Thursday, January 30, 2014

மாணவர்களின் போராட்டங்களும் ஆதரவும்


இவை அனைத்தும் என்னுடைய சொந்த கருத்துகளே,யாரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல)












யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்கள்,கல்லூரிகளில்  மிகவும் சந்தோசமாக சுதந்திரமாக விளையாட்டுத்தனமும் குறும்பும் நிறைந்த மாணவர்கள்

வீதிக்கு வந்து போராடி ஐ நா சபையயே திரும்பச்செய்வார்கள் என்று.ஆம் 50 வருடங்களுக்கு முன்னர் இந்தி மொழியை விரட்டுவதற்காக வீதிக்கு வந்த மானவர்கள் இன்று தமிழீழம் அமைய செய்வதற்கு மீண்டும் வீதிக்கு வந்திருக்கிறார்கள்.




சென்னை நந்தனம் கல்லூரியில் சிறு பொறியாய் தொடங்கிய வேள்வித்தீ இன்று தமிழ் மக்கள் அனைவரயும் திரும்பிபார்க்க வைத்துள்ளது.சட்டக்கலூரி,கலைக்கல்லூரி,அறிவியல் கல்லூரி,பொறியியல் கல்லூரி,மருத்துவ கல்லூரி என்று படிப்படியாக மொத்த மாணவர்களையும் களத்தில் இறங்கச் செய்தது அச்சிறு பொறி.ஏடு தூக்கும் கைகள் எதிர்ப்பு பதாகைகளை தூக்கிக்கொண்டு வீரத்துடனும்,விவேகத்துடனும் போராட ஆரம்பித்து தொடர்ந்து போராடியும் வருகிறது.இந்தப்போரட்டங்களுக்கு மகுடம் வைத்தார் பொல மக்களும் களத்தில் இறங்க அனைத்து அரசியல் கட்சிகளும் வேடிக்கை பார்த்து இதை தங்களுக்கு சாதகமாக்க முயன்றன.அசரவில்லை மாணவர்கள்,எந்த அரசியல் நாடகங்களையும் அனுமதிக்க வில்லை.


மிரட்டி பணிய வைக்கலாம் என்று கல்லூரி நிர்வாகங்களும்,ஒரு வாரத்தில் அடங்கிவிடும் என்று அரசாங்கமும் நினைத்தன,ஆனால் நடந்தது வேறு.பொறுத்தது போதும் என்று கைது நடவடிக்கைகள் தொடர்ந்தது.கைதுக்கும் பயப்படவில்லை நம் காளையர்கள்.வேறு வழி இல்லாமல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை விட்டார்கள்.போராட்டம் தொடர்ந்தது கைதாட்டம் தீவிரமடைந்தது.தங்கள் கல்வியையே பணையம் வைத்தனர் மாணவர்கள்.




ஆனால் இந்த போராட்டங்களுக்கு கிடைத்த பரிசு ?????????
தோல்வி! மிகப்பெறும் தோல்வி! ஆம் மத்திய மாநில அரசுகளில் இருந்து ஒரு ஈ காகம் கூட எட்டிப்பார்க்கவில்லை.ஒரே ஆறுதலாக திமு கழகம் மத்திய அரசிலிருந்து விலகியது,சட்டப்பேரவையில் தீர்மானம், நீர்த்துப்போன அமெரிக்கத்தீர்மானம் வெற்றி.


இனியும் இதே நிலைதான் நீடிக்கும்.எனவே மாணவர்களின் போராட்ட முறை மாற வேண்டும் கல்விக்கும் ஆபத்து வரக்கூடாது.புது முறை போராட்டம் வெடிக்க வேண்டும்.தொடர்ந்து படிக்கவும் வேண்டும் போராடவும் வேண்டும் அற வழியில்!






இந்தபோராட்டங்களில் சில வேடிக்கைகளும் நிகழ்ந்தன.சட்டக்கல்லூரி மாணவர்களூம் கலை அற்வியல் கல்லூரி மாணவர்களும் உண்ணா விரதம் சாலை மறியல் பேருந்து மறியல் ரயில் மறியல் வகுப்பு புறக்கணிப்பு என்று போராடினர்,பொறியியல் கல்லூரி மாணவர்கள் சற்று தாமதமாகத்தான் ஆரம்பித்தனர்.அதுவும் பெறிய அளவில் நிகழவில்லை.அதிலும் சில கல்லூரிகள் சட்டையில் கறுப்புப்பட்டை அணிந்து? வாயில் துணி கட்டி ,கண் கட்டிக்கொண்டு ,உருவ பொம்மை எரிப்பு என பலத‌ரப்பட்ட போரட்டங்களும் நடந்து வருகிறது.



இந்தி எதிர்ப்பில் சாதித்தோம்!  இலங்கை பிரச்சனையில் ஏன் முடியாது?



முயன்று பார் ராஜபக்சஸே என்ன அவன் அப்பனையே காலில் விழச்செய்யலாம்.அதற்கு தேவை மாணவ ஒற்றுமையும்,மான ஒற்றுமையும் தான்.

நாம் வீழும் போது நம்மவர்களுக்கு ஒரு நாடு! அதை நாடும் வரை நாமும் வீழோம் நம் தமிழும் வீழாது !வாழ்க தமிழ்!

(இது ஒரு மீள் பதிவு, பதிவு எழுதப்பட்ட நாள்; 28-03-2013 என்னுடைய வலைப்பக்கத்திற்காக முன்னர் எழுதியது..)

3 comments:

  1. nice job mr.seelan....

    keep it up i like your blog...

    ReplyDelete
    Replies
    1. thank you for coming and commenting on my blog sir. keep visit my blog , thank you sir..

      Delete
  2. nice post.. but reduce spelling mistakes. because a small mistake can be misunderstanding by the readers.. so carefully write,

    ReplyDelete