Friday, April 25, 2014

ஏழு பேர் விடுதலை?


ஏழு பேர் விடுதலை?

ராஜீவ் கொலை குற்றத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான விடுதலைக்கெதிரான மத்திய அரசின் முறையீட்டிற்கு உச்சநீதிமன்றம் நேரடி தீர்ப்பு வழங்காமல் அரசியல் சாசன அமர்விற்கு மாற்றி உத்தரவிட்டுள்ள நிலையில் ஏழு பேரின் விடுதலை என்னவாகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதைப்பற்றிய ஒரு சிறிய அலசல் தான் இந்தப்பதிவு.


முதலில் குற்றம்சாட்டப்பட்ட அந்த ஏழு பேரில் நளினியின் தூக்கு தண்டனை ஏற்கனவே குடியரசுத்தலைவரால் குறைக்கப்பட்டதும் உங்களுக்கு நியாபகம் இருக்கலாம். இன்று அளிக்கப்பட்ட தீர்ப்புக்கான உத்தரவில் அரசியல் சாசன அமர்வு என்பது இனிமேல் தான் அமைக்கப்பட இருக்கிறது. அதுவரை இவர்களுக்கான விடுதலை தடை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியல் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் போன்றவர்களால் விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறது. தீர்ப்பை எதிர்நோக்கியபோது மேலும் இழுத்தடிக்கும்விதமாகத்தான் இதை பார்க்கவேண்டியுள்ள நிலையை ஏற்படுத்தி உள்ளது.

சரி இந்தவிசயத்தில் தமிழக அரசியல் கட்சிகள் என்னவெல்லாம் செய்தன என்று பார்க்கவேண்டி உள்ளது. 

முதலில் திமுக. எதற்கெடுத்தாலும் வீராப்பு வசனம் பேசும் கட்சியான திமுக இந்த விசயத்தைப் பற்றியும் ஒரே நிலைப்பாட்டில் இருக்கவில்லை. கலைஞர் ஆட்சியில் இவர்கள் மீதான தூக்கு தண்டணை கருணை மனு குறித்து ஆளுநர் அமைச்சரவை முடிவைக்கேட்ட போது நளினிக்கு மட்டும் தூக்கு தண்டணையைக் குறைக்கலாம் என பரிந்துரைத்தது. இப்போது இவர்கள் விடுதலை ஆனால் வறவேற்போம் என்று கூறுகிறது. இதை ஆட்சியில் இருந்த போதே செய்திருக்கலாமே. சரி இவர்கள் பரிந்துரைத்தால் ஆளுநர் தூக்கை ரத்து செய்துவிடுவாறா? என்று கேட்கலாம். ரத்து செய்வதும் செய்யாததும் இரண்டாம் பட்சம், ஆனால் இவர்கள் பரிந்துறைக்கவே இல்லையே!. இப்போது தாம் தூம் என்று குதிக்கிறார்கள். என்ன லாபம்? மொத்தத்தில் திமுக இந்த விசயத்தில் உறுதியான நிலைப்பாடு இருக்கவில்லை என்பது தான் என் கருத்து.


அடுத்து ஆளும் அதிமுக. இந்த விசயம் இவ்வள‌வு தூரம் சென்றதற்கே அதிமுக தான் காரணம். வெறும் தேர்தல் அரசியலுக்காக இவ்வளவு அவசரப்பட்டதும் ஒரு காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. சரி இந்த விசயத்திலும் இக்கட்சியின் ஆரம்ப நிலைப்பாடு தெளிவானதாக இல்லை.விடுதலை செய்வதில் இவ்வளவு அவசரம் காட்டியதும் அதிமுக தான், நளினி பரோலில் செல்ல அனுமதி கேட்டபோது மறுத்ததும் அதிமுக தான்.அரசியல் சட்ட ஆலோசனைகளை ஆற அமர யோசித்து முடிவெடுத்திருக்கலாம். எங்கே தேர்தல் நேர கவர்ச்சி போய்விடுமோ என்று அவசர முடிவு எடுத்துவிட்டு இன்று பதறுகிறார்கள். இது போல் பலமுறை நீதிமன்றத்தால் குட்டு வாங்கியும் இருக்கிறது.(சமச்சீர் கல்வி போன்று)


காங்கிரஸ் மட்டுமே அன்றிலிருந்து இன்றுவரை எதிர்ப்பது என்ற ஒரே நிலையிலுள்ளது மனிதாபிமானமே இல்லாமல்.

