6 நாட்கள் வேளாங்கண்ணி நடைப் பயணம்.. கிட்டத்தட்ட 135 கி.மீ. புதுகை,தஞ்சை,திருவாரூர்,நாகை என 5 மாவட்டங்களின் வழியே..நான் ரஜினி ரசிகன் என்பது உங்களுக்கெல்லாம் தெரிந்த விசயம் தான்... எந்த ஊரில் நுழைந்தாலும் ரஜினி ரெபரென்ஸ் ஏதும் இருக்கிறதா என கவனிப்பேன்..,போஸ்டர்ஸ்,பேனர்,சுவர் விளம்பரம் என ஏதேனும் ஒன்று..அந்த வகையில் நான் முதலில் நுழையும் போதே தலைவர் போட்டோகளாலேயே சில ஊர்களில் வரவேற்பை பெற்றிருக்கிறேன்.. சிதம்பரம்,விழுப்புரம்,திருச்சி,நெல்லை ,தூத்துக்குடி இந்த ஊர்களில் எல்லாம் முதன் முதலாக நுழையும் போதே என்னை ஏதேனும் ஒரு தலைவர் போஸ்டர்கள் தான் வரவேற்றிருக்கின்றன..இதோ கடந்த டிசம்பர் 31 அவரின் அரசியல் அறிவிப்புக்கு பின் கள அளவில் ரஜினிக்கு எவ்வளவு வரவேற்பு இருக்கும் என தெரிந்து கொள்ள இந்த நடை பயணத்தை உபயோகிக்கலாம் என்ற எண்ணத்தோடு தான் பயணிக்க தொடஙகினேன்..
Monday, May 14, 2018
Sunday, May 21, 2017
ரஜினி அரசியல்
ரஜினி அரசியல்
ரஜினியின் அரசியல் அறிவிப்பும் அதன் எதிர்வினைகளுமே இந்த வாரம் முழுதும் பிரதான பேசு பொருள்... ரஜினி அரசியலுக்கு வந்தால் அவரின் நிறை குறை என்னவாக இருக்க முடியும் என்பதே இந்த பதிவின் நோக்கம்.. நாட்டுக்கு இப்போ ரொம்ப முக்கியம் என்று நினைப்பவர்கள் தயவு செய்து கிளம்பிவிடுங்கள்....
முதலில் ப்ளஸ்கள்...
ரஜினியின் அரசியல் அறிவிப்பும் அதன் எதிர்வினைகளுமே இந்த வாரம் முழுதும் பிரதான பேசு பொருள்... ரஜினி அரசியலுக்கு வந்தால் அவரின் நிறை குறை என்னவாக இருக்க முடியும் என்பதே இந்த பதிவின் நோக்கம்.. நாட்டுக்கு இப்போ ரொம்ப முக்கியம் என்று நினைப்பவர்கள் தயவு செய்து கிளம்பிவிடுங்கள்....
முதலில் ப்ளஸ்கள்...
Friday, May 19, 2017
என்ன பெரிய ரஜினி
என்ன பெரிய ரஜினி, ரஜினின்னு துள்ற என பலர் நினைக்கக்கூடும் ... ஏனென்றால்...
.
.
நேற்றைய பேட்டியை உன்னிப்பாய் கவனித்திருந்தால ் புரியும்.. நேற்றையதை மட்டுமல்ல தலைவரின் ஒவ்வொரு பேச்சுகளுமே இதயத்திலிருந்து வருபவை.. திட்டமிட்டு இதை பேச வேண்டும் என்று பேச முயற்சிக்கமாட்ட ார்.. நேற்று பேசிக்கொண்டு இருக்கும் போது இத்தனை வருடமாக ஏன் ரசிகர்களை சந்திக்கவில்லை என்பதற்கு பதில் சொல்லும் போது முன்னாடி பட வெற்றி விழாக்களில் சந்திப்பேன்.. இப்போது அந்த வாய்ப்பு அமையவில்லை.. எந்திரன் நன்றாக போனது இருந்தும் அதற்கான வெற்றி விழாவை தயாரிப்பு நிறுவனம் நடத்த முன்வரவில்லை, கபாலி நன்றாக போனது அதற்கு நடத்தமுடியாமல் போய்விட்டது... இத்தோடு முடித்துக் கொண்டிருக்கலாம் .... ஆனால் கோச்சடையான்,லிங ்கா சரியாக போகவில்லை என்பதையும் சொன்னார்.. இன்றைய தேதியில் எந்த முண்ணனி நடிகரும் சொல்லத்தயங்கும் இடம் இது தான்.. படம் சூரமொக்கையாக தோற்றிருந்தாலும ், மேடையில் வந்து நின்றுகொண்டு ஜெயித்திருக்க வேன்டிய படம் என சமாளிக்கத்தான் பார்ப்பார்கள்.. . ஆனால் ரஜினி. அப்படியல்ல...!
.
.
நேற்றைய பேட்டியை உன்னிப்பாய் கவனித்திருந்தால
Saturday, January 28, 2017
தமிழில் நீட் தேர்வு..!
நீட் தேர்வு தமிழில் நடத்தப்படுகிறது என சப்பைக்கட்டு கட்டுபவர்களுக்க ாக..
தமிழகத்தின் மொத்த அரசு மருத்துவ இடங்கள் 2500. நீட் தேர்வுக்கான பாடத்திட்டம் சிபிஎஸ்இ. தமிழக சிபிஎஸ்இ மொத்த இறுதி மாணவர்கள் ஏறத்தாழ 10000 பேர். தமிழக பாடத்திட்டத்தில ் படிப்பவர்கள் 8 லட்சம் பேர். இருக்கின்ற 2500ல் 75 % இந்த சிபிஎஸ்இ மாணவர்களால் எளிதாக நிரப்பப்பட்டுவி டும், காரணம் பாடத்திட்டம். மீதி உள்ளதிலும் பெரும்பாலும் நகர்ப்புற தனியார் தமிழக பாடத்திட்ட மாணவர்களால் நிரப்பப்பட்டுவி டும். பின் அரசுப் பள்ளி கிராமப்புற மாணவர்களின் நிலை...? அதிலும் கிராமப்புறங்களி ல் இன்னும் நீட் தேர்வு என்றால் என்ன என்றே தெரிந்திருக்கவி ல்லை. இப்போது மருத்துவ கட் ஆப் 197ல் இருந்தாலும் அதில் ஒரு 30 35 % பேராவது கிராமப்புற மாணவர்களாக இருக்கிறார்கள் என்பது ஒரு ஆறுதலாக இருந்தது..! ஆனால் இனி..?
இனி கோச்சிங் சென்டர்களில் காசைக்கொட்டி நீட் தேர்வுக்கும் படித்து,பொதுத் தேர்வுக்கும் படித்து மாணவர்கள் என்ன மிசினா இல்லை ரோபோக்களா...? இந்தியா முழுமைக்கும் ஒரே பாடத்திட்டத்தின ை வகுக்க வக்கற்ற அரசுகள்,பேசுவதெ ன்னவோ கல்வியில் சமத்துவம்...! விந்தையாகவும் வெறுப்பாகவும் இருக்கிறது.
ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் களிலும் இதே தானே என கேட்பவர்களுக்கு , அது விருப்ப நுழைவுத்தேர்வு. 12ம் வகுப்பில் நல்ல மார்க் எடுத்தால் அண்ணா பலகலையில் கூட இடம் இருக்கிறது. ஆனால் நீட் என்பது மருத்துவப்படிப் புக்கு ஒரு கட்டாய தேர்வு . 12ம் வகுப்பில் 1200 மார்க் எடுத்திருந்தாலு ம் நீட்டில் பாசானால் மட்டும் தான் மருத்துவ இடம். (அடுத்த வருடம் பொறியியலுக்கும் வந்துவிடும் அது வேறு விசயம்) முதலில் பாடத்திட்டத்தை வழிசெய்யுங்கள், பின் பொதுத் தேர்வை ரத்து செய்யுங்கள்..அப ்புறம் அந்தந்த படிப்புகளுக்கென எத்தனை நுழைவுத் தேர்வு வேண்டுமானாலும் வையுங்கள்....! இந்தியாவில் இருப்பவர்கள் அனைவரும் கோச்சிங் சென்டர்களில் சேரும் அளவுக்கு பணம் படைத்தவர்கள் அல்லர் என்பதை உணருங்கள்...!
தமிழகத்தின் மொத்த அரசு மருத்துவ இடங்கள் 2500. நீட் தேர்வுக்கான பாடத்திட்டம் சிபிஎஸ்இ. தமிழக சிபிஎஸ்இ மொத்த இறுதி மாணவர்கள் ஏறத்தாழ 10000 பேர். தமிழக பாடத்திட்டத்தில
இனி கோச்சிங் சென்டர்களில் காசைக்கொட்டி நீட் தேர்வுக்கும் படித்து,பொதுத் தேர்வுக்கும் படித்து மாணவர்கள் என்ன மிசினா இல்லை ரோபோக்களா...? இந்தியா முழுமைக்கும் ஒரே பாடத்திட்டத்தின
ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் களிலும் இதே தானே என கேட்பவர்களுக்கு
Thursday, January 12, 2017
எழுவாய் தமிழா..!
இந்தியா சுதந்திரம் அடைந்த போது பல தேசிய இனங்களின் கூட்டமைப்பு எத்தனை நாள் தாங்கும் என மேற்குலக நாடுகள் எடைபோட்டன. அதை தவிடுபொடியாக்கி பவள விழா நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் இந்தியனாக. ஆனால் அதற்கான பிரதிபலனாக அதைக்கொடு இதைக்கொடு என்றெல்லாம் இதுவரை போராடியதில்லை.. எங்கள் உரிமைகளிலும்,பண்பாட்டு கலாச்சாரத்திலும் தலையிடாமல் இருந்தாலே போதும். டெல்லிக்கு கோவில் கட்டுவார்கள் தமிழர்கள்.. அதையும் கூட விட்டுவைக்காமல் அடி மேல் அடி அடித்துக் கொண்டிருந்தால் விளைவுகளை தாங்கும் சக்தி உங்களுக்கு இருக்காது என்பது தான் நிதர்சனம்.
Tuesday, July 12, 2016
காஸ்மீர் பிரச்சனை எப்போது தான் முடியும்..?
காஸ்மீர் பிரச்சனை எப்போது தான் முடியும்..?
யோசித்துப்பார்த்தால் நாம் பிறந்த தேசமும் சரி இனமும் சரி (தமிழகம்) சுதந்திரத்துக்குப் பின் ஒரு போதும் அத்துமீறி அல்லது நீதிக்கு புறம்பாக எந்த பெரிய நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதில்லை. சுதந்திர வங்க தேசம் ஒரு அத்தியாவசிய தேவையாய் இருந்ததால் அது விதிவிலக்கு. கன்னடர் தமிழரை விரட்டி விரட்டி அடித்த போது,இலங்கை இனப்பிரச்சனையில் நம் ராணுவ நடவடிக்கைகள் என சொல்லிக் கொண்டே போகலாம். ஆனானப்பட்ட உலக வல்லரசாம் இங்கிலாந்தின் நேர்மையும் கூட சில்காட் அறிக்கையால் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. ஆக அத்துமீறுதல் என்ற நிலை இந்தியாவுக்கு என்றைக்கும் சாத்தியம் இல்லை,ஏன் விரும்பத்தகாத நிலையும் கூட.
யோசித்துப்பார்த்தால் நாம் பிறந்த தேசமும் சரி இனமும் சரி (தமிழகம்) சுதந்திரத்துக்குப் பின் ஒரு போதும் அத்துமீறி அல்லது நீதிக்கு புறம்பாக எந்த பெரிய நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதில்லை. சுதந்திர வங்க தேசம் ஒரு அத்தியாவசிய தேவையாய் இருந்ததால் அது விதிவிலக்கு. கன்னடர் தமிழரை விரட்டி விரட்டி அடித்த போது,இலங்கை இனப்பிரச்சனையில் நம் ராணுவ நடவடிக்கைகள் என சொல்லிக் கொண்டே போகலாம். ஆனானப்பட்ட உலக வல்லரசாம் இங்கிலாந்தின் நேர்மையும் கூட சில்காட் அறிக்கையால் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. ஆக அத்துமீறுதல் என்ற நிலை இந்தியாவுக்கு என்றைக்கும் சாத்தியம் இல்லை,ஏன் விரும்பத்தகாத நிலையும் கூட.
Friday, May 13, 2016
அடுத்த ஆட்சி...? திமுக..? அதிமுக..? கேப்டன்..? சீமான்..?
தொடர்ச்சி...
என் கணிப்பின் படி கண்டிப்பாக வெல்ல இருக்கும் வேட்பாளர்கள்...
