இன்றைய இளைஞர்களிடம் தேசப்பற்று குறைந்து வருகிறது!
எங்கள் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் நான் பேசிய பட்டிமன்றத்தின் தலைப்பு இது தான். பட்டிமன்றத்திற்கு நடுவராக புலமை முதல்வர் அவர்கள் வீற்றிருந்தார். பட்டிமன்றத்தின் தீர்ப்பை கடைசியில் தருகிறேன். இனி நான் பேசியவை.....
அனைவருக்கும் வணக்கம்! நடுவர் பெருந்தகைக்கும் அனைவருக்கும் என்னுடைய குடியரசு தின வாழ்த்துகளும் வணக்கங்களும்! ஆம் இன்றைய இளைஞர்களிடம் தேசப்பற்று குறைந்து வருகிறது! குறைந்து வரவில்லை கரைந்து வருகிறது என்று கூட சொல்லலாம்.
போற்றூவார் போற்றட்டும் புழுதிவாரித் தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து சொல்வோம் ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால் எவர் வரினும் நில்லேன் அஞ்சேன்---=______ பாரதிதாசன்.
நான் பயப்பட மாட்டேன் இப்படிக்கூறுவதற்கு. இன்றைய இளைஞர்களின் தேசப்பற்றுக்கு இங்கு வருகை தந்திருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கையே உதாரணம்.
மேலும் இன்றைய தேசப்பற்று இப்படித்தான் இருக்கிறது. முகப்புத்தகத்தில் குடியரசு தின வாழ்த்து என நிலைத்தகவல் பதிவேற்றுவதிலும் அதற்கு லைக் பெறுவதிலும் தான் இருக்கிறது.உண்மையா இல்லையா நடுவர் அவர்களே?
படை வலிமையிலும் அணுக்கருவி படைப்பிலும் அமெரிக்கா,ரஸ்யா,பிரிட்டன்,பிரான்ஸ்,சீனா ஆகிய 5 பெறும் வல்லரசுகளுக்கு இணையாக வளர்ந்து நிற்கிறது இந்தியா. ஆனால் பொருளாதாரத்தில் மட்டும் வளர்சி கை கூடமுடியாமல் தவிக்கிறோம். இதற்கு நாமும் சிறிய அளவு காரணம் என்று நினைக்கும் போது ஏமாற்றமாக உள்ளது. ஆம் இன்றைய இளைஞர்களின் விருப்ப பானம் பெப்ஸி. தலைக்கு தேய்க்கும் சாம்பு முதல் காலில் அணியும் செருப்பு வரை பெரும்பாலும் அந்நிய பொருட்களே. பிறகெப்படி உள் நாட்டுப் பொருளதாரம் வளர்ச்சி அடையும். இவை நாட்டுப்பற்றுள்ளவன் செய்யும் செயல்களா?
இந்திய அரசாங்கத்தின் செலவுகளிலும்,சலுகைகளிலும் படிக்கும் பெரும்பாலனவர்கள் தேடி ஓடுவது வெளிநாடுகளைத்தானே! கேட்டால் வேலைவாய்ப்புகளில்லை என்ற சப்பு காரணங்கள்.
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்! ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்! ஒழுங்காய் பாடுபடு வயல்க்காட்டில்! உன் புகழ் உயரும் அயல் நாட்டில்! என்று பாடிய பட்டுக்கோட்டையாரின் நாட்டிலே வாழ்ந்து கொண்டு இப்படிக்கூறலாமா?
நான்கு பேர் நிற்கும் இடத்தில் நாட்டைப்பற்றிப் பேசினால் காத தூரம் ஓடுபவர்கள் தான் இன்றைய இளைஞர்கள்! இன்றைய இளைஞர்களுக்கு இந்தியாவின் வரலாறு தெரிவதில்லை, பொருளாதாரம் தெரிவதில்லை. அவர்களுக்கு தெரிந்தது எல்லம் அரியர் கிளியர் செய்வது, நாலு பொண்ணுங்கள சைட் அடிக்கிறது,வேலைக்கு போறது,சம்பாதித்து செட்டில் ஆவது, இவை மட்டும் தான் நடுவர் அவர்களே!

தேசப்பற்று என்பது என்ன ?
தமிழ் சினிமாக்களில் அர்ஜுனும்,விஜயகாந்தும் பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஓட ஓட விரட்டுவது மட்டும் தேசப்பற்றாகாது,
இந்தியாவின் மலைகளையும் எல்லைகளையும் நேசிப்பது மட்டும் தேசப்பற்றாகாது,இந்திய ஏவுகணைகள் விண்ணில் ஏவப்படும் போது அதை நினைத்துப் பார்ப்பது மட்டும் தேசப்பற்றாகாது,ஏ.ஆர் ரகுமான் 2 ஆஸ்கார் விருதை கையில் வாங்கி எல்லாப்புகழும் இறைவனுக்கே என்று தமிழில் கூறியதை நினைத்து புலங்கிதம் அடைவது மட்டும் தேசப்பற்றாகாது.இவை எல்லவற்றுக்கும் மேலாக,
சிதம்பரம் கோவில் சிற்றம்பல மேடையில் தமிழில் பாடக்கூடாது எனும் மொழித்தீண்டாமையை தரியமாக எதிர்த்துப் பேசுவதுதான் உண்மையான தேசப்பற்று.
