Monday, May 14, 2018

ரஜினி இன்னமும் தாமதிக்கிறாரா?

6 நாட்கள் வேளாங்கண்ணி நடைப் பயணம்.. கிட்டத்தட்ட 135 கி.மீ. புதுகை,தஞ்சை,திருவாரூர்,நாகை என 5 மாவட்டங்களின் வழியே..நான் ரஜினி ரசிகன் என்பது உங்களுக்கெல்லாம் தெரிந்த விசயம் தான்...  எந்த ஊரில் நுழைந்தாலும் ரஜினி ரெபரென்ஸ் ஏதும் இருக்கிறதா என கவனிப்பேன்..,போஸ்டர்ஸ்,பேனர்,சுவர் விளம்பரம் என ஏதேனும் ஒன்று..அந்த வகையில் நான் முதலில் நுழையும் போதே தலைவர் போட்டோகளாலேயே சில ஊர்களில் வரவேற்பை பெற்றிருக்கிறேன்.. சிதம்பரம்,விழுப்புரம்,திருச்சி,நெல்லை ,தூத்துக்குடி இந்த ஊர்களில் எல்லாம் முதன் முதலாக நுழையும் போதே என்னை ஏதேனும் ஒரு தலைவர் போஸ்டர்கள் தான் வரவேற்றிருக்கின்றன..இதோ கடந்த டிசம்பர் 31 அவரின் அரசியல் அறிவிப்புக்கு பின் கள அளவில் ரஜினிக்கு எவ்வளவு வரவேற்பு இருக்கும் என தெரிந்து கொள்ள இந்த நடை பயணத்தை உபயோகிக்கலாம் என்ற எண்ணத்தோடு தான் பயணிக்க தொடஙகினேன்..



Sunday, May 21, 2017

ரஜினி அரசியல்

ரஜினி அரசியல்



ரஜினியின் அரசியல் அறிவிப்பும் அதன் எதிர்வினைகளுமே இந்த வாரம் முழுதும் பிரதான பேசு பொருள்... ரஜினி அரசியலுக்கு வந்தால் அவரின் நிறை குறை என்னவாக இருக்க முடியும் என்பதே இந்த பதிவின் நோக்கம்.. நாட்டுக்கு இப்போ ரொம்ப முக்கியம் என்று நினைப்பவர்கள் தயவு செய்து கிளம்பிவிடுங்கள்....

முதலில் ப்ளஸ்கள்...

Friday, May 19, 2017

என்ன பெரிய ரஜினி





என்ன பெரிய ரஜினி, ரஜினின்னு துள்ற‌ என பலர் நினைக்கக்கூடும்... ஏனென்றால்...
.
.
நேற்றைய பேட்டியை உன்னிப்பாய் கவனித்திருந்தால் புரியும்.. நேற்றையதை மட்டுமல்ல தலைவரின் ஒவ்வொரு பேச்சுகளுமே இதயத்திலிருந்து வருபவை.. திட்டமிட்டு இதை பேச வேண்டும் என்று பேச முயற்சிக்கமாட்டார்.. நேற்று பேசிக்கொண்டு இருக்கும் போது இத்தனை வருடமாக ஏன் ரசிகர்களை சந்திக்கவில்லை என்பதற்கு பதில் சொல்லும் போது முன்னாடி பட வெற்றி விழாக்களில் சந்திப்பேன்.. இப்போது அந்த வாய்ப்பு அமையவில்லை.. எந்திரன் நன்றாக போனது இருந்தும் அதற்கான வெற்றி விழாவை தயாரிப்பு நிறுவனம் நடத்த முன்வரவில்லை, கபாலி நன்றாக போனது அதற்கு நடத்தமுடியாமல் போய்விட்டது... இத்தோடு முடித்துக் கொண்டிருக்கலாம்.... ஆனால் கோச்சடையான்,லிங்கா சரியாக போகவில்லை என்பதையும் சொன்னார்.. இன்றைய தேதியில் எந்த முண்ணனி நடிகரும் சொல்லத்தயங்கும் இடம் இது தான்.. படம் சூரமொக்கையாக தோற்றிருந்தாலும், மேடையில் வந்து நின்றுகொண்டு ஜெயித்திருக்க வேன்டிய படம் என சமாளிக்கத்தான் பார்ப்பார்கள்... ஆனால் ரஜினி. அப்படியல்ல...!

