விஜயாகாந்த் என்ன முடிவு எடுக்கப் போகிறார்....?
இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி, இதுவாகத் தான் இருக்க முடியும் தமிழக அரசியல் களத்தில். 2005 ஆம் ஆண்டு அவரின் கட்சி துவக்க விழா மாநாட்டை இப்போது நினைத்துப் பார்த்தாலும் பிரம்மிப்பாக உள்ளது. என்னா கூட்டம், மதுரையில்... ஆனால் அவராலுமே கூட தனித்தே நின்று ஒரு மாற்றாக வளர முடியவில்லை என்று நினைக்கும் போது அவருடைய அணுகு முறை மாற்றம் பெறுவதில் தவறு சொல்ல முடியாது. தனித்தே நின்று வாக்குகளை சிதறடித்துக் கொண்டே இருக்கும் போது தொண்டர்களும், பணம் செலவு செய்பவர்களும் விரக்தியடைந்து விடுவார்கள். அதற்காக 2011ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்து எதிர்க்கட்சி தலைவரானது நல்லதொரு முடிவுதான் என்னைப் பொறுத்தவரை. அதற்குப் பின் என்ன நடந்தது என்பது நாடறியும்.
சரி, இப்போது விஜயகாந்தின் முடிவுகளை கணித்துவிட முடியுமா என்றால், இப்போதில்லை எந்த தேர்தலிலும் அவரின் முடிவை கணிப்பது கடினமானது தான். அவருடைய பரம எதிரியாக மாறிப் போயிருக்கும் ஜெயலலிதாவை எதிர்க்க எந்த கூட்டணியுடனும் இணைந்து தேர்தலை சந்திக்க அவருக்கு வாய்ப்பு இருக்கும் நிலையில் 5 - 7 சத வாக்கு வீதத்தை வைத்து ஜெவை வீழ்த்தக்கூடிய அணியில் இடம் பெற முயற்சிக்கிறார் என்பது தெரிகிறது.ஆனால் நாடாளுமன்ற தேர்தல் போல ஆகிவிடுமோ என உள்ளுக்குள் கொஞ்சம் பயமும் இருக்கிறது.ஆனால் கட்சிகளின் ஏக அழைப்புகளால் பயத்தை தவிர்த்து தெம்பாக பேர வலிமையையும் கட்சியின் வலிமையையும் பெருக்கியிருப்பதே அவருடைய சமயோசிதம் தான். மக்கள் நல கூட்டணி, பா.ஜ.க, திமுக என மூன்று பெரிய கட்சிகளும் அழைப்புவிடுத்துக் கொண்டே இருக்கின்றன என்பதில் அவ்ருக்கு ஏக குசி.
20ம் தேதி நடக்க இருக்கும் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்க மாட்டார் என்று தான் தெரிகிறது. மார்ச் முதல் வாரத்தில் தான் அவருடைய முடிவு தெரியும். ஆனால் இந்த மாநாட்டில் யாருடன் இணையப் போகிறோம் என்ற சமிக்ஞையாவது காட்டாவிட்டால் பாஜக தவிர பிற இரு கூட்டணிகளும் தேர்தல் வேலையில் இறங்கிவிடக் கூடும். சமீபத்திய அவர் மனைவியின் பேச்சை வைத்துப் பார்த்தால் திமுகவுடன் சேர்வார் என்று இது வரை சொல்லிக் கொண்டிருந்தவர்களெல்லாம் கொஞ்சம் ஜெர்க் ஆகிவிட்டார்கள் என்பது உண்மை. எனக்கென்னவோ அவர் பாஜகவுடன் தான் சேர்வார் என்று படுகிறது. முதல்வர் வேட்பாளர்,கூட்டணிக்கு தலைமை, தேர்தல் செலவு என கொடுக்கப்படும் உத்தரவாதங்களால் அவரைவிட அவர் மனைவிக்கு அதிக சந்தோசம் இருப்பதாகவே படுகிறது. ஆனால் இது சரியான முடிவாக இருக்குமா என்றால் இல்லை என்பது தான் நிதர்சணம்.