ஒரிஸ்ஸாவிலும்,குஜரத்திலும் சிறுபான்மையினர் அநியாயமாக கொல்லப்படும் போது தட்டிக்கேட்பதுதான் உண்மையான தேசப்பற்று.
சாதி மறுத்து திருமணம் செய்பவர்களை சாதி வெறியர்கள் ஈவு எரக்கம் இன்றி கொல்வதை எதிர்த்துக்க் கேட்பது தான் உண்மையான தேசப்பற்று.
பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படும் போது அதை எதிர்த்துக் கேட்பதுதான் உண்மையான தேசப்பற்று.
இவைகளில் ஒன்றையாவது நாம் செய்திருக்கிறோமா? பிறகெப்படி தேசப்பற்று வளர்கிறது என்று சொல்லமுடியும் நடுவர் அவர்களே!
காஸ்மீர் இந்த்யாவிற்குச் சொந்தம் என்று நினைக்கும் எத்தனை இளைஞர்க பாகிஸ்தானமும் இந்தியாவினுடையது என்று நினைத்டிருப்பீர்கள். காலம் காலமாக நாம் இருவரும் எதிரி நாடுகள் என்று சொல்லியே வளர்க்கப்பட்டுள்ளோம்.
காலம் கடந்துவிடவில்லை! நேரம் முடிந்துவிடவில்லை! இனிமேலாவது இளைஞர்கள் விழித்துக்கொண்டு "இளைய ரத்தம் என்ன போலியா? எழுத வேன்டும் புதிய இந்தியா" எனும் கூற்றை உண்மையாக்கப் பாடுபடவேண்டும்.
அதுவரை இளைஞர்களிடம் நாட்டுப்பற்று வளராது குறையும்!குறையும்! குறையும்!
எனக்கு பேச வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன் நன்றி வணக்கம்! வாழ்க தமிழ்! வளர்க பாரதம்!
இறுதியில் இன்றைய இளைஞர்களிடம் தேசப்பற்று குறைவது போல தோன்றினாலும் தேசப்பற்று ஒருபோதும் குறையாது! வளர்ந்தது! வளர்கிறது! வளரும்! என்று நடுவராய் வீற்றிருந்த புலமை முதல்வர் அவர்கள் தீர்ப்பு வளங்கினார்.
புலமை முதல்வர் அவர்கள் சந்தேகத்துடன் சொன்னது சரி தான் (வளரும்!)
ReplyDeleteம்... வளர வேண்டும் - முதலில் தனிமனித ஒழுக்கம்...
உங்கள் தரப்பு உரையாடலுக்கு வாழ்த்துக்கள் ஐயா...
ஆம்! அன்று மட்டும் குடியரசு தினமாக இல்லாமலிருந்திருந்தால் கண்டிப்பாக தீர்ப்பு வேறு மதிரிதான் இருந்திருக்கும். தங்கள் வருகைக்கு நன்றி ஐயா!
ReplyDeleteநான் மாணவன் தான் ஐயா! சீலன் என்றே அழைக்கலாம்!
@திண்டுக்கல் தனபாலன்
நல்ல கருத்துகள் சீலன், கருத்துகளைப் பேசும்போது தவறாமல் நகைச்சுவை சேர்த்துப் பேசுங்கள் அப்போதுதான் அவை நல்ல காதுகளைச் சென்று சேரும் தொடர்ந்து எழுதுங்கள், நல்ல வலைப்பக்கங்களைத் தேடிப் படியுங்கள். மேம்போக்காக எழுதாமல் ஆழ்ந்த சிந்தனைகளை எழுதிப்பழகுங்கள். நன்றி.
ReplyDeleteமிக்க நன்றி ஐயா! இனிமேல் எழுதுவதற்கு முயற்சிக்கிறேன் ஐயா!
ReplyDeleteபேசும்போது நகைச்சுவை முக்கியம் என்பதையும் தெரிந்து கொண்டேன் ஐயா!நன்றி!
@முத்துநிலவன்
nalla urai.. irunthalu ayya muthunilavan kuriyathai pol nakaichuvai serthu pesungal.. ayya kalaingar tv yil pesuvathai kavaniyungal... vazhthukal
ReplyDeleteஆம் ஐயா! நகைச்சுவை சேர்த்து பேச முயற்சிக்கிறேன்! முத்துநிலவன் ஐயாவின் உரைகளை பார்த்திருக்கிறேன் ஐயா! தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா!! தொடர்ந்து வரவேண்டும்.. நன்றி!
Deleteசிந்தனை சிற்பி!
ReplyDeleteநன்றி ஐயா! தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்! தொடர்ந்து வர வேண்டுகிறேன்!
Delete