சீமைக்கருவேல மரம்
முன்பொரு காலம் நம் தென்னிந்தியாவில் கடுமையான பஞ்சம் நிலவியபோது, மக்களுக்காக பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்த போது வெளிநாட்டிலிருந்து சிலேபிக் கெண்டை மீனும், சீமைக்கருவை மரமும் கொண்டுவந்தார் என கிராமத்தில் இன்றளவும் சொல்ல நானே பலமுறை கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் தான் ஹெலிஹாப்டரில் பறந்து சீமைக்கருவை மரத்தின் விதைகளை தூவியதாகவும் கூட சில பெரியவர்கள் கூறுகின்றனர். ஆனால் இதில் எந்த அளவு உண்மை உள்ளது என்பது தெரியவில்லை. விக்கிபிடியாவில் 1950 என போட்டிருக்கிறார்கள்.
ஆனால் 50 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் இவையிரண்டும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏன் என் தாத்தா கூட அவர் வீட்டிலிருந்து கண்மாய் கரை வரை எவ்வித இடையூறும் இல்லாமல் வெட்ட வெளியாக இருந்ததாக என்னிடம் கூறியிருக்கிறார்.இன்று அவ்வாறு காண முடியவில்லை என்றும் கூறினார்.ஆம் உண்மைதான் இன்று வெட்டவெளிகளாக இருக்கும் பல இடங்களும் சீமைக்கருவை மரங்கள் நிறைந்திருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கி உள்ளது.அதில், தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்ற கலெக்டர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
இதனுடைய தாவரவியல் பெயர் ப்ரோசோபிச் சூலிஃப்லோரா என்பதாகும்.
இன்றைய நாட்களில் பெரும்பாலானோர் விவசாயத்தை கைவிட்டுவரும் நிலையில், அந்த நிலங்களில் எல்லாம் இந்த மரங்கள் மண்டி வருகின்றன. இன்றைய தேதியில் மட்டும் இதுவரை சுமார் 9 லட்சம் பேர் விவசாயத்தை விட்டுள்ளதாக தினத்தந்தி கூறியுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் வயல்களில் இந்த மரங்களையே வளர்ப்பர்? ஆம் வளர்க்கவில்லை எனினும் இது தானாகவே வளர்ந்துவிடும்! அவர்களும் அதை அகற்ற விரும்பமாட்டார்கள். ஏன் என்றால் அந்த மரத்திற்கு நீர் ஊற்ற தேவையில்லை,பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை. அனால் அதனுடைய விறகு நல்ல விலை போகும். எங்கள் ஊர் பகுதிகளில், ஒரு டன் 8000 ரூபாய் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! எனவே அதை அகற்ற கண்டிப்பாக யாரும் விரும்ப மாட்டார்கள் என்பதே நிதர்சன உண்மை.
தீமைகள் ;
1.இந்த கருவை மரங்களால், நமக்கு மட்டுமல்ல நமது மண்வளத்திற்கும் சுற்றுச்சூழலிற்கும் பெரும் கேடு. ஆம் இந்த மரங்கள் ஆணிவேர் தன்மை கொண்டவை ஆதலால் தண்ணீரைத் தேடி எவ்வளவு ஆழம் வேண்டுமானாலும் பயணிக்கவல்லவை.
2.இவை மற்ற மரங்களை போலலாமல் பகலில் குறைவான ஆக்ஸிஜனையும் இரவில் அதிகமான கார்பன்டை ஆக்ஸைடையும் வெளிவிடுபவை, இதனால் வளிக்காற்றிலுள்ள ஆக்ஸிஜன் அளவிற்கு ஆபத்து உள்ளதாக கணித்திருக்கிறார்கள், அறிவியலார்கள்.
3.இவை மட்டுமல்ல இன்று கிராமப் புறங்களில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் இவை செழித்து வளர்கின்றன. இதனால் நீரின் நிறமே மாறிவிடும் நிலை உள்ளது.
4.அதனுடைய முட்கள் மிகவும் கூராக இருப்பதால், காலில் குத்துவதுடன் காலில் தங்கினால் பெறும் ஆபத்துதான்.
5.இவை வளர்ந்த மண்ணில் மீண்டும் பயிர்செய்ய முயன்று தோற்றவர்களை நானே பார்த்திருக்கிறேன். இவற்றை அகற்றிய 4லிருந்து 10 வருடங்களுக்கு பிறகுதான் அந்த மண் பழைய நிலையை அடைகின்றது.
6.எல்லாவற்றுக்கும் மேலாக இவை நிலத்தடி நீரை முற்றும் உறிஞக்கூடியவையாக இருப்பதுதான் மெகப்பெரிய தீங்கு. இப்போதே நகர் புரங்களில் 800 அடி 100 அடி சென்று விட்டனர். கிராமங்களில் சற்று பரவாயில்லை. ஆனால் இந்த மரங்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் நிலத்தடி நீர் சுத்தமாக இல்லாமல் போவதற்கும் வாய்ப்புள்ளது.