Saturday, January 28, 2017

தமிழில் நீட் தேர்வு..!

நீட் தேர்வு தமிழில் நடத்தப்படுகிறது என சப்பைக்கட்டு கட்டுபவர்களுக்காக..


தமிழகத்தின் மொத்த அரசு மருத்துவ இடங்கள் 2500. நீட் தேர்வுக்கான பாடத்திட்டம் சிபிஎஸ்இ. தமிழக சிபிஎஸ்இ மொத்த இறுதி மாணவர்கள் ஏறத்தாழ 10000 பேர். தமிழக பாடத்திட்டத்தில் படிப்பவர்கள் 8 லட்சம் பேர். இருக்கின்ற 2500ல் 75 % இந்த சிபிஎஸ்இ மாணவர்களால் எளிதாக நிரப்பப்பட்டுவிடும், காரணம் பாடத்திட்டம். மீதி உள்ளதிலும் பெரும்பாலும் நகர்ப்புற தனியார் தமிழக பாடத்திட்ட மாணவர்களால் நிரப்பப்பட்டுவிடும். பின் அரசுப் பள்ளி கிராமப்புற மாணவர்களின் நிலை...? அதிலும் கிராமப்புறங்களில் இன்னும் நீட் தேர்வு என்றால் என்ன என்றே தெரிந்திருக்கவில்லை. இப்போது மருத்துவ‌ கட் ஆப் 197ல் இருந்தாலும் அதில் ஒரு 30 35 % பேராவது கிராமப்புற மாணவர்களாக இருக்கிறார்கள் என்பது ஒரு ஆறுதலாக இருந்தது..! ஆனால் இனி..?


இனி கோச்சிங் சென்டர்களில் காசைக்கொட்டி நீட் தேர்வுக்கும் படித்து,பொதுத் தேர்வுக்கும் படித்து மாணவர்கள் என்ன மிசினா இல்லை ரோபோக்களா...? இந்தியா முழுமைக்கும் ஒரே பாடத்திட்டத்தினை வகுக்க வக்கற்ற அரசுகள்,பேசுவதென்னவோ கல்வியில் சமத்துவம்...! விந்தையாகவும் வெறுப்பாகவும் இருக்கிறது. 


ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் களிலும் இதே தானே என கேட்பவர்களுக்கு, அது விருப்ப நுழைவுத்தேர்வு. 12ம் வகுப்பில் நல்ல மார்க் எடுத்தால் அண்ணா பலகலையில் கூட இடம் இருக்கிறது. ஆனால் நீட் என்பது மருத்துவப்படிப்புக்கு ஒரு கட்டாய தேர்வு . 12ம் வகுப்பில் 1200 மார்க் எடுத்திருந்தாலும் நீட்டில் பாசானால் மட்டும் தான் மருத்துவ இடம். (அடுத்த வருடம் பொறியியலுக்கும் வந்துவிடும் அது வேறு விசயம்) முதலில் பாடத்திட்டத்தை வழிசெய்யுங்கள், பின் பொதுத் தேர்வை ரத்து செய்யுங்கள்..அப்புறம் அந்தந்த படிப்புகளுக்கென எத்தனை நுழைவுத் தேர்வு வேண்டுமானாலும் வையுங்கள்....! இந்தியாவில் இருப்பவர்கள் அனைவரும் கோச்சிங் சென்டர்களில் சேரும் அளவுக்கு பணம் படைத்தவர்கள் அல்லர் என்பதை உணருங்கள்...!

Thursday, January 12, 2017

எழுவாய் தமிழா..!

இந்தியா சுதந்திரம் அடைந்த போது பல தேசிய இனங்களின் கூட்டமைப்பு எத்தனை நாள் தாங்கும் என மேற்குலக நாடுகள் எடைபோட்டன. அதை தவிடுபொடியாக்கி பவள விழா நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் இந்தியனாக. ஆனால் அதற்கான பிரதிபலனாக அதைக்கொடு இதைக்கொடு என்றெல்லாம் இதுவரை போராடியதில்லை.. எங்கள் உரிமைகளிலும்,பண்பாட்டு கலாச்சாரத்திலும் தலையிடாமல் இருந்தாலே போதும். டெல்லிக்கு கோவில் கட்டுவார்கள் தமிழர்கள்.. அதையும் கூட விட்டுவைக்காமல் அடி மேல் அடி அடித்துக் கொண்டிருந்தால் விளைவுகளை தாங்கும் சக்தி உங்களுக்கு இருக்காது என்பது தான் நிதர்சனம்.


