Monday, May 14, 2018

ரஜினி இன்னமும் தாமதிக்கிறாரா?

6 நாட்கள் வேளாங்கண்ணி நடைப் பயணம்.. கிட்டத்தட்ட 135 கி.மீ. புதுகை,தஞ்சை,திருவாரூர்,நாகை என 5 மாவட்டங்களின் வழியே..நான் ரஜினி ரசிகன் என்பது உங்களுக்கெல்லாம் தெரிந்த விசயம் தான்...  எந்த ஊரில் நுழைந்தாலும் ரஜினி ரெபரென்ஸ் ஏதும் இருக்கிறதா என கவனிப்பேன்..,போஸ்டர்ஸ்,பேனர்,சுவர் விளம்பரம் என ஏதேனும் ஒன்று..அந்த வகையில் நான் முதலில் நுழையும் போதே தலைவர் போட்டோகளாலேயே சில ஊர்களில் வரவேற்பை பெற்றிருக்கிறேன்.. சிதம்பரம்,விழுப்புரம்,திருச்சி,நெல்லை ,தூத்துக்குடி இந்த ஊர்களில் எல்லாம் முதன் முதலாக நுழையும் போதே என்னை ஏதேனும் ஒரு தலைவர் போஸ்டர்கள் தான் வரவேற்றிருக்கின்றன..இதோ கடந்த டிசம்பர் 31 அவரின் அரசியல் அறிவிப்புக்கு பின் கள அளவில் ரஜினிக்கு எவ்வளவு வரவேற்பு இருக்கும் என தெரிந்து கொள்ள இந்த நடை பயணத்தை உபயோகிக்கலாம் என்ற எண்ணத்தோடு தான் பயணிக்க தொடஙகினேன்..கிட்டத்தட்ட 50 பேருக்கும் மேல் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.. அதில் 5 பேர் கிட்ட ரஜினி ரசிகர்கள்.. அவர்களின் கருத்துகளை கடைசியாக பார்ப்போம்.... மீதி இருப்பவர்களின் எண்ண ஓட்டம் தான் முக்கியம்.. அதிமுகவில் இத்தனை சரிவுகள் ஏற்பட்டும் அவர்கள் ரஜினியை மாற்றாக  தேர்வு செய்யவில்லை என்பதே எனக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது.அதிமுகவுக்கு இனிமேல் வாக்களிக்கமாட்டோம் என்று சொன்ன அதிமுகவினர் கூட, ரஜினியை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என்ற கேள்விக்கு அவர முதலில் வர சொல்லுங்க.. அவர் வருவார்னே நம்பிக்கை இல்ல என்ற பதிலை சொன்னார்கள்.. இது அதிமுகவினரிடம் மட்டுமல்ல கட்சி சாராத பலரிடமும் இதே பதில் தான்.. திமுகவினருக்கு லேசாக பயம் தென்படுகிறது.. ஆனால் வெளிக்காட்டாமல் அவர் அரசியலுக்கு வரவேமாட்டார்னு சத்தியம் பண்றாங்க.. பாண்டி எனும் ஊரில் ஒரு முதியவர் ரஜினி ரசிகர் + திமுக அனுதாபி.. அவர் ரஜினி வரமாட்டார் அப்டி வந்தா திமுகவோடு தான் கூட்டணி வைப்பார்னு சிரிக்காம பேசினார்...