7.மேலும் பறவைகளின் எதிரியாகவும் இவை உள்ளது. இந்த மரங்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் உள்ள மற்ற மரங்களில் கூட பறவைகள் கூடு கட்டுவதை தவிர்க்கின்றன.பறவைகள் மட்டுமல்ல கால் நடைகளும் இதனுடைய காயை தவிர வேறு எதையும் முகர்ந்துகூட பார்ப்பதில்லை. காய்களும் அளவோடுதான். அதற்குப் பிறகு தீண்டுவதில்லை.
கால் நடைகள் மூலமாகத்தான் இவைப் பலுகிப்பெருகி வருவது குறிப்பிடத்தக்கது.
எனவே இதை அகற்றுவது அவசியமாக உள்ளது. அனால் இதை அகற்றுவதும் அவ்வளவு சுலபமில்லை. அகற்றிவிட்டு அந்த இடத்தை தீ வைத்தால் தான் இது மீண்டும் வளராமல் இருக்கும். மேலும் இதனுடைய விதை 1 வருடம் வரையிலும் வீரியத்துடன் வளரும் தன்மை உடையதாக இருக்கும். எனவே தான் இப்போது அகற்ற ஆரம்பித்தால் தான் இன்னும் 5- 8 வருடங்களுக்குள் முழுமையாக அகற்றமுடியும்.எனவே இந்த விசயத்தில் ஆகாயத்தாமரை அகற்றுவது போல மெத்தனமாக இல்லாமல், அரசாங்கம் சற்று கூடுதல் அக்கறை எடுக்கவேண்டும் என்பது என் விருப்பம்.
அரசாங்கம் மட்டுமல்ல நாமும் நம் நிலங்களிலுள்ள இந்த மரங்களை அகற்ற குறைந்தபட்ச முயற்சியாவது எடுக்க வேண்டும். நம் போன்றவர்களுக்கு இதனுடைய தீங்குகளை எடுத்து சொல்ல முயல வேண்டும்.
பயன்கள்;
இதில் பயன்களும் இருக்கின்றன. ஆனால் நிலத்தடி நீரை உறிஞ்சுதல் எனும் தீமையோடு ஒப்பிடும் போது எடுத்துக்கொள்ள முடியவில்லை. அவை,
1.எரிபொருளாக பயனளிக்கிறது.
2. கால் நடைகள் இதனுடைய காய்களை உணவாக அளவோடு எடுத்துக்கொள்ளும்.
3.ஏழைகளுக்கு பொருளாதாரத்தில் உதவுகிறது.
4.இதனுடைய காயிலிருந்து உணவாக, காபியாக பெரு போன்ற நாடுகளில் பயன்படுவதாக சொல்கிறார்கள்.
மற்றபடி பெரிதாக பயன்கள் இல்லை.
சிலர் இந்த மரங்களுக்கு அதரவாக பதிவுகள் போட்டிருப்பதையும் காண முடிகிறது. பிறகு ஏன் இதனுடைய தாயகம் என்று சொல்லப்படும் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க போன்ற நாடுகள் இவற்றை அருங்காட்சியகங்களில் மட்டுமே வளர அனுமதிக்க வேண்டும்!
மேலும் இவை வளர்ந்த மண் விவசாயத்தினை குறைக்கிறது என்பதும் நிரூபனமான உண்மை. அகற்றுவதில் உள்ள பிரச்சனைகளை கலைய வேண்டுமே தவிர அந்த மரத்திற்கு ஆதரவு தெரிவிப்பது முட்டாள் தனமான ஒன்று என்பது என்கருத்து. மாற்றுக்கருத்துகள் வரவேற்கப்படுகின்றன!
இன்னொரு முக்கியமான விசயம் இதனை அகற்றும் போது நம் பாரம்பரியமான
கருவேல மரங்களை (கிரமங்களில் நாட்டுக்கருவை) அகற்றிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அதனால் மண்வளத்திற்கு எவ்வித பாதிப்பும் கிடையாது.இதனுடைய வேர் அமைப்பு சல்லிவேர் அமைப்புடையது. மேலும் உயரமாக வளர்ந்துவிட்டால் இதனுடைய தண்டுப்பகுதிகளில் முட்கள் வருவதில்லை. இதனுடைய இலைகளை கால் நடைகள் விரும்பி உண்ணும்.
இதனுடைய விறகு சீமைக்கருவை போல் அல்லாமல் மிகவும் உறுதி வாய்ந்தது.
