Wednesday, April 16, 2014

நரேந்திர மோடி vs ரஜினி vs விஜய்


நரேந்திர மோடி vs  ரஜினி  vs விஜய்இன்று மாலை பரபரப்பான ஒரு செய்தி. விஜயை சந்திக்கப்போகிறார் நரேந்திர மோடி. ஓட்டுக்களுக்காக மோடி இன்னும் யாரையெல்லாம் சந்திக்கப்போகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஒரு நாட்டின் பிரதமராக வரப்போகிறார் என்று பரவலாக அறியப்படும் நரேந்திர மோடி தமிழ் நாட்டில் ஓட்டு வாங்க இன்னும் எத்தனை நாடகங்களை அரங்கேற்றப்போகிறார் எனத் தெரியவில்லை.


 நரேந்திரமோடி அலை தமிழ் நாட்டில் பரவலாக வீசுகிறது. எனவே எங்களுக்குத்தான் வெற்றி என முழங்கிய தமிழக‌ பா.ஜ.க தலைவர்கள் ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பிலும் ரஜினி எங்களுக்கு ஆதரவு அளிப்பார் என்று வெளிப்படையாகவே பேசி வந்தனர், வருகின்றனர் இனியும் அப்படித்தான் சொல்லப்போகின்றனர். அது வேறு விசயம், அப்படியானால் மோடி அலை எங்கே போனது???. பிரதம வேட்பாளர் என அறிவித்துவிட்டு தேர்தலைச் சந்திப்பதே என்னைப் பொருத்தவறை தவறான முன்னுதாரண‌ம். அப்புறம் தமிழ் நாட்டில் கூட்டணி முயற்சி. என்னதான் மோடி அலை வீசினாலும் ,வீசுவது போல சொல்லப்பட்டாலும் தமிழ்நாட்டில் கூட்டணி சேர்வதற்கு ஆளில்லாமல் தான் முதலில் இருந்தது . கூட்டணி பேரம் முடிந்து, அதை இறுதிசெய்து பிரச்சாரத்திற்கு வருவதற்குள்ளாகவே தமிழ் நாட்டின் பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் பிரச்சாரத்தை ஆரம்பித்து, கொஞ்ச நஞ்ச மோடி அலையையும் காணாமல் செய்துவிட்டனர். எனவே இதை சரிசெய்ய என்னசெய்யலாம் என யோசித்த தமிழக பா.ஜ.க ரஜினி - மோடி நட்பை பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தது. மேடை தோறும் ரஜினியின் ஆதரவு எங்களுக்குத்தான் என சொல்ல ஆரம்பித்த‌னர். வாக்காளர்கள் ஏமாளிகளா? எவ்வளவு நாள் ஏமாற்றுவது? எப்படியாவது ரஜினியை மோடி சந்தித்து விட ஏற்பாடு செய்யவேண்டும். இதை சரியாகச் செய்த தமிழக பா.ஜ.க ரஜினியின் வாய்ஸைப் பெறுவதில் தவறிவிட்டது.


ரஜினியை காண வரும் முன் பெங்களூரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மோடி, அடுத்து உங்கள் மண்ணின் மைந்த‌ர் ரஜினியை சந்திக்கச் செல்கிறேன் என பலத்த கரவொலிக்கிடையே மகிழ்சியோடு பேசியிருக்கிறார். ஆனால் அவரின் மகிழ்சி நிலைக்கவில்லை. அவர் நினைத்திருப்பார் ரஜினியிடம் கேட்டவுடனேயே அவர் ப்ரஸ் மீட் வத்து தனது ஆதரவை அறிவிப்பர் என்று. அப்படித்தான் தமிழக ப.ஜ.க வும் அவரிடம் சொல்லியிருக்கும். ஆனால் நடந்தது வேறு என்பது உங்களுக்கே தெரியும். இப்போது ரஜினியைச் சந்தித்ததால் பா.ஜ.க வுக்கு என்ன லாபம் என்பதுதான் என் கேள்வி.


ரஜினியுடைய மக்கள் செல்வாக்கு இன்றும் இருப்பது உண்மைதான். அதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் அவர் சொல்பவர்க்கெல்லாம் ஓட்டுப் போடும்  அளவிற்கு மக்கள் முட்டாள்களில்லை. அமைப்பு ரீதியாக ரஜினியே நேரடியாக களத்தில் இறங்கி மக்களை சந்தித்து கேட்டாலே ஒழிய மக்கள் அவரைமட்டுமல்ல யாரையுமே ஆதரிப்பது சந்தேகம். பின்னர் ஏன் 1996 ல் ஆதரித்தபோது நடந்தது என நீங்கள் கேட்கலாம். அதற்கு காரணம் இருக்கிறது.


