இறுதிச்சுற்று
கொஞ்சம் லேட் என்றாலும், மனதில் நினைத்ததை எழுதிவிடலாம் என்பதால் தான்......
அரண்மனை 1 முதல் நாள் இரவுக்காட்சி ஹாஸ்டலே
வெக்கேட் ஆனதைப் போல எல்லோரும் சென்று பார்த்த திரைப்படம். ஆனால் என்னவோ
தெரியவில்லை, அரண்மனை 2 யாருக்கும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை, இன்னும் சொல்லப்
போனால் விருப்பமும் இல்லை. இறுதிச்சுற்று பட ரிலீஸன்று க்ளாஸ் நண்பர்கள் மாலைக்
காட்சி சென்று வந்து படம் குறித்து ஏகத்துக்கும் புகழ்ந்தார்கள். என்ன டா என
விமர்சனம் படிக்காமல் ஸ்டார்ஸை மட்டும் பார்த்தேன், 4 ஸ்டார் இருந்த்து. அட, மிஸ்
பண்ணக் கூடாது என அடுத்த நாள் இரவுக்காட்சிக்கு கிளம்பினோம். ( எப்போதும்
இரவுக்காட்சியில் பார்ப்பது தனி சுகம், அதும் பார்த்துவிட்டு வாட்ஸ்மேனுக்கும்
ட்யூட்டருக்கும் தெரியாமல் ஹாஸ்டல் சுவரை ஏறிக் குதித்து வரும் த்ரில்லும் கூட ) படம்
நன்றாக இருக்கிறது என்ற வாய்மொழி விமர்சனம் பரவியிருந்ததால் நல்ல கூட்டம். அதுவும்
இளைஞர்கள் கணிசம். சனி இரவுக்காட்சி, நெல்லையின் பெரிய தியேட்டரில் (பிவிடி) 80 %
நிரம்புவது சாதாரண விசயம் அல்லவே..?
படத்தின் ஆரம்ப காட்சியிலேயே மாதவன் மிரட்டப்போகிறார்
என்பது தெளிவாக புரிந்தது.கைதட்டல் விசில் பறக்க அது ஓய்வதற்குள் கதைக்குள் பயணம்.
சக்தே இந்தியாவில் ஷாருக்கானின் தோற்றம், நடிப்பு, கதாப்பாத்திரம் என
ஒத்திருந்தாலும் சில இடங்களில் அவரையும் மிஞ்சிய இயல்பான நடிப்பை பார்க்க முடிந்தது.
இது வரை நான் பார்த்த்திலேயே ஆகச் சிறந்த ஸ்போர்ட்ஸ் ஜானர் படம் சக்தே இந்தியா.
அதற்கு எந்த விதத்திலும் குறையாத இன்னொரு படமாக என் இதயத்தில்
இடம்பிடித்துவிட்ட்து இந்த இறுதிச்சுற்று.
ரித்திகா.... அவள் பெண்ணா இல்லை பிரமையா என
யோசித்து முடிப்பதற்குள் படம் முடிந்துவிட்டது. அதை நடிப்பு என்று சுருக்கிவிட என்
மனம் இடங்கொடுக்கவில்லை. ஒரே ஒரு உதாரணம்.... குத்தாட்டம் ஆடிக்கொண்டே தனுஸ் பட
போஸ்டரைப் பார்து ஒரு ரியாக்சன் கொடுப்பார் பாருங்கள்.... அந்த ஒரு பிரேம் இன்னும்
எத்தனை பேரது தூக்கத்தை கெடுக்கப்போகிறதோ தெரியவில்லை. மாதவன் மீது காதல்
உருவாகும் இடம் வழக்கமான சினிமாவாக தெரிந்தாலும் அது அடர்த்தியாகும் விதம் சே ,
சான்ஸே இல்ல....
யோவ் தூரமா நின்னு சொல்லிக்குடுய்யா என்றவள் ஓடி வந்து
வேண்டுமென்றே மாதவனை இடித்துவிட்டு ஒரு பார்வை. அதிலேயே பைனல் ஜெயிச்ச ஒரு
பெருமிதம்.......உனக்கான ரெண்டு மணி நேரம் முடிஞ்சிருச்சு வரட்டா என ஸ்டைலாக சொல்ல பேக்ரவுண்டில் கண்ணுல கெத்து தீம் ஒலிக்க மாஸ் ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ்... எங்க இருந்துடா இந்த பொண்ண பிடிச்சாங்க என தோன்றச்செய்துவிட்டாள்.
செங்கிஸ்கான் உவமையை சொல்லிவிட்டு அது தெரிஞ்சா இந்நேரம் நீ பாக்ஸர் ஆயிருப்ப டா
என மாதவன் சொல்ல, அதற்கு ரித்திகா சிரிப்பார் பாருங்கள்...அதில் நீங்களே தொலைந்து
போவீர்கள்.
