Monday, July 14, 2014

பொறியியல் மோகமும் மாணவர்களின் எதிர்காலமும் !


பொறியியல் மோகமும் மாணவர்களின் எதிர்காலமும் !

12 ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்த உடனேயே மாணவர்கள் மற்றும் பெற்றோரின் ஒரே எண்ணம் ஏதாவது ஒரு பொறியில் கல்லூரியில் சேரவேண்டும் என்பதே .சேர்ந்து விட்டால் நமது எதிர்காலம் முன்னேறி விடாதா என்ற ஆதங்கம் ! பாவம் அவர்களை என்ன செய்வது. ஒரு வருடத்தில் சராசரியாக தமிழ் நாட்டில் மட்டும் 2.3 லட்சம் மாணவர்கள் பொறியியல் பட்டதாரிகளாக வெளியேறுகின்றனர். முதுகலைப் பொறியியல் ஒரு 50000 என்று வைத்துக் கொண்டாலும் ஏறத்தாழ  மூன்று லட்சம் பேர். அவர்களில் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கிறது என்று நினைக்கின்றீர்கள் ? வெறும் 60 லிரிந்து 80 ஆயிரம் பேருக்கு மட்டும் தான் ! எஞிசியவர்களின் கனவு ?


Monday, July 7, 2014

அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்


அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் இந்தப் பதிவின் மூலம் யார் மனதையும் புண்படுத்துவடு என் நோக்கமல்ல. உண்மைகள் சில நேரங்களில் புண்படுத்தலாம். அதற்கு கம்பெனி பொறுப்பல்ல.


சனிக்கிழமை நடந்த விஜய் விருது வழங்கும் விழாவில் பேசிய அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் எனக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் தேவையில்லை, தளபதி பட்டமே போதும் என்று சொல்லியிருக்கிறார். அத்டோடு நிற்காமல் வாங்கும் கிரீடம் எவ்வளவு கணமாக இருந்தாலும் தலை கணமாக இருக்கக் கூடாதாம். அடேங்கப்பா இத குமுதம் பட்டம் குடுக்கும் போதே சொல்லீருந்தா நீங்க எங்கேயோ போயிருப்பீங்க.


சரி விசயத்திற்கு வருவோம். இப்போது படவுலகில் மிகப்பெரிய டாக் அடுத்த சூப்பர் ஸ்டார் பற்றித்தான். குமுதம் கொளுத்திப்போட்ட சீனி வெடி இன்று சரவெடியாக பற்றி எறிகிறது கோடம்பாக்கத்தில். முதலில் இந்த சர்வேயை மேற்கொண்டதே தவறு. எங்கே அடுத்த சூப்பர் ஸ்டார் போல அடுத்த புரட்சித் தலைவர், அடுத்த நடிகர் திலகம் , அடுத்த மக்கள் திலகம் போன்ற சர்வேக்களை நடத்துங்கள் பார்க்கலாம். முடியவே முடியாது . காரணம் பயம், அந்த பயம் ரஜினியிடம் அவர்களுக்கு இல்லை. இவர் ஒன்றும் சொல்ல மாட்டார், இவர் ரசிகர்களும் கொஞ்ச நாள் கத்திவிட்டு அடங்கி விடுவார்கள் என்ற எண்ணம்.