ரஜினி வரமாட்டார்னு சொன்னவங்களிடம் அவர் வருவார்னு சொன்னேன். ஆனால் நம்பாமல் தான் பார்த்தார்கள்.. உறுப்பினர் சேர்க்கை,பூத் கமிட்டி, நிர்வாகிகள் நியமனம் எல்லாம் நடக்கிறதுன்னு சொன்னாலும் எல்லாமே அவர் ரசிகர்கள் செய்றது.. அவர் என்ன செய்றார்.. ?இமயமலை போறார், அமெரிக்கா போறார், அரசியலுக்கு வரேன்னு சொல்றார் ஆனா எதுவும் பேச மாட்றார் எப்போனு சொல்லமாட்றார்..அதுனால அவர் வருவார்னு நம்பிக்கை இல்லனு தங்கள் எண்ணத்துக்கு நியாயம் கற்பிக்கின்றனர். காலா ஆடியோ லான்ச் அப்போ திருச்சிற்றம்பலத்தில் இருந்தேன்.  மறு நாள் பட்டுக்கோட்டையில் என் வழக்கமான உரையாடலை தொடர்ந்த போது ரஜினியின் பேச்சு அடுத்த நாளே அங்கெல்லாம் ரீச் ஆகியிருந்தது எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது.. அங்கே ஒருவர் காலா விழாவில் ரஜினி பேசியதை வைத்தே, பாருங்க மறுபடி நேரம் வரட்டும்னு சொல்றார்.. கடைசி வரைக்கும் இப்டி தான் சொல்வார்.. வரவே மாட்டார்னு சொல்லி எனக்கு அதிர்ச்சி அளித்தார்..ஆக ரஜினியை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றனர். எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்பது மட்டும் உறுதியாக தெரிந்தது.. ஆனால் பொதுஜன மனநிலையில் ரஜினி வருவதற்கான அறிகுறிகள் இல்லாததால் அதை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.. இந்த உரையாடல்களில் எனக்கு கிடைத்த இன்னொரு அதிர்ச்சி கமல் குறித்த அவர்களின் பார்வை.. கமல் கட்சி ஆரம்பித்து ஏதாச்சும் பேசுறார் ஆனா ரஜினி எதுவுமே சொல்வதில்லைனு கணிசமான பதில் கிடைத்தது.. ஒரு சில அதிமுகவினர் ரஜினியை விட கமலிடம் கொஞ்சம் சாய்வது போல் தெரிகிறது.. இதே போல கமல் Maintain செய்தாலே கணிசமான அதிமுகவினர் ஆதரவு பெற வாய்ப்பு இருக்கிறது.  ரஜினியா கமலா என்று நான் கேட்கவில்லை.. கேட்பதும் தவறு.. ஏனென்றால் ரஜினி இன்னும் கட்சி தொடங்கவில்லை.. ஆனால் இளைஞர்கள் தாங்களாகவே இருவரையும் ஒப்பிட்டு ரஜினியைவிட கமல் பெட்டர்னு சொல்றாங்க... விஜய் ரசிகர்கள் கமல் கட்சிக்கு எங்கள் தளபதி நிச்சயம் ஆதரவளிப்பார்ன்ற ரேஞ்சுக்கு பேசுறாங்க.. கடைசியா ரஜினி ரசிகர்கள் கருத்து.. அவர்களிடம் ஒரு பின்னடைவு தெரிகிறது.. நான் பேசிய 5 பேரில் ஒருவர் பூத் கமிட்டி செகரட்டரியாம்.. 7 பூத் கொடுக்கப்பட்டுள்ளதாம்.. யாரிடம் சென்று போட்டோ கேட்டாலும் உங்க தலைவர் கட்சி ஆரம்பிச்சதும் கண்டிப்பா இணையுறோம்னு சொல்றாங்களாம்.. அதிலும் இம்மாதத்துக்குள் பூத் கமிட்டி அமைக்க கெடு வேறாம்.. பாவம் தலையை பிச்சுகிறார்.. இன்னொரு ரஜினி ரசிகர் எங்க ஊர்ல முக்காவாசி ஓட்டு இப்போதே தலைவருக்குனு அடிச்சுவிட்டார்.. அப்புறம் ஏன் கொடி,போர்ட் இல்லணு கேட்டதுக்கு ஆள் எஸ்கேப்.. திருத்துறைப் பூண்டி அருகே ஒரு ரஜினி ரசிகர் தலைவர் வர்ர வரை இப்டி தான்.. வந்ததுக்கு அப்புறம் எல்லாமே மாறிடும்னு என்ன மாதிரியே நம்பிக்கையா பேசுனார்.  எனக்கும் அந்த நம்பிக்கை தான்.. தலைவர் வந்ததும் களம் மாறும்.. ஒரு வகையில் அவர் களம் இறஙகாமலே இவ்ளோ சாதிக்கிறது பெருமையா ஆச்சர்யமா இருக்கு..
 மக்கள் நிறைய எதிர்பார்க்கின்றனர்.. 