ஜெயலலிதா எதிர்ப்பலையோடு ரஜினியின் வாய்ஸ் சேர்ந்ததால் ஏற்பட்ட விளைவுதான் அன்றைய தேர்தல் முடிவுகள். அதன் பிறகு 1998 லேயே அவர் புரிந்து கொண்டார், மக்களை சந்திக்காமல் ஊடகத்தின் வழியே பேசினால் எடுபடாது என்பதை. அன்றோடு அவர் வாய்ஸ் கொடுப்பதையும் நிறுத்தி விட்டார் . 2004 ல்  பா.ஜ.க விற்கு ஓட்டளித்ததாகத்தானே கூறினார் தவிர வாய்ஸ் தரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று ரஜினி அல்ல அவருடைய ஆருயிர் நண்பர் கலைஞர் போய் அவரைச் சந்தித்தாலும் நரேந்திர மோடிக்கு அளிக்கப்பட்ட புகழுரைகளைவிட அதிகமாகக் கண்டிப்பாகக் கிடைக்கும்.
அனால் வெளிப்படையான ஆதரவு  கண்டிப்பாகக் கிடைக்காது. இதில் அதிகம் வருத்தப்பட்டது மோடியாகத்தான் இருக்கும். தேடிப்போய் பார்த்தும் நமக்கு வாய்ஸ் தரவில்லையே என்பதுகூட காரணமாக இருக்கலாம். ஆனால் இதில் ஒரு ஆறுதல் என்னவென்றால் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தது. ஒருவேளை அதுவும் நடக்காமல் மற்றவர்கள் சந்திக்க வரும்போது ரஜினி செய்யும் வாசல் வரை வந்து வழியனுப்புதல் மட்டும் நடந்திருந்தால்  மோடி நொந்தே போயிருப்பார். ஆனாலும் சோர்ந்துவிடவில்லை தமிழக பா.ஜ.க மோடி பங்கேற்ற கூட்டத்தில் ரஜினியின் பாராட்டுகளை வாசித்தது. அதோடு மட்டும் நிற்காமல் கிடைக்கிற கேப்பில் இன்னும்  கிடா வெட்டிக்கொண்டே இருக்கின்றனர்.


இன்று விஜய். ரஜினியாவது பரவாயில்லை. அவருக்கு ஒரு எதிர்ப்பு என்றால் துணிந்து போராடுவார். போய் காலில் விழ மாட்டார். ஆனால் விஜய், காலிலேயே போய் விழுந்துவிடுவார். தமிழ்நாட்டின் சர்வாதிகாரியாக ஒருகாலத்தில் இருந்த  ஜெயலலிதாவையே எதிர்த்து அரசியல் நடத்தி அதில் வெற்றியும் கண்டவர் ரஜினி. ரஜினியைப் பற்றி முதல்வருக்குத்தெரியும். எனவே இனிமேல் ஒரு போதும் ரஜினியை முதல்வரோ, முதல்வரை ரஜினியோ  ஒருபோதுமே பகைத்துக்கொள்ளமாட்டார்கள். முதல்வர் மேடையிலேயே கலைஞரைப்புகழந்த ரஜினிக்கு ஜெ தொந்தரவு தர நினைக்கவில்லை. ஆனால் டைம் டூ லீட் என்ற ஒரு  வாசகத்திற்காக விஜய் பட்ட பாடு உலகமே அறியும் . கொடனாடு வரை சென்று திரும்பிவந்த கதையும் நாடு அறியும்.இத்தனைக்கும் சட்டசபைத்தேர்தலில் அணில் போல உதவியவர்?  இளைய தளபதி விஜய். 
எனவே மோடியின் வலையில் விஜய் விழமாட்டார் என அடித்துக்கூறுவேன். விஜய்க்கும் ரசிகர்கள் ஆதரவு இருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது. ஆனால் ரஜினி போல மக்கள் செல்வாக்கு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


ஒரு ரஜினி ரசிகன் என்ற முறையில் நாட்டின் எதிர்கால பிரதமர் வீடு தேடிவந்து ஆதரவு கேட்டார் என்பது எப்படி எனக்குப் பெருமையோ அதேபோல மோடியை விரும்பும் ஒரு ப.ஜ.க தொண்டனுக்கு அது பெருமையாக இருக்குமா என்றால் நிச்சயம் இருக்காது என்பது தமிழக பா.ஜ.க யோசிக்க மறந்த விசயம்.  மோடி போயஸ் தோட்டத்தில் ரஜினியை சந்திக்க இருக்கிறார், தவ்ஹீத் ஜமாத்தின் ஆதரவு வாபஸ், தி.மு.க வின் எழுச்சி போன்ற செய்திகள் தான் முதல்வரை  பா.ஜ.க விற்கு எதிராகப் பேசவைத்திருக்கிறது.  ஆனால் தேர்தலுக்குப் பின் நடக்கப் போவதை நாடே அறியும். பாவம் இதில் பலிகடா ஆக்கப்பட்டவர் நமது கேப்டன். இதுகுறித்து ஒரு தனிப்பதிவு எழுதுகிறேன்.