அதிமுக அழைத்தால் எப்போதும் பம்மும் கட்சி பாஜக. விஜயகாந்தை கூட்டணியில் வைத்துக் கொண்டே ஜெவுக்கு சொம்பு தூக்குவதில் மத்திய பாஜக அஞ்சவே அஞ்சாது. மக்கள் இன்னமும் விஜயகாந்தை நம்புவதாக கேப்டன் நினைக்கிறார். ஆனால் இல்லை. மக்களிடம் தேமுதிகவின் செல்வாக்கு சரிந்திருக்கிறது. கட்சி பலம் தான் அந்த வாக்கு சதம் கூட. அதைத் தாண்டி மக்களிடம் தன் செல்வாக்கு வளரவில்லை என்பதை கேப்டன் உணர்ந்திருக்கிறாரா எனத் தெரியவில்லை. ஆனால் விஜயகாந்த் சேரும் கூட்டணியைப் பொறுத்து மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடும், அந்த வகையில் எதிர்ப்பலை எல்லாம் ஒன்றும் இல்லை. பாஜக எந்த நேரத்திலும் அதிமுகவுடன் இணக்கமாகப் போகக்கூடிய கட்சி. காரணம் அதனுடைய உறுப்பினர் பலம் மத்தியில் தேவை.
ஜெயலைதாவை வீழ்த்தவும் கட்சிக்கு பாதுகாப்பும் அது திமுகவுடன் சேர்வதில் தான் இருக்கும். ஆட்சியை பிடிக்கிறது இல்லை அது வேறு விசயம். சில பல எமெல்யேக்களாவது பெறமுடிந்து கட்சியை கட்டுக்குள் வைக்க திமுக கூட்டணிதான் தேமுதிகவுக்கு பாதுகாப்பு. பாஜகவுடன் சேர்ந்தால் ஓட்டுகளைப் பிரிக்கமுடியுமே தவிர 3-4 எமெல்யேக்கள் கிடைப்பது கூட கடிணம். அதிகாரம் கிடைக்காவிட்டால், கட்சியை கட்டுப்பாட்டோடு வைப்பது கடினம் தான். ஆனால் தேமுதிகவின் வாக்கு வங்கியை பயண்படுத்தி பாஜக, தெற்கில் கணிசமான வெற்றியைப் பெறவும் வாய்ப்புண்டு. ஒரு வேலை மீண்டும் ஜெயா ஆட்சிக்கு வந்தால் விஜயகாந்த் கட்சி நீடிப்பது கடினம்.
இன்னொரு வாய்ப்பு மக்கள் நலக் கூட்டணி. திமுக போல முழுமையான பாதுகாப்பு என்று கூற முடியாவிட்டாலும் நீண்டகாலப் பயன் அடிப்படையில் 2021 வரை கட்சி கரையாமல் பாதுக்காக்கும் வாய்ப்பு இருக்கிறது. விஜயகாந்த் வந்தால் வாசனும் எளிதாக வந்துவிடுவார். கூட்டணியின் விஸ்தரிப்பு மக்களிடம் பிரம்மாண்டமாகத் தெரியும்.அனைத்து தலைவர்களும் எவ்வித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவர்கள்,பிரச்சார பீரங்கிகள். எனவே மக்களிடம் கூட்டணியின் வீச்சை அதிகரிப்பதோடு சில ஊடகங்களின் உதவிகிடைத்தால் இரண்டாவது பெரிய கூட்டணியாகவும் வாய்ப்பு கிடைக்கும். ஓட்டு பலவாறாக சிதறாமல் மூன்றாக பிரிந்து திமுகவை மூன்றாம் இடத்திற்கு கூட இறக்கலாம்.
சட்டமன்ற தேர்தலில் திமுகவை குறைத்து மதிப்பிடாமல் அது இரண்டாம் இடம் பிடிப்பதாகவே கொண்டாலும், மக்கள் நலக் கூட்டணி குறைந்தபட்சம் 40-50 இடங்கள் வெல்ல பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது. அதிமுகவுக்கும் அருதி பெரும்பான்மை கிடைக்காது. அப்போது மக்கள் நலக் கூட்டணி அமைச்சரவையில் பங்குபெற்று ஆட்சியை கைக்குள் வைக்கக்கூடிய நிலை வந்தால் விஜயகாந்த் கட்சிக்கும் மக்கள் நலக் கூட்டணிக்கும் 2021ல் நல்ல வாய்ப்பு .
பார்க்கலாம் விஜயகாந்தின் ராஜதந்திரம் எவ்வாறு அமையப் போகிறது என்பதை.

என்னைப் பொறுத்தவரை விஜயகாந்தும் வாசனும் மக்கள் நலக் கூட்டணியில் இணைய வேண்டும்... இருந்தாலும் அவர்களை நம்ப முடியாது... எப்ப கலைந்து செல்வார்கள் என்பது யாருக்கும் தெரியாது...
ReplyDeleteபார்க்கலாம்... தேமுதிகவின் முன்னேற்றப்பாதை எப்படி அமைகிறது என்பதை...
விஜயகாந்த்???!!! ம்ம்ம்ம் ஏனோ அவரைத் தலைவராகப் பார்க்க முடியவில்லை. உருப்படியாக யாருமே இல்லை என்றே தோன்றுகின்றது..
ReplyDelete