ரஜினி இதுவரை மக்களிடம் தன் அரசியல் வருகையை உறுதிபடுத்தும் எந்த செயலையும் செய்யவே இல்லை.. ரசிகர்களிடம் உறுதிபடுத்திவிட்டார்.. ஆனால் அது போதவே போதாது.. மக்களிடம் சென்றடைய, தான் அரசியலுக்கு வருவேன் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.. குறைந்த பட்சம் கட்சிக்கான அடிப்படை வேலைகள் நடைபெறுகிறது என்ற தோற்றத்தையேனும் மக்களிடம் சேர்த்திருக்க வேண்டும்.. என்பார்வையில் அதிலும் தவறிவிட்டார்.  கமல் கட்சி ஆரம்பித்து இத்தனை கூட்டம் போட்டபின்பு தான் கொஞ்சம் கொஞ்சமாக ஆதரவு வருகிறது.  எதுவும் செய்யாமல் பூத்கமிட்டி அமைக்க சொல்வதும்,உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபடுத்துவதும் நிர்வாகிகளை சோர்வடையச்செய்யும்.. இப்போது கட்சி கூட அறிவிக்க வேண்டாம்.. ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களைக் கூட்டி தான் அரசியலுக்கு வருவதை உறுதிப்படுத்திய ரஜினி ஒரு மாநாடை போட்டு மக்களிடம் உறுதிப்படுத்த எவ்வளவு நேரம் ஆகப்போகிறது? ஏன் இந்த தயக்கம்? காலா ஒரு திரைப்பட நிகழ்வு.. அங்கே அரசியல் பேசுவது சரியாக இருக்காது என்றால் ஏன் தன் ஒட்டுமொத்த office bearers ஐயும் பாஸ் கொடுத்து அழைக்க வேண்டும்.. அருகாமையில் இருக்கும் மாவட்ட ரசிகர்களை மட்டும் அழைத்திருந்தாலே போதுமே..சரி அழைத்தாயிற்று..  பெரிய கவரேஜ் இருக்கிறது.. தன் மொத்த நிர்வாகிகளும் இருக்கிறார்கள்..பட விழாவில் அரசியல் பேசக்கூடாது என நினைத்திருந்தால் அந்த டாபிக்கையே தொடாமல் அல்லவா கடந்திருக்க வேண்டும்..அரசியலை தொட்டுவிட்டு பின்பு நேரம் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்றால் அங்கே இருக்கும் ரசிகர்கள் புரிந்து கொள்ளலாம்.. அனால் மக்கள்? என்னடா ரஜினி மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வரார்னு பேசமாட்டாங்களா? பின்ன எப்டி ஊருக்கு போய் அவர்கள் உறுப்பினர் சேர்க்க முடியும்? ஒரு பூத்க்கு 10 பேர் இருந்தாலே போதுமானது.. ஆனால் 30 பேர் சேர்க்க சொல்லியிருக்கின்றார் ரஜினி.. 65000 பூத் மற்றும் 1.5 கோடி உறுப்பினர் இந்த டார்கெட் எப்போ முடியுதோ அடுத்த நாளே கட்சி என்பதாக சில செய்திபடித்தேன்.. நல்ல விசயம்.. அதற்கு முதலில் ரஜினி தான் அரசியலுக்கு வருவதை மக்களிடம் உறுதிப்படுத்த வேண்டாமா?.. ரசிகர்களிடம் உறுதி செய்துவிட்டு ,பின் எல்லோரும் பார்க்க மீண்டும் நேரம் வரட்டும் என்று சொன்னால் பின்ன எப்ப்டி உறுப்பினரா சேர மக்கள் தயாராவாங்க..?எனவே ரஜினி விரைவில் மக்களை சந்திக்க வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் எண்ணமும்.  தேர்தல் வரை இப்படியே மெயிண்டைன் செய்துவிட்டு கரெக்டா தேர்தல் அப்போ மட்டும் மக்கள்கிட்ட போனா அரசியலில் வெற்றி பெற முடியுமானு சொல்லத் தெரியல.  கண்டிப்பாக தலைவர் அப்டி செய்ய மாட்டார்.. விரைவில் மாநாடு தேதி இடம் அறிவிப்பார்னு நம்பும் பலபேரில் நானும் ஒருவன்..பார்க்கலாம் நம் எண்ணம் இவ்வாறு இருக்க அவர் எண்ணம் எவ்வாறு என..எல்லாமே ரஜினி ரசிகன் என்ற மனநிலை தாண்டி எழுதியவை.. எனவே படிப்பவர்களும் ரஜினி ரசிகன் என்ற வரையறை தாண்டி படித்து உங்கள் கருத்துகளை பகிருங்கள் ..!


No comments:

Post a Comment