Tuesday, February 11, 2014

காதலர் தினம்

காதலர் தினம்


இன்றைய நவ நாகரிக உலகில் காதலர்கள் தினம் என்பது இன்றியமையாததாகிவிட்டது. மேற்க்கத்திய கலாச்சாரம் தொற்று நோய் போல பரவிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு பதிவு அவசியமா என்றால் நிச்சயம் அவசியமானது தான்.

புதுமையை எவ்வித தணிக்கைகளும் இன்றி ஏற்றுக்கொள்வதில் தமிழன் முதன்மையானவன் என்பதற்கு வலுவூட்டும்  பல காரணங்களை கூறிக்கொண்டே போகலாம். சில நேரங்களில் நன்மைகளாகவும் பல நேரங்களில் தமிழனின் தனித்துவத்தை இழக்கச் செய்பவைகளாகவும் உள்ளன அந்த புதுமைகள்.


இங்கிலாந்து மண் என்பது குளிர்ச்சியான பிரதேசம். அங்கு உடம்பு முழுவதையும் மறைத்தால் தான் குளிரிலிருந்து தாக்குப்பிடிக்க முடியும். ஆங்கிலேயர்கள் இந்தியா வந்த பிறகும் கூட அவர்கள் உடையை மாற்றிக்கொள்ள முயற்சிக்கவில்லை. காரணம் அவர்களின் உடை நம்முடைய உடையிலிருந்து வித்தியாசமாக இருந்ததால் தனித்துவமாக தெரிய வேண்டுமே என்பதற்காக கடைசி வரை அவர்கள் இந்திய உடைகளை அணிய விரும்பவில்லை.


                                            

ஆனால் இந்தியா கோடைப்  பிரதேசம். இங்கு உடலை காற்றோட்டமாக வைத்திருப்பது தான் வெயிலிலிருந்து காத்துக்கொள்வதற்கான முறை. எனவே தான் நம்முடைய பாரம்பரிய உடைகளாக வேட்டி, சேலை இருந்தது . அனால் தமிழர்கள் தான் எதயும் பின்பற்றுபவர்களாயிற்றே! ஆங்கிலேயர்களை பார்த்து பேண்ட்,சர்ட் அணிய ஆரம்பித்தோம். இன்று நமது பாரம்பரிய உடைக்கு தினம் கொண்டாடும் நிலைக்கு வந்துவிட்டோம்.(வேட்டி தினம்) அது மட்டுமா வளாக நேர் காணலில் இப்படித்தான் உடை அணிய வேண்டும் என்ற நிலையே வந்துவிட்டது.


உடையில் மட்டுமல்ல மதத்தில்,கல்வி முறையில்,மொழியில் ஏன் உண்ணும் உணவில் கூட அவர்களை பின்பற்ற ஆரம்பித்து விட்டோம். நன்மைகள் இல்லாமல் இல்லை. இருந்தாலும் நாம் நமது தனித்துவத்தை இழந்துவிட்டோம் என்பதும்  உண்மை தானே!. இவ்வளவு ஏன் நமது உறவுகளான மலயாளிகளும், தெலுங்கர்களும், கன்னடர்களும் இன்னும் சில விசயங்களில் அவர்களது தனித்துவத்தை இழக்கவில்லை.

                                         சரி இப்போது விசயத்திற்கு வருவோம்!காதலர் தினம் என்பது உலகம் முழுவதும் கொண்டாடப்படும்  விழாவாகிவிட்டது.சில வருடங்களாய் இந்தியா முழுவதுமே கூட கொண்டாடப்பட்டு வருகிறது . தமிழகமும் இதற்கு விதி விலக்கல்ல. தினங்கள் கொண்டாடுவதற்கு என சில முறைகள் இருக்கிறது என்பதை காற்றில் பறக்கவிடும் விழாவாகக்  காதலர் தினம் தற்போது மாறி வருகிறது என்று சொன்னால் அது மிகையில்லை .

பொது இடத்தில் கொஞ்சிக்குலாவுவதும், கடற்கரை, பூங்கா போன்ற பொது இடங்களில் அத்து மீறுவதும் கூட சமீப காலங்களில் அரங்கேறி வருகிறது.
காதலர் தினம் கொண்டாடக்கூடாது என்பது என் வாதமல்ல. அதனை ஒரு சராசரி தினமாக கொண்டாட வேண்டும் என்பதுதான் என் வாதம்.