தமிழ் ஆர்வலர்கள் வேறு. அவர்கள் தொல்லை வேறு தாங்க முடியவில்லை. விடுதலைப் புலிகள் தலைவர் பிராபகரனை தூக்கில் போடவேண்டும் என்று சொன்னவரையும், ஒருமணி நேரம் உண்னாவிரதம் இருந்தவரையும் ஆட்சிக்கட்டிலில் அமர்த்தி அழகு பார்த்துவருகின்றனர்.பிறகெப்படி அவர்கள் குரல்கள் நேர்மையானதாக, உறுதிமிக்கதாக இருக்கும்?

இன்று இவர்கள் அந்த ஏழுபேரையும் நிரபராதிகள் என்று சொல்லும் அளவிற்கு வந்துவிட்டனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் என்றோ குற்றம் நிரூபிக்கப்பாடதவரகள் என்றோ கூடச் சொல்லலாம்.அதை விடுத்து நிரபராதிகள் என்று சொல்வதெல்லம் திசை திருப்பும் முயற்சி. பிறகு ஏன் அவர்கள் அப்போதே விடுவிக்கப்படவில்லை? தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு உச்சநீதி மன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டவர்களை நிரபராதிகள் என்று இன்று கூறும் இவர்கள் அன்றே வலிமையான வாதத்தை வைத்து விடுவித்திருக்கலாமே? ஆனால் குற்றம்சாட்டப்பட்டுள்ள இந்த ஏழு பேரும் ஏதோ ஒருவிதத்தில் ராஜிவ் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள், காரணமானவர்கள் இல்லை என்பது சின்னக்குழந்தைக்குக் கூட தெரியும் என்பது உச்ச நீதிமன்றத்திற்கு தெரியாதா? தெரியாமலா தூக்குதண்டனை விதித்து தீர்பளித்தது. ஆனால் ஒன்று அவர்கள் நிரபராதிகள் என்று யாரும் சொல்லமுடியாது. அதே நேரத்தில் அவர்கள் குற்றவாளிகள் என்றும் சொல்லக்கூடாது. அது அவர்கள் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும்.


என்னுடைய பார்வையில் இன்றைய தீர்ப்பு ஏமாற்றத்தை தந்தாலும், முறையான தீர்ப்பு வரும் வரை மக்களைக்குழப்பாமல் இருக்கவேண்டும் இந்த அரசியல் கட்சிகள்.


என்னைப்பொறுத்தவரை இது மத்திய அரசுக்கும் மாநில அரசுக்குமான ஒரு அரசியல் அதிகாரப் போட்டியாகத்தான் பார்க்கிறேன். இருவரது போட்டியில் ஏழுபேர் மற்றும் அவர்கள் சார்ந்த குடும்பம் தான் பாதிக்கப்படுகிறது. நான் மாண்புமிகு பாரதப்பிரதமரின் கொலையை நியாப்படுத்தவும் இல்லை.அவரையும் அவரோடு இறந்த குடும்பங்களையும் ஒரு நிமிடம் எண்ணிப்பார்த்தால் இது உங்களுக்கே விள‌ங்கும்.ஆனால் கொலைக்கு உண்மையான  காரணமானவர்கள் தண்டிக்க‌ப்படவில்லை என்பது தான் வேதனையான உண்மை. அதற்காக இந்த ஏழுபேரை இனிமேலும் தண்டிப்பது நியாயம் ஆகாது.


முதலில் ,அவர்கள் இனி தூக்கு தண்டனை அடையப்போவதில்லை. அவர்களுக்கான விடுதலை தான் தள்ளிப்போடப்பட்டுள்ளது என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும்.உச்ச நீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுமைக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால் அரசின் கொள்கை முடிவு விடுவிக்கலாம் என்பது தான்.இந்த முரண்பாடுகளெல்லாம் களையபடும். ஆயுள் தண்டனை என்பது எத்தனை வருடம் என்பதும் அரசியல் சாசன அமர்வினால் இனி கூறப்பட்டுவிடும், அதுவும் ஒருவித்ததில் நல்லது தானே.



