நீயா நானாவும் என் கேள்விகளும் !!
முன்குறிப்பு ; நீண்ட நாட்களாக பதிவுலகிற்கு வரமுடியாமல் போய்விட்டது. காரணம் தேர்வுகளும் விடுமுறைகளும் தான். இனிமேல் எப்போதும் போல் வாரத்திற்கு மூன்று பதிவுகளாவது எழுதிவிட முயற்ச்சிக்கிறேன்.
நேற்றைய நீயா நானா விஜய் டிவி நிகழ்ச்சியில் மீண்டுமொருமுறை அழகான தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. கூட்டுக் குடும்பத்தை விரும்பும் தாய்மார்களையும் , தனிக்குடும்பம் தான் என்னுடைய தேர்வு என்ற இளம் பெண்களுக்குமான விவாதமாக அமைந்திருந்தது. வந்திருந்தவர்கள் அனைவருமே பெண்கள் தான். வழக்கம் போல கோபியின் தொகுப்பு நச் என்றிருந்தது.
தனிக்குடித்தனம் தான் என் தேர்வு என்ற பக்கம் இருந்த பெண்கள், கூட்டுக் குடும்பத்தை மிகவும் எதிர்த்தனர். கூட்டம், கும்பல், வடித்துக்க் கொட்டுதல் என்ற அளவிற்கு சென்று விட்டது. ஆனால் தாய்மார்கள் தரப்பில் ஒரே காரணம் தான். எங்கே பையனை நம்மிடமிருந்து பிரித்து அவர்களுடைய தாய் வீட்டோடு ஒட்டிவிடுவார்களோ என்பது மட்டும் தான். அதற்கு இளம்பெண்கள் அளித்த பதில் எனக்கு மிகவும் ஆச்சரியமானதாக இருந்தத
பெண்கள் அவர்களுடைய தாய் வீட்டை பிரிந்து வருவதை ஏற்றுக்கொள்ளும் இத்தமிழ்ச் சமூகம் , ஆண்கள் அவ்வாறு செய்வதை மட்டும் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது என்பது தான் அது. நியாயம் தானே? , இது ஒரு ஆணாதிக்க தமிழ்ச்சமூகத்தினைத்தானே காட்டுவதாக உள்ளது, என்று கூட எண்ணத்தோன்றுகிறது. ஆம் ஆணாதிக்கமே தான்.
கடைசியில் கோபிநாத், ஒரு உணர்வுப்பூர்வமான கேள்வியாக," உங்கள் மகன் உங்களைப் பிரிந்து சென்றால் உங்கள் மனநிலை என்ன ?"என தாய்மார்களிடத்தில் வைத்த போது அவர்கள் உண்மையாகவே அழுதுவிட்டனர்.அதைப்பார்த்த நமக்கும் அதே மனநிலைதான். ஒரு பெண் கணவன் இல்லாமல் கூட காலத்தைக் கடத்திவிடலாம் ஆனால் மகன் இல்லாமல் முடியாது என்ற அளவிற்கு வருத்தப்பட்டுவிட்டனர். அதைப் பார்த்திருந்தால் நீங்களும் நானும் கூட வருத்தப்பட்டிருப்போம். ஏன் எதிரணி பெண்கள் கூட வருந்திவிட்டனர்.
அனால் இது நமது சமூகப்பண்பாட்டின் சிக்கலான உணர்வு முடிச்சு என்பதை சற்றே ஆழ்ந்து நோக்கினால் புரிந்து கொள்ளலாம். ஆம், காலம் காலமாக ஆணாதிக்க சமூகத்தின் வெளிப்பாட்டிலிருந்து வெளிவர முடியாத ஒரு சூழலை நமது சமூக அமைப்பு ஏற்படுத்திவிட்டது என்று தான் கூறவேண்டும். இதை வைத்துப் பாருங்கள், அப்படியானால் பெண்பிள்ளைகள் பெற்றவர்களின் எதிர்காலம் ? தங்களது முயற்சியினால் எல்லாவற்றையும் தனது மகளுக்காகச் செய்துவிட்டு, எவ்வித பிரதி பலனையும் எதிர்பார்க்கக்கூடாது என்பதாகத்தானே நமது சமூகச்சூழ்நிலை இருந்து வருகிறது. இது உண்மையில் சரியா என்பதை யோசித்தால் நமக்குக் கிடைக்கும் விடை ?????????
உண்மையிலேயே ஒரு பெண்ணின் சுதந்திரம் திருமணத்திற்குப் பிறகு பறிக்கப்படுவதும், ஆணின் சுதந்திரம் அதிகரிப்பதும் தானே காலம் காலமாக நடந்துவருகிறது. என்ன இருந்தாலும் பெண்பிள்ளைகளிடத்திலிருந்து உதவி கேட்பது என்பது எந்த ஒரு பெற்றோருக்கும் இழினிலையாகத்தானே பார்க்கப்பட்டு வருகிறது இன்றுவரை. ஒரு பெண் கணவனைவிட மகனை நம்புவதைப்போல ஏன் மகளை நம்பமுடியவில்லை. இருவருமே தனது பிள்ளைகள் தானே? விடை ஒன்றுதான் ஆணாதிக்கம் !!