கலப்பைகள், மண்வெட்டி, கொடாரி, கலைக்கொட்டு போன்றவை செய்ய விவசாயிகள் பெரிதும் விரும்புவது இந்த மரத்தைத்தான்.இதனுடைய முட்கள் மட்டுமே கொஞ்சம் அபாயகரமானது.
மற்றபடி இது நிழலுக்கேற்ற மரம். நல்ல குளிர்சியாகவே இருக்கும் இதன் நிழல்."ஆலும் வேலும் பல்லுக்குறுதி" என்பதில் உள்ள வேல் இந்த மரத்தைக்குறிப்பதுதான்.
இதனிலிருந்து வளியும் கோந்து நன்றாக ஒட்டும் தன்மை உடையது. இதனுடைய காய்கள் கிலுகிலுப்பை என சிறுவர்களால் விளையாடப்படுவதும் உண்டு.
எனவே அகற்றும் போது நாட்டுக்கருவேல மரங்களை அகற்றி விடாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.
இனியும் காலம் தாழ்த்தாமல் சீமைக்கருவேல மரங்களை அகற்ற சீரிய முயற்சிகளை எடுக்க அரசும், அரசு சாரா இயக்கங்களும் ,பொதுமக்களும், ஏன் ? நாமும் கூட முன்வரவேண்டும் என்பதே என் விருப்பம்.
உங்கள் கருத்துகளை கூறலாம்!
படங்கள் உதவி; விக்கிபிடியா (நன்றி)
- உங்கள் சீலன்!

விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய பதிவு. அனால் இந்த மரங்கள் இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் விவசாயிகளின் முக்கிய பணப்பயிராகவே மாறிவிட்டது. அந்த மாவட்டங்களிலெல்லாம் இதை அகற்றுவது அவ்வளவு சுலபமில்லை. விவசாயிகளையும் மனம் மாற்றுவது (அவ்வளவு சீக்கிரம்) கடினமே! இதன விதைப்பொடியை காபியாக பயன்படுத்துவதாக சொல்லப்படுவது மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கும். மற்றபடி இன்றைய சூழலுக்கு ஏற்ற பதிவு. வாழ்த்துக்கள்...
ReplyDeletethanks for your comming sir... keep visit my blog sir....
Deleteமண்ணிற்கு செய்யும் துரோகம் எல்லாம் (பிளாஸ்டிக் பொருட்களின் அபரிமிதமான பயன்பாடு, சுற்றுச்சூழல் மாசு, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு - இதனால் பருவம் தவறிய மழையின்மை மற்றும் பல) உழவர்கள் தலையில்... இதனால் விவசாயம் குறைந்து கொண்டே வருகிறது... அவர்கள் என்ன செய்வார்கள்...? இதிலிருந்தாவது ஏதாவது வருமானம் வருமா...? என்று தவிப்பு...
ReplyDeleteசீமைக்கருவேல மரங்களை அகற்றுவது ஒருபுறம் இருந்தாலும், முதலில் உழவர் சிரிக்கணும்...
ஆம் ஐயா. நீங்கள் கூறுவதும் சரியே! இதிலிருந்தாவது வருமானம் வராதா என்ற ஏக்கமே இதனை அழிக்க தடைக்கல்லாக உள்ளது..
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா!
அதென்ன டைம் இருந்தா?
ReplyDeleteநம்ம ஊர் ஆள். உடனே ஊக்கபடுத்த வேண்டாமா?
இதோ வந்தாச்சு!!
பயனுள்ள ,நல்ல அலசல்.கருவேலைகள் தீமை என்று தெரியும்.ஆனா இவ்ளோ டீடைல தெரியாது?
பகிர்வு நன்றி!!
மிக்க மகிழ்ச்சி !
ReplyDeleteதங்கள் போன்றவர்களின் ஊக்கம் தான் தொடர்ந்து எழுதுவதற்கு தூண்டுகிறது.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வருகை புரிந்து என் பதிவுகளில் உள்ள குறை நிறைகளை தயங்காமல் கூற வேண்டுகிறேன்..!
வணக்கம் சகோதரர்
ReplyDeleteஅனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அவசியமான விழிப்புணர்வு பதிவைப் பகிர்ந்த தங்களுக்கு வாழ்த்துகள் கூறுவதோடு இணைய வானில் இன்னும் பல உயரங்களைத் தொடருங்கள். பகிர்வுக்கு நன்றி.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா! தொடர்ந்து வருகை தர வேண்டுகிறேன்!
Deleteமுதன் முறையாக தங்களின் தளத்திற்கு வருகின்றேன் நண்பரே. அருமை, இனி தொடர்வேன்
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி !
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா! தொடர்ந்து வர வேண்டுகிறேன்!
முதன் முதலாக உங்கள் தளத்திற்கு வந்திருக்கிறேன்.நல்ல கருத்து .
Deletethanks for your coming sir keep visit my blog sir...
Delete