1.மா.சுப்பிரமணியம் திமுக
2.சிவசங்கர் திமுக
3.சக்கரபாணி திமுக
4.ஐ.பி திமுக
5.செங்கோட்டையன் அதிமுக
6.தங்கம் தென்னரசு திமுக
7.அப்பாவு திமுக
8.சி.ஆர்.சரஸ்வதி அதிமுக ( அக்காவோட ஸ்பீச்சுக்கு நான் அடிமை மக்கழே)
9.பூங்கோதை ஆலடி அருணா திமுக
10.கிருஸ்ணசாமி புதிய தமிழகம்
11.ஜிவாஹிருல்லா ம.ம.க
12.தனியரசு அதிமுக
13.அன்புமணி பா.ம.க
14.ஆஸ்டின் திமுக
15.துரைமுருகன் திமுக
16.மா பாண்டியராஜன் அதிமுக
என்னுடைய தொகுதியான திருமயத்தில் திமுக வேட்பாளர் ரகுபதி 15,000 வாக்குகளுக்கும் மேலான வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
என் பகுதிகளில்,
1.புதுக்கோட்டை அதிமுக ( முரசு வேட்பாள்ரின் வாக்கு பிரிப்பால் பெரியண்ணன் அரசு வெல்வது கடினம் )
2.விராலிமலை திமுக (அமைச்சர் விஜய பாஸ்கர் கடும் போட்டி )
3.கந்தர்வகோட்டை அதிமுக
4.ஆலங்குடி திமுக
5.அறந்தாங்கி கடும் போட்டி
6.காரைக்குடி அதிமுக
7.திருப்பத்தூர் திமுக (வீடியோ வந்த பின் கடும் போட்டி)
தமிழகத்தில் கடும் இழுபறி நிலவும் தொகுதிகள்,
1.திருச்செந்தூர்
2.திருவாடணை
3.கோவை தெற்கு
4.உளுந்தூர்பேட்டை
5.கடலூர்
6.மேட்டூர்
7.தளி
8.விருகம்பாக்கம்
9.செஞ்சி
10.விழுப்புரம்
11.திருக்கோவிலூர்
12.சிவகங்கை
மொத்தத்தில் என்னுடை கணிப்பின் படி அடுத்து திமுக ஆட்சி அமைக்கிறது. தொகுதிகளின் படி,
திமுக கூட்டணி 120 - 130
அதிமுக கூட்டணி 90 - 100
தேமுதிக,ம.ந.கூ,த.மா.கா 5 - 9
பா.ம.க 2 - 4
பா.ஜ.க 1- 2
நா.த.க 0- 1
என் கணிப்புகள் - 1
நாளையில இருந்து கருத்துக் கணிப்பு வெளியிட தடையாம்...அதனாலா எல்லாரும் முண்டியடிச்சுக்கிட்டு கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிடுறாங்க. எனக்கு அரசியல்ல சின்ன வயசில இருந்தே ஆர்வம் அதிகம். 2004 நாடாளுமன்றத் தேர்தல்ல இருந்து தேர்தல் முடிவன்னைக்கு நான் டீவி முன்னாடி தான் கெடப்பேன்.சின்ன வயசுலயே அரசியல் ஆர்வம் வர முக்கிய காரணம் அப்பா. வாரம் தவறாம எல்லா அரசியல் புலனாய்வு இதழ்களையும் வாங்கிட்டு வந்து குடுத்து படிக்க சொல்லுவாறு. (பெரும்பாலும் நக்கீரன் ) எங்க தாத்தா வீட்ல தலைகீழ். பக்கா ஏ.டி.எம்.கே. எம்ஜிஆர் புராணம், அதிமுக சாதனை வரலாறுன்னு கேட்டு கேட்டு தெரிஞ்சுக்குவேன். அப்புறம் நம்ம மிரட்டுநிலை ஹை ஸ்கூல். பசங்களோட மதியம் பக்கத்துல உள்ள டீக்கடைக்கு போய் எல்லா பேப்பரையும் அலசி ஆராய்வோம். எட்டாவது வந்ததுக்கு அப்புறம் ப்ரேயர் நடத்துனதும் அதுல செய்திகள் வாசிச்சதும் நானே. அதுனாலயும் இருக்கலாம். அப்ப வாசிச்சதுல இன்னைக்கும் மறக்காம இருக்க தலைப்பு செய்திகள்ல ஒன்னு," திருமங்கலம் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் லதா அதியமான் 40000 ஓட்டு வித்தியாச்த்தில் அபார வெற்றி".இப்ப ஏன் இதெல்லாம் சொல்றேன்னா, நானும் கருத்துக்கணிப்பு வெளியிடப் போறேன்... ;)
கடந்த எம்.பி எலக்சன்ல தான் முதல் முறையா வாக்களிச்சேன். அப்சொல்யூட்லி திமுகவுக்கு தான். இந்த முறை யாருக்குன்றத கடைசியா சொல்றேன். கடந்த தேர்தலுக்கு நான் கணிச்சது டோட்டலா அவுட். கன்னியாகுமரி,புதுச்சேரி அப்புறம் என்னோட தொகுதியான சிவகங்கை தவிர மத்த எதுவும் நடக்கல. அதுனால என்ன..? கணிப்பு விடாம இருந்துருவனா... ஆனானப்பட்ட நக்கீரனே போனதடவை(2011) திமுக 180 தொகுதில ஜெயிக்கும்னு சொல்லிட்டு இன்னிக்கு மறுபடி கணிப்பு சொல்ல வரல...?சரி நம்ம கணிப்புலகிற்குள் நுழையலாம்.
கருத்துக் கணிப்புகள் நடக்கும்னு நம்பவே முடியாது. ஒரு சில விதிவிலக்கு இருக்கலாம். எனக்குத் தெரிஞ்சு இது வரைக்கும் சோடை போகாத ஒரே கருத்துக் கணிப்பு டாக்டர்.ராஜநாயகம் (லயோலா) கருத்துக் கணிப்பு மட்டும் தான். 2006ல திமுகன்னார், அதே நடந்தது. 2011ல அதிமுகன்னாரு அதே தான் நடந்தது. இபோ திரும்ப திமுகங்குறாரு. பாப்போம்.என்னைப் பொறுத்த வரை 2006ல் திமுக ஜெயிச்சதுக்கு காரணம் திமுக தேர்தல் அறிக்கை. 2011ல அதிமுக ஜெயிச்சதுக்கு காரணம் 2ஜி வெறுப்பு. அதே போல 2016ல திமுக ஜெயிச்சதுன்னா அதுக்கான காரணமும் திமுகவோட தேர்தல் அறிக்கையாத்தான் இருக்கும். காரணம் ரொம்ப சிம்பிள்.அது, ஜெயலலிதா. ஆம், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இந்த 5 ஆண்டு ஆட்சி போல நடக்க சான்சே இல்ல. அப்டி இருந்தும் இவ்ளொ வோட்டு அள்றதுக்கும், இவ்ளோ கான்பிடண்ட்டா அதிமுக இருக்கறுத்துக்கும் முக்கிய காரணம் ஜெ,ஜெ,ஜெ மட்டுமே. இது தமிழகத்தோட டிசைன்.
சென்ற முறை இளைஞர்களின் முழு ஆதரவு மோடிக்கு என்று சொன்னேன்,அப்படியே இருந்தது. இம்முறையும் பாஜகவுக்கு இளைஞர்களிடம் ஆதரவு இருக்கிறது என்று சொன்னால் நம்பவே முடியாது. ஆனால் அது தான் நிதர்சனம். ஆனால் கடந்த முறை அளவுக்கு இல்லை. அப்போ அந்த ஓட்ட பிரிக்குறது யாரு...? நீங்கள் கற்பனையே செய்ய முடியாத நபர். ஆம் சீமான். நாம் தமிழர் கட்சிக்கு இளைஞரகளிடம் அதீத ஆதரவு. அதற்கு அடுத்த இடத்தில் நம்ம கேப்டன். பின்பு பிஜெபி, அதற்குப் பின்னரே திமுக அதிமுக.
ஆக முதல் முறை வாக்காளர்கள்/இளைஞர்கள் ஆதரவு,
1.சீமான்
2.கேப்டனின் ம.ந.கூ (அதுவும் முரசுக்கு மட்டுமே)
3.பி.ஜெ.பி
4.திமுக
5.அதிமுக
என் கணிப்பின் படி ஜெயிக்க இருக்கும் ஸ்டார் வேட்பாளர்கள்....
1.ஜெயலலிதா ஆர்.கே.நகர் (வாக்கு வித்தியாசம் இடைத்தேர்தலைக் காட்டிலும் வெகுவாக குறையும்)
2.கலைஞர் - திருவாரூர்
3.ஸ்டாலின் - கொளத்தூர் ( வாக்கு வித்தியாசம் குறைவாக)
4.வசந்த குமார் (காங்கிரஸ்)
5.ஓபிஎஸ் - போடி அதிமுக
இதுக்கும் மேல கண்டிப்பா ஜெயிபாங்கண்ணு சொல்ற ஸ்டார் வேட்பாளர்கள் இல்லை.