ஒரு பெண் திருமணத்திற்குப் பிறகு கணவன் வீட்டில் வாழ்வது சரி என்றால், ஒரு ஆண் திருமணத்திற்குப் பிறகு மனைவி வீட்டில் சென்று வாழ்வது மட்டும் ஏன் தவறாக இருக்கிறது.
தீர்வு ஒன்றுதான், ஒரு ஆண் தனது திருமணத்திற்குப் பின் தாய் தந்தையை நன்றாகப் பார்த்துக்கொள்வது எவ்வளவு சரியோ, அதேபோல ஒரு பெண் திருமணத்திற்குப் பிறகு அவளுடைய தாய் தந்தையை பார்த்துக்கொள்வதையும் ஏற்றுக்கொள்ளும் மன நிலை எல்லோரிடத்திலும் வர வேண்டும். வருவதற்கு கொஞ்சம் காலம் ஆகலாம். ஆனால் வருவதை தடுக்கக் கூடாது என்பது தான் என் எண்ணம்.
அந்த மாற்றத்தின் முதல் படியாகத்தான் நான் தனிக்குடித்தனத்தைப் பார்க்கிறேன். என்றாலும் கூட அதை ஏற்றுக்கொள்ள என் மனது மறுப்பதும் நிஜம். நானும் ஒரு ஆண் என்பதாலோ என்னவோ தெரியவில்லை. எனக்கு வரப்போகும் மனைவி அவளது பெற்றோரைவிட்டு வருவதைப் போல என்னால் எனது பெற்றோரைவிட்டு போக முடியுமா என்றால் , கண்டிப்பாக முடியாது என்பது தான் விடை. ஆனால் என்னுடைய மகன் எங்களைவிட்டுப் போகும் போது அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையை அடைந்துவிடுவேன் என்று கண்டிப்பாக நம்புகிறேன்.
உண்மையிலேயே நேற்றைய நீயா நானா பல கேள்விகளை என்னுள் ஏற்படுத்திச் சென்றுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். பதில்களைத் தேட முயற்சிக்கிறேன்............
பதிவு குறித்து மறக்காமல் உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
நன்றி!
உங்கள் சீலன் !
Nice article Mr seelan...
ReplyDeletenalla eruku seelan un varthaigal unagaluku en valthukal!!!
ReplyDelete...ethu penn kidatha thadanai..
sumar..20 varudangal valatha amma appava vitu nanga varanum ana avangala pana matanga yean na athu mutum than avangaluku pasam...ethu ena tharmam..eruku?
amma appa ena manichurunga nanum etha samukathula pirathutean...
ana enala munichavaraikum na ungaluku unmaiya than erukanum...
endravathu oru naal penn ename ne eluthidu...!!!
Nandri seelan !
Thanks for your comments karthika, keep visit my blog.....
Deleteகணவனின் நிலை - மத்தளம்...?
ReplyDeleteyou are correct sir, thanks for your coming, keep visit my blog sir....
Deleteஅருமை ஜெயசீலன், லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்தமாதிரி சும்மா விளாசித் தள்ளி்ட்டீங்க போங்க.. அருமை அருமை..
ReplyDeleteஅதிலும்..“உண்மையிலேயே ஒரு பெண்ணின் சுதந்திரம் திருமணத்திற்குப் பிறகு பறிக்கப்படுவதும், ஆணின் சுதந்திரம் அதிகரிப்பதும் தானே காலம் காலமாக நடந்துவருகிறது.“ என்று சொன்னீர்கள் பாருங்கள்... ஒரு வாசகம்னாலும் திருவாசகம்.
அன்பு கூர்ந்து தொடருங்க்ள்.. ரூபாய்க்கு மூன்றுபடி என்று வாக்குறுதி தந்து 1967இல் ஆட்சிக்கு வந்ததும் ரூபாய்க்கு ஒரு படி போட்டு அதுவே பின்னர் மூன்றுரூபாயக்கு ஒருபடி என்றாகி இப்போது முப்பதுரூபாய்க்கு ஒருபடி என்றான கதையாக இல்லாமல்.. வாரம் ஒரு பதிவாவது இடுங்கள்.. வளர்க வாழ்த்துகள். நன்றி.
தங்கள் போன்றவர்களின் ஊக்கம் தான் என்னுடைய எழுத்துகளின் ஆக்கம் ஐயா. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா ! தொடர்ந்து வருகை தர வேண்டுகிறேன். கண்டிப்பாக வரம் இரு பதிவாவது எழுத முயற்சிப்பேன் ஐயா!!
Deleteநீயா,நானாவ்வை திரும்பவுமாய் ரீவைண்ட் செய்த பதிவு.வாழ்த்துக்கள் சார்/
ReplyDeleteThanks for your comments sir, keep visiting my blog sir...
Delete