பட்டங்கள் போட்டுக்கொள்வது என்பது தமிழ் சினிமாவில் காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறை. முதலில் மக்களாக தந்ததும், பின் பட அதிபர்கள் தந்து மக்கள் ஏற்றுக் கொண்டதும், பிறகு பட அதிபர்கள் மட்டுமே தந்ததும், இப்போது நடிகர்களே போட்டுக் கொள்வதுமென பட்டம் என்பது இன்றியமையாததாகிவிட்டது. கலைவாணர், மக்கள் திலகம், நடிகர் திலகம் போன்றவை மக்கள் தந்த பட்டங்கள். சூப்பர் ஸ்டார் பட்டம் பட அதிபர் தந்து மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பட்டம். காதல் மன்னன், உலக நாயகன் , இளைய தளபதி, அல்டிமேட் ஸ்டார் போண்றவை பட அதிபர்கள் தந்த பட்டங்கள். வேறு வழி இல்லாமல் மக்களிடம் திணிக்கப்பட்டது. புரட்சிக் கலைஞர், புரட்சித் தமிழன், சின்னத் தளபதி போன்றவை அவர்களாகவே போட்டுக்கொண்டது. பட்டங்களே போடாமல் ஜெயித்தவர்களும் இருக்கின்றனர்.இதில் எல்லாம் பிரச்சனை இல்லை. இங்கு அடுத்த எனும் பதம் தான் பிரச்சனை. ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு பட்டம் உச்சமாக விளங்கியிருக்கிறது. பட்டம் அல்ல பட்டத்துக்குரியவர்களால் பட்டம் உச்சமாக விளங்கி வருகிறது. 1955 முதல் 1975 கள் வரை மக்கள்திலகம் என்ற பட்டம் புரட்சித்தலைவர் எனும் நடிகரால் உச்ச அந்தஸ்தில் இருந்தது. 1975 முதல்
1979 முடிய நடிகர் திலகம் எனும் பட்டம் அதற்குரிய நடிகராலும், அதற்குப்பிறகு முதல் இன்று வரை சூப்பர் ஸ்டார் எனும் பட்டம் அதற்குரிய நடிகரால் உச்சத்தில் உள்ளது.
இந்த அடிப்படைகள் கூட புரியாத அல்லது புரியாமல் நடிக்கும் ஒரு நன்கறியப்பட்ட ஊடகம் வேண்டுமென்றே , ஒரு புயலைக் கிளப்பி தன் விற்பனையை உயர்த்த திட்டமிட்டு அரங்கேற்றிய நாடகம் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் எனும் பட்டம். சரி எந்த விதத்தில் விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றது. அதற்கும் காரணம் இருக்கிறது. அஜீத்துக்கு கொடுத்தால் அவர் எப்போதுமே ஒரே சூப்பர் ஸ்டார் என் தலைவர் தான் என்று கூறிவிட்டு வாங்காமல் ஒதுங்கி விடுவார். பின் பத்திரிக்கைக்கு அவமானமாகிவிடும். இருக்கவே இருக்கார் நம்ம விஜய் என அவருக்கு தந்துவிட்டார்கள். இது தான் உண்மை.


சரி கொடுத்துவிட்டார்கள். அதற்கு எந்த வகையில் தகுதியானவர் விஜய் ?


1975 ல் சினிமாவில் அறிமுகமான ரஜினி சிகரட்டை தூக்கிப் போட்டு பிடிப்பதினாலும், முடியை ஸ்டைலாக கோதுவதினாலும், பஞ்ச் வசனங்கள் பேசுவதினாலும் மட்டும் சூப்பர் ஸ்டாராகிவிடவில்லை.எல்லாம் கடின உழைப்பு ! தன்னம்பிக்கை ! விடா முயற்சி ! ஜெயிக்க வேண்டும் என்ற வெறி ! எல்லாவற்றுக்கும் மேல் , மக்கள் செல்வாக்கு !

இவற்றில் ஒன்றாவது விஜய்க்கு இருக்கிறதா ? ரஜினியுடன் ஒப்பிட எந்த வகையிலாவது தகுதி உடையவரா ?

சூப்பர் ஸ்டார் இதுவரை 27 வெள்ளிவிழா திரைப்படங்கள் தந்தவர். அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறிக்கொள்பவர் 7 வெள்ளி விழாபடமாவது தந்திருக்கிறாரா ?

சரி இப்போது படங்கள் ஓடும் நாட்களில் வெற்றி இல்லை. கலெக்ஸனில் தான் உள்ளது என்று வைத்துக் கொள்வோம். எத்தனை படங்களில் கலெக்ஸனை அள்ளி எடுத்து தயாரிப்பாளருக்கு கொடுத்துக்கொண்டிருக்கிறார். ஒரு வெற்றி என்றால் ஒன்பது தோல்வி !

எத்தனை  தயாரிப்பாளர்கள் விஜயை நம்பி நூறு கோடி பட்ஜெட்டில் படமெடுக்க தயாராக இருக்கின்றனர் !