எனக்குப் பிடித்த கண்டிப்பாக சட்டமன்றம் செல்ல வேண்டும் என நான் நினைக்கும் வேட்பாளர்கள்....
1.சீமான்- கடலூர் (வெற்றி பெறுவது கடினம், ஆனால் அதையும் மீறி வென்றால் மிக்க மகிழ்ச்சி. தோல்வி அடைந்தாலும் 30000 வாக்குக்கு மேல் வாங்குவார்)
2.திருமா- காட்டுமன்னார்கோவில் ( ம.ந.கூ ஒரே நம்பிக்கை ,கடும் போட்டி , ஆனாலும் வென்றுவிடுவார் எனும் நம்பிக்கை இருக்கிறது)
3.கேப்டன் - உளுந்தூர்பேட்டை ( வரும் செய்தியெல்லாம் பாத்தா ஒன்னும் சொல்றதுக்கில்ல)
4.வானதி - கோவை ( கடும் போட்டி )
5.ஆளுர் ஷானாவாஸ் - குன்னம் ( கடும் போட்டி)
6.தமிழிசை - விருகம்பாக்கம் (வெல்வது கடினம் )
7.அன்பில் மகேஷ் - திமுக ( வெற்றி)
8.வி.சி.சந்திர குமார் ம.தே.மு.தி.க
தொடர்ச்சி நாளை...
Tuesday, May 10, 2016
நுழைவுத்தேர்வு
நுழைவுத்தேர்வு வைத்து தான் மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்ற இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் அதற்கு ஆட்சேபிக்காத மத்திய அரசின் நிலைப்பாடுகளிலும் எனக்கு உடன்பாடு இல்லை. அதிலும் தமிழகம் போன்ற பதினோறாம் வகுப்புகளே பெரும்பாலும் நடத்தப்படாமல் 12ஆம் வகுப்பை நேரடியாக நடத்தி மாணவர்களை மதிப்பெண் இயந்திரங்களாக வைத்திருக்கும் நமக்கு இது பொருந்துமா என்பதையும் பார்க்க வேண்டும். சிபிஎஸ்இ தரத்திலான நுழைவுத்தேர்வு நடத்தப்படும் போது அதை எழுதும் மாணவர்களின் கல்வித்தரமும் அப்படியே இருக்க வேண்டும். நுழைவுத்தேர்வுக்கென தனி சிறப்பு வகுப்புகள் செல்லும் மேட்டிமைத்தன அல்லது பணக்கார மாணவர்களுக்கு இது மிகவும் உபயோகமானதாக இருக்கும். கிராமப்புற ஏழை நடுத்தர மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு குறித்த ஐயப்பாடுகளே இன்னும் முழுமையாக தீர்ந்தபாடில்லை எனும்போது நுழைவுத்தேர்வு எழுதினால் தான் மருத்துவர் கனவு சாத்தியம் என்பது எப்படி நியாயமாக இருக்க முடியும்..?
Thursday, February 25, 2016
ஒரு நாள்
ஒரு நாள்
நள்ளிரவுத் தூக்கம் தூக்கத்துல கனவு
கனவுல அவ வந்தா தூக்கமும் கனவாகும்
கனவு கலைய தூக்கம் தெளிய காலை மணி எட்டாகும்
குளிச்சும் குளிக்காம வந்து
வளிச்சிக்குட்டு நிப்பேன் தலைய - பின்னே
சாப்பிட்டும் சாப்பிடாம காலேஜ் வந்து நின்னா
கண்களும் தேடும் நாலுபுறம் - அவள
க்ளாஸ ஒரு உருட்டு உருட்டி நிமிஷத்துக்கு
பத்துதரம் உத்து உத்து பார்த்தா
காதோர அழகுமுடி மறச்சு நின்னு ஆடும்
- கண்ண பாக்க விடாம
காத்துல அந்த முடி ஒதுங்குமா ஒதுங்காதானு
எதிர்பார்த்துக் காத்துருந்தா முடிஞ்சுபோகும் - ஒரு நாளே...!
( நண்பன் காளியின் டைரியிலிருந்து )
Wednesday, February 24, 2016
பிரண்டன் மெக்கல்லம் - நவீன யுகத்தின் கிரிக்கெட் வீரன்
பிரண்டன் மெக்கல்லம் - நவீன யுகத்தின் கிரிக்கெட் வீரன்
கோடி மகன்களின் நாயகனே கோடி மக்களின் மன்னவனே.. இந்த வரிகள் அநேகம் பேருக்கு மறந்து போயிருக்கலாம்.. எனக்கு நினைவிருக்கிறது.... ஆம் முதல் ஐபிஎல் தொடரின் தமிழ் தீம் சாங். ஏகத்துக்கும் எதிர்பார்த்த ஒரு தொடர். இது வரையில் பார்த்திராத ( ஆசிய 11, உலக 11 எல்லாம் பேப்பரில் படித்தது தான்) ஒரு புது முயற்சி. வேற்று நாட்டு வீரர்களுடன் உள்ளூர் அணிகளுக்கெதிரான கலர்புல் டி20 தொடர். இந்தியா உலகக் கோப்பை வென்றிருந்த நேரம், டிராவிட்டின் அணி நீக்கத்துக்குப் பின் அவர் பெங்களூர் கேப்டனான தருணம் என உலகக்கோப்பையைக் காட்டிலும் அதிகம் எதிர்பார்த்த தொடர்.
கோடி மகன்களின் நாயகனே கோடி மக்களின் மன்னவனே.. இந்த வரிகள் அநேகம் பேருக்கு மறந்து போயிருக்கலாம்.. எனக்கு நினைவிருக்கிறது.... ஆம் முதல் ஐபிஎல் தொடரின் தமிழ் தீம் சாங். ஏகத்துக்கும் எதிர்பார்த்த ஒரு தொடர். இது வரையில் பார்த்திராத ( ஆசிய 11, உலக 11 எல்லாம் பேப்பரில் படித்தது தான்) ஒரு புது முயற்சி. வேற்று நாட்டு வீரர்களுடன் உள்ளூர் அணிகளுக்கெதிரான கலர்புல் டி20 தொடர். இந்தியா உலகக் கோப்பை வென்றிருந்த நேரம், டிராவிட்டின் அணி நீக்கத்துக்குப் பின் அவர் பெங்களூர் கேப்டனான தருணம் என உலகக்கோப்பையைக் காட்டிலும் அதிகம் எதிர்பார்த்த தொடர்.
Monday, February 22, 2016
நீயா நானா- கடைசி பென்ச் மாணவர்கள்
நீயா நானா- கடைசி பென்ச் மாணவர்கள்
இடையில் என்னவோ
தெரியவில்லை அந்த மழை வெள்ள எபிசோட்டிற்கு பிறகு நீயா நானாவைப் பார்க்க வேண்டும்
என்று தோன்றவே இல்லை. இன்று ஹாஸ்டலில் இரவு உணவை முடித்துவிட்டு எதார்த்தமாக சானல்
மாற்றும் போது BACK BENCHERS பற்றிய விவாதம்
கண்ணில் பட்டது. அதே நேரம் ப்ரோ கபடியை அனைவரும் ஆர்வமாய் ரசித்துக்
கொண்டிருந்தனர். ஏதொ நம்ம இன்ப்ளுயன்ஸ் வச்சு கொஞ்சமாய் ஆள்திரட்டி, சண்டை போட்டு
கடைசியில் மாற்றச் செய்துவிட்டோம். இந்த மாதிரி கஸ்டப்பட்டு சண்டைபோட்டு மாற்றும்
டாபிக்கெல்லாம் சில சமயங்களில் மொக்கையாகிவிடும், அது பெரிய பல்ப் ஆகிவிடும் .ஆனா நேத்து தப்பிச்சுட்டோம்னு
தான் சொல்லணும். சுருக்கமான ஆனால் ஒரு சிறப்பான நீயா நானா நேற்றையது.
