Monday, March 24, 2014

இந்திய ஐக்கிய நாடுகள்

இந்திய ஐக்கிய நாடுகள்  
ஐக்கிய அமேரிக்கா,ஐக்கிய அரபு,ஐக்கிய ஐரோப்பா  கேள்விப்பட்டிருக்கிறோம் அது என்ன ஐக்கிய இந்தியா?.

ஆம் இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டுமாம் கூறுவது தமிழின தலைவர் வைகோ அவர்கள். வைகோ மேல் வைத்திருந்த கொஞ்ச மரியாதையும் போய்விட்டது. முதலில் அவர் போய் ப.ஜ.க உடன் சேர்ந்தபோது வருத்தமாக இருந்தது.இப்போது கோபம் வருகிறது.
வைகோ அவர்கள் சமிபத்தில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்தும் வரவேற்கப்படவேண்டிய அம்சங்கள் , அனால் இந்த ஒன்றைத்தவிர.இந்தியா பெயரை கேட்டவுடன் நம் மனதில் எழும் மகிழ்சி என்பது சாதாரண மகிழ்சியா என சிந்தித்துப் பார்த்தால் கண்டிப்பாக இல்லை .உலகிலேயே நாட்டுப்பற்று மிகுந்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் இருப்பது சந்தேகமே இல்லாமல்  நாம் தான் , ஆனால் நம் நாட்டுப்பற்றை குறைக்கும் விதமாகவே பார்க்கத் தோன்றுகிறது இந்த அறிவிப்பை .

இந்தியா எத்தனை தேசமாக வேண்டுமானாலும் பிரிந்து இருந்திருக்கட்டும், ஆனால் கடந்த 100 ஆண்டுகளாக நாம் இந்தியர்களாகத்தானே இருக்கிறோம்?

இப்போது என்ன அவசியம் இருக்கிறது.

மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்க வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய கருத்து ஆனால் அதற்கும் பெயரை மாற்றுவதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? இதில் உள்ளர்த்தம் இல்லாமலா இருக்கும். அதுவும் அவர் இருக்கும் கூட்டணியில் இது சாத்தியம் இல்லைதான் ஆனாலும் இது பிரிவினைக்கு வழிவகுக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம். அமெரிக்காவை கூறலாம் ஆனால் அங்கே ஒரே மொழி ஆனால் இங்கே?


இந்தியாவின் பலமே அதன் ஒருமைப்பாடு தான், ஆயிரம் தடவை அடித்துக்கொண்டாலும் நமக்கு எனும் போது எல்லோரும் ஒன்று கூடுவது எவ்வளவு பெரிய பலம். இந்திய ஐக்கிய நாடுகள் என்பதில் உள்ள நாடுகள் எனும் பண்மைச்சொல் ஒன்றே போதுமே நம் ஒருமைப்பாட்டுணர்வைக் குலைக்க.முதலில் நான் ஒரு இந்தியன் பின்னரே தமிழன் எனும் உணர்வு எல்லோர் மன‌திலும் இருந்து  அப்படியே தலைகீழாக இடம் மாறும் . அது போல நமக்கும் பிற மாநிலத்தவர்க்குமான தொடர்பு குறையவும் வாய்ப்பு இருக்கிறது.என்னைப் பொறுத்தவரை நான் முதலில் ஒரு இந்தியன் அதன் பிறகு தமிழன் பின்னர்தான் எல்லாமே! நீங்கள் கேட்கலாம் , நீ 100 ஆண்டுகளாகத்தானே இந்தியன் 6000 ஆண்டுகளாக தமிழன் தானே என்று? அப்படியானால் தமிழ்நாடும் சேர, சோழ, பாண்டிய நாடுகளாகத்தானே இருந்தது. எனவே நான் ஒரு சேரத் தமிழன், சோழத் தமிழன், பாண்டியத் தமிழன் என்று கூறுவீர்களோ? கூறினாலும் கூறுவர் சில பிரிவினைவாதிகள். நீங்கள் மட்டுமே கூறுங்கள், பிறரை கூறச்செய்துவிடாதீர்கள்!!!!!! ‍


இந்தியா என் தாய் நாடு இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தோர். என் தாய்த் திரு நாட்டை உளமாற நான் நேசிக்கிறேன்!‍ 

ஒரு முறை உங்களுக்குள்ளாகவே சொல்லிப் பாருங்கள் பிரிவினை எண்ணங்கள் அனைத்தும் ஓடி மறைந்துவிடும்!!!!!!!!
உங்கள் சீலன்...


3 comments:

 1. தமிழ் நாட்டில் ஆயிரம் அரசியல்வாதிகள் சுயநல கருத்துகளை வெளியிடும் போது கேட்பதில்லை. ஆனால் வைகோ அவர்கள் சொல்லும் போது உங்கள் போன்றோருக்கு கசக்குமே! அவர் சொல்வது போல பெயரை மாற்றினால் என்ன குறைந்தா போய்விடும்! ஆழமாக சிந்தித்து பாருங்கள் உங்களுக்கே விளங்கும்..

  ReplyDelete

 2. வணக்கம்!

  நாட்டினை எண்ணி நவின்றவை, என்னிதயக்
  கூட்டினில் மின்னும் குவிந்து!

  நற்புதுகைச் சீலன் நறுந்தமிழ்ச் சீா்பாடிப்
  பொற்புடன் வாழ்க பொலிந்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என்னை ஊக்கப் படுத்தியமைக்கும் மிக்க நன்றி ஐயா! தொடர்ந்து வருகை தந்து என் குறை நிறைகளை கூறவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்!!!!!!

   செய்யுள்ப்பா மிகவும் அருமை ஐயா! நன்றி!

   Delete