ஒரு மீள் சிந்தனை........................


கேள்வியாளர்; அதிமுக விலிருந்து கொலை மிரட்டல்கள் வருகிறதாமே உங்களுக்கு?


ரஜினி; இல்லை அதிமுகவில் இருப்பவர்கள் என்னுடைய தோழர்கள், எனவே அங்கிருந்து கொலை மிரட்டல்கள் வருவது என்பது வதந்தி. இப்போது இருப்பது அதிமுக இல்லை ஜெதிமுக.இப்படி பதிலளித்தவர் தலைவர் ரஜினி. எனவே யாருக்காகவும் பயந்து  பா.ஜ.க விற்கு ஆதரவு தெரிவிக்காமல் இல்லை.  ஆனால் மக்களை நன்றாக புரிந்து வைத்திருப்பதன் அடையாளம் தான்  இது.


ஆனால் இதைவைத்து ரஜினிக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்று கூறிவிட முடியாது. இன்றைக்கு கட்சி ஆரம்பித்து அமைப்பு ரீதியாக மெருகேற்றிக்கொண்டு மக்களைச் சந்திக்கும் வரை , சந்தித்து தோல்வியடையும் வரை அதை  யாரும் அதை சொல்ல முடியாது.

ஆனால் ஒன்று கலைஞர் காலத்தில் கண்டிப்பாக தலைவர் அரசியலுக்கு வரமாட்டார். அவருக்குப் பிறகு ஏற்படும் வெற்றிடத்தை சரியாக கணிக்கத்தவறும் வரை அவருக்கான அரசியல் வாய்ப்பு மங்கிப்போகாது.

 1991ல் அழிய இருந்த அதிமுகவை ராஜிவ் படுகொலை காப்பாற்றியது. அது தான் முதல்வரின்  அரசியல் வாழ்வில் திருப்புமுனை  வெற்றி. அதுபோல ரஜினிக்கும் ஏதாவது வாய்ப்பு அமையும். அமையாவிட்டாலும், அவர் அரசியலுக்கு வராவிட்டாலும் வருத்தப்படமாட்டேன். என்னைப்பொறுத்தவரை ரஜினி விஜய் இருவரும் வாய்ஸ் கொடுத்தாலும் கூட தமிழகத்தில் பாஜகவிற்கு 5 க்கு மேல் முடியாது. அதிமுக 20 -  25. திமுக 7 - 15. இது தான் என் கணிப்பு. 


மாற்றுக் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன!!உங்கள் சீலன் !!
வாசிப்பதற்கு நேரம் ஒதுக்கிய நீங்கள் உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும் ஒரு கணம் ஒதுக்கலாமே? தயவு செய்து!!!!14 comments:

 1. எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைதான் நமோவுக்கு இருக்கிறது போலும் !

  ReplyDelete
  Replies
  1. சரியாகச் சொன்னீர்கள் ஜீ, ஓட்டு கேட்க என்னவெல்லாமோ செய்துவருகிறார் மாண்புமிகு எதிர்கால பிரதமர் நமோ. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜீ, தொடர்ந்து வருகைதர வேண்டுகிறேன் ஜீ!

   Delete
 2. எல்லோரும் செய்வதைத்தான் மோடியும் செய்திருக்கிறார். ஏன் முதல்வர் அம்மாவே திரு. ராமதாஸையும் திரு. வைகோவையும் வழியச்சென்று கூட்டணிக்கு அழைக்கவில்லயா. திரு.ரஜினியே கூறிவிட்டார் மோடி சிறந்த தலைவர் என்று பின்னர் ஏன் அவருடைய விசிறியான நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள். யாருடைய வாய்ஸும் தேவையில்லை மோடி அலையால் 20‍,25 தொகுதிகள் ஜெயிப்பது உறுதி.

  ReplyDelete
 3. நல்ல கட்டுரை. ரஜினியின் தற்போதைய நடவடிக்கையை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். மேலும் அவர் சிந்தித்து செயல்படுபவர்.