Thursday, February 18, 2016
விஜயாகாந்த் என்ன முடிவு எடுக்கப் போகிறார்....?
விஜயாகாந்த் என்ன முடிவு எடுக்கப் போகிறார்....?
இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி, இதுவாகத் தான் இருக்க முடியும் தமிழக அரசியல் களத்தில். 2005 ஆம் ஆண்டு அவரின் கட்சி துவக்க விழா மாநாட்டை இப்போது நினைத்துப் பார்த்தாலும் பிரம்மிப்பாக உள்ளது. என்னா கூட்டம், மதுரையில்... ஆனால் அவராலுமே கூட தனித்தே நின்று ஒரு மாற்றாக வளர முடியவில்லை என்று நினைக்கும் போது அவருடைய அணுகு முறை மாற்றம் பெறுவதில் தவறு சொல்ல முடியாது. தனித்தே நின்று வாக்குகளை சிதறடித்துக் கொண்டே இருக்கும் போது தொண்டர்களும், பணம் செலவு செய்பவர்களும் விரக்தியடைந்து விடுவார்கள். அதற்காக 2011ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்து எதிர்க்கட்சி தலைவரானது நல்லதொரு முடிவுதான் என்னைப் பொறுத்தவரை. அதற்குப் பின் என்ன நடந்தது என்பது நாடறியும்.
இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி, இதுவாகத் தான் இருக்க முடியும் தமிழக அரசியல் களத்தில். 2005 ஆம் ஆண்டு அவரின் கட்சி துவக்க விழா மாநாட்டை இப்போது நினைத்துப் பார்த்தாலும் பிரம்மிப்பாக உள்ளது. என்னா கூட்டம், மதுரையில்... ஆனால் அவராலுமே கூட தனித்தே நின்று ஒரு மாற்றாக வளர முடியவில்லை என்று நினைக்கும் போது அவருடைய அணுகு முறை மாற்றம் பெறுவதில் தவறு சொல்ல முடியாது. தனித்தே நின்று வாக்குகளை சிதறடித்துக் கொண்டே இருக்கும் போது தொண்டர்களும், பணம் செலவு செய்பவர்களும் விரக்தியடைந்து விடுவார்கள். அதற்காக 2011ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்து எதிர்க்கட்சி தலைவரானது நல்லதொரு முடிவுதான் என்னைப் பொறுத்தவரை. அதற்குப் பின் என்ன நடந்தது என்பது நாடறியும்.
Tuesday, February 16, 2016
புதிய தலைமுறை நடத்தியது கருத்துக் கணிப்பா...? திணிப்பா...?
புதிய தலைமுறை நடத்தியது கருத்துக் கணிப்பா...? திணிப்பா...?
தேர்தல் நெருங்கும் போதெல்லாம் கருத்துக் கணிப்பை நடத்திவிடுவது என்பது எல்லா ஊடகத்தினருக்கும் எழுதப்படாத விதி ஆகிவிட்டது. சரி எடுக்கப்படும் கணிப்புகளாவது குறைந்தபட்ச நேர்மையைக் கொண்டிருக்கின்றனவா என யோசித்தால் ஏமாற்றமே மிஞ்சும்.லயோலா ஆரம்பித்து வைத்த இந்த கணிப்பு கண்ணாமூச்சி ஆட்டம், தேர்தல் தேதிவரை தொடரத்தான் போகிறது. எல்லாமுமே அதிமுகவை விட திமுக நூலிழை வித்தியாசத்தில் பிந்தங்கி தமிழக மக்கள் மாற்றம் என்றால் என்ன என்று யோசிக்கக் கூட இடம் தராதவைகளாகவே இருக்கப் போகிறது.
டிராவிட்டுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது...?
டிராவிட்டுக்கு
மட்டும் ஏன் இப்படி நடக்கிறது...?
ராகுல் டிராவிட்.
உலகின் ஆகச்சிறந்த டெக்னிக்கல் கிரிக்கெட்டர். ஆனால் அதிகம் பேசப்படாத, அதிகம் மரியாதை செலுத்தப்படாத, மற்ற வீரர்களின் சாதனைகளின் நிழலிலேயே தன்
மொத்த சாதனைகளையும் கடந்துவிட்ட கவனிக்கப்படாத கிரிக்கெட் வீரர் அவர் தான். சரி
வீரராகத்தான் அதிர்ஸ்டம் இல்லையென்றால் ஓய்வுக்குப் பின்னரும் கூடவே அப்படியே
நடப்பது ஒவ்வொரு டிராவிட் ரசிகரின் துரதிஸ்டம். தொடரும் உதாரணம், நேற்றைய தோல்வி. இருக்கட்டும் துரதிஸ்டம்
எவ்வளவு தூரம் டிராவிட்டை துரத்துகிறதோ அதே போல் நாங்களும் பின் தொடர்வோம்
எப்போதும்.
Sunday, February 14, 2016
மாற்று அரசியல் சாத்தியமாகுமா....?
மாற்று அரசியல் சாத்தியமாகுமா....?
எந்த முறையும் இல்லாத அளவுக்கு இந்த முறை
வித்தியாசமாக அமையப் போகிறது வரும் சட்டமன்ற பொதுத் தேர்தல். மக்களுக்கும் அரசியல்
கட்சிகளுக்கும் கூட. எப்போதும் ஆளும் கூட்டணி, அதற்கு எதிரான ஒரு கூட்டணி,
மூன்றாவதாக சிறிய அணி என நடைபெற்ற தேர்தல் இம்முறை பலமுனை போட்டிகள் கொண்டதாக
இருக்கப் போகிறது என்பது அனைவரும் அறிந்ததே..! தற்போதைய சூழலில் அதிமுக தலைமையில்
ஒரு அணி, திமுக தலைமையில் ஒரு அணி, மக்கள் நல கூட்டணி, பாமக, புறக்கணிக்க முடியாத
அளவுக்கு வளர்ந்துள்ள நாம் தமிழர் கட்சி, தனித்து விடப்பட்டுள்ள பா.ஜ.க என ஆறு
முனை போட்டி. கடைசிநேர மாற்றத்திற்குட்பட்டு 5 முனைப் போட்டி என்பது உறுதியான
ஒன்று.
Thursday, February 11, 2016
இறுதிச்சுற்று
இறுதிச்சுற்று
கொஞ்சம் லேட் என்றாலும், மனதில் நினைத்ததை எழுதிவிடலாம் என்பதால் தான்......