Tuesday, July 12, 2016

காஸ்மீர் பிரச்சனை எப்போது தான் முடியும்..?

காஸ்மீர் பிரச்சனை எப்போது தான் முடியும்..?

யோசித்துப்பார்த்தால் நாம் பிறந்த தேசமும் சரி இனமும் சரி (தமிழகம்) சுதந்திரத்துக்குப் பின் ஒரு போதும் அத்துமீறி அல்லது நீதிக்கு புறம்பாக எந்த பெரிய‌ நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதில்லை. சுதந்திர வங்க தேசம் ஒரு அத்தியாவசிய தேவையாய் இருந்ததால் அது விதிவிலக்கு. கன்னடர் தமிழரை விரட்டி விரட்டி அடித்த போது,இலங்கை இனப்பிரச்சனையில் நம் ராணுவ நடவடிக்கைகள் என சொல்லிக் கொண்டே போகலாம். ஆனானப்பட்ட உலக வல்லரசாம் இங்கிலாந்தின் நேர்மையும் கூட சில்காட் அறிக்கையால் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. ஆக அத்துமீறுதல் என்ற நிலை இந்தியாவுக்கு என்றைக்கும் சாத்தியம் இல்லை,ஏன் விரும்பத்தகாத‌ நிலையும் கூட.

Friday, May 13, 2016

அடுத்த ஆட்சி...? திமுக..? அதிமுக..? கேப்டன்..? சீமான்..?

தொடர்ச்சி...


என் கணிப்பின் படி  கண்டிப்பாக வெல்ல இருக்கும் வேட்பாளர்கள்...


1.மா.சுப்பிரமணியம் திமுக 

2.சிவசங்கர் திமுக‌

3.சக்கரபாணி திமுக‌

4.ஐ.பி திமுக‌

5.செங்கோட்டையன் அதிமுக‌

6.தங்கம் தென்னரசு திமுக‌

7.அப்பாவு திமுக‌

8.சி.ஆர்.சரஸ்வதி அதிமுக ( அக்காவோட ஸ்பீச்சுக்கு நான் அடிமை மக்கழே)

9.பூங்கோதை ஆலடி அருணா திமுக‌

10.கிருஸ்ணசாமி புதிய தமிழகம்

11.ஜிவாஹிருல்லா ம.ம.க‌

12.தனியரசு அதிமுக‌

13.அன்புமணி பா.ம.க‌

14.ஆஸ்டின் திமுக‌

15.துரைமுருகன் திமுக‌

16.மா பாண்டியராஜன் அதிமுக‌


என்னுடைய தொகுதியான திருமயத்தில் திமுக வேட்பாளர் ரகுபதி 15,000 வாக்குகளுக்கும் மேலான வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். 

என் பகுதிகளில்,


1.புதுக்கோட்டை அதிமுக ( முரசு வேட்பாள்ரின் வாக்கு பிரிப்பால் பெரியண்ணன் அரசு வெல்வது கடினம் )


2.விராலிமலை திமுக (அமைச்சர் விஜய பாஸ்கர் கடும் போட்டி )


3.கந்தர்வகோட்டை அதிமுக‌


4.ஆலங்குடி திமுக 


5.அறந்தாங்கி கடும் போட்டி


6.காரைக்குடி அதிமுக‌


7.திருப்பத்தூர் திமுக (வீடியோ வந்த பின் க‌டும் போட்டி)



தமிழகத்தில் கடும் இழுபறி நிலவும்  தொகுதிகள்,


1.திருச்செந்தூர்

2.திருவாடணை

3.கோவை தெற்கு

4.உளுந்தூர்பேட்டை

5.கடலூர்

6.மேட்டூர்

7.தளி

8.விருகம்பாக்கம்

9.செஞ்சி

10.விழுப்புரம்

11.திருக்கோவிலூர்

12.சிவகங்கை

மொத்தத்தில் என்னுடை கணிப்பின் படி அடுத்து திமுக ஆட்சி அமைக்கிறது. தொகுதிகளின் படி,


திமுக கூட்டணி 120  - 130


அதிமுக கூட்டணி 90 - 100


தேமுதிக,ம.ந.கூ,த.மா.கா 5‍ - 9


பா.ம.க  2‍ - 4


பா.ஜ.க 1- 2


நா.த.க 0- 1