காதலின் அடையாளமாக பரிசளித்துக்கொள்வது, வாழ்த்து தெரிவிப்பது என்பன போல பொதுவானவர்களுக்கு இடையூறு இல்லாமல் செய்ய வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள்.

 தமிழனை பொறுத்தவரை காதலுக்கு என்றுமே எதிரி கிடையாது. சங்க இலக்கியம் தொட்டு சங்கர் படம் வரை காதல் இல்லாமல் தமிழன் இல்லை. அதற்காக ஒரு தினத்தை ஒதுக்கியவனும் தமிழன் கிடையாது. ஏனென்றால் பிற இனங்களை போல காதலை ஒரு உணர்வாக பார்க்கவில்லை. அதனை உயிரோடு கலந்த வாழ்க்கையாகப் பார்த்தவன் தான் தமிழன். எனவே அத்ற்கென்று ஒரு நாளை ஒதுக்கவேண்டிய அவசியமும் தமிழனுக்கு ஏற்படவில்லை என்றே கூறலாம்.


                                          
என்னை பொறுத்தவரை உண்மையான காதலர்களுக்கு எல்லா நாளுமே காதலர் தினமாகத்தான் இருக்க முடியும் . எனவே காதலர் தினத்தை கொண்டாடித்தான் காதலை வெளிப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. அப்படியே கொண்டாடினாலும் மற்றவர்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாதவாறு கொண்டாட வேண்டும் என்பதே என் விருப்பம், ஏன் அனைவரி விருப்பமும் கூட அதுவாகத்தான் இருக்கும்.


உங்களுடைய காதலர் தின கொண்டாட்டங்களைக் கண்டு முகம் சுளிக்கும் அத்தனை பேரும் உங்களை மட்டுமல்ல இந்த காலத்துக் காதலையே தவறாக நினைத்துவிடும் வாய்ப்புண்டு என்பதை மனதில் நினைத்து காதலர் தினம் கொண்டாடப் போகும் அனைத்து உண்மையான காதலர்களுக்கும் என் மனமார்ந்த காதலர் தின நல்வாழ்த்துகள்.
                           


உங்கள் கருத்துகளை கூறலாம்! 

7 comments:

 1. அருமையான கட்டுரை
  பன்ச் டையலாக்
  சங்க இலக்கியம் - சங்கர் படம்...
  ரசனை ...மக்கா..

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா! தொடர்ந்து வருகை தர வேண்டுகிறேன்......

   Delete
 2. "என்னை பொறுத்தவரை உண்மையான காதலர்களுக்கு எல்லா நாளுமே காதலர் தினமாகத்தான் இருக்க முடியும் "-மிகவும் அருமையாக சொன்னீர்கள்.

  நல்ல பதிவு . எத்தனை பேர் அரிவாள் கத்தியோடு வரப்போகிறார்கள் எனத் தெரியவில்லை. நல்ல பதிவு. வாழ்த்துகள்!

  ReplyDelete
 3. இந்த வயதில் இவ்ளோ பொறுப்பான பிள்ளையா?
  கட்டுரை நல்ல இருக்கு !
  யாரையும் நேசிக்காதே எனத்தொடங்கும்
  படமும், வரிகளும் அருமை!

  ReplyDelete
  Replies
  1. thanks for your comming, keep visiting my blog!

   Delete
  2. ஒன்னு சொன்னால் கோச்சுக்க மாட்டிங்களே ?
   coming ல கவன குறைவா ரெண்டு m வந்திருக்கு.
   (தொழில் புத்தி, //இங்கிலீஷ் டீச்சர் இது ஓவர்//நான் என்னை சொன்னேன்)

   Delete
  3. sorry teacher... i will try to reduce my spelling mistakes.

   இனிமேல் தவறு செய்யாமல் இருக்க முயற்சிக்கிறேன்... இது போல கூறுவதையே விரும்புவேன்! தவறை திருத்துவது ஒரு ஆசிரியரின் கடமை அல்லவா!

   Delete