அரண்மனை 1 முதல் நாள் இரவுக்காட்சி ஹாஸ்டலே
வெக்கேட் ஆனதைப் போல எல்லோரும் சென்று பார்த்த திரைப்படம். ஆனால் என்னவோ
தெரியவில்லை, அரண்மனை 2 யாருக்கும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை, இன்னும் சொல்லப்
போனால் விருப்பமும் இல்லை. இறுதிச்சுற்று பட ரிலீஸன்று க்ளாஸ் நண்பர்கள் மாலைக்
காட்சி சென்று வந்து படம் குறித்து ஏகத்துக்கும் புகழ்ந்தார்கள். என்ன டா என
விமர்சனம் படிக்காமல் ஸ்டார்ஸை மட்டும் பார்த்தேன், 4 ஸ்டார் இருந்த்து. அட, மிஸ்
பண்ணக் கூடாது என அடுத்த நாள் இரவுக்காட்சிக்கு கிளம்பினோம். ( எப்போதும்
இரவுக்காட்சியில் பார்ப்பது தனி சுகம், அதும் பார்த்துவிட்டு வாட்ஸ்மேனுக்கும்
ட்யூட்டருக்கும் தெரியாமல் ஹாஸ்டல் சுவரை ஏறிக் குதித்து வரும் த்ரில்லும் கூட ) படம்
நன்றாக இருக்கிறது என்ற வாய்மொழி விமர்சனம் பரவியிருந்ததால் நல்ல கூட்டம். அதுவும்
இளைஞர்கள் கணிசம். சனி இரவுக்காட்சி, நெல்லையின் பெரிய தியேட்டரில் (பிவிடி) 80 %
நிரம்புவது சாதாரண விசயம் அல்லவே..?
Monday, December 7, 2015
கமல்ஹாசனுக்கு பதில் சொல்வீர்கள்.... மக்களுக்கு..?
கமல்ஹாசனுக்கு பதில் சொல்வீர்கள்.... மக்களுக்கு..?
தமிழக மக்களின் மனிதத்தையும் மக்கள் ஒற்றுமையையும் கண்டு இந்தியா மட்டும் அல்ல உலகமே மகிழ்ச்சியடைந்திருக்கிறது. மீட்பு பணிகள் கடந்து மறுகுடியமர்வு வரைக்கும் உதவிக்கரம் நீண்டு கொண்டிருக்கிறது. எல்லாமுமாக இருந்து செயல்படுவது பிறபகுதி பொதுமக்களும் தன்னார்வலர்களுமாகத் தான் இருக்கிறார்கள். அப்படியானால் அரசு...? இருக்கிறது, ஸ்டிக்கர் ஒட்ட, அடியாட்களை வைத்து மிரட்ட, நொடிக்கொருமுறை மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆணைக்கினங்க என்று வசனம் பாட, அதற்கும் மேல் அறிக்கை அர்ர்ச்சனை நடத்த. வெட்கம் மானம் இருக்கிறதா என்று தெரியவில்லை.
கமலஹாசன் அவர்கள் கூறிய கருத்துக்கு 3 பக்க அளவுக்கு கண்டன அறிக்கை விடத்தெறிந்த அரசுக்கு மக்களுக்கு ஆறுதல் சொல்லிக் கூட அறிக்கை வெளியிட முடியவில்லை. அறிக்கை கூட வேண்டாம் டிவியில் கூடவா தோன்றி ஒரு உரையை நிகழ்த்தக்கூடாது. ஆளுங்கட்சியின் இயலாத் தனமும் அதிகார குவிப்பும் இப்போது வெளிப்பட்டிருக்கிறது என்றே சொல்லலாம். எதற்கெடுத்தாலும் தலைமையின் உத்தரவை எதிர்பார்த்து காத்துக் கிடக்கும் மந்திரிகள், பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு கூட பதிலளிக்க திராணி இல்லாத மந்திரிகள் என அமைச்சராக இருப்பதற்கான தகுதிகளையே இழந்து நிற்கிறது அதிமுக அரசு.
மீட்புப் பணிகளுக்கு ராணுவம் வந்திராவிட்டால் அதிமுக அரசு ஒன்றுமே செய்திருக்காது என்பது தான் பாதிக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த ஆதங்கம். ஆனால் நொடிக்கொருமுறை மாண்புமிகு முதலமைச்சர் ஆணைக்கினங்க எனும் வார்த்தையைக் கேட்டுக் கேட்டு காது எறிகிறது. மியாட் மருத்துவமனை பிரச்சனை குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் துறை செயலாளர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதும், அமைச்சர்களுக்கான கேள்விகளுக்குக் கூட அதிகாரிகளே பதில் சொல்லிக்கொண்டிருக்கும் போதும் என்ன நடக்கிறது என்பது புரியாதது போலவே தேமே என உட்கார்ந்திருந்த அமைச்சர்களை பார்க்கும் போது எரிச்சலும் கோபமும் வந்தது. இத்தனைக்கும் அரசின் உயர் பொறுப்பு அமைச்சர்கள் அவர்கள்.
ஒரு நல்ல அரசாக இருந்திருந்தால் நிவாரண பொருள் சேகரிப்பு மையங்களை ஏற்படுத்தி ஒழுங்குபடுத்தி தேவைப்படும் இடங்களுக்கு அரசே அனுப்பியிருக்கலாம்.பலவித குழப்பங்களுக்கு முடிவு கட்டியிருக்கலாம். உயர் நீதி மன்றம் குட்டு வைத்தபின்பே இலவச பேருந்து சேவை தொடங்கப்பட்டது என்பது கூட மறைக்கப்பட்டு ஒவ்வொரு பேருந்திலும் முதல்வரின் படத்தை ஒட்டி மலிவு விளம்பரம் தேடிய அரசு தான் இந்த அரசு. எதற்கெடுத்தாலும் விளம்பரம் தேடும் இந்த செயல் திமுக ஆட்சியில் கூட இருக்கவில்லை எனபதே நிதர்சனம். ஆனால் நாளை இதே ஒரு பாணியாக மாறிவிடும். ஒரு பேரிடர் ஏற்படும் போது மக்களின் முதல் எதிர்பார்ப்பு முதல்வரோ அமைச்சரோ வந்து ஆறுதல் சொல்வார்கள் என்பதாகத் தான் இருக்கும். அது தான் நடைமுறையும் கூட. ஆனால் முதலமைச்சரோ சென்ற வெள்ளத்திற்கு கார் கண்ணாடியை கூட இறக்காமல் பாதிக்கப்பட்ட இடத்திற்கு வந்து வாக்காளப் பெருமக்களே என வாக்கு சேகரித்துவிட்டு சென்றார். இந்த முறை வேறு வழியில்லாமல் ஹெலிகாப்டரில் பார்வையிட்டு ? சென்றார். அவ்வளவு தான், ஆளையே காணோம். டிவியில் கூடதோன்ற நேரமில்லை, அந்த அளவு அரசுப் பணியில் பிசி.
