்டும். திரு.மது சாரை பற்றி நீங்கள் அறியாதது ஒன்றுமில்லை. என்னைப்பற்றி சொல்லவேண்டும் என்றால்,

பெயர்: ஜே.ஜெயசீலன்

ஊர்: புதுக்கோட்டை மாவட்டம், மிரட்டுநிலை கிராமம்.

படிப்பு: அண்ணா பல்கலைக்கழகம் திருநெல்வேலியில் புவித்தகவலியல் ( B.E GEO INFORMATICS ) மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறேன்(ஹாஸ்டலில் தங்கி). இதற்கு முன்னர் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி புதுகையிலும், அரசு உயர்நிலைப்பள்ளி மிரட்டுநிலையிலும் படித்தேன்.

மற்றபடி இப்போதைக்கு என்னைப்பற்றிச் சொல்ல வேறு எதுவும் கிடையாது.ராகுல் டிராவிட், ரஜினி என்றால் மிகவும் பிடிக்கும். விடுமுறைகளுக்கு ஊருக்கு வருவேன். மனதில் தோன்றுவதை எழுதிக்கொண்டிருக்கிறேன். வலையுலகுக்கு ரொம்ப புதுசு. இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. நான் வலையுலகுக்கு வந்ததில் பெருமையாக நினைப்பது முகம் தெரியாத பலரின் அறிமுகங்களைத் தான்.



இன்னொன்று இந்த விருதை யாரேனும் ஐவருக்கு நாமும் விருது கொடுக்க வேண்டுமாம்.


ஆனால் விருது கொடுக்கும் அளவுக்கு இன்னும்  நான் தகுதியடையவில்லை என்று நினைக்கிறேன்.இருப்பினும் எனக்கு ஊக்கம் அளித்துவரும் அத்துனை அன்பு நெஞ்சங்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கின்றேன்.


உங்களுடைய ஊக்கம் தான் என் எழுத்துகளின் ஆக்கம்....



                                                                                                         என்றும் உங்கள் சீலன்...

18 comments:

  1. வாழ்த்துக்கள் நண்பரே....

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி ஜீ..தொடர்ந்து வருகை தர வேண்டும்,,,

      Delete
    2. நிச்சயம் வருவேன் நண்பரே....

      Delete
  2. Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சார்..

      Delete
  3. வாழ்த்துகள் அன்பு தம்பி:))
    st.மேரிஸ் ல யா படிச்சீங்க?!
    உங்கள் ஆசிரியர்கள் பலர் மது(கஸ்தூரி ரெங்கன்) அவர்களது நண்பர்கள் தான். சகோ மைதிலி போதும். அது ஏன் டீச்சர்?! வேண்டாம் ஓகே வா? சகோ மென்மேலும் வளர வாழ்த்தும் அன்பு அக்கா:)

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அக்கா... ஆம் தூய மரியன்னையில் தான் 11,12ம் வகுப்புகள் படித்தேன். சகோ மைதிலி என பெயருடன் சொல்ல ஒரு மாதிரி இருந்தது அதனால் தான் டீச்சர் (மரியாதைக்காக ) சேர்த்தேன் , இப்போது நீக்கிவிட்டேன் சகோ.

      Delete
  4. வாழ்த்துக்கள் ஜெயசீலன்/

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சார்..

      Delete
  5. வாழ்த்துக்கள் சீலன்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சார்...

      Delete
  6. தகுதி என்பது தொடர்ந்து தமிழாலே
    வலைப்பூவை நடாத்திப் பேணுவதே
    வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சார், தமிழால் நாம்... வாழ்த்துகளுக்கும் வருகைகும் மிக்க நன்றி சார்...

      Delete
  7. Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி ஐயா...

      Delete
  8. வணக்கம்
    விருது கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள்நண்பரே......

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் நண்பா! உங்களின் வளர்ச்சிக்கு இந்த விருதுகள் ஓர் ஊக்குவிப்பாக அமையும்! நன்றி!

    ReplyDelete