Monday, July 14, 2014

பொறியியல் மோகமும் மாணவர்களின் எதிர்காலமும் !


பொறியியல் மோகமும் மாணவர்களின் எதிர்காலமும் !

12 ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்த உடனேயே மாணவர்கள் மற்றும் பெற்றோரின் ஒரே எண்ணம் ஏதாவது ஒரு பொறியில் கல்லூரியில் சேரவேண்டும் என்பதே .சேர்ந்து விட்டால் நமது எதிர்காலம் முன்னேறி விடாதா என்ற ஆதங்கம் ! பாவம் அவர்களை என்ன செய்வது. ஒரு வருடத்தில் சராசரியாக தமிழ் நாட்டில் மட்டும் 2.3 லட்சம் மாணவர்கள் பொறியியல் பட்டதாரிகளாக வெளியேறுகின்றனர். முதுகலைப் பொறியியல் ஒரு 50000 என்று வைத்துக் கொண்டாலும் ஏறத்தாழ  மூன்று லட்சம் பேர். அவர்களில் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கிறது என்று நினைக்கின்றீர்கள் ? வெறும் 60 லிரிந்து 80 ஆயிரம் பேருக்கு மட்டும் தான் ! எஞிசியவர்களின் கனவு ?






நேற்று கவுன்சிலிங்கில் 190 லிருந்து 198 கட் ஆஃப் மதிப்பெண் எடுத்த சிலர் பொறியியல் தமிழ் வழியைத் தேர்ந்தெடுத்தள்ளதாக செய்தி வெளிவந்தது. எங்கே தமிழார்வம் தான் காரணமோ என்று பார்த்தால் அண்ணா பல்கலை கிண்டி வளாகம் என்ற ஒரே காரணம் தான். வேடிக்கையாக இல்லை ?அதையும் மீறி தமிழார்வத்தால் சேறும் மாணவர்களும் இருக்கின்றனர். அவர்களுக்கு அரசும் அண்ணா பல்கலையும் பொறியியல் தமிழ் வழி என கொட்டை எழுத்தில் மதிப்பெண் சான்றிதழ் கொடுத்துவிடுகிறது. வளாக நேர்காணலில் அனுமதி கூட கிடையாது. அதையும் மீறி வெளிவருபவர்களுக்கு அரசில் 12 % இட ஒதுக்கீடு எனும் பெயரளவு பரிசு மட்டுமே ஆறுதல். அதுவும் இன்னும் நடைமுறைப் படுத்தப்படவில்லை என்றே தெரிகிறது.

சரி நாம் விசயத்திற்கு வருவோம். பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னால் பொறியியலும் மருத்துவப் படிப்பு போல அவ்வளவு உயர்ந்ததாக பார்க்கப்பட்ட படிப்பு. இன்று கலை, அறிவியல் படிப்புகளை விஞ்சி விட்டது. ஊருக்கு 20 இஞ்சினியர் என்றாகிவிட்டது நிலைமை. இதற்கு முக்கிய காரணம் கல்லூரிகளின் பெருக்கம். அதுவும் கட்டுப்பாடற்ற பெருக்கம். ஏறத்தாழ 600 பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளன. இன்னும் அதிகரிக்கும் சூழல். 


இதில் பெரும்பாலும் பலியாவது ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரே ! நமது பையன் இஞ்சினியர் ஆகிவிட்டால் நமது பொருளாதார நிலைமை மேம்பட்டுவிடும் என்ற ஏக்கத்துடன் கல்லூரிக்கு அனுப்பும் பெற்றோர்களின் அறியாமை. வளாக நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்படும் எத்தனை மாணவர்கள் கிராமப்புற மாணவர்களாக இருக்கின்றனர் ?  இன்று வேலை கிடைக்காமல் படிப்புக்கு சம்பந்தமே இல்லாத துறைகளில் வேலை செய்யும் இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் தான். இது நான் நேரில் கண்ட உண்மை.

பொறியியல் படிப்பால் உயர்ந்தவர்களும் இருக்கிறார்கள் . ஆனால் எண்ணிக்கை  மிகவும் குறைவு. தமிழ் வழியில் படித்துவிட்டு திடீரென ஆங்கில வழியில் படிக்க வேண்டி இருப்பதால் பெரும்பாலான மாணவர்கள் மிகவும் திணறிப் போய் விடுகின்றனர். உதாரணம் நான். அவர்கள் படிப்பை முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. 


அதற்காக பொறியியல் படிக்க கூடாது என்று நான் சொல்லவில்லை. எடுக்கும் கல்லூரியும் படிப்பும் மிகவும் முக்கியம் என்பது மறுக்க முடியாத உண்மை. புதிது புதிதாக முளைக்கும் கல்லூரிகளை நம்பி ஏமாந்து போனவர்களும் இருக்கின்றனர்.