வழக்கத்திற்கு மாறாக மத்திய அரசே நேரடி நிவாரணம் அளிக்கும் அளவுக்கு மெத்தனமான மாநில அரசாக இருக்கிறது.தன்னார்வலர்களுக்கும் அரசுக்குமான ஒருங்கிணைப்பு முழுவதும் இல்லை இன்னும் கூட. எந்த செயல்களிலும் இல்லாத அளவு இந்த முறை பொதுத் தளத்திலும், சமூக வலைதளங்களிலும் படு தோல்வி அடைந்திருக்கிறது ஆளும் அரசு என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக இளையவர்கள் மத்தியில் முற்றிலும் மதிப்பிழந்து செல்லாக் காசாக மாறிவிட்டது அரசின் செயல்பாடுகள். இது கண்டிப்பாக தேர்தலில் எதிரொலிக்கும். ஆனால் வெற்றியை தீர்மானிக்கப் போவது பணம் தான் என முடிவெடுத்து செயல்படுகிறார்கள் போலும். எல்லாவற்றையும் பணம் கொடுத்து வாங்கிவிட முடியாது அதே போலத் தான் எல்லோரையும் பணம் கொடுத்து வாங்கிட முடியாது. PREDISASTER PREPARATION, DURING DISASTER MITIGATION ல் தான் தோல்வி, RE-HABITATION , RECONSTRUCTION யாவது சீரிய முறையில் செய்து இழந்த பெயரை மீட்கப் பாருங்கள். இல்லை என்றால் தமிழகத்தில் உங்கள் இருப்பே கேள்விக்குள்ளாக்கப் படும்.
Tuesday, December 1, 2015
வடகிழக்கு பருவ மழை - 1
வடகிழக்கு பருவ மழை - 1
எந்த வருடமும் இல்லாத அளவு இந்த வருடம் வடகிழக்கு பருவமழை பின்னி எடுத்து வருகிறது. மழையின் அளவும் பாதிப்பும் குறையும் என்று எதிர்பார்க்கும் போதெல்லாம் அதிகமாகிக் கொண்டே வருகிறது . ஒரு புவிதகவலியல் மாணவனாக எனக்கு இந்த மழை பற்றியும் மழையின் பாதிப்புகளுக்கான காரணம் குறித்தும் என்னுடைய பார்வையில் புரிந்து கொண்டதை உங்களோடு பகிர்ந்து கொள்ள இந்த பதிவை எழுத முடிவு செய்தேன். பைனல் இயர் ப்ராஜெக்ட் வேறு இன்னும் தேர்ந்தெடுக்கவில்லை. இதையே எடுத்துவிடலாமா எனும் எண்ணமும் வருகிறது. டேட்டா கிடைப்பது தான் கடினம். பார்க்கலாம்.
2005 என்று நினைக்கிறேன் . எங்கள் ஊர் கண்மாய் நிறைந்து உபரி நீர் வெளியேறிய வருடம். நம்ம தெற்கு வெள்ளாற்றில் கடையக்குடி பாலத்துக்கு மேலே தண்ணீர் சென்றது. சைக்கிளில் சென்று வேடிக்கை பார்த்தது இன்னும் நியாபகம் இருக்கிறது. நம்ம மாவட்டம் மட்டுமல்ல தமிழகம் முழுதும் நல்ல மழை. பெரும் பாதிப்புகள். ஆனால் இந்த முறை வட தமிழகமும் தென் தமிழகமும் மட்டும் தான் பாதிப்பு. உள் மாவட்டங்கள், மத்திய மாவட்டங்களில் அவ்வளவு பாதிப்பு இல்லை. சொல்லப்போனால் மழைஅளவு இன்னும் சராசரி அளவைக்கூட எட்டவில்லை. ஆனாலும் இவ்வளவு உயிர் சேதம் பாதிப்புகள் நிகழ்ந்துள்ளன. அதற்கான காரணத்துக்குள் நான் போக விரும்பவில்லை. அது பல செய்தித் தாள்களிலும் தொலைகாட்சி விவாதங்களிலும் அலசப்பட்டுவிட்டது.
தமிழகத்தின் சராசரி மழை அளவு 958-970 மி.மீ. அதாவது வடகிழக்கு,தென்மேற்கு,கோடைமழை அனைத்தையும் சேர்த்து. இதில் 50 -60 %வடகிழக்கு பருவமழைக்கானது. கோவை,கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் இரண்டு பருவத்திலும் மழை பெறக்கூடியவை. தேனி,சிவகங்கை,ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் இரண்டிலும் சுமார் மழையே பெறக்கூடியது. வடகிழக்கு பருவ மழை காலம் எனபது அக்டோபர் முதல் டிசம்பர் வரை. டிசம்பரை சேர்த்தே பெய்திருக்க வேண்டிய வ.கி மழை சராசரி 485 மி.மீ.ஆனால் டிசம்பரை சேர்க்காமலேயே இது வரை 440 மி.மீ வரை பெய்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சென்னை மாவட்டம் மட்டும் அல்ரெடி நூற்றாண்டு சாதனைய தாண்டிருச்சு. இப்பவே 1000 மி.மீ தாண்டி நாட் அவுட்டா போய்கிட்டு இருக்கு. இன்னும் மூன்று இடங்களில் லோ ப்ரெஸ்ஸர் (low pressure ) உருவாக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது ( IMD data ). அதில் ஏதாவது புயலாக இருந்தால் தமிழ்நாட்டுக்கு கெட்ட காலம் தான்.
2013 ஆம் ஆண்டு கேதார்னாத் பெருவெள்ளம் குறித்து மறந்திருக்க மாட்டோம். அந்த பெருவெள்ளத்திற்கு மிகமுக்கிய காரணம் அதீத மழைப்பொழிவு (sudden rainfall). அதுவும் மேகம் முழுதும் மழை மேகமாக இருந்திருக்கிறது.(cloud monitoring தொழில்நுட்பம் இன்னும் இந்தியாவில் அதிகளவு வளர்ச்சியடையவில்லை ) அதை நமது வானிலை ஆய்வு மையம் கணிக்க தவறியதால் அத்தகைய இழப்பை சந்திக்க நேர்ந்தது. ஆனால் இந்த முறை சென்னை மழைப் பொழிவை துல்லியமாக கணித்தும் கோட்டை விட்டது ஆளும் அதிமுக மற்றும் செயல்படாத முதலமைச்சர். அதற்குள் போக விரும்பவில்லை.
அந்தமானுக்கு தெற்கே உள்ள கடல்பகுதியும் கன்னியாகுமரிக்கு தெற்கே லட்சத்தீவுக்கு கிழக்கே உள்ள கடல் பகுதியும் தான் இந்திய பருவ மழைக்கு 80-90% காரணமாக இருக்கிறது. அதாவது இந்த பகுதிகளில் தான் காற்றழுத்த வேறுபாடு ஏற்பட்டு காற்றழுத்த தாழ்விநிலை,புயல்,சூறாவளி உருவாகி மழை மேகங்களை உருவாக்குகிறது. இந்த கடற்பகுதி நேரடியாக பசிபிக் நீரோட்டங்களுடன் தொடர்புடையதாக இருக்கிறது. எனவே தென் பசிப்பிக்கில் ஏற்படும் மாற்றம் நேரடியாக இந்த பகுதியிலும் மாற்றம் நிகழக் காரணமாய் இருக்கிறது. அங்கே ஏற்படும் வெப்ப மாறுபாடு இங்கேயும் சற்று குறைவாக ஏற்படுகிறது. அது கடற்பரப்பு அழுத்தத்திலும் வேறுபாட்டை ஏற்படுத்துகிறது. தென் பசிபிக்கில் உருவாக்கப்படும் பருவ மாற்றங்களான எல்நினோ,லாநினா இந்திய பருவ மழையுடன் தொடர்பு உடையதா என்று நான் மேற்கொண்ட மினி பிராஜெக்டில் ( இதையே மெயின் பிராஜெக்டாக எடுக்கவும் யோசித்துக் கொண்டிருக்கிறேன் , உங்கள் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன் ) குறிப்பிடத்தகுந்த முடிவுகள் கிடைத்தது. அதற்கும் இப்போதைய மழைப் பொழிவுக்கும் சம்பந்தம் இருக்கிறதா ...............?அடுத்தடுத்த பதிவுகளில் விரிவாய் பார்ப்போம்........!