  ReplyDelete
  Replies
  1. thanks for your coming sir, keep visit my blog sir...

   Delete
 4. you are correct mr.seelan. rajni voice will not support modi. but when he come with strong political party and with people response, defiantly he will win. and then vijay is not a big person comparing with rajni and modi. he will not take any decision about this meeting. if he take any deision , that will not help modi. you see the speech of modi about rajni, he said rajnikanth ji, but about vijay he said south india film person. it is the difference between rajni and vijay.

  ReplyDelete
 5. விரிவான கட்டுரைக்குப் பாராட்டுகள். ஆனால், தங்கள் கணிப்புகளில் எனக்கு உடன்பாடில்லை. “ரஜினி விஜய் இருவரும் வாய்ஸ் கொடுத்தாலும் கூட தமிழகத்தில் பாஜகவிற்கு 5 க்கு மேல் முடியாது“ ஐந்து என்பதே நல்ல கற்பனை. காங்கிரசிற்கு வேண்டுமானால் 2,3 இடங்களில் டெபாசிட் கிடைக்கலாம். ரஜினி, விஜய் ரசிகர்களுக்கு மக்கள் தொடர்போ செல்வாக்கோ கிடையாது நண்பரே! திரையை விடவும் வெளியில் நல்லா நடிக்கிறாங்கப்பா...

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நாட்கள் கழித்து என் வலைப்பக்கம் வந்ததற்கு மிகுந்த நன்றிகள் ஐயா, நீங்கள் கொடுத்த ஊக்கத்தில் தான் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் கூறுவதும் சரிதான் ஐயா. நான் பாஜக மட்டும் சொல்லவில்லை அதன் கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்தேதான் கூறியிருக்கிறேன். அப்புறம் ரஜினி விஜய் இருவருக்கும் மக்கள் செல்வாக்கு இல்லாமலும் இருக்கலாம். ஆனால் அமைப்பு ரீதியாக மக்களைச் சந்தித்து தோல்வியடையும் வரை அவர்களுடைய மக்கள் செல்வாக்கை குறைத்து மதிப்பிடக்கூடாது என்பது தான் என் எண்ணம். நான் கூற விரும்பியது இதைத்தான். ஓட்டுக்காக இன்னும் யாரைச் சந்தித்தாலும் மோடியின் நமோ கோசம் தமிழகத்தில் எடுபடாது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா! தொடர்ந்து இதுபோல் உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை கூறுங்கள். அதை வைத்து என்னை என் எழுத்தை சுய மதிப்பீட்டை தெரிந்துகொள்ள முடியும். நன்றி, ஐயா!!

   Delete
 6. மோடியின் நிலையை நானும் ஏற்றுக்கொள்ளவே செய்கிறேன்! ஆனால் நீங்கள் இவ்வளவு அபிமானமாக கூறும் ரஜினி கருத்தை என்னால் ஏற்றமுடியவில்லை சகோ. உங்கள் மனம் வருந்தாது எப்படி சொல்வதென்று யோசித்தேன். நிலவன் அண்ணா நச்சுன்னு சொல்லீட்டார் !

  ReplyDelete
  Replies
  1. ஒரு நாட்டின் பிரதமராக வரப்போகிறவர் ஒரு சினிமா கலைஞனை தேடி வந்து சந்திப்பது நல்ல நிலைதானா சகோதரி? ரஜினி இன்னும் எந்த ஒரு கருத்தையும் கூறவேயில்லையே? அவர் வீட்டுக்கு யார் சென்றாலும் இதே பதிலுரை வாழ்த்துகள் கிடைத்திருக்கும். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி, தொடர்ந்து இதுபோல் உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை தயங்காமல் கூறுங்கள்!!!! நான் ஏதேனும் தவறாக கூறியிருந்தாலும் மன்னித்துவிடுங்கள்!!!

   Delete
 7. நான் மோடியை ஆதரிக்கவில்லை சகோ, அவரின் பரிதாபநிலையை தான் பகடி செய்கிறேன். ரஜினி என்றுமே கருத்துக்கூறப்போவத்தில்லை என்றே தோன்றுகிறது. பார்ப்போம்.

  ReplyDelete
 8. நீங்கள் தவறாக எதுவும் கூறவில்லை சகோ எனவே மன்னிப்பே தேவையில்லை :))

  ReplyDelete
 9. நீங்கள் தவறாக எடுத்துக்கொள்வீர்களோ என்று தான் சகோ !!! வருகைக்கு நன்றி!! @Mythily kasthuri rengan

  ReplyDelete