நான் வந்து சேர்ந்த பொது அண்ணா பல்கலைக் கழகம் ஆக இருந்தது என்னுடைய கல்லூரி. அதாவது இதற்கு கீழ், இதனுடைய கட்டுப்பாட்டில் தான் அனைத்து இதர , தனியார் பொறியியல் கல்லூரிகளும். அதன் பிறகு அண்ணா பல்கலை-சென்னை,  திருநெல்வேலி மண்டலம் ஆனது. அதன்பிறகு  மண்டல மையம் ஆனது. இப்போது கடைசியில்  மண்டல அலுவலகம் ஆகி விட்டது. இளங்கலை படிப்பையே நிறுத்திவிட்டனர்.


அரசியல் காழ்புணர்சியால் அங்கு படிக்கும் மாணவர்களின் நிலையை கருத்தில் கொள்ளாமல் முந்தைய அரசாங்கத்தால் ஆரம்பிக்கப் பட்டது எனும் ஒரே காரணத்திற்காக இழுத்து மூடும் நிலைதான் தமிழ்நாட்டில் உள்ளது. தமிழகத்திலேயே இரண்டே இடத்தில் தான் புவித் தகவலியல் இருக்கிறது. ஒன்று சென்னை. இன்னொன்று திருநெல்வேலி. 

நாங்கள் சேர்ந்த போது ஒன்றுமே இல்லாமல் இருந்த இக்கல்லூரியில் இன்று முதுகலை புவித் தகவலியல் ஆரம்பிக்கும் அளவிற்கு ஆய்வக வசதிகள் வந்துவிட்டது. இந்த நேரத்தில் இதனை தூத்துக்குடி உறுப்புக் கல்லூரிக்கு மாற்றுவது என்பது ? இன்றைய சூழலில் வகுப்பறை வசதிகளும் போதுமானதாகவே இருக்கிறது. எதற்காக மாற்றினார்கள் என்பது அரசாங்கத்துக்கு மட்டுமே தெரிந்த ஊரறிந்த ரகசியம்.


சரி, பொறியியலுக்கு மட்டும் ஏன் அரசு இவ்வளவு முயற்சி எடுகிறது என தெரியவில்லை. விவசாயத்திற்கு பேர் போன தமிழ் நாட்டில் இருக்கும் விவசாயக் கல்லூரிகளின் எண்ணிக்கை 15 மட்டுமே ! வேளாண் பாடப்பிரிவு எடுத்துப் படிக்கும் உயர்கல்வி மாணவர்கள் இளங்கலை வேளாண்மை எடுக்க 
190 க்கு மேல் கட் ஆஃப்  எடுக்க  வேண்டும், இன்றைய சூழலில். வேளான் பிரிவு எடுத்தால் விவசாயம் எளிதாகப் படிக்கலாம் என்று நினைத்து சேறும் மாணவர்களுக்கு ஏமாற்றம் தான் பரிசு.

கலந்தாய்வு நடைபெறும் சூழலில் மாணவர்கள் நல்ல கல்லூரியைத் தேர்வு செய்வதில் தான் எதிர்காலம் உள்ளது. கூடிய திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். 

அரசு , பொறியியல் படிப்புகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை வேளாண்மை போன்ற இதர படிப்புகளுக்கும் அளித்தால் தமிழக மாணவர்களின் எதிர்காலம் உண்மையிலேயே மேம்படும்.

மறக்காமல் உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன் ! 

உங்கள் சீலன்.....

6 comments:

  1. இது! இது தான் சீலன் சகோ!!
    சமூக பயனுள்ள பதிவுகளில் உங்கள் எண்ணமும் ,கை வண்ணமும் மின்னுகிறது சகோ!! தொடருங்கள் இதே பாதையில் !! வாழ்த்துகள்!
    ஏன் எந்த திரட்டியும் இணைக்கவில்லை சகோ!
    வழிகாட்டலுக்கு திண்டுக்கல் தனபாலன் அண்ணா வின் வலைபூவிற்கு செல்லுங்கள்:)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ! கண்டிப்பாக தொடருவேன் ! ஆம் இன்னும் டெக்னாலஜி குறித்து முழுதும் அறியவில்லை. கற்றுக் கொண்டு வருகிறேன். கூடிய விரைவில் மாற்றத்துடன் கூடிய வலைப்பக்கம் தயாராகிவிடும்.

      Delete
  2. பயனுள்ள பதிவு...
    வாழ்த்துக்கள் சகோ...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா ! தொடர்ந்த்து ஆதரவளிக்க வேண்டுகிறேன் !!

      Delete
  3. வணக்கம்.தங்கள் தளம் இன்று வலைச்சரத்தில் அறிமுகமாகி உள்ளது!
    //http://blogintamil.blogspot.in/2014/07/welcome-and-farewel.html//
    நன்றி!

    ReplyDelete
  4. இன்றைய வலைச்சரத்தில் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை தங்களைப் பற்றி விவாதிக்கிறார். தங்களது பதிவுகளை அவ்வப்போது படித்து வருகிறேன். வாழ்த்துக்கள்.
    www.drbjambulingam.blogspot.com
    www.ponnibuddha.blogspot.in

    ReplyDelete