Monday, November 30, 2015
நடிகர்கள் என்ன செய்தார்கள்...?
நடிகர்கள் என்ன செய்தார்கள்...?
தமிழ்நாட்டில் தற்போது ஒரு ட்ரெண்ட் உருவாக்கப்பட்டு வருகிறது. அதாவது நடிகர்கள் எனப்படும் திரைக்கலைஞர்கள் வெள்ளத்தால் தத்தளிக்கும் தமிழகத்திற்கு என்ன செய்தார்கள் ? எவ்வளவு பணம் கொடுத்தார்கள் ? என்ன ஆறுதல் சொன்னார்கள் ? என்று. இது காலங்காலமாக சொல்லப்பட்டு வருவது தான் என்றாலும் சமீபமாய் அது கொஞ்சம் ஓங்கி ஒலிக்கிறது. இந்த தமிழன்டா க்ரூப்பின் வீச்சு அதிகமானதிலிருந்து குறிப்பாக அந்நிய அல்லது வேற்று மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர்களின் மீது நேரடித் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகிறது. இருக்கட்டும் இப்பொழுதாவது அறிவு வந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டாலும் இது நியாயமான வாதமா என யோசித்துப் பார்த்தால் உண்மை புரியும்.
எல்லா செயல்களுக்கும் பிறருடைய உதவியை எதிர்பார்ப்பது எவ்வளவு பெரிய இயலாத்தனமோ அதைவிட நடிகர்கள் உதவி செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பது முட்டாள் தனம். தமிழக முதலமைச்சராக இருப்பவர் தன்னுடைய தொகுதிக்கு மட்டும் வந்து கார் கண்ணாடியைக் கூட இறக்காமல் வாக்காள பெருமக்களே என்று ஆறுதல் சொல்லிச் சென்ற விநோதம் உலகில் வேறு எங்கும் நடைபெற முடியாது. அதைக் கேள்வி கேட்பதை விடுத்து, வாக்களித்து வெற்றிபெறச் செய்த மக்கள் பிரதிநிதிகள் மக்களுடைய வரிப்பணத்தை செலவு செய்வதற்கு கூட யோசிக்கும் நிலையை கேள்வி கேட்பதை விடுத்து கேவலம் காசுக்கு பொழுதுபோக்கும் கூத்தாடிகள் ஏன் செய்யவில்லை என்று கேட்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.
வழக்கறிஞர்,மருத்துவர்,பொறியாளர் போன்று நடிகரும் ஒரு தொழிலாளர் அவ்வளவே. அதைத் தாண்டி அவர்களுக்கு கிடைப்பது பிரபல்யம், புகழ் வெளிச்சம், கூடுதல் சம்பளம். எம்.ஜி.ஆர் ஒரு திரைப்படத்தில் பாடுவார் "நாடென்ன செய்தது உனக்கு என்று கேள்விகள் கேட்பதை விடுத்து நீ என்ன செய்தாய் அதற்கு என்று நினைத்தால் நன்மை உனக்கு" என்று. ஆம் அடுத்தவர் என்ன செய்தார் என்று குறை கூறும் நாம் என்ன உதவி செய்தோம் என யோசிக்க வேண்டும் முதலில். உதவி என்பது வற்புறுத்தாமல் செய்வது. பலனை எதிர்பார்க்காமல் செய்வது. மனமுவந்து செய்வது. அதை கட்டாயப்படுத்தியோ விதிமுறைகள் வகுத்தோ செய்யச் சொல்வது உதவி செய்பவருக்கும் பொறுத்தமானதல்ல, உதவி பெறுபவருக்கும் ஏற்புடையதல்ல.
மக்கள் இல்லாமல் திரைக்கலைஞர்கள் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதேபோல மக்கள் இல்லாமல் அரசியல்வாதிகளும் இல்லை. திரைக்கலைஞர் நம்மை பொழுது போக்குபவர் மட்டுமே. ஆனால் அரசியல்வாதிகள் நம்மை ஆளவும் செய்பவர்கள். ஆனால் அரசியல்வாதிகள் என்ன செய்தார்கள் என்று எழும் குரல்களை விட திரைக்கலைஞர்கள் உதவி செய்ய வேண்டும் என எழும் குரல்களின் வீச்சு அசாத்தியமானது. அது நமக்கு பழகியிருக்கலாம்.ஆனால் அது தவறு என்பதை மறுக்க முடியாது.அப்படி இருந்தும் சில பல நடிகர்கள் உதவி செய்கிறார்கள். உதவி செய்தாலும் செய்த உதவியை கேள்வி கேட்பார்கள். இந்த நடிகர் இவ்வளவு தான் செய்ய முடியுமா? எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்று... இது அதைவிட பெரிய அயோக்கியத்தனம். உதவி எனும் பெயரில் செய்யும் சிறு துரும்பும் பாராட்டத்தக்கதே எனும் எண்ணம் வருவதேயில்லை.
அடுத்து ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு பாடலிலும் ஏன் சமயம் கிடைக்கும் போதெல்லாம் தமிழ்நாட்டுக்கு இதை செய்வேன் அதை செய்வேன் என்று உதார்விடும் நடிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எனக்குப் பிடித்த ரஜினி கூட இந்த வகை தான். அதற்காக அவர் செய்வார் என்று எதிர்பார்ப்பது முட்டாள்த்தனம் இல்லாமல் வேறென்ன ? ரஜினி மீது சமயம் கிடைக்கும் போதெல்லாம் காரி உமிழும் செயல் செய்யப்பட்டுக் கொண்டே வருகிறது. இந்த தமிழன்டா க்ரூப்ஸ் இதற்கு முதல் காரணம். அவர்களுக்கெல்லாம் வரலாறு தெரியவில்லை. இல்லை தெரிந்து கொண்டே நடிக்கிறார்கள். தமிழக சினிமா வரலாற்றில் பொது விசயத்திற்கு குரல் கொடுப்பத்திலும் நிவாரணம் செய்வதிலும் ரஜினியைப் போன்ற ஒரு முன்னுதாரண நடிகரை காட்ட முடியாது.அதையெல்லாம் பதிவு செய்து தான் புரியவைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அது எல்லாருக்கும் தெரியும். ஆனாலும் தொடர்ந்து ரஜினி மீது குற்றம் சொல்ல காரணம் அவர் எதிர்வினை ஆற்றப்போவதும் இல்லை பதிலளிக்கப் போவதும் இல்லை. அடுத்து ரஜினியை விமர்சித்தால் எந்த ஊடகத்திலும் எளிதாக வெளிச்சம் பெறமுடியும்.
இறுதியாக ஒன்று மட்டும் தான். உதவிசெய்வதைப் பற்றி விமர்சிப்பதோ, உதவி செய்ய வேண்டும் என்று கட்டாயப்ப்டுத்துவதோ அந்த உதவிக்கும் அதைப் பெறுபவருக்கும் ஏற்பானதல்ல என்பதைப் புரிந்து கொள்ளல் நலம்.
.
Subscribe to:
Posts (Atom)