இப்போது நான் ஒன்றை நினைவு கூற விரும்புகிறேன். அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்பளித்த போது உச்ச நீதி மன்றம் இந்த வார்த்தையை பயன்படுத்தியது. இந்தியர்களின் கூட்டு மனசாட்சிப்படி எனும் வார்த்தைகள் தான் அவை. அப்படியானால் தமிழர்களுக்கு கூட்டு மனசாட்சி இல்லையா ? இந்த விசயத்தில் மொத்தமாக குழப்புவது உச்சநீதிமன்றம் தான் என்பது என் எண்ணம்.


ஆனால் குறைந்தபட்ச மனிதாபிமான அடிப்படையில் தீர்ப்பு வரும் வரை அவர்களை பரோலிலாவது விடுவிக்க தமிழக அரசு ஆவண செய்யவேண்டும் என்பது தான் என் கோரிக்கை. அதுவரை இந்த விசயத்தை அரசியலாக்காமல் இருக்கவேண்டும் இந்த அரசியல்வாதிகள். இன்னொன்று இன்றைய நிலைகளை எல்லாம் பார்க்கும் போது அரசியல் சாசணத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனும் வாதம் வலுப்படுவது போல் தான் உள்ளது. காலம் கடந்த நீதி அநீதிக்குச் சமம் தானே தவிர அநீதி ஆகாது என நம்புவோம்!!!1



உங்கள் சீலன்!!

5 comments:

  1. உங்களின் பார்வை மிகவும் தெளிவாக உள்ளது சீலன். குறைந்தபட்ச மனிதாபிமானத்திலாவது விடுதலை செய்யவேண்டும் ..

    ReplyDelete
  2. ஏழுபேர் நிலையை அலசும் முன் நீங்கள் சேர்க்க மறந்த ஒரு தகவல் பேரறிவாளன விசாரித்த காவல்துறை அதிகாரியின் அண்மைகால பேட்டி. அவர் எதற்காக பேட்டரி வாங்கினார்கள் என்று தெரியாது, ஆனால் உடன் சென்றேன் என்பதை தேவைகேற்ப கத்தரித்து தான் வாக்குமூலம் வாங்கினேன் என்று சொல்லியிருக்கிறார் அவர்! ஆள் இருக்க அம்பை மட்டுமே முறிக்கும் நம் சட்டங்களும் எய்தவர்களை பற்றி வாயே திறக்காமல் இந்த அம்புகளை முறிப்பதிலேயே குறியாக இருக்கின்றன. நீங்கள் சொல்வது போல் அவர்கள் நிரபராதிகள் இல்லை தான் ஆனால் அவர்களுக்கு பின்னால் புதைந்திருக்கும் மர்மங்களும் வெளிக்கொணரப்பட வேண்டும். ஒரு தமிழனாய் உங்கள் அறசீற்றம் கண்டு மகிழ்கிறேன் சகோ:))

    ReplyDelete
    Replies
    1. ஆம் சகோதரி. அந்த விசயத்தை மறந்தே போய்விட்டேன். நீங்கள் சொல்வது போல் தன் நம் நாட்டு சட்ட திட்டங்கள் உள்ளன.எனவே அரசியலமைப்பு சட்டத்தி சில பகுதிகளிலாவது மறு பரிசீலனை செய்ய் வேண்டியே உள்ளது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ. தொடர்ந்து வருகைதர வேண்டுகிறேன்.

      Delete
  3. காவிரி பிரச்சினை , தமிழக மீனவர்கள் பிரச்சினை , சேது சமுத்திரம் போன்ற முடிவற்ற விசயங்கள் list ல் இப்பொழுது இவ்வெழுவரின் விசாரணையும்,தீர்ப்பும் சேர்ந்துவிட்டது ....

    அரசியல்

    ReplyDelete
  4. நல்ல அலசல்
    எப்படியோ தூக்கு கயிற்றின் நிழலில் இத்துணை ஆண்டுகள் என்பதே ரொம்ப கொடுரமான தண்டனைதானே...
    வெளியில் வரட்டும் அவர்கள்..

    ReplyDelete