ரஜினி நடித்த முள்ளும் மலரும் போன்ற ஒரு திரைப்படம், திரைப்படம் கூட வேண்டாம் ஒரு சீனிலாவது நடிக்க முடியுமா ?

ரஜினியால் நான் நஸ்டமடைந்தேன் என ஒரு தயாரிப்பாளராவது சொல்லியிருக்கிறார்களா ?


இந்தியாவைத் தாண்டி விஜய்க்கு என வெளிநாட்டில் ஒரு மார்க்கெட் இருக்கிறதா ?


விஜய் தொண்ணூறுகளில் அறிமுகமானார். 1990ல் வெளியான அண்ணாமலை படத்தின் ரெக்கார்டுகளை எஜமான் முந்தியது. எஜமானை வீரா முந்தியது. வீராவை பாட்ஸா முந்தியது. பாட்ஸாவை முத்துவும் முத்துவை அருணாசலமும், அதை படையப்பாவும் , படையப்பாவை சந்திரமுகியும், சந்திரமுகியை சிவாஜியும் , சிவாஜியை எந்திரனும் முந்திவருகிறது. எந்திரனை கோச்சடையானால் கூட முந்தமுடியவில்லை. அதற்கு அடுத்த இடம் தான். 90களில் மட்டுமல்ல, அவர் உச்ச நட்சத்திரமானதிலிருந்தே இது தான் நடந்து வருகிறது .

இதில் எங்காவது விஜய் படங்கள் ரஜினி படங்களின் வசூலில் பாதியை தொட்டிருக்கிறதா ?

இல்லை வேறு நடிகர்கள் படங்கள் தான் சாதித்து இருக்கின்றனவா?

மேற்கண்டவற்றுள் எதுவுமே இல்லை ! ஆனால் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற அலப்பறை வேறு ?


சரி இன்று ரஜினியை எதிர்க்கும் எதிர்ப்பது போல நடிக்கும் விஜய் ஆரம்ப காலங்களிலிருந்து இப்படித்தானா ? என்றால் இல்லை !

இளைய தளபதி என்ற பட்டமே இதற்குச் சான்று. ஒவ்வொரு படங்களிலும் தலைவர் ரசிகன், ஒவ்வொரு விழாக்களிலும் தலைவர் புராணம், ஒவ்வொரு பேட்டியிலும் தலைவர் புகழ் என மிகத்தீவிர ரஜினி ரசிகராகவே இருந்தார். இடையில் என்ன மாயமோ ?அண்ணாமலை தம்பி இங்கு ஆட வந்தேண்டா என்று பாடியவர் புரட்சித்தலைவர் ரசிகராகிவிட்டார். இல்லை ரசிகராக மாற்றப்பட்டார். அவர் மனதளவில் இன்றும் ரஜினி ரசிகர் தான் என்பதற்கு 2010ல் நடந்த இயக்குனர் சங்க விழா சாட்சி.

நேற்று சங்கர் இயக்கிய படங்களிலேயே இந்தியன் படம் தான் அவருக்குப் பிடித்த திரைப்படமாம். இதை சிவாஜி வெளியான போது மறந்துவிட்டார். ஏனென்றால் அப்போது சங்கர் இந்தியன் படம் எடுத்திருக்கவில்லை !! அவருக்கு எந்தப் படம் வேண்டுமானாலும் பிடித்துவிட்டு போகட்டும். எந்த நடிகரையும் பிடித்துவிட்டு போகட்டும் எதற்காக சூப்பர் ஸ்டாரை வைத்து வியாபாரம் பார்க்க துடிக்கிறார் ?

மக்கள் விரும்பும் நாயகனாகிவிட்டால், அடுத்த தலைமுறையில் இவர் பட்டமே உச்ச நட்சத்திரமாகிவிடப்போகிறது. அதை விடுத்து இப்போது செய்யும் நடவடிக்கையில் மக்களிடம் பெயர்தான் கெடுகிறது.


இந்த நேரத்தில் ஒரு அறிக்கை விடுத்திருக்கிறார் தல. என்றைக்குமே சூப்பர் ஸ்டார் தலைவர் மட்டும் தான். வீணாக சண்டை போட வேண்டாம் . அவர் துரோணாச்சாரியார் , நான் ஏகலைவனாக இருக்கவே ஆசைப்படுகிறேன். இவ்வாறு கூறிய தல எங்கே, அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் எங்கே !