பாக்ஸிங்கல வேணும்னே தோத்துட்டு, அம்பையர்
மூஞ்சியையும் உடைத்துவிட்டு அப்டியே ஸ்டைலாக மாதவனை பார்த்து ஒரு போஸ். இந்த ஒரே
ஸார்ட்ல மலர் டீச்சர்,செலின்,கார்த்திகா தேவி என எல்லாரையும் தூக்கிவிட்டு இந்த
மதி வந்து நம் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொள்கிறாள்.ஓப்பனிங்க் சாங்க்ல
அவங்க அப்பாவோட போட்ற குத்தாட்டம் ஒரு அழகுன்னா, கேம்ல வின் பண்ணிட்டு ஸ்டேஜ்லையே
போட்ற குத்தாட்டம் பேரழகு.மொத்தத்துல மாதவன அசால்ட்டா தூக்கி சாப்டுடாங்க இந்த
மதி... சாரி ரித்திகா.. “எனக்காக இவ்ளோ செய்யுற இதுக்குப் பேரு காதல் இல்லாம வேற
என்னவாம்” என பதிலை எதிர்பார்க்காமல்
கேட்டுவிட்டு நகரும் இடம், நீ தான் கைய
காயம் பட வச்சன்னு தெரிஞ்சும் ஏதாச்சும் சொன்னேன்..? என அவள் அக்காவிடம் சொல்லும் இடம் என காட்சிக்கு காட்சி இவுங்க மட்டுமே தெரியுறாங்க...
இவங்க ஆட்றது டோனி ஸ்டைல் அதிரடி ஆட்டம்னா
மாதவன் ஆட்றது டிராவிட் ஸ்டைல் க்ளாசிக் ஆட்டம்.... நாசருடனான காட்சிகள்,
வில்லனிடம் திமிரோடு கெஞ்சும் காட்சிகள் என மனுசன் அசால்ட்டு காட்டிருக்கார்.இந்த இரண்டு ஆட்டமும் ரசிக்க வைப்பது தான்
படத்தின் ஆகச்சிறந்த ப்ளஸ் பாயிண்ட். கெஞ்சிமுடித்துவிட்டு திரும்புவரிடம்
வெறுப்பு கலந்த நக்கலாக த்தா நீ அவ்ளோ தான்டா... என மௌனப்புன்னகை கொடுப்பார்
பாருங்கள்.... நடிகன்டா நான் என ஒரு பன்ச் நம் முகத்துக்கு கொடுப்பது போல்
இருக்கும்.
அக்காவ நடிச்ச பொண்ணு, காளி வெங்கட்,
நாசர்,ராதாரவி இவர்களுடன் படத்தின் கதாப்பாத்திரமாகவே மாறிப்போன சந்தோஸ் நாராயண்
என ஒவ்வொருத்தரும் பட்டைய
கெளப்பிருக்காங்க... ( சந்தோஸ் சார் வெயிட்டிங்க் ஃபார் தலைவர் ப்லிம்....) இவ்ளோ
பெரிய அவுட்புட் கெடைக்க முழுமுதற் காரணம் படத்தின் இயக்குநர் என்றால் மிகையில்லை.
சில் ஸ்க்ரிப்ட் எடுத்ததுக்கு அப்புறம் தான் ஹிட்டா இல்லையானு கண்டுபிடிக்க
முடியும் இயக்குநராலயே கூட, ஆனா இவுங்க எழுதும் போதே ஹிட் தான் என நினைத்து
மாதவனிடம் சொல்லியிருக்கிறார், நினைக்கமட்டும் செய்யாமல் அதற்கு கடுமையாக
உழைத்திருக்கிறார். ஹேட்ஸ் ஆஃப் மேம்.
சக்தே இந்தியாவில் இந்திய அணி வெற்றி பெற்ற பின்
கலங்கித் ததும்பும் கண்ணீருடனும் நிற்க முடியாத பெருமிதப் புன்னகையுடனும் தேசியக்
கொடியின் பிண்ணனியில் ஷாருக்கான் தடுமாறி அமரும் போது என் கண்களிலும் தாரை தாரையாக
கண்ணீர் வழிந்தது. அது எத்தனையாவது தடவை பார்த்தாலும்... அதே மாதிரி நம்ம மதி
ஜெயிச்சுட்டு வில்லன போட்டு பொளந்துட்டு மாதவன நோக்கி ஒடி அப்டியே தாவிக் குதிச்சு
உக்காருவாங்க.... தியேட்டர் என்பதாலோ என்னவோ கண்ணீர் மட்டும் தான் வரவில்லை.. அதை
தாண்டிய அத்தனை உணர்வும் வந்தது.
200 % திருப்தியுடன் படம் பற்றி மட்டுமே
திரும்பத்திரும்ப பேசிக்கொண்டே ஹாஸ்டல் வந்தோம். படுக்கையில் படுத்து போனைப்
பார்த்தேன் மணி 2. கண்களை மூடினேன்..
அடுத்த கணம் ரித்திகா மாதவன் மேல் தாவிய அந்த காட்சி நிழலாடியது. விழித்து
சுற்றிலும் பார்த்துக் கொண்டேன், லைட்கள் ஆப் செய்யப்பட்டிருந்த்து. கண்களில்
வழிந்திருந்த கண்ணீரை துடைத்துக் கொண்டேன் யாருக்கும் தெரியாமல்.
இறுதிச்சுற்று வெறும் படம் மட்டும் அல்ல மறக்க
முடியாத , மறக்கவே கூடாத ஒரு கவிதை....
நல்ல விமர்சனம் ஜெயசீலன்....படம் பாத்துவிட்டோம் அருமையான படம் ஆங்கிலப்படம் மில்லியன் டாலர் பேபியின் தழுவலாக இருந்தாலும்...
ReplyDelete#ரித்திகா மாதவன் மேல் தாவிய அந்த காட்சி நிழலாடியது#
ReplyDeleteஆங்கிலப் பட தழுவல் கதையில், இந்த தழுவலும் சூப்பர்தானா:)
மிகச் சிறப்பான விமர்சனம் சீலன்...
ReplyDeleteநானும் இறுதிக் காட்சியில் கண்ணீர் வடித்தேன்...
கலக்கலான படம்...