அவர் விஜயைப் போல மாற மாட்டார். அன்றும் இன்றும் என்றும் தலைவர் ரசிகர் தான்.

இவ்வளவு ஏன் பட்டமே போட்டுக்கொள்ளாமல் 25 வெள்ளி விழா திரைப்படங்களை மோகன் கொடுக்கவில்லையா ? முரளி வெற்றிபெறவில்லையா ? இன்றும் தனுஸ் முதல் விஜய் சேதுபதிவரை எத்தனை பேர் இருக்கின்றனர் ?


அதெல்லாம் தெரியாது. அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்தவுடனேயே பல்லை இளித்துக்கொண்டு வாங்கிவிட்டு அறிக்கை வெளியிட்டு புலகாங்கிதம் அடைய வேண்டியது.

தலைவர் எனும் நாமத்தை தலைவா எனும் திரைப்பட பெயரால் பறிக்க முயன்று தோற்ற கூட்டம், இன்று சூப்பர் ஸ்டாரை சூறையாட எண்ணுகிறது ! இவ்வுலகில் கடைசி ரஜினி ரசிகன் இருக்கும் வரை அது உங்களால் முடியாது. 

கூகுளிலும் சரி உலகிலும் சரி தலைவர் என்றால் அது இருவர் தான். ஒருவர் என் தேசியத்தலைவர் பிரபாகரன். இன்னொருவர் என் க‌லையுலக தலைவர் சூப்பர் ஸ்டார்.( வேண்டுமானால் சர்ச் செய்து பார்த்துக் கொள்ளுங்கள் ) 


உங்களுக்கெல்லாம் மறந்து போயிருக்கலாம். விடுதலை புலிகள் கடுப்பாட்டில் ஈழம் இருந்த போது தணிக்கை இல்லாமல் அங்கு வெளியாகும் திரைப்படங்கள் தலைவர் படங்கள் மட்டுமே !!!


இரண்டு நிகழ்சிகழை மட்டும் நினைவு கூற விரும்புகிறேன். 2007 சிவாஜி வெளியாகியிருந்த சமயம். திரைப்படமே பார்க்காத இந்நாள் முதல்வர் அன்றைய முன்னால் முதல்வர் அத்திரைப்படத்தை தோழியோடு அமர்ந்து பார்த்துவிட்டு படம் அருமை என பத்திரிக்கை பேட்டியளித்துவிட்டு செல்கிறார்.படம் வெற்றியடைகிறது. வெள்ளி விழாவில் முதல்வர் அமர்ந்திருக்கிற விழாவில் அவர் பெயரைச் சொல்லி பாராட்டியதற்கு நன்றி தெரிவித்து பேசியவர் தலைவர்.


அதேபோல 2013ல் எம்.எஸ்.வி பாராட்டு விழாவில் இன்றைய முதல்வர் விழாவில் என் ஆருயிர் நண்பர் என முன்னாள் முதல்வரின் பெயர் சொல்லி வாழ்த்தினார் எம் தலைவர்.இப்படிப்பட்ட எம் தலைவர் எங்கே அடுத்த சூப்பர் ஸ்டார் எனச் சொல்லும் இவர் எங்கே !ஒன்று மட்டும் தான்,இவ்வுலகிற்கு ஒரே சூரியன் ! அதுபோல‌

ஒரே சூப்பர் ஸ்டார் எம் தலைவன் மட்டுமே !

அடுத்த சூப்பர் ஸ்டார் எல்லாம் மின்னி மறையும் மின்மினிப் பூச்சிகள் !

மின்மினிப்பூச்சிகள் வெளிச்சம் தரலாம் .

 என்றைக்கும் சூரியனாகிவிட முடியாது.... 

புரிந்தவர்களுக்கு தெரியும் யார் சூப்பர் ஸ்டார், யார் தலைவர் என்றெல்லாம் !


வாசித்த கண்களுக்கு நன்றிகள் !

கருத்திடப் போகும் விரல்களுக்கும் நன்றிகள் !! நன்றிகளுடன் உங